திங்கள், 10 ஜனவரி, 2011

மெயில்களை பிரித்து மோசடி செய்கிறேனா?



அஸ்ஸலாமு அலைக்கும்..

தனி தனி இழைகளாக விவாதம் செல்வதை ஏதோ நான் செய்யும் மிகப்பெரிய மோசடி போன்று பிறரிடம் எடுத்து செல்கிறார் ஏர்வாடி சிராஜ் .

ஆகவே, இதை குறித்தும் நான் விளக்க வேண்டியுள்ளது..

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன..
தனி தனி ஆதாரங்களை தனி தனி மெயில்களில் பதிப்பது ஒன்று.
ஒரே தலைப்பையே தனி தனியாக பிரிப்பது என்பது இன்னொன்று .


தனி தனி ஆதாரங்களை தனி தனி இழைகளில் நாம் பதித்து உண்மை தான்.
அது மக்களிடம் இன்னும் தெளிவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தானே தவிர, எதையும் மறைக்கும் நோக்கில் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், அனைத்தையும் ஒரே இழைகளில் பெரிய பெரிய கட்டுரைகளாக, எல்லா ஆதாரங்களையும் , அதை வைத்து கேட்கப்படும் எல்லா கேள்விகளையும் பதித்தால் , அது தான் அனைவரையும் குழப்பும்.

ஒவ்வொரு ஆதாரத்தையும் நான் ஒவ்வொரு இழைகளாக பதிப்பது, நமது கருத்தை இன்னும் தெளிவாக அறிவிக்கும் வேண்டும் என்று நோக்கில் தானே தவிர, இதனால் குழப்பம் ஏற்படாது. ஆகவே, தனி தனி மெயில்களாக ஆதாரங்களை பதிப்பது கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய விடாமல் தடுக்கும் செயல் என்ற குற்றச்சாட்டே அடிப்படையற்ற குற்றச்சாட்டு!

அடுத்து, இவர் உதாரனதிற்க்காக "ஆதாரம்-8 ', என்ற மெயிலை காட்டுகிறார். .

அதாவது, ஒரே மெயிலையே தனி தனியாக கூறு போடுகிறேன், ஒரே தலைப்பையே தனி தனியாக பிரிக்கிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு நான் காரணமல்ல. நான் வேண்டுமென்றே செய்வதும் அல்ல. இதை இறைவனை சாட்சியாக்கி இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

ஒரே தலைப்பே கூட தனி தனியாக ஆகி விடுவதற்கு நான் அறிந்துள்ள காரணம் இரண்டு..

ஒன்று,
எந்த மெயிலையும் நானும் சிராஜும் இரண்டு குழுமங்களில் பதிவிடுகிறோம்.
எனது மெயிலில் இருந்து கேள்வி கேட்கும் மூன்றாம் நபர் ஒருவர் முதல் குழுமத்தில் இருந்தால் அவர் எழுதும் மெயில் அதே தலைப்பில் தனி மெயிலாக எனக்கு வருகிறது.
அதுவே இன்னொரு குழுமம் வழியாக மூன்றாம் நபர் ஒருவர் எனக்கு எதையாவது எழுதினால், அது இன்னொரு மெயிலாக எனக்கு வருகிறது.
இதனால் ஒரே தலைப்பு பல மெயில்களாக ஆகின்றன.

இன்னொரு காரணம்,
கேள்வி கேட்கும் மூன்றாம் நபர், சில நேரம் ஒரு குழுமத்திற்கு மட்டும் cc வைத்து என்னிடம் கேள்வி கேட்ப்பார்.
ஆனால், அதற்கு பதில் சொல்லும் போது, நான் இரண்டு குழுமங்களிலும் cc வைப்பேன். (இது எனது தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயம்)
இந்த வகையிலும் ஒரே தலைப்பு பல பிரிவுகளாக் செல்ல வாய்ப்புள்ளது.
சிராஜ் அவர்கள் எடுத்துக்காட்டிய ஆதாரம் 8 இல் கூட, ஆயிஷா சஹீரா என்ற அறியப்படக்கூடிய மூன்றாம் நபர் கேள்வி ஒன்றை கேட்டதால் தான் இந்த தலைப்பு பல மெயில்களாக பிரிகிறது என்பதை கவனிக்க..

இதை தவிர்த்து, நாம் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை. இவ்வாறு செய்வதை விட, ஒரே தலைப்பாக இருந்தால் தான் வாதங்களை மறைக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களுக்கு வசதி.!!
நமக்கு அவ்வாறு எண்ணமிருந்திருந்தால் நான் ஒரே தலைப்பாக தான் வைத்திருக்க விரும்பியிருப்பேனே தவிர, தனி தனியாக தலைப்புகளை பிரித்து செய்திகளை இன்னும் தெளிவாக்க விரும்ப மாட்டேன்.
ஆகவே, இவர் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டு இவருக்கு எதிராக தான் இருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், ஒரு வாதத்திற்கு,ஒரே தலைப்பை கூட நான் வேண்டுமென்றே பிரித்தேன் , என்று தான் வைத்துக்கொள்வோமே, அதை வைத்து கூப்பாடு போட வேண்டிய அவசியம் என்ன?
வாதங்களில் உண்மையாளர்களுக்கு, எத்தனை இழைகளில் கேள்விகள் வைக்கப்பட்டால் என்ன? அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டியது தானே!
இதுவரை நடந்த உரையாடல்களில் நான் வைத்த எந்த ஒன்றுக்காவது பதில் சொன்னாரா?


இறுதியாக இன்னொரு செய்தையும் சொல்ல வேண்டியுள்ளது.
இந்த விவாதம் ஏதோ, முன்னரே முடிவு செய்யப்பட்டு, மெயில்கள் மூலம் விவாதித்து இறுதியில், அனைத்தையும் தொகுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு துவங்கப்பட்ட ஒன்று அல்ல.

விவாதத்திற்கு எந்த வரைமுறையும் முதலிலேயே வகுக்கப்படவில்லை.
ஒரு இழையில் தான் வாதிக்க வேண்டும், ஒவ்வொரு ஆதாரதிர்க்கும் தனி தனி மெயில்கள் கூடாது, அனைத்தையும் ஒரே மெயிலில் தான் பதிக்க வேண்டும் என்றெல்லாம் எந்த சட்டமும் ஆரம்பத்தில் பேசப்படவில்லை.
துவக்கத்தில் பேசப்படாமல் விவாதம் சென்று கொண்டிருக்கும் போது, நான் எனது வசதிக்காக ஒரு ஆதாரத்தை தனியாக எழுதுகிறேன் என்றாலோ, பதில் சொல்லப்படாத கேள்விகள் என்று நானே அந்த தொடர் விவாதத்திலிருந்து தொகுத்து தனி கட்டுரையாக எழுதினாலோ, அதை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
எத்தனை இழைகளாக இருந்தாலும், அவை அனைத்தும் மெயில்களில் தான் உள்ளன. எதையும் நாம் மறைக்க முடியாது.!

ஆக, இதுவெல்லாம் திசை திருப்பும் செயல்கள். வாதங்களுக்கு பதில் சொல்லும் கடமை கொண்டவர், அவரது வாதத்தை மேலோங்க செய்ய, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
மெயில்களை கூறு போடுகிறார், என்று பதில் சொல்வதை தவிர்ப்பதற்கு சால்ஜாப்பு சொல்லக்கூடாது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

ஒரே தலைப்பு பல மெயில்களாக ஆனதற்கு நான் பொறுப்பில்லை என்பதை ஏற்கனவே இறைவனை முன்னிறுத்தி சொல்லி விட்டேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக