அஸ்ஸலாமு அலைக்கும்..
என் அறிவுக்குட்பட்டு , வேண்டுமென்றே பிறை சம்மந்தப்பட்ட என்னுடைய ஆதார ஹதீஸ்களை ஒரு வார்த்தை கூட நான் இட்டுகட்டாமல்,கூட்டாமல்,குறைக் காமல்,திரிக்காமல், வெட்டாமல், எண் சுய கருத்துகளை திணிக்காமல் முழுமையாக பதிந்தேன் - அல்லாஹ்வின் மீது சத்தியம்!! - (நாஷித்)
இதில் என் அறிவுக்குட்பட்டு , வேண்டுமென்றே என்பது மட்டும் சிராஜ் கேட்டதிலிருந்து நான் கூடுதலாக சொல்லும் வார்த்தைகள்.
இதை வைத்து தொங்கிக்கொண்டிருப்பவர்களும் இருப்பார்கள் என்பதால் இதை விளக்குகிறேன்.
எந்த ஹதீஸை நானோ சிராஜோ வேறு எவரோ சொன்னாலும், அதை அவர் அறிவுக்குட்ப்பட்டு நம்புவதை மட்டும் தான் அவரால் சொல்ல முடியும்.
நான் ஒன்பது ஹதீஸ் ஆதாரங்களை இங்கு தந்திருக்கிறேன். அவை அனைத்தையுமே நான் நம்பிய அளவில் சரி என்று கருதி தான் எழுதியுள்ளேன்.
அதன் தமிழாக்கம் என்று நான் எதை நம்புகிறேனோ, அதை தான் சொல்லியுள்ளேன்.
என்னையும் அறியாமல் அதில் தவறுகள் இருந்தால் அது எனக்கு தெரியாது.
நான் அறிந்தவரையில் அதில் தவறில்லை என்பதற்கு தான் நான் சத்தியம் செய்ய முடியும். அதை செய்திருக்கிறேன்!
என் அறிவையும் மீறி கூட எந்த தவறும் இருக்காது என்று நான் சத்தியம் செய்ய முடியாது. அவ்வாறு செய்யவும் கூடாது.
எனது அறிவையும் மீறி, என்னையும் அறியாமல் அந்த ஹதீஸ்களில் எந்த தவறியாவது நான் செய்திருந்தால் அதை சுட்டிக்காட்டுங்கள் என்றும் சொல்லி விட்டேன்.
இதை விட வேறு எவ்வாறு சத்தியம் செய்வது?
என் அறிவையும் மீறி கூட அதில் தவறு இருக்காது என்று சொல்ல வேண்டுமா?
அவ்வாறு சொல்வது அல்லாஹ் மட்டுமே! அல்லாஹ் மட்டுமே தவறுக்கு அப்பார்ப்பட்டவன்.
இந்த அடிப்படையை கூட புரியாத சிராஜ், நான் கேட்டதை மட்டும் சொல்லுங்கள், கூடுதலான வார்த்தைகள் வேண்டாம் என்று சொல்கிறார். இவரது அறிவின் ஆழம் இது தான்.
சரி, சிராஜின் அறிவு தான் நமக்கு தெரியுமே, அது தான் இவ்வாறு என்றால், பிற சகோதரர்கள் சிலரும் இதையே பேசுவது என்ன விபரமோ தெரியவில்லை.
எனது நினைவுகுட்பட்டு நான் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஏதாவது தவறு இருக்குமாயின், எனது அறிவுக்குட்படாத தவறுகள் தான். அதுவே நான் விளக்கியது.
அவ்வாறு தவறுகள் ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
இது எனது சத்தியம் குறித்த விளக்கம்.
சரி, நான் சிராஜிடம் சத்தியம் செய்ய சொல்லி கேட்டேனே, அது மேலே சிராஜ் உளறியதை போன்றா கேட்டேன்?
- பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
- எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
- நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை
அவரிடம் நான் கேட்ட வார்த்தைகளை பாருங்கள்.
எதையும் நான் வேண்டுமென்றே செய்யவில்லை, என்று சொல்ல தான் நான் கேட்டேன்.
இது அவரது அறிவுக்குட்பட்ட விஷயம். அவர் அறிவுக்குட்பட்ட வரையில், வேண்டுமென்றே எந்த தவறையும் செய்யவில்லை என்று சத்தியம் செய்யுங்கள் என்று தான் நான் கேட்டேன்.
என்னிடம், என் அறிவுக்குட்படாத விஷயத்தையும் சத்தியம் செய்யுங்கள் என்கிறார்.
சகோதரர்களுக்கு வேறுபாடு விளங்குகிறதா?
நான் என் அறிவுக்குட்ப்பட்டு, வேண்டுமென்றே எதையும் தவறாக செய்யவில்லை என்று சத்தியம் செய்து விட்டேன்.
அவர் அவரது அறிவுக்குட்ப்பட்டு, வேண்டுமென்றே எதையும் தவறாக செய்யவில்லை என்று சத்தியம் செய்ய வேண்டும்.
இதையே நாம் கேட்கிறோம்..
- பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
- எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
- நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை
என்பதை இங்கு இறைவன் மீதாணையாக சிராஜ் சொல்ல வேண்டும்.
வஸ்ஸலாம்..
----------------------------------------------------------------------------------------------
நாம் சத்தியம் கேட்டதற்கு கீழ்கண்டவாறு சிராஜ் பதில் அளிக்கிறார்.
என்னுடைய தவறுகளை கேட்டு சத்தியம் செய்ய சொன்னால் அது நியாயம்
- ஏர்வாடி சிராஜ்.
ஒரு சில கேள்வி மட்டும் தான் கேட்டாராம்.. அதனால் அதிலிருந்து சத்தியம் செய்ய சொல்லக்கூடாதாம்..!!!!!!
அறிவை கடன் கொடுத்து விட்டு வாதம் செய்யாதீர்கள்.
சரி, ஒரு பேச்சுக்கு ஒரு சில கேள்விகளை தான் கேட்டீர்கள் என்றே வைத்துக்கொள்வோமே, அதனால் சத்தியம் செய்யக்கூடாதா?
நான் கூட ஒரு சில ஹதீஸ் ஆதாரங்களை தான் சொன்னேன். என்னிடம் ஏன் சத்தியம் செய்ய சொன்னீர்கள்?
சத்தியம் செய்ய வக்கில்லை என்றால் இயலாது என்று அறிவியுங்கள்.. இதற்கு இது போன்ற சால்ஜாப்பு சொல்லாதீர்கள்.
கேள்வி மட்டும் தான் கேட்டேன் என்று அவரே ஒப்புக்கொள்கிறார். அதாவது நான் ஆதாரமாக வைத்து பல பல கேள்விகளை கேட்டேனே, அந்த கேள்விகள் எதற்கும் பதில் சொல்லவில்லை, அதற்கு எதிர் கேள்வி மட்டுமே சிராஜ் கேட்டுக்கொண்டிருந்தார் என்று பல முறை விமர்சித்தோமே, அதை அவரது வாய்மொழியாகவே இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
சரி, கேள்வி மட்டும் கேட்டால் சத்தியம் செய்ய சொல்லக்கூடாது என்ற வரம்பு ஏதும் உள்ளதா?
உதாரணதிற்கு,
நான் அல்லாஹ் உண்டு என்று ஆதாரத்துடன் சொல்கிறேன் என்று வையுங்கள்..
இன்னொருவர், அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் வைக்கும் ஆதாரம் அனைத்துமே பொய்.. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குரிய ஆதாரமாக அது இல்லை. ஆதாரத்தை முழுமையாக வைக்க முடியுமா? என்கிறார். முழுமையாக தான் ஆதாரங்களை வைத்தேன் என்று சத்தியமிட்டு சொல்ல முடியுமா? என்று நம்மிடம் கேட்டகிறார்.
நாம் அதற்கு சத்தியம் செய்து விட்டோம்..
பின், அவரிடம்,
அல்லாஹ் உண்டு என்பதற்கு நான் சொன்ன ஆதாரங்களை நீங்கள் மன முரண்டாக வேண்டுமென்றே தான் மறுக்கிறீர்கள், இல்லை என்று சத்தியமிட்டு சொல்ல தயாரா?
என்று கேட்கிறேன்..
அதற்கு, நான் ஏன் சத்தியம் செய்ய வேண்டும்? நான் கேள்வி மட்டும் தானே கேட்டேன், என்கிறார்.
இவரது நிலையை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்வோம்?
இதே நிலை தான் சிராஜின் நிலை..
அதாவது, தனது கொள்கையை அறிவிக்கவும் கூடாது.. (அறிவித்தால் தானே அதிலுள்ள கிறுக்கத்தனம் தெரியும்).. அதே சமயம், பிறரது கொள்கை குறித்து மறுப்பு கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..
இறுதியில், எனது கொள்கையை மறுக்க நீங்கள் சொல்லும் வாதங்களை சத்தியமிட்டு சொல்வீர்களா? என்று கேட்டால் , நான் ஏன் சத்தியமிட வேண்டும்? நான் கேள்வி மட்டும் தானே கேட்டேன்? என்று சொல்லி விடவேண்டும்..
இதை விடவும் ஒரு போக்கிரித்தனம், நயவஞ்சகத்தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
இதை சொன்னால், நாஷித் வரம்பு மீறி தானே பேசுவார், அதை நாம் பெரிதாக எடுக்க தேவையில்லை என்பார்..
போக்கிரித்தனத்தை வேறு என்ன வார்த்தை சொல்லி சொல்ல முடியும்? போக்கிரித்தனம் என்று தான் சொல்ல முடியும்!!!
நான் ஹதீஸ்களை முழுமையாக சொல்லவில்லை, சிலதை மறைத்து விட்டேன் என்பது உங்களது குற்றச்சாட்டு. அதற்கு என்னிடம் சத்தியம் கேட்டீர்கள்.
அதை நான் செய்தேன்.
நீங்கள், நான் சொன்ன ஹதீஸ்களை மன முரண்டாக மறுக்கிறீர்கள், அது சொல்லும் கருத்தை திரிக்கிறீர்கள், ஹதீஸ்களை ஹதீஸே இல்லை என்று வேண்டுமென்றே மறுக்கிறீர்கள். என்பது எனது குற்றச்சாட்டு.
அதற்கு உங்களிடம் சத்தியம் கேட்க்கிறேன்..
இரண்டும் இரண்டு நிலை, இரண்டு கொள்கை.. நான் சத்தியம் செய்வது சரி என்றால் சிராஜ் சத்யம் செய்வதையும் அனுமதிக்க தான் வேண்டும்.. நான் கேள்வி மட்டும் தானே கேட்டேன் என்று உளறக்கூடாது.
தன்னிடம் உண்மை உள்ளவர் , இத்தனை நாட்களாக நீங்கள் நாஷித் உடன் உண்மையாகவே வாதம் செய்தீர்கள் என்றால், இந்த சத்தியத்தை செய்ய தயங்க தேவையில்லை..
- பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
- எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
- நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை
என்பதை இங்கு இறைவன் மீதாணையாக சிராஜ் சொல்ல வேண்டும்.
சொல்லிக்கொண்டிருக்காமல் முடிந்தால் அதை உடனே செய்யுங்கள்.. உங்கள் வண்டவாளங்கள் அனைத்தும் வெளிப்படும் நாளை தான் நாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.. இன்ஷா அல்லாஹ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக