குர்ஆனுடன் நபிவழியும் அவசியம்
(அல்குர்ஆன் 3:164)
உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.
(அல்குர்ஆன் 53:2,3)
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
(அல்குர்ஆன் 16:44)
இவ்வசனத்தில் திருக்குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
முதலாவது வழி, வாசிப்பவர்கள் அவர்களே சிந்தித்து விளங்கிக் கொள்ளுதல்.
இரண்டாவது வழி, யார் வேதத்தைக் கொண்டு வந்தாரோ அந்தத் தூதர் தந்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் விளங்குதல்.
திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்தால் கணிசமான வசனங்கள் எந்த விளக்கமும் தேவைப்படாமல் மேலோட்டமாக வாசிக்கும் போதோ, அல்லது கவனமாக சிந்திக்கும் போதோ விளங்கி விடும். ஆனால் சில வசனங்கள் எவ்வளவு தான் சிந்தித் தாலும் நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் சரியாக விளங்காது.
முஹம்மதே! உமக்கு வேதத்தை அளித்தது, நீர் விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் தான் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.
திருக்குர்ஆனுடன் நபிகள் நாயகத்தின் விளக்கம் தவிர்க்க இயலாதது என்பதற்கு வலுவான சான்றாக இவ்வசனம் திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக