வியாழன், 13 ஜனவரி, 2011

சகோ.சிராஜ் அவர்களுக்கு ஒரு அன்பான அழைப்பு!!



சகோ. ஏர்வாடி சிராஜின் அறைகூவலுக்கு பதிலடி
மற்றும் சகோ, சிராஜ் அவர்களுக்கு ஒரு அன்பான அழைப்பு!!


அஸ்ஸலாமு அலைக்கும்..

ஒவ்வொரு தலைப்பிலும் சிராஜ் சொன்ன பொய்கள், அவர் செய்த நயவஞ்சக செயல்கள் என்று வெளிப்படையான குற்றச்சாட்டுகள் பல செய்து, அவற்றுக்கு விளக்கம் கேட்டால் அதை தர திராணி இல்லாத இவர், மென்றதையே மென்று கொண்டிருக்கிறார்.
பல பல தலைப்புகளாக பிரித்தால் இப்போது எனக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
அனைத்து தலைப்பையும் தொகுத்து எனக்கு அனுப்பியுள்ளீர்கள்.
எனக்கு உண்மையில் உதவி தான் செய்துள்ளீர்கள். தலைவலி குறைந்து தான் இருக்கிறது!
நன்றி!

ஒன்பது ஹதீஸ் ஆதாரங்களை தந்து, ஒவ்வொரு தலைப்பிலும் பல பல கேள்விகளை முன் வைத்தும், சிராஜ் சொல்லும் பதில் எந்த அளவிற்கு அபத்தமாகவும் கேலிக்குரியதாகவும் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியும், இவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்.
மற்ற மற்ற மெயில்களை பார்வையிடுங்கள்.

அதில் சிராஜ் போல, ஒரே பதிலை அனைத்து மெயில்களிலும் கட் பேஸ்ட் செய்யாமல், ஒவ்வொரு தலைப்பிலும் கேட்கப்பட்ட கேள்வி என்ன? அதற்கு இவர் பதில் தராமல் நழுவும் விஷயங்கள் என்னென்ன ? என்பதையெல்லாம் மெயில் வாரியாக பட்டியல் இட்டுள்ளோம்.


எந்த மெயிலுக்கும் பதில் தராத இவர்,
கேட்க்கும் ஒரே கேள்வி, ஹதீஸ்களை எந்த வெட்டலும் , சுய கருத்துகளை திணிக்காமலும், வார்த்தைகளை இட்டுக்கட்டமலும் பதித்திருக்கிறேன் என்று இறைவன் மீதாணையாக சொல்ல முடியுமா? என்பது தான்.

//பிறை சம்மந்தப்பட்ட அவருடைய ஆதார ஹதீஸ்களை ஒரு வார்த்தை கூட அவர் இட்டுகட்டாமல், கூட்டாமல்,குறைக்காமல், திரிக்காமல், வெட்டாமல், தன் சுய கருத்துகளை திணிக்காமல் முழுமையாக பதிந்தேன் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நாஷித் அவர்கள் கூற வேண்டும்- ஏர்வாடி சிராஜ்



இதை நாம் ஏற்கனவே சொல்லியாகி விட்டது.

எனது நினைவுக்குட்ப்பட்டு பிறை சம்மந்தப்பட்ட ஹதீஸ்களுக்கு சுய விளக்கங்களை நான் கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டோம். எந்த வார்த்தையையும், வேண்டுமென்றே நான் வெட்டவில்லை, சேர்க்கவில்லை. எதை இருக்கிறது என்று நான் நம்புகிறேனோ, அதை தான் சொல்லியிருக்கிறேன்.
மேலே இவர் என்னவெல்லாம் கேட்டாரோ, எதையும் நான் வேண்டுமென்றே செய்யவில்லை!
இறைவன் சாட்சி.!!!!!

எனது அறிவையும் மீறி, ஏதேனும் கருத்துக்களிலோ, நான் பதிந்த மொழியாக்கத்திலோ தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டுங்கள்,. திருத்திக்கொள்கிறேன்.

இவை எல்லாம் சாதாரண விஷயம் தான். மனிதன் என்றால் தவறு செய்வான். தெரியாமல் செய்யும் தவறுகள் என்றால் சுட்டிக்காட்டினால் அல்லாஹ்வுக்காக திருத்திக்கொள்வான்.
இது எனக்கும் பொருத்தும்.. சிராஜுக்கும் பொருந்தும்..

தெரிந்தே நாம் எந்த வெட்டல், இடை சருகல்கள் செய்யவில்லை. அல்லாஹ் மீது ஆணையாக!
ஆனால், சிராஜ் செய்துள்ளார்.


தெரிந்தே நான் ஹதீஸில் இல்லாத கருத்தை கூறி, அதன் மூலம், பிறையை கண்ணால் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்து ஹதீஸில் இல்லாத போதும் இருக்கின்றதாக நான் சொல்லவில்லை.
இருப்பதை இருக்கிறது என்று நம்பி தான் சொல்கிறேன்.
வேண்டுமென்றே நான் எதை பொய்யாக இங்கு சொல்லிருந்தாலும் அல்லாஹ்வின் சாபம் எனக்கு உண்டாகட்டும்.! ..


ஆனால், தன் பக்கம் உண்மை இருப்பவர் இது போன்று கேட்க தேவையே இல்லை.
அதை தான் இங்கு குழும சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

இவர் தனது கொள்கையில் உண்மையாளர் என்றால், தன் கொள்கையை நிலைநாட்டும் விருப்பம் கொண்டவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
  • நாஷித் கூறியுள்ள இந்த ஹதீஸில் இந்த வார்த்தை இல்லை. அவர் தவறாக சொல்லியுள்ளார்.
  • அவர் இவ்வாறு திரித்து, வெட்டி, மறைத்துள்ளதால், அவர் இந்த ஹதீசுக்கு சொல்லும் கருத்து இவ்வாறு வராது.
  • இதோ, இந்த வார்த்தைக்கு பதிலாக ஹதீஸில் இந்த வார்த்தை தான் உள்ளது.
  • இந்த வார்த்தை இருப்பதால், அதன் கருத்து இது தானே தவிர நாஷித் சொல்லும் கருத்து அல்ல!
  • அந்த ஹதீசுக்கு நாஷித் சொல்லும் கருத்துக்கும் நான் சொல்லும் விளக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள்.
  • இதனால், பிறையை கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து முடிவு செய்ய கூடாது என்று கருத்து வருவதை பாருங்கள்.
  • நாஷித் தன் சுய விளக்கத்தை கொடுத்து விளக்கி, தன் கொள்கையை தவறான முறையில் நிலைநாட்டுவதை பாருங்கள்..


என்று, சிராஜ் அவர்கள் தன் பக்கம் உள்ள ஹதீஸ் விளக்கம் என்ன என்பதை சொல்லி , நான் ஹதீசுக்கு தந்திருக்கும் தமிழக்கத்தையும் , விளக்கத்தையும் குற்றம் சொல்ல வேண்டுமே அல்லாமல், நீங்கள் ஹதீஸில் உள்ள வார்த்தைகளை வெட்டாமல் பதிதிருக்கிறீர்களா? என்று என்னிட கேட்பது நேரத்தை கடத்தும் செயல்.

இருந்தாலும், அதற்கு நாம் இறைவனை சாட்சியாக்கி ஏற்கனவே பதில் சொல்லி விட்டோம் என்பது வேறு விஷயம்..


இவர் நம்மிடம் சத்தியம் செய்ய சொல்லியதால், அதே போன்று , இவரை நோக்கி நாம் இப்போது கேள்வி கேட்கிறோம்..

  • பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
  • எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
  • நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை

என்பதை இங்கு இறைவன் மீதாணையாக சிராஜ் சொல்ல வேண்டும்.

""நான் கூறுவதில் பொய் இருந்தால் அல்லாஹ் என்னை சபிக்கட்டும், என்று நான் எவ்வாறு அறிவித்தேனோ , அதே போன்று, இவரும் மேற்படி மூன்று செய்திகளையும் முன்னிறுத்தி இவ்வாறு அல்லாஹ்வின் சாபத்தை வேண்டி, அதையும் இங்கு அறிவிக்க வேண்டும்.""


விவாதங்களை இனி இதற்கடுத்து தொடரலாம், இன்ஷா அல்லாஹ்.





சிராஜ் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அன்பான வேண்டுகோள்.
(எந்த உள்நோக்கமும் இல்லாமல், திறந்த மனதோடு நான் கேட்டுக்கொள்வது....)


வாதங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு விடாதீர்கள். வாதங்களை விட, இறைவனின் பாதுகாப்பு மிக முக்கியம்..
தயவு செய்து அவசரப்பட்டு சத்தியமோ , சாபமோ சொல்லி விடாதீர்கள்.

நமது இந்த விவாதம் எந்த நிலையில் இப்போது உள்ளதோ, அதே நிலையில் வேணடுமானால் நிறுத்திக்கொள்ளலாம் சகோதரரே! நீங்கள் எதை நம்பி உள்ளீர்களோ, அதை நீங்களே மறு பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.
நானும் செய்கிறேன். நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
இதை தனிப்பட்ட முறையில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

((இதை வைத்து, நான் பின்வாங்கி விட்டதாக திரித்து விடாதீர்கள், தயவு கூர்ந்து ))


வஸ்ஸலாம்..


அன்புடன்,
நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646
السلام عليكم ورحمة الله وبركاته

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக