இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு சத்தியத்தை தயவு தாட்சணியம் பாராமல் போட்டு உடைத்ததன் பயனாய் தான் இன்றைய தமிழ் முஸ்லிம் தலைமுறை ஏகத்துவத்தில் ஜொலிக்கிறது.
அன்று மார்க்க விரோத காரியங்களையும் நூதனங்களையும் அதற்கு வக்காலத்து வாங்கி வந்த முஹல்லாக்கள், ஜமாஅத்தார்களை கடுமையாக விமர்சித்ததன் விளைவு, இன்று அது போன்ற காரியங்களை செய்வதற்கே வெட்கப்படும் சமூகமாக நம் சமூகம் மாறி வருகிறது.
நமது நிலையில் மாற்றம் ஏற்படவில்லை, நமது வீரியத்தில் தொய்வு ஏற்படவில்லை.
கடந்த 25 வருடங்களாக இந்த ஏகத்துவ பிரச்சாரகர்களின் இத்தகைய அணுகுமுறையை பாராட்டி, அதன் விளைவாய் இன்று ஏகத்துவக் காற்றை சுவாசிக்கும் சிலர், அத்தகைய கடினமான போக்கு கூடாது எனவும், அதனால் இந்த ஜமாஅத்தை வெறுக்கிறேன் என்றும் இன்றைக்கு விமர்சனம் செய்ய கிளம்பியுள்ளனர்.
மார்க்க அறிஞர்களின் எத்தகைய வழிமுறை மூலம் இந்த சத்தியக் கொள்கை நமக்கு கிட்டியதோ அந்த வழிமுறையையே இன்று விமர்சனம் செய்வது என்பது வெளிப்படையான சந்தர்ப்பவாதமேயன்றி வேறில்லை.
சத்தியக் கருத்தை போட்டு உடையுங்கள் என்று தான் திருமறையில் அல்லாஹ் சொல்கிறான். உறவை பேணுவது எந்த அளவு முக்கியமோ அதை விடவும் உறவினர் விஷயத்தில் நன்மையை நாடுவது முக்கியம்.
நபி (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்களை தாண்டிய ஒரு உறவு பேணலோ ஒற்றுமையோ சமூகத்திற்கு அவசியமில்லை என்பதை துணிந்து சொல்லும் பேரியக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திகழ்வதால் தான் அதற்கு எதிர்ப்புகளும் வலுக்கின்றன !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக