சனி, 18 ஜனவரி, 2014

ஒற்றுமை விரும்பிகளுக்கு நமது அறைகூவல்


தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் சமுதாய ஒற்றுமைக்கு எதிராய் நிற்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள்,
தங்களது பரிசுத்த தன்மையையும்
சமூக ஒற்றுமையின் பால் தாங்கள் கொண்டிருக்கும் அயராத காதலையும் நிரூபிக்கும் முகமாய் 
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையாய் சந்திக்க உள்ளோம் என்கிற‌ இனிப்பான செய்தியை தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திற்கு தரத் தயாரா ?

வரும் தேர்தலை பொறுத்தவரை தவ்ஹீத் ஜமாஅத் என்கிற ஒற்றுமையை விரும்பாத அமைப்பை ஓரங்கட்டி விட்டு, நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஓரணியில் திரளும் பேரதிசயத்தை இம்முறை தேர்தலின் போது நாம் காணலாமா?

த‌முமுக,மமக, எஸ்டிபிஐ,முஸ்லிம் லீக், தேசிய லீக், அந்தக் கழகம், இந்தக் கழகம் என லட்டர் பேடுகள் அனைத்தையும் கலைத்து விட்டு முஸ்லிம் கூட்டமைப்பு என ஒரு தனி அரசியல் கட்சியை துவக்குங்களேன்.
மேல் கூறப்பட்ட அனைத்து அமைப்பினரும் இதில் தங்களை இணைத்துக் கொள்ளுங்களேன்.
ஒரே கட்சியாக, ஒரே அரசியல் கொள்கையை வகுத்துக் கொண்டு ஒரேயொரு மாநில அல்லது தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தியுங்களேன்..

இதன் மூலம், சமூக ஒற்றுமை தான் உங்கள் ஒரே இலட்சியம் என்கிற உங்களது இத்தனை நாள் பிரச்சாரம் மெய்ப்பிக்கப்படுமே?

தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் தான் ஒற்றுமையை எதிர்ப்பவர்கள் என்கிற உங்களது பல வருட குற்றசாட்டு உண்மையாக்கப்படுமே?

செய்வீர்களா?

நிச்சயம் செய்ய மாட்டீர்கள்.

அவ்வாறு செய்தால் சமூகத்தில் உங்கள் தனித்துவம் பாதிக்கப்படும் என்கிற பயம்.
நமக்கென தனி செல்வாக்கு கிடைக்காது என்கிற ஆணவம்.
கூட்டணி வைத்துக் கொண்டால் தொகுதி வேட்பாளர் நானா நீயா என்கிற அகம்பாவம்.
தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், மந்திரி சபை எனக்கா உனக்கா என்கிற தலைக்கனம்.

சமூக ஒற்றுமை, சமூக ஒற்றுமை என வாய் கிழிய பேசும் இது போன்ற நய வஞ்சகர்கள் கேவலம், ஒரு தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க வக்கற்றவர்கள்.

பதவி மோகமும், தற்பெருமையும், ஆணவமுமே இவர்களது சுய அடையாளங்கள். தங்களது சுயத்தை மூடி மறைக்க‌ ஒற்றுமை என்கிற முகமூடி இவர்களுக்கு தேவைப்படுகிறது.

கொள்கைகள் ஒன்றுபடாதவரை, இது போன்ற போலிகள், வெறும் போலிகளாகவே தான் காட்சியளிக்கும்,
அவை போலி என்பதை சமந்தப்பட்டவர்களே நிரூபித்தும் விடுவர் !

கெட்டதும், நல்லதும் சமமாகாது'' என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே.
அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள் அல் குர் ஆன் 5:100

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக