ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சபலங்கள் பல வகை


தனி நபரை மையப்படுத்தி அழைப்பு விடுக்கப்படும் விவாதமெனில் சத்தியம் அறியப்பட வேண்டும் என்பதை தாண்டி, தனி நபர் விமர்சனம், தனி நபர் எதிர்ப்பே அங்கே மேலோங்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தவ்ஹீத் ஜமாஅத் கொண்டிருக்கும் கொள்கை தவறு என்பதை நிரூபிக்க திராணியும் முதுகெலும்பும் உடையவர்களாக இருப்பவர்கள், நாங்கள் எந்த கொம்பனுடனும் விவாதித்து உங்கள் முகத்திரையை கிழிக்க தயார் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். பிஜே வர வேண்டும், மேடையில் பேசாமல் சும்மாவேனும் அமர்ந்திருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதன் மூலம், இவர்களுக்கு பிஜே என்கிற மனிதரோடு விவாதம் செய்ததாக உலகில் விளம்பரம் தேடிக் கொள்ள ஆசை, அது தான் காரணம் என்பதை புரியலாம்.

2006 மே மாதம் வரை பெருவாரியான கப்ர்முட்டிகளுக்கு கூட யாரென்று தெரியாத ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர், அடுத்த மாதம் களியக்காவிளையில் பிஜேவுடன் நடந்த விவாதத்தின் பயனாய் அனைத்து கப்ர் முட்டிகள் மத்தியில் அறியப்பட்டார்.

அதாவது திருமண வீட்டில் மாப்பிள்ளையாக இருந்து தான் விளம்பரம் தேட வேண்டும் என்பதல்ல, அங்கே குப்பையள்ளும் தெரு நாயாக இருந்தால் கூட போதும், ""திருமண வீட்டு தெரு நாய்"" என்கிற பெயரும் பெருமையும் கிடைக்குமே, அது போதும் என்பது போல், விவாதத்தில் கலந்து கொள்வது தான் இவர்களைப் போன்றோருக்கு முக்கியமே தவிர, வெற்றி பெற இயலாது என்பது பற்றி எந்த‌ பொருட்டுமில்லை !!

பிஜே என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பில் இருக்கிறார் என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் யார் என்ன விவாதத்தில் கலந்து கொண்டாலும், யார் என்ன ஃபத்வாக்கள் கொடுத்தாலும் அதற்கு பிஜேவும் பொறுப்பாளி தான். இது எந்த பாமரருக்கும் தெரியும்.

அதை இது போன்ற புகழ் விரும்பிகள் தெரிந்து வைத்திருப்பதால் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற மற்ற மார்க்க அறிஞர்கள் எழுதிய நூலை விமர்சனம் செய்கின்ற போது கூட, பிஜேவின் பெயரோடு அதை இணைக்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற மற்ற நிர்வாகிகளோ ஆலிம்களோ கொடுக்கும் ஃபத்வாக்களுக்கும் பிஜேவுக்கும் எந்த தொடர்பையும் நாங்கள் ஏற்படுத்த மாட்டோம், பிஜே சொன்னவைகளுக்கு மட்டும் தான் பிஜே பொறுப்பாவார் என்று இவர்கள் அறிவித்தால் மட்டுமே இப்போது பிஜெவை அழைத்து வரும்படி இவர்கள் கேட்பதில் சிறிதேனும் அர்த்தமிருக்கும். (அதுவும் மடமையான நிலைபாடு என்பது தனி விஷயம்)

அல்லாமல், பிஜே வந்து சும்மாவேனும் மேடையில் அமர்ந்திருக்க‌ வேண்டும் அப்போது தான் விவாதிப்போம் என்று கூறுவது என்பது பிஜே என்கிற மாபெரும் அறிஞரோடு விவாதித்து விட்டோம் என்று விளம்பரப்படுத்த வேண்டும் என்கிற சபலப் புத்தியின் வெளிப்பாடே !

சபலங்கள் பல வகை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக