இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுவரை நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்கள் :
இன்றைய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அன்றைக்கு அங்கம் வகித்திருந்த இயக்கம் சார்பில் ஜூலை 4, 1999 இல் சென்னை சீரணி அரங்கில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு
மார்ச் 21, 2004 இல் தஞ்சாவூரில் நடைபெற்ற பேரணி மற்றும் மாநாடு
ஜனவரி 29, 2006 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் மாநாடு
ஜூலை 4, 2007 இல் மத்திய சிறைசாலைகள் உள்ள நகரங்களில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டம்
ஜூலை 4, 2010 இல் சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் உரிமை பேரணி மற்றும் மாநாடு
பிப்ரவரி 14, 2012 இல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற வாழ்வுரிமை போராட்டம்
இத்தகைய போராட்டங்களின் பயனாய்,
இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் முன்னிலையில் மேடையேறி இது குறித்து வாக்குறுதி தர முன் வந்தார் ஜெயலலிதா.
ஆந்திராவில் இட ஒதுக்கீடு கொடுத்ததை கூட எதிர்த்த ஜெயலலிதா, தமிழகத்தில் இட ஒதுக்கீடு தருவதற்கென அரசாணை பிறப்பித்தார்.
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது என்கிற கொள்கையை கொண்டிருந்த கருணாநிதி, 3.5% இட ஒதுக்கீடு அளித்து சட்டமியற்றினார்.
40 ஆண்டு காலமாக முஸ்லிம்களை வஞ்சித்து வந்த காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் தேசிய அளவிலான நிலையை அலசுவதற்கென மூன்று கமிஷன்கள் அமைத்தது.
சிறுபான்மை நல அமைப்புகள் உருவாயின, தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அலசப்பட்டு விரைவில் நல்ல செய்தி தருவோம் என சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதியளித்தனர்.
முஸ்லிம்களை வஞ்சிக்க நினைக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது முஸ்லிம் இட ஒதுக்கீட்டை குறித்து பேசத் துவங்கின.
நமது போராட்டங்கள் இந்த சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் தான் செலுத்தி வருகிறது என்பதை கண்கூடாய் கண்டு வரும் மக்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட போராட்டத்திற்கும் இதே ஆதரவை அளிக்க முன் வர வேண்டும்.
வரும் ஜனவரி 28, 2014 இல், தமிழக அளவில் 7% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தேசிய அளவில் 10% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் சென்னை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய நாங்கு நகரங்களில் இலட்சக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமொன்றை நடத்துவது என தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
ஒட்டு மொத்த அரசியல் தலைவர்களின் பார்வையும், ஊடகங்களின் கவனமும் இன்று தமிழக முஸ்லிம்களை நோக்கி..
ஜனவரி 28 இல் நாம் காட்டும் வீரியமானது, நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும், இன்ஷா அல்லாஹ் !
அணி திரள்வீர், அலைகடலென .....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக