சனி, 18 ஜனவரி, 2014

தமுமுகவின் சுயநலம்


இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் கருணாநிதிக்கு இல்லை என அப்பட்டமாக கூறியும்,
கிடைத்த கொஞ்ச நஞ்ச ஒதுக்கீடு கூட முறையாக வழங்கப்படாமல் போன போது, அது இப்போது கிடைக்காது, ரோஸ்டர் முறையில் தலைமுறை கடந்த பிறகே கிடைக்கும் என வெட்கமின்றி திமு கழகத்தை ஆதரித்தும் 

தங்கள் கையாலகாத்தனத்தை வெளிக்காட்டிய‌ மமகவினருக்கு சமுதாயம் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இருக்காது என்பதில் எவருக்கும் எந்த ஆச்சர்யமும் இல்லை.

முதாயம் பற்றிய சிந்தனை துளியும் கொண்டிராத இவர்கள்,
தங்களை ஏறெடுத்தும் பார்க்காத ஜெயலலிதா பக்கம் இனியும் செல்வதில் எந்த பயனுமில்லை என்பதால் தாமாக முன் வந்து கலைஞர் பக்கம் ஒட்டிக் கொண்டுள்ளனர்.

வழக்கம் போல் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பேன் என தேர்தல் அறிக்கையில் மறவாமல் குறிப்பிடுவார் கலைஞர்,
போதாக்குறைக்கு முஸ்லிம்களுக்கு தமது நெஞ்சிலும் இடம் தருவார்.
மிலாது நபிக்கு விடுமுறை அளித்த அளப்பெரிய தர்மத்தை (?) எல்லாம் பட்டியலிடுவார்..
காயிதே மில்லத்திற்கு மணி மண்டபம் கட்டி இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்த (??) கொடை வள்ளல் கலைஞர் என கழகமே பாராட்டும்..

முஸ்லிம் சமுதாயத்தின் மானத்தை காப்பாற்றி விட்டதாய் பெருமிதம் கொள்வர் தமுமுகவினர் !

என்ன தான் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தாலும், இது போன்ற ஜால்ரா பேர்வழிகளை தலைவர்களாக ஏற்கிற அளவிற்கு முஸ்லிம்கள் எவரும் முட்டாள்கள் இல்லை என்பதை கலைஞர் அறிந்து கொள்ளட்டும்.

அதை அறிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக