எந்த பொருளுமே தாமாக உருவாகாது என்று விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால் ஒரு அணுவிலிருந்து ஒன்று வெடித்தது என்கிறீர்கள். அப்படியானால் அணு ஒன்று தானாக தோன்றி இருந்துள்ளது என்று ஆகிறது.
இது விஞ்ஞானத்திற்கு முரண் !
எனெர்ஜி தாமாக உருவாகாது அல்லது அதை நம்மால் உருவாக்க இயலாது , அது வடிவ மாற்றம் மட்டுமே பெறும் என்று விஞ்ஞானம் சொல்கிறது.
Energy can neither be created nor destroyed, it can only be transferred from one form to another.
ஆனால், அணுவின் உள்ளுக்குள் வெடிக்கும் சக்தி தாமாக தோன்றியது என்கிறீர்கள்.
இது விஞ்ஞானத்திற்கு அடுத்த முரண் !!
Every element remains to be in a static position unless an external force induces it .. என்பது விஞ்ஞானம்.
அதாவது, ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதுவே தாமாக அசையாது, வடிவம் மாறாது.. அதை செய்ய வெளிப்புற சக்தி ஒன்று வேண்டும்.
ஆனால் அணுவுக்குள் தாமே ஒரு சக்தி உருவாகி தாமே வெடித்து, இப்போது தாமே விரிவடைந்து வருகிறது என்று சொல்கிறீர்கள்.
இதுவும் விஞ்ஞானத்திற்கு முரண் !!
அதே சமயம்,
நாங்களும் விஞ்ஞானத்தை நம்புகிறோம்.
எந்த பொருளுமே தாமாக உருவாகாது என்று விஞ்ஞானம் சொல்கிறது. அதை நம்புகிறோம்.
ஏதோ ஒன்று அதை உருவாக்கி இருக்க வேண்டும் !!
அதற்கு இறைவன் என்று பெயர் வைக்க சொல்லி நான் உங்களை கட்டாயபடுத்தவில்லை. தெரியாத கதிருக்கு X கதிர் என்று பெயரிட்டது போல் இதற்கு X சக்தி என்று சொல்லுங்கள்.
சக்தியே இல்லை என்று சொல்லாதீர்கள் என்கிறோம்.
நாங்களும் விஞ்ஞானத்தை நம்புகிறோம். எனெர்ஜி தாமாக உருவாகாது அல்லது நம்மால் உருவாகாது, அது வடிவ மாற்றம் மட்டுமே பெறும் என்று விஞ்ஞானம் சொல்கிறது. அதை நம்புகிறோம்.
ஏதோ ஒரு சக்தியிலிருந்து தான் அந்த எனெர்ஜி வடிவமாற்றம் பெற்றிருக்க வேண்டும்.
அதற்கு X எனெர்ஜி என்று பெயரிடுங்கள், அல்லாமல் ஏனெர்ஜியே இல்லை என்று சொல்லாதீர்கள் என்கிறோம்!
நாங்களும் விஞ்ஞானத்தை நம்புகிறோம்.
every element remains to be in a static position unless an external force induces it .. என்பது விஞ்ஞானம். அதை நம்புகிறோம்.
சும்மா இருந்த அணுவுக்குள் ஏதோ ஒரு சக்தி தான் வெளியிலிருந்து வெடிக்குமாறு தூண்டியிருக்க வேண்டும்.
அதற்கு வேண்டுமானால் கடவுள் என்று பெயர் சூட்டாமல் வெளிப்புற X தூண்டுதல் என்று பெயரிடுங்கள்.
அல்லாமல் எந்த தூண்டுதலுமே இல்லை என்று சொல்லாதீர்கள் என்கிறோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக