வெள்ளி, 11 அக்டோபர், 2013

பிரபலங்கள் இஸ்லாத்தை ஏற்பதாய் பரவும் பொய்கள்


அவர் இஸ்லாத்தை தழுவினார், இவர் இஸ்லாத்தை தழுவினார் என்று பெரும்பாலும் பரப்பப்படும் செய்திகளை பார்த்தால் அனைத்தும் ஏதாவது வெளிநாடு திரைப்பட பிரபலங்கள் பற்றியதாக, அரசியல் பிரமுகர்களை பற்றியதாக தான் இருக்கின்றன.

இது போன்ற செய்திகளை நம்மூர் மக்கள் தமிழ் பேசும் நம் மக்களிடையே பரப்புகின்றனர்.

அதெப்படி இஸ்லாத்தை தழுவுகிற சினிமா / அரசியல் பிரபலம் என்றாலே சொல்லி வைத்தாற்போல் வெளிநாட்டினராகவே இருக்கிறார்கள்??

ஒரு ரஜினிகாந்த், ஜெயலலிதா, ராமதாசு இப்படி செய்திகள் வருவதில்லையே ஏன்?

யார் கண்டார்.. அமெரிக்க ஐரோப்பா மக்கள், தங்களுக்கிடையே இது போன்ற செய்திகள் பரிமாறும் போது இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இஸ்லாத்தை தழுவினார், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இஸ்லாத்தை தழுவினார் என்று பரப்பினாலும் பரப்புவார்களோ என்னவோ..

பரப்பப்படும் செய்திகளில் ஒரு சில உண்மையாக இருந்தாலும் அனேக செய்திகள் அடிப்படை ஆதாரங்களின்றியே பரப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்ட இந்த பதிவு.

பிரபலங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டமையால் இஸ்லாம் கண்ணியம் பெற்று விடப்போவதுமில்லை, ஏற்காது போனால் அதனால் இஸ்லாத்திற்கு எந்த இழுக்கும் நேரப்போவதுமில்லை.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொண்டவர்களுக்கு நல்லது, எற்றுக்கொள்ளவில்லையெனில் அது அவர்களுக்கு இழப்பு !
இது போன்ற செய்திகளை பரப்புகிறவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக