பரீட்சையில் மாணவனிடம் நாயக்கர் மகால் தூணை பற்றி குறிப்பு வரைக.. என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவன்,
தூண் என்றதும் எங்கள் பூர்வீக வீடு தான் என் நினைவுக்கு வரும். முற்றத்தில் இரண்டு பெரிய தூண்கள் இருக்கும்.
நானும் அக்காவும் சிறு வயதில் அதை சுற்றி சுற்றி தான் விளையாடுவோம்.
கண்ணாமூச்சி ஆடுகையில் கண்ணை பொத்திக் கொண்டு நிற்கும் இடம் கூட அந்த தூண் தான்.
எங்கள் அம்மா துணி காயப்போடுவதற்காக கட்டும் கயிறை கூட இந்த தூணில் ஆணி அறைந்து தான் கட்டியிருந்தார்கள் அவ்வளவு உறுதி அது.
பல சினிமாக்களில் கூட கதாநாயகனும் கதாநாயகியும் டூயட் ஆடுவதற்கு தேர்வு செய்யும் இடம் கூட இத்தகைய தூண்கள் தான்.
என்று நான்கு பக்கத்திற்கு எழுதி தள்ளினானாம். ஆனால் கடைசி வரையிலும் அந்த நாயக்கர் மகால் தூண் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
இவனை போன்று தான் சூனியத்திற்கு வக்காலத்து வாங்குவோரின் நிலையும் உள்ளது.
சூனியம் என்பது உண்மை..
அல்லாஹ் நாடினால் செய்யலாம், நாடவில்லை என்றால் செய்ய முடியாது.
அது ஒரு சக்தி.
அதை வைத்து குறிப்பிட்ட அளவு தீங்கெல்லாம் செய்யலாம்.. அதை செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் நாம் செய்யக்கூடாது. செய்தால் வழிகெட்டு விடுவோம்..
என்று ஏழு பக்கத்திற்கு பேசுவார்கள்..
சரிப்பா தம்பி.. ஏதோ சூனியம் சூனியம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாயே .. அப்படிஎன்றால் என்ன?? அதை கொண்டு என்ன அப்படி செய்யலாம்?
என்று யாராவது கேட்டுப்பாருங்களேன்.. பதில் சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்??????????
மறுபடியும்
சூனியம் என்பது உண்மை..
அல்லாஹ் நாடினால் செய்யலாம், நாடவில்லை என்றால் செய்ய முடியாது.
அது ஒரு சக்தி.
அதை வைத்து குறிப்பிட்ட அளவு தீங்கெல்லாம் செய்யலாம்.. அதை செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் நாம் செய்யக்கூடாது. செய்தால் வழிகெட்டு விடுவோம்..
என்று அதே பாட்டு துவங்கும்.
இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவெனில், அந்த மாணவன் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்தாலும் நாயக்கர் மகால் இருப்பது உண்மை, அங்கே தூண் இருப்பதும் உண்மை !
அதே சமயம் இந்த சூனியத்திற்கு வக்காலத்து வாங்குவோரோ இல்லாத ஒன்றுக்கு தான் சுற்றி வருகிறார்கள் !!
இதற்கு அந்த மாணவனே தேவலாம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக