19/09/2012
அஸ்ஸலாமு அலைக்கும்,
3 :55 ஈஸா வே உம்மை கைப்பற்றுவேன் , இன்னும் உம்மை என்னளவில் உயர்த்தி நிராகரித்து கொண்டிருப்போர் கேவலத்திலிருந்தும் உன்னை தூய்மை படுத்துவேன்.
உங்கள் அனைத்து வாதங்களுக்கும் இந்த குரான் வசனம் பதில் சொல்லி கொண்டிருக்கிறது. இதை நீங்கள் ஏற்காமல் வாதாடி கொண்டிருக்கிறீர்கள்.
அவரை தன்னளவில் உயர்த்தி கொண்டான்.
உயர்த்தி நிராகரித்து கொண்டிருப்போரின் கேவலத்திலிருந்து அவரை தூய்மை படுத்தினான்.
நீங்களும் சொல்வது போல் குரானை முழுமையாக சிந்திக்க வேண்டும் அதே சமயம் ஹதிஷ்களை முரணில்லாமல் ஏற்று கொள்ள வேண்டும் என்றால்.
ஈஸா நபி மரணித்தார் என்று குரான் சொல்வதை புரிந்தால் எந்த வசனமும் முரணாகாது. ஹதிஷில் அவர் மீண்டும் வருவார் என்பது ஒரு அதிசய நிகழ்வாக இருக்கும். இந்த நிலையிலன்றி குரானின் பல வசனங்களோடு முரண் பட்டு ஈஸா நபி மரணிக்கவில்லை என்று அர்த்தம் கொள்வதால் உங்களின் கொள்கை என்ன ?
ஈஸா நபி உயிரோடு இருக்கிறார் என்பதா ? அல்லது அவர் உயிரோடு இருந்தால் தான் மீண்டும் வர முடியும் என்பதா ?
உயர்த்தினான், கைப்பற்றினான் என்பவைகளை குறித்து நீங்கள் வைக்கும் வாதங்களை மறுக்க வேண்டும் என்று தான் மறுத்து கொண்டிருக்கிறேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதற்கு காரணம் அதை நீங்கள் தவறாக பொருள் கொள்வதால் தவிர வேறெதற்கும் இல்லை.
நான் சுட்டி காட்டும் வசனங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதர்க்கு முன்னால் அதை கொண்டு நான் எதனை சிந்திக்க சொல்கிறேன் என்பதை பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம் . நான் எவற்றை கேள்வியாக முக்கியத்துவம் கொடுத்து சிந்திக்க சொல்கிறேனோ அதை நீங்கள் வசதியாக மறந்து விடுகிறீர்கள் , இது உங்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும் எனக்கு வருத்தமளிக்கிறது.
முதலில்,
உயர்த்தினான் என்பதை அல்லாஹ் ஒரு மனிதை குறிப்பிட்டு சொல்லும் போது அதில் எந்த துணை சொல்லும் இல்லையென்றாலும் அதன் கருத்தின் படி கண்ணியபடுத்டினான் என்று பொருள் வரும் என்பது தான என் வாதம்.
அதற்கு தான் இத்ரிஸ் நபி வசனமும் 7 :176 வசனமும் எடுத்து காட்டினேன்.
இவற்றிற்கு நீங்கள் என்ன மறுப்பு சொல்கிறீர்கள் என்று பாருங்கள்,
இதில் எனது வாதம் ஒன்றே ஒன்று தான் - இத்ரீஸ் நபியை உயர்ந்த்த இடத்தில் அல்லாஹ் உயர்த்தினான் என்று சொல்ல வேண்டும் !! அவ்வளவு தான்.
காரணம், உயர்ந்த இடம் என்று வந்து விட்டது. (அந்த உயர்ந்த இடம் என்பதற்கு என்ன பொருள் என்பதை பற்றி சிந்திக்க தேவையில்லை, எப்படி சிந்தித்தாலும், உயர்ந்த இடம், உயர்ந்த இடம் தான்
இதில் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இடத்திற்கு இடம் என்று பொருள் கொள்ளுங்கள் அல்லது அந்தஸ்து என்று பொருள் கொள்ளுங்கள் அது முக்கியமல்ல என்று சொல்கிறீர்கள். எதை குறித்து சிந்திக்க சொல்கிறேனோ அதை முக்கியமல்ல என்று சொன்னால் எப்படி ?
ஒரு உயரிய இடத்திற்கு இடம் என்றே பொருள் கொண்டால், அதன் பொருள் என்னவாகும் ?
ஒரு உயர்ந்த இடத்தில் (physical area ) இத்ரிஸ் நபியை தூக்கி அமர்த்தினான் என்று பொருள் வரும்.
ஒரு உயர்ந்த இடத்தில்அல்லா அவரை உயர்த்தினான். - அல்லாஹ் அவரை கண்ணியபடுத்தினான்.
நீங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். நான் வார்த்தையோடு அமைந்த கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறேன். அதை தான் செய்யவும் வேண்டும்.
இதே தவறை 7 :176 இலும் நீங்கள் செய்வதை பாருங்கள்,
எதன் மூலம் உயர்த்தப்படுவான் என்று சொல்லலாம், எதனை உயர்த்துவான் என்று சொல்ல முடியாது என்று சொல்கிறீர்கள்.
ஏன் சொல்ல முடியாது?
அத்தாட்சிகளை கொண்டு உயர்த்துவான் என்றால் அத்தாட்சிகளை கொண்டு உயர்த்துவான், அவனை உயர்த்துவான்!
எதனை உயர்த்துவான் - அவனை உயர்த்துவான். !!
இதை அறிய என்ன சிரமம்?
இதிலாவது சரியான பதில் உள்ளதா ? எதனை கொண்டு உயர்த்துவான் - அத்தாட்சி கொண்டு உயர்த்துவான்.
அத்தாட்சிகளை கொண்டு அவரது அந்தஸ்தை உயர்த்தினான் என்பது தான் இந்த வாசக அமைப்பின் பொருள்.
அத்தாட்சிகளில் உயர்த்தினான் என்று சொன்னாலும் அத்தாட்சிகளை கொண்டு உயர்த்தினான் என்று சொன்னாலும் ஒரே அர்த்தம் தான்.
அத்தாசிகளை கொண்டு உயர்த்தினான் என்று சொன்னாலும் அத்தாட்சிகளை கொண்டு உயர்த்தினான் என்று சொன்னாலும் ஒன்று தான் என்பதில் மாற்று கருத்தில்லை. அதை நான் கேட்கவில்லை.
எதனால் உயத்தினான் - அத்தாட்சிகள்.
எதனை உயர்த்தினான் - அவனை உயர்த்தினான்.
இப்படி உங்கள் பதில் இருக்குமானால், நீங்கள் இந்த வசனத்திற்கு அவனை உடலோடு உயர்த்தினான் என்று தான் பொருள் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையெனில் இந்த பதிலை சொல்ல முடியாது.
எனது பதில்,
எதனால் உயத்தினான் - அத்தாட்சிகள்.
யாரை உயர்த்தினான் - அவனை.
எதனை உயர்த்தினான் - அந்தஸ்த்தை.
அவனையே உடலோடு உயர்த்தினான் என்று இருந்தால் தான் ,
எதனை உயர்த்தினான் என்ற கேள்விக்கு அவனையே உயர்த்தினான் என்று பதில் சொல்ல முடியும்.
ஒருவனது அந்தஸ்த்தை அத்தாசிகள் கொண்டு உயர்த்தினான் என்ற பொருளை தர வேண்டும். அதை தான் நீங்கள் தருகிறீர்கள் என்றால் யாரை உயர்த்தினான் என்று உள்ளது, எதனால் உயர்த்தினான் என்று உள்ளது , எதனை உயர்த்தினான் என்று எங்கே உள்ளது ? அது இல்லாத போது எப்படி அந்தஸ்த்து என்று முடிவு செய்தீர்கள் ?
யாரை என்றாலும் எதனை என்றாலும் ஒன்று தான் என்று நீங்கள் இங்கே சொல்லவே முடியாது. ஏனெனில் அது உடலை உயர்த்துவதா அல்லது கண்ணியபடுத்துவாதா என்று பொருள் கொள்ள உங்கள் பாணியில் அது தான் ஆதாரமே.
எனவே இது தவறான் வாதமும் உங்கள் கருத்திற்கு எதிராகவே இந்த வசனங்கள் உள்ளது என்பதும் சந்தேகம் இல்லை.
தூர் மலையை அவர்கள் மேல் உயர்த்தி என்று வருவது நேரடியாகவே அதனை உயர்த்தினான் என்று பொருள் வருவது உண்மை தான். இதை நான் தவறாக சுட்டி காட்டி விட்டேன்.
இருந்தும் ஒரு பொருளை உயர்த்துவது குறித்து யாருக்கும் எந்த கருத்து வேறுபாடில்லை. அல்லா ஒரு மனிதரை அல்லது ஒரு சமுதாயத்தை உயர்த்துவது குறித்து பேசும் போது தான் அது அவரையே உயர்த்துவதா அல்லது கண்ணியத்தில் உயர்த்துவதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்த சிந்தனையில் குரானிலும், இலக்கியங்களிலும் உங்கள் கருத்து எங்கும் இல்லை.
இதே வசனம் அவர்களை தூர் மலைக்குமேலாக உயர்த்தினேன் என்று இருக்குமாயின், என்ன பொருள் செய்வீர்கள் ?
நேரடியான பொருள் தானே ?
அது போலவே இதிர்ஸ் நபியை ஒரு உயர்ந்த இடம் (தூர் மலையை போன்ற ஒரு இடம்) உயர்த்தினேன் என்றால் எப்படி அந்தஸ்த்தில் உயர்த்தினான் என்று பொருள் வரும் ? எனில் கருத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் போது இது போன்ற வாதங்கள் வைக்க முடியாது.
மேலும்,
அவரை என்னளவில் உயர்த்தி கொள்வேன் அதன் மூலம் நிராகரித்த்தவர் கேவலத்திலிருந்து அவரை கண்ணியபடுத்துவேன் என்று வேறு ஒரு இடத்தில் காரணம் சொல்லப்பட்டிருக்கும் போது, உடலோடு உயர்த்தினான் என்று பொருள் கொள்வது தவறு.
குரானை முழுமையாக படித்து புரிய வேண்டும் என்று சொல்லும் போது ஒரு நபரை குறித்து ஒரே மாதியான வார்த்தை கொண்டு சொல்லப்பட்டிருக்கும் போது அதன் காரணத்தை நிராகரித்து விட்டு புதியதொரு விளக்கம் அழிப்பது தான் முரணாக சிந்திப்பதில் அடங்கும்.
எனவே "தன்னளவில் அவரை உயர்த்தி கொண்டான்" என்பது கண்ணியபடுத்துவது தானே தவிர உடலோடு உயர்த்துவது அல்ல.
"அவரை உயர்த்தி கொண்டான்" என்று கூட இல்லை "தன்னளவில் உயர்த்தி கொண்டான்" என்று உள்ளது அதை மேலும் உறுதி படுத்துகிறது.
இது போலவே வல்லமை மிக்க்கவன் ஞானமிக்கவன் என்று கூறுவது கேவலத்தில் இருந்து காப்பற்றவும் சொல்லலாம் என்று நான் வாதம் வைத்தால் அது கூடாது என்று மறுக்க வேண்டும். அதை மறுக்க முடியாத காரணத்தால் நீங்கள் அதை விடவும் உடலோடு உயர்த்தும் போது தான் இதை சொல்ல முடியும் என்று சொல்கிறீர்கள்.
எனது வாதம் எந்த நிலையிலும் காப்பாற்ற படுவதற்கும் வல்லமை மிக்கவன் என்று சொல்வது தகுமானது தான் என்பது தான்.
இதற்கு ஸாலிஹ் நபியை காப்ற்றினோம், அவரை அந்த நாளின் இழிவிலிருந்து காப்பாற்றினோம் என்று கூறுவதை சுட்டி காட்டினேன். நீங்கள் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறீர்கள் ஆனால் அதை ஒட்டிய ஒரு உதாரணத்தை சொல்லவில்லை.
நான் அவனை அந்த தீ விபத்தில் இருந்து போராடி காப்பாற்றினேன், அவனது குடும்பம் மகிழ்ச்சியடைந்தது , நான் ஆற்றல்மிக்கவன்.
இரெண்டும் ஒரே சம்பவம் குறித்தே சொல்லப்படுவதால் இங்கு நானும் தீ விபத்தில் இருந்து காபற்றியதர்க்கு தான் ஆற்றல் மிக்கவன் என்பது சொல்லப்படுகிறது என்பதை புரிகிறேன்.
ஸாலிஹ் நபி வசனத்தில் இரண்டு சம்பவங்களிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுகிறான் எனவே இரேண்டிர்க்கும் பொதுவாக சொல்வது தான் வல்லமைமிக்கவன் என்பது. ஒன்றிற்கு சொல்லி மற்றொன்றிக்கு பொருந்தாது என்பதாக இல்லை.
உதாரணம்,
ஒருவரின் பெட்டிக்குள் அவருக்கு தெரியாமல் தங்க நகைகளை பதுக்கி வைத்து ஒரு கும்பல் ஒன்று அவர் மீது குற்றம் சுமத்த பார்க்கிறது.
இதை அறிந்த ஒருவன் அதை படம் பிடித்து விடுகிறான்.
நான் அந்த பெட்டிக்குள் தங்கம் வைக்கப்பட்டதை வைத்ததை படம் பிடித்து விட்டேன். மேலும் அவரை அவர்கள் பழி சுமத்த முடியாதபடி காப்பாற்றினேன். நான் வல்லமை மிக்கவன். அறிவுள்ளவன்.
இதில் இரண்டிற்கும் பொதுவான ஒரு சொல் தான் இந்த வல்லமை மிக்கவன். அறிவுள்ளவன் என்பதெல்லாம்.
இந்த உதாரணம் கொண்டே பார்த்தோமானால் ஈஸா நபி விசயத்தில் நீங்கள் சொல்லவருவது,
நான் அந்த பெட்டிக்குள் தங்கம் வைக்கப்பட்டதை வைத்ததை படம் பிடித்து விட்டேன். நான் வல்லமை மிக்கவன். என்று சொல்லி எப்படி காப்ற்றினான் என்பதை மட்டும் சொல்வதாக சொல்கிறீர்கள்.
எனது கருத்தில் , எப்படி காப்ற்றியிருந்தாலும், முடிவில் அவர்களது கேவலத்திளிருந்து அவரை காப்பாற்றி மேலும் அவரின் கண்ணியத்தை தன்னளவிலும் உயர்த்தி கொண்டான், என்ற பொருள் அடங்கி விடும்.
மேல் உள்ள உதரனத்தின் கருத்தின் படி ,
மேலும் அவரை அவர்கள் பழி சுமத்த முடியாதபடி காப்பாற்றினேன். நான் வல்லமை மிக்கவன். அறிவுள்ளவன்.
என்று சொல்வது மட்டுமே போதுமானது. இதில் ஏதேனும் காரணத்தால் அவர்களது சதி முரியடிக்கபட்டது என்றும் அதனால் அவர்களால் பழி சுமத்த முடியவில்லை என்பதும் விளங்க முடிகிறது.
யூதர்கள் சிலுவையில் கொல்ல நினைத்தனர்.
அல்லா அவர்கள் சதியை முறியடித்தான்.
அவரை அவர்கள் கொல்லவே இல்லை. எனவே அவர்களால் ஈஸா நபியை பொய்யர் என்று நிரூபிக்க முடியவில்லை.
மேலும் அல்லாஹ் தன்னளவில் அவரை உயர்த்தி கொண்டான். அல்லா வல்லமை மிக்கவன். ஞானமிக்கவன்.
இதன் பொருள்,
நான் உம்மை கைப்பற்றுவேன், மேலும் உன்னை என்னளவில் உன்னை உயர்த்தி நிராகரித்தவரின் கேவலத்திலிருந்து உம்மை தூய்மை படுத்துவேன்.
இப்படி அல்லாஹ் ஈஸா நபிக்கு முன்னரே வாக்களித்துள்ளான். அதன் படி அல்லாஹ் தான் ஈஸா நபியை மரணிக்க செய்வான், யூதர்கள் கொல்ல முடியாது.
மேலும் அவரை கண்ணியபடுத்துவான், அதன் மூலம் நிராகரித்தவர்களின் கேவலத்திர்லிருந்தும் அவரை தூய்மை படுத்துவான்.
இப்படி பொருள் கொள்வதில் மட்டுமே,
எந்த சந்தேகமும் இல்லை குழப்பமும் இல்லை முரணும் இல்லை என்பதை நிரூபிக்கிறது.
ஈஸா நபி தான் மறுமை நாளின் அத்தாட்சியா ?
கோடிட்ட இடத்தில் குர் ஆன் என்று எப்படி வரும்???
இது பொருந்தாத மொழியாக்கம்
என்றெல்லாம் சொல்வதால் மட்டுமே அது தவறாகி விடாது.
இதில் சொல்லப்படுவது,
தன்னிலையாகவும் முன்னிலையாகவும் இந்த வசனங்கள் பேசி கொண்டு வருகிறது.
43:60. நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.
43:61. நிச்சயமாக இது மறுமை நாளின் அத்தாட்சியுடையது; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி.
43:62. அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விட்டும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
அல்லா நாடியிருந்தால் மலக்குகளை பின்தோன்றல்கலாக்கியிருப்பான். என்றும்
இந்த குரான் மறுமை நாளின் அடையாலங்களையுடையது. இதில் சந்தேகம் கொல்ல வேண்டாம். மேலும் என்னையே(அல்லாஹ்வை,அல்லாஹ்வின் வழியை) பின்பற்றுங்கள் இது தான் நேர் வழி.
என்றும் பேசுகிறது.
நபியை பின்பற்றுவதும் அல்லாஹ்வை பின்பற்றுவதும் ஒரே கருத்துடையது என்றாலும் இங்கே குல் என்றோ நபியே நீங்கள் கூறுங்கள் என்றோ வார்த்தை இல்லை. அல்லாஹ்வே நேரடியாக பேசி கொண்டு வருகிறான். எனவே அல்லா தன்னிலையாக பேசுவதாக எடுத்து கொள்ள வேண்டும்.
அவன் தான் திருடன், இதில் சந்தேகமில்லை. என்னை பின்பற்று.
இப்படி சொன்னால் என்ன பொருள்? அவன் தான் திருடன் என்று நான் சொல்கிற இந்த விஷயத்தில் என்னை பின்பற்று என்று தான் பொருள்.
இப்படி சொல்வதில் எந்த பொருள் சேதமும் இல்லை.
எந்த சேதமும் இல்லை என்று எப்படி தான் சொல்ல முடியும் ?
அவன் தான் திருடன். இதில் சந்தேகமில்லை. என்னை நம்பு.
இது சரி.
அவன் திருடன் இதில் சந்தேகம் இல்லை என்னை பின்பற்று. என்றால் என்ன நடை இது ? இது தவறான நடை தான்.
இது பின்பற்ற கூடிய வாசகமா, நம்புவதற்கு உரிய வாசகமா ?
நம்பிக்கை குறித்து சொல்லபடுகிறது என்றால் இதில் சந்தேகம் இல்லை என்பது மட்டும் சொல்லியிருப்பது போதும்.என்னை பின்பற்று என்று சொல்வதால் இங்கே "அவர்" என்று ஒருவரை குறித்து மொழி பெயர்ப்பதை விட "இது" என்று குரானை குறித்து தான் மொழி பெயர்ப்பது தகும்.
وَإِنَّهُ لَعِلْمٌ لِّلسَّاعَةِ
ல இல்மு - என்பது அறிவை, knowledge என்ற பதத்தை அதிகமாக குறிக்கும் சொல்.
it is the knowledge of the hour . ஒரு புத்தகத்தை குறித்து சொல்கையில் it is the knowledge என்பதும் it has the knowledge என்பதும் ஒன்று தான்.
மறுமை நாளுக்கே இவர் அடையாளம் என்று சொல்வதை விடவும் மறுமை நாளின் அடையாளங்கள் குறித்து சொல்வது தான் இந்த குரான் என்று வைப்பது தான் பொருந்தும்.
ஈஸா நபி பெரியவரா அல்லது எங்கள் தெய்வங்களா ? என்று தர்க்கம் புரிகின்றனர்.
அவரும் என்னுடைய அடியார் தான் தவிர அவரை இஸ்ரவேலர்களில் சிறந்தவராக்கி ஒரு நல்லுதாரம் ஆக்கினோம்.
உங்களுக்கு பதிலாக நான் மலக்குகளை பூமியில் பரவ செய்து விட சக்தி பெற்றவன்.
இந்த குரான் மறுமை நாளின் அடையாளங்களி கொண்டது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். என் வழியை பின்பற்றுங்கள், இது தான் நேர்வழி.
என்று அல்லா பேசுவது பொருத்தமானது தான்.
மேலும் ,
இதை சொல்லிவிட்டு மேலும் ஈஸா நபியை குறித்து மீண்டும் தொடர்கிறது இந்த வசனம் என்று தான் எடுத்து கொள்ள முடியும்.
மரியமின் மகன் உதாரமாக கூறப்பட்ட போது என்று ஈஸா நபியை குறித்து தொடங்கி,
அதன் பின்னர் ஈஸா நபியை குறிக்க "அவர்" என்ற சொல்லை பயன் படுத்துகிறான்.
திடீர் என்று குரானை குறித்து ஏன் இங்கு பேசப்பட வேண்டும் என்று கேள்வி வரும் என்று தெரிந்து தான் இந்த சூரா குரானை பற்றி பேச ஆரம்பமாகிறது என்பதை சுட்டி காட்டினேன். தவிர அது குரானை பற்றி ஆரம்பித்தால் குரான் தான் பொருந்தி போகும் என்பதற்காக சொல்லவில்லை.
59 வது வசனம் வரை அவர் என்ற பதத்தை சொல்லி, அதன் பின் பொதுவான ஒரு எச்சரிக்கையை விடுத்து அதன் பின்னர்,
மேலும், ஈஸா என்று பெயரை கொண்டு தொடர்கிறான். எனவே இடைப்பட்ட சில வசனங்கள் அதனோடு தொடர்பின்றி பொதுவாக வேறொன்றை குறித்து பேசுவதாகவே புரிகிறது.
43:59. அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
----------
43:60. நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.
43:61. நிச்சயமாக இது மறுமை நாளின் அத்தாட்சியுடையது; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி.
43:62. அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விட்டும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
----------
மீண்டும் தொடர்ச்சியாக,
43:63. இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
இதை குறித்து குரானும்,
45:20. இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
என்று குரான் சாட்சி கூறுகிறது.
எனவே குரான் ஈஸா நபி மரணித்து விட்டதை தெளிவாகவே மிக எளிமையாக புரிய வைக்கிறது.
மேலும்,
4 :159 இல் வேதக்காரர்களின் மரணத்திற்கு முன்னாள் அதனை நம்பிக்கை கொள்வார்கள் என்று தான் முன்னறிவிப்பு செய்கிறது என்றும் முன்னரே பல காரணங்களினால் அதை விமர்சித்திருக்கிறேன், எனவே அது ஈஸா நபி வருவார் என்பதாக சொல்லும் வசனமே இல்லை.இந்த வசனம் குறித்து ஏற்கனவே தனி தலைப்பில் விவாதித்திருப்பதால் இதற்கு கூடுதல் விளக்கம் தேவையில்லை என்றே நானும் கருதுகிறேன்.
ஈஸா நபி , மரியம் அவர்கள் இருவரும் உணவருந்தி கொண்டிருந்தனர் என்பதை உங்களது கருத்தை கொண்டு நீங்கள் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. அடுத்த வைப்பில் சொல்வதாக சொல்லியதால் அதற்கு எனது கடைசி விளக்கத்தை அடுத்த வாய்ப்பில் முடிக்கிறேன். ஏனெனில் இன்னும் 2 வாய்ப்புகள் தான் பாக்கியுள்ளது. நீங்கள் ஒன்றை தவறாக உதாரணம் காட்டி நான் அதற்கு விளக்கம் அளிக்காமல் போனதாக பதிவாகி கூடாது.
ஈஸா நபி வருவார் என்று குர்ஆனில் சான்றுகள் இல்லை மாறாக அவரது மரணத்தை பற்றி தான் உள்ளது என்பதை இந்த இழையில் இதை படிப்பவர்களுக்கு விளக்கமாகவே பதிந்திருக்கிறேன்.
ஈஸா நபி வருவார் , பன்றிகளை கொல்வார் , சிலுவைகளை முறிப்பர் என்ற புஹாரி 3 /45 ஹதித் அபு ஹுரைரா விடம் இருந்து சைத் பின் அல் முஸ்சய்ப் இடம் இருந்து இப்னு அல் ஜுஹ்ரி அறிவ்விக்கிறார்.
வசலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக