14/09/2012
அஸ்ஸலாமு அலைக்கும்,
வபாத் குறித்த எனது நிலையும், உங்கள் நிலையையும் சேர்த்து மிக சுருக்கமாக ஒப்பீடு செய்து முடிக்கிறேன்.
ஒரு சொல்லுக்கு என்ன பொருள் என்பது விளக்கபட்டிருக்கும் போது அது ஒன்றே அர்த்தமாகும். வேறு ஒரு பொருளை தர வேண்டுமானால் அது குறித்து தான் நாம் ஆதாரம் தர வேண்டும்.
கைபற்றபடுதல் என்பதற்கு அகராதி அர்த்தம் மரணம் என்று நான் சொல்லாத போது,
"உயிர்கள் அவை மரணிக்கும் போதும், அது அல்லாதவைகள் தூக்கத்தின் போதும் மரணிக்கின்றன"
என்று நீங்கள் எடுத்து காட்டியது தவறென்பதால் தான் உதாரணம் கொண்டு விளக்கினேன்.
ஆக மனம் புண்படும் என்பதற்கு மனம் துக்கப்படும் போது துக்கப்படும் என்று நான் சொல்லவில்லை, புண்படும் என்பதற்கு துக்கம் என்பது தான் ஒரே பொருள் என்றால் இப்படி தான் நீங்கள் செய்தாக வேண்டும் என்று தான் சொல்கிறேன்.
நான் இதை போன்று சொல்லவில்லை.
மனம் புண்படுதல். - சொல்
துக்கத்தின் போது மனம் புண்படும் - definition
உயிர் கைபற்றபடுதல். -சொல்
மரணத்தின் போதும், தூக்கத்தின் போதும் ஒரு உயிர் கைபற்றடுகிறது. -definition
ஒன்றிற்கான விளக்கம் இருக்கும் போது அதை தவிர வேறு ஒரு விளக்கம் அளிப்பது தான் அதற்கு முரணாக சிந்திப்பதில் அடங்கும்.
தூக்கத்தில் கைபற்றபடுதல், மரணத்தில் கைபற்றபடுதல் என்பதற்கு வித்தியாசம் உண்டு என்று சொல்கிறீர்கள். உண்மை தான். ஆனால் அதற்கு நீங்கள் எடுத்து கொள்ளும் விதம் தான் தவறாக படுகிறது.
நிரந்தர மரணம் , நிரந்தரமில்லாத மரணம் இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை,
ஒற்றுமை இரண்டிலும் உயிர் கைபற்றபடுகிறது.
வேற்றுமை நிரந்தர மரணத்தில் இந்த உலகத்திற்கும் , இறந்தவர்க்கும் எந்த தொடர்பும் இருக்காது.
நிரந்தரமில்லாத மரணத்தில் இந்த உலகத்திற்கும், கைப்பற்றப்பட்ட உயிருக்கும் உடல் மூலமாக தொடர்பு இருக்கும்.
தூக்கத்தின் போதும் சரி மரணத்தின் போதும் சரி உயிர் தான் கைபற்றபடுகிறது. இதற்கும் அதற்க்கும் உள்ள வேறு பாடு உடல் உறுப்புகள் இயக்கத்தில் இருப்பது தான்.
இதே வசனத்தில் கூட உயிரை தூக்கத்திலும் மரணத்திலும் கைப்பற்றி பின்னர் மரணம் நிச்சயக்கபடாதவைகளுக்கு உயிர் திரும்ப அனுப்படுகிறது, மற்றவைகள் திரும்ப அனுப்பபடுவதில்லை என்ற உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு தான் பேசபடுகிறது.
நெருக்கமான முடிவாக இதை சிந்திக்கும் போது, எளிமையாக விளங்குவது இது தான்.
உயிர் என்பது இயங்குவதற்கு ஒரு திடப்பொருள் - உடல் அவசியமாகிறது.உதாரணமாக வெறுமனே உயிருக்கு வலிக்க செய்ய முடியாது, அதற்கு உடல் இருக்கும் போது தான் அதை கொண்டு நோவினை செய்ய முடியும். எனவே நிரந்தர மரணம் என்பது உடல் தனது இயக்கத்தை நிறுத்தி கொள்வதால் உயிர் பிரிந்து செல்கிறது. விபத்தில் கூட உடல் இயக்கம் அற்று போனால் அந்த உயிர் பிரிந்து விடுகிறது.
வயோதிகத்தின் காரணமாகவோ, நோயின் காரணமாகவோ கூட உடல் இயக்கம் தொடர முடியாததால் உயிர் அதை விட்டு பிரிகிறது.
தூக்கத்தில் உடல் இயக்கம் இருந்து கொண்டிருக்கிறது, மரணம் என்று ஒன்று நிச்சயக்கபடாதைவகள் உடலுக்கு திரும்புகிறது மற்றவை திரும்புவதில்லை. இது இயற்க்கை.
தவிர இந்த உடல் இந்த பேரண்டத்தை தாண்டி திரை மறைவு வாழ்வான பர்சக்கிர்க்கு பயணிக்க தகுதியற்றது.
எனவே தான்,
- இறைவன் முஹம்மது நபி ஸல் அவர்களை மேஹ்ராஜிர்க்கு அழைத்து சென்றதாக சொல்லும் போதும் அவரது உயிரை அழைத்து செல்கிறான், உடலை அல்ல. இது மரணமா தூக்கமா ? தூக்கம். உடல் உள்ளது.
- குகைவாசிகள் பல ஆண்டுகள் தூங்கச் செய்து அவர்களது உயிரை மட்டுமே அழைத்து கொள்கிறான். ஈஸாநபியை உடலோடு உயர்த்துவது முடியும் என்றால் அதே போன்று தான் குகை வாசிகளுக்கும் நேர்ந்தது. ஒரு ஆபத்திலிருந்து அவர்களை இறைவன் காப்பாற்ற அவர்களை அழைத்தது கொள்கிறான். இதிலும்உயிர்கள் தான் கைப்ற்றபடுகிறது, உடல்கள் அல்ல. இது மரணமா ? தூக்கமா ? தூக்கம். உடல் உள்ளது.
- எல்லா உயிர்களின் மரணத்தின் போதும் உயிர்கள் கைப்பற்ற பட்டு பின்னர் மீண்டும் எழுப்பப்படும் நாளில், அந்த உயிர்கள் அதனதன் உடல்களில் செலுத்தப்பட்டு, பின்னர் மன்னரைகளிளிருந்து இருந்து எழுந்துவருகிறது.
எனவே நீங்கள் சொல்வது போல் நிரந்தரமற்ற மரணத்திற்கு உடல் இங்கு இருக்க வேண்டியது மிக அவசியமானது.அல்லது அது நிரந்தர மரணம் தானே தவிர வேறில்லை.
இறைவனின் ஆற்றலை நாம் யாரும் நம்பாமல் இருக்கவில்லை. ஆதலால் இறைவன் ஆற்றலுடையவன் எனவே உடலையும் சேர்த்து தூக்கி கொள்வான் என்று புரிய வேண்டும் என்று சொல்லி புறிந்தீர்கலானால் அது போலவே அனைத்து தவறான புரிதலுக்கும் பதிலை சொல்லலாம். ஆக இனி அவரவர் நம்பிக்கைக்கு விடபடுகிறது.
மரணம் என்ற சம்பவம் அல்லது தூக்கம் என்ற சம்பவம் இந்த இரண்டு நிலை தவிர வேறு ஒரு நிலையில் உயிர் இந்த உலகை விட்டு பிரியாது. இது தான் குர்ஆனில் இருந்து பெறப்படும் உண்மை.
நிரந்தர மரணம் - இந்த உலகத்தோடு எந்த தொடர்பும் இருக்காது.
நிரந்தரமில்லாத மரணம் - இந்த உலகோடு உடல் ரீதியாக தொடர்பிருக்கும்.
அடுத்ததாக,
ஈஸாவே உம்மை கைப்பற்றுவேன் , மேலும் உம்மை என்னளவில் உயர்த்தி நிராகரித்து கொண்டிருப்போருடைய கேவலத்திலிருந்து உம்மை தூய்மை படுத்துவேன்.
இந்த வாசகத்திற்கு நீங்கள்,
அல்லா ஈஸாவை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்து பின்னர் அவரை உடலோடு உயர்த்துவான் என்று பொருள் வைத்து அது தான் பொருள் என்று கொள்கிறீர்கள்.
இதற்கு நான் மீண்டும் விளக்கம் அளிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். இந்த வசனமே தெளிவாக உள்ளது. உயர்த்துவதால் அல்லா எதை நாடுகிறான் என்று கூறும் போது உயர்த்துதல் என்பதன் பொருள் என்னவென்று தெரியாமல் இல்லை.
மேலும் உம்மை என்னளவில் உயர்த்தி நிராகரித்து கொண்டிருப்போருடைய கேவலத்திலிருந்து உம்மை தூய்மை படுத்துவேன்.
அதுபோலவே ,
அல்லாஹ் அவரை உயர்த்தினான் என்று சொல்வது போதுமான போது தன்னளவில் அவரை உயர்த்தி கொண்டான் என்று சொல்வது அவரை கண்ணியப்படுதினான் என்று தான் பொருள் தரும். குரானிலும் எல்லா இலக்கியங்களிலும் இது தான் பொருள் என்பதும் நிரூபணம் .
ஒருவர் கீழே உள்ளார் அவரை நோக்கி நான் அவரை உயர்த்துகிறேன் என்று மட்டும் சொல்லும் போது தான் அவரை உடலோடு தூக்குதல் என்ற பொருள் வர வாய்ப்புள்ளது.
நான் அவரை என்னளவில் உயர்த்துகிறேன் என்று சொல்வது நடை அல்ல. நான் அவரை என்னிடம், என் பக்கம் உயர்த்துகிறேன் என்று சொல்வதற்கும் என்னளவில் உயர்த்துகிறேன் என்று சொல்வதற்கும் வேறுபாடுகள் பளிச்சென்று புரிவதாக தான் உள்ளது.
அல்லாஹ் நாடியிருந்தால் அத்தாட்சிகளை கொண்டு அவனை உயர்த்திருப்பான் என்ற குரானின் வசனத்தையும் நீங்கள் உங்களுக்கு சாதகமாக சொல்வது தான் வியப்பாக உள்ளது.
அனைத்து நபி மார்களையும் அல்லாஹ் தனது அத்தாட்சி கொண்டே உயர்த்தி உள்ளான். இந்த மனிதரும் சைத்தானின் தூண்டுதலால் வழி தவறாமல் இருந்திருந்தால் ஏதேனும் அத்தாட்சியை கொண்டு அவரை அல்லாஹ் உயர்த்தியிருப்பான் என்று தான் 7:176 வது வசனமும் பேசுகிறது.
ஈஸா நபி க்கு பல அத்தாட்சிகள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை நாம் தனியாக பார்க்க முடிகிறது. முன்னரே பல அத்தாட்சிகள் கொண்டு ஈஸா நபியை சிறப்பித்தும் இருக்கிறான். அவர் வழி பிறளாது இறை கட்டளையை நிறைவேற்றியதால் அவரை அல்லாஹ் தன்னளவில் உய்ர்த்தி கொள்கிறான்.
பொதுவாக நபி மார்கள் தங்கள் கட்டளையை நிறை வேற்றும போது அல்லாஹ் அவனது அத்தாட்சிகள் கொண்டு அவர்களை உயர்த்துகிறான்.
எனவே உடலுடன் தூக்கி கொண்டான் என்று பொருள் கொள்வது absurd. தவறான கற்பனையாகவே இருக்க முடியும்.
உயிர் கைபற்றபடுவது மரணம், அது இல்லையேல் உடல் இங்கு தொடர்போடு இருக்கும், அதன் பெயர் தூக்கம்.இவையிரண்டு தான் இயற்க்கை. இவைகளுக்கு தான் உலகில் நீங்கள் எந்த சம்பவத்தை எடுத்து கொண்டாலும் ,குர்ஆனில் எடுத்து கொண்டாலும் ஆதாரம் இருக்கும். இந்த இரண்டுக்குள் தான் உயிர் கைபற்றபடுதல் என்ற அனைத்து சம்பவங்களும் அடங்கும்.
அடுத்ததாக,
ஈஸா நபிக்கு முன்னர் அனைத்து நபி மார்களும் வந்து சென்றனர் என்று சொல்வது அனைத்து நபி மார்களை போன்று தான் இவரும் என்று சொல்வதற்கு தான். அதில் அனைத்து நபி மார்களை போலவே திருமணம் முடிப்பது, ஒரு இறைவனை சொல்வது, நோய் வாய் படுவது என்று அனைத்தையும் அனுபவித்தார் என்ற பொருள் கொண்டு விடும். பின்னர் ஏன் உணவருந்துவதை மீண்டும் தனியாக சொல்லி காட்ட வேண்டும் என்று கேட்கிறீர்கள்.
நான் மரியம் அவர்களை குறித்து சொல்லபடுகிறது என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லியும் நீங்கள் அதை கண்டு கொள்ளாமல் போகிறீர்கள்.
ஈஸா நபி ஒரு நபி என்பதால் அனைத்து நபி மார்களை போன்று தான் இவரும் ஒரு நபி என்று ஒப்பிட்டு விட்டு, பின்னர் அவரது தாயார் உண்மையானவர் என்று கூறி, இந்த இருவருமே உணவருந்தி கொண்டு தான் இருந்தனர் என்று கூறுகிறான்.
இருவரின் இறப்பை பற்றி சொன்னாலும் அவர்கள் அவர்களை கடவுள் என்று தான் நம்புவர் என்றால் உணவருந்துவதை குறித்து சொல்வது தான் அவர்களை சிந்திக்க வைக்க முடியும்.
கடவுள் மனிதானாக பிறந்துள்ளார் என்பது அவர்களது நம்பிக்கை. அவர்கள் கடவுளாக இருந்தார்கள் என்றால் அவர்கள் அதிசியங்களை செய்திருக்க வேண்டும் - இருவரும் அல்லாஹ்வின் மூலம் சில அதிசியங்களை செய்தும் உள்ளனர் .
நல்லவராக இருக்க வேண்டும் - இருவரும் நல்லவர்களாகவே இருந்தனர்.
ஆனால் உணவருந்தாமல் அவர்களால் இருக்க முடிந்ததா ? எந்த உடலுக்கும் உணவருந்துவது அவசியமாகிறது. எனவே தான் எவருக்கும் உணவருந்தாத உடலை நாம் அளிக்கவில்லை என்று நபி மார்கள் என்ற சூராவில் அல்லா கோடிட்டு காட்டுகிறான். உணவருந்தாமல் இருந்து காட்டுவது தான் அவர்களை மனிதர்கள் என்பதிலிருந்து வேறுபடுத்தும் என்று அல்லா சொல்வதாகவே புரிய முடிகிறது.
அடுத்ததாக,
அல்லா வல்லமை மிக்கவன் , ஞானமுடையவன் என்று சொல்வதற்கு தகுதியானது என்பதை சொல்ல சில யூகங்களை சொல்லியிருந்தேன். அவை வெறும் யூகம் தானே என்பதாக சொல்கிறீர்கள். அவை யூகம் தான்,
ஆனால் நான் சொல்ல வந்த கருத்து இது போல் அல்லாஹ் வல்லமையை அனைத்து காரியங்களுக்கும் சுட்டி காட்டினாலும் அது கூடும் , எனவே உடலோடு உயர்த்துவதை சொல்வதற்கு சொல்லப்பட்ட தனிப்பட்ட முக்கிய ஆதரமாகவெல்லாம் இதை ஏற்று கொள்ள முடியாது என்பதை தான் சொல்கிறேன்.
ஈஸா நபியை யூதர்கள் முற்படுத்த நினைத்த கேவலத்திலிருந்து அவரை கண்ணியபடுத்திய இறைவன் வல்லமை மிக்கவன் ஞான மிக்கவன் என்று சொல்வதம் தகும்.
இது போலவே குர்ஆனில் பல இடங்களில் வருகிறது.
குறிப்பாக அந்த நாளின் ( கியாமத்தில்) இழிவிலிரிருந்து காப்பாற்றுவதற்கும் இதையே சொல்லி காட்டுகிறான்.
11:66. நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன்வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
இந்த வசனமே இழிவிலிருந்து காபாற்றினாலும் , ஆபத்திலிருந்து காபாற்றினாலும் இரண்டு கருத்துக்கும் இது பொருந்தும் என்பதை சொல்லி விடுகிறது.
இனி நேரடியாக ஹதித் குறித்த விமர்சனத்தை பார்த்து விடலாம்.
இரண்டு காரணங்களுக்காக இந்த ஹதீஸ் , கருத்தை தாண்டி அதன் நம்பகத்தன்மையில் குறை சொல்ல படுகிறது.
- புஹாரி, முஸ்லிம் இந்த இரண்டு இமாம்களுக்கு முன்னர் அதிக ஆதாரம் கொண்ட மாலிக் இமாம் ஈஸா நபி மீண்டும் வருவார் என்ற கருத்துடைய எந்த ஹதிசையும் பதியவில்லை.
- மேலும் புஹாரி மற்றும் முஸ்லிமில் இது குறித்து வருகின்ற ஹதிஷில் இப்னு சிஹாப் அல் ஜுஹ்ரி வழியாக வருகின்ற போது அவர் யார் மூலமாக இதை அறிவிக்கிறார் என்று சொல்லவில்லை.
மாலிக் இமாம் அவர்களின் முவத்தா வில் இது குறித்து எந்த தகவலும் பதியபடாதர்க்கு தர்க்க ரீதியாக இரண்டு காரணம் தான் இருக்க முடியும்.
ஒன்று அவர் இதை கேள்வி படாமல் இருந்திருக்க வேண்டும்.
அல்லது இதை கேள்வி பட்டிருந்தும் இதை ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக அவர் நிராகரித்திருக்க வேண்டும்.
இவரும் அல் ஜுஹ்ரி வாயிலாக வரும் ஹதீஸில் சனத் விடுபட்டுள்ளதால் அதை நிராகரித்திற்க வேண்டும்.
இத்தனைக்கும் இமாம் மாலிக் அவர்கள் தஜ்ஜால் வருகையை குறித்து பல இடங்களில் பதிவு செய்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாலிக் இமாம் அவர்களுக்கு லைத் இப்னு சாத் அவர்கள் எழுதிய கடிதத்தில்,
நான் இப்னு சிஹாப் அல் ஜுஹ்ரி அவர்களிடம் ஒன்றை குறித்து வினவும் போது அதை குறித்து அவர் ஏராளமான கருத்தை தருகிறார். நாங்கள் அவரிடம் ஒரு கருத்தை குறித்து எழுதி கொள்ள விசாரிக்கும் போது நிறைய படித்திருந்தும் அவர் குறைந்த பட்சம் மூன்று விதமான கருத்துக்களை தெரிவிக்கிறார். முன்னர் அவர் கூறியதை மறந்து அவர் புதிய ஒன்றை கூறுகிறார். இதன் காரணமாக அவரை நான் நிராகரிக்கிறேன். இது தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இது தன் என்னுடைய காரணம்.
In a letter to Imam Malik, Imam Layth Ibn Sa‘ad writes:
When we would meet Ibn Shihab, there would arise a difference of opinion in many issues. When any one of us would ask him in writing about some issue, he, in spite of being so learned, would give three very different answers, and he would not even be aware of what he had already said. It is because of this that I have left him – something that you did not like (Ibn Qayyim, I’lam al- Muwaqqi‘in, vol. 3, Beirut: Dar al-Jayl, p. 85).
When we would meet Ibn Shihab, there would arise a difference of opinion in many issues. When any one of us would ask him in writing about some issue, he, in spite of being so learned, would give three very different answers, and he would not even be aware of what he had already said. It is because of this that I have left him – something that you did not like (Ibn Qayyim, I’lam al- Muwaqqi‘in, vol. 3, Beirut: Dar al-Jayl, p. 85).
இரண்டாவது காரணம் :
இதே இப்னு சிஹாப் அல் ஜுஹ்ரி அவர்களை குறித்து புஹாரி இமாமும் கூட பதிவு செய்கிறார்,
Rabi‘ah would say to Ibn Shihab: My situation is totally different from you. Whatever I say, I say it from my own self and you say it on the authority of the Prophet and so you must be careful, and it is not befitting for a person to waste himself [like this]. (Bukhari, Tarikh al-Kabir, vol. 3, Beirut: Dar al-Kutub al-‘Ilmiyyah, pp. 286-7)
Rabi‘ah would say to Ibn Shihab: When you narrate something according to your own opinion, always inform the people that this is your own view. And when you narrate something from the Prophet, always inform them that it is from the Prophet so that they do not consider it to be your opinion. (Khatib Baghdadi, Al-Faqih wa Al-Mutafaqqih, vol. 1, Lahore: Dar al-Ahya al-Sunnah, p. 148).
ராபியாஹ் என்பவர் இப்னு சிஹாபிடம் தான் கூறும் கருத்துக்கள் தன்னுடைய கருத்தாக அறிவிப்பதாகவும், ஆனால் இப்னு சிஹாப் அறிவிக்கும் போது அது நபி ஸல் அவர்களுடைய கருத்தாக அறிப்பதையும் குறித்து விமர்சனம் செய்கிறார்.
புஹாரி இமாமும் அவரை குறித்து சொல்கையில்,
இப்னு சிஹாப் அல் ஜுஹ்ரி ஒரு கருத்தை அறிவிக்கும் போது தனது சொந்த கருத்தையும் சேர்த்தும் நிறைய அறிவிப்பை செய்கிறார். அவற்றில் சில முர்சலாகவும்( யாரிடம் இருந்து அறிவிக்கிறார் என்பதை சொல்லாமல் அறிவிப்பது) சில அவருடைய சொந்த கருத்தாகவுமே இருக்கிறது.
Imam Bukhari had the following opinion:
Zuhri would narrate ahadith and on most occasions would insert sentences from his own self. Some of these would be mursal and some of them would be his own. (Ibn Rajab, Fath al-Bari, 1st ed., vol. 5, Jaddah: Dar Ibn al-Jawzi, 1996, p. 286)
Zuhri would narrate ahadith and on most occasions would insert sentences from his own self. Some of these would be mursal and some of them would be his own. (Ibn Rajab, Fath al-Bari, 1st ed., vol. 5, Jaddah: Dar Ibn al-Jawzi, 1996, p. 286)
Imam Shaf‘i, Darqutni and many others have attributed Tadlis to Zuhri. (Ibn Hajar, Tabaqat al-Mudallisin, Cairo: Maktabah Kulliyyat al-Azhar, p. 32-3)
இவற்றிற்கான விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் தர வேண்டியது அவசியம் இல்லை. உங்கள் கருத்துக்களை பதிந்தால் போதுமானது. அதை படிப்பவர்களின் ஆய்விற்க்கே விட்டு விடுகிறேன்.
வசலாம்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக