திங்கள், 10 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 5



10/09/2012



அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒரே வசனங்களுக்கு பல முறை அவரவரது தெளிவான விளக்கங்கள் கொடுத்த பின்னரும் மீண்டும் அதை நீளமாக அல்லாமல் படிபவர்களுக்காக சுருக்கமாகவே பதிலைத்து விட்டு உங்களது கேள்விக்கான பதிலையும் தருவது பொருத்தம் என்று கருதுகிறேன்.உங்களின் ஒவ்வொரு பதிலுக்கும் வரிக்கு வரி பதிலை சுருக்கமாக சிந்தனைக்கு தருகிறேன்.
வபாத் என்றால் கைப்பற்றுதல். ஒரு உயிரை அல்லா கைப்பற்றுகிறான் என்றால் அது மரணம் அல்லது தூக்கம் இவை இரண்டு மட்டுமே.
மேலும் வபாத் என்பதற்கு நீங்கள் வைக்கும் வாதங்களும் "உள்ளம் புண்படும்" உதாரணங்களும் எந்த வகையிலும் எனது வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் பொருத்தமானதாக இல்லை.
ஏன் பொருத்தமானதாக இல்லை ? மனம் புண்படும் என்பதை உதாரணத்தோடு வபாத்திர்க்கு விளக்கமாகவே சொல்லி இருந்தும் அது பொருத்தமற்றது என்று ஒரு வரியில் சொல்வது எப்படி பதிலாகும். இந்த உதாரணம் அதோடு பொருந்தாது என்று எப்படி சொல்கிறீர்கள் ? தெளிவு படுத்துங்கள்.
அதுபோலவே,
படர்க்கையாக பேசும் போது, தன்னளவில் அவரை நல்லவனாக கருதினான் என்று சொல்லலாமே தவிர தன்னளவில் அவரை நல்லவனாக்கினான் என்பது வார்த்தை அமைப்பின் படியும் பொருந்தாது
இது தவறான ஒரு வாதமாகும். குரான் பல இடங்களில் தன்னிலையாகவும் பேசுகிறது, படர்க்கையாகவும் பேசுகிறது, முன்னிலையாகவும் அது பேசுகிறது. இந்த வசனம் படர்க்கையாக பேசுகிறது
ஆனால் அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்தி கொண்டான்.
இது எந்த கருத்துடயவருக்கும் பொருந்த கூடியது தான்.
அல்லா அவரை தன்னளவில்(உடலோடு) உயர்த்தினான்.
அல்லா அவரை தன்னளவில்(கண்ணியத்தில்) உயர்த்தினான்.
ஈஸா வே உம்மை கைப்பற்றுவேன். மேலும் உன்னை என்னளவில் உயர்த்தி கொள்வேன்.
இது தன்னிலையில் பேசவும் படுகிறது.
இரெண்டும் ஒரே இலக்கணப்படி தான் பார்க்கப்படுகிறது. அர்த்தத்தில் தான் மாறு படுகிறதே தவிர இலக்கணத்தில் அல்ல. நீங்கள் உடலோடு என்று கருத்தை முன் வைக்கிறீர்கள் நான் கண்ணியத்தில் என்று சொல்கிறேன். எனவே இது தேவையற்ற வாதமாக தெரிகிறது.
தொழுகையை துவக்கும் போது தக்பீர் சொல்லி கைகளை உயர்த்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிற இடத்தில் இதே "ரபா" என்கிற வார்த்தையை தான் பயன்படுதியுள்ளார்கள். இங்கே கைகளின் அந்தஸ்தை உயர்த்துதல் என்று புரிய வேண்டுமா அல்லது கைகளையே மேலே தூக்க வேண்டும் என்று புரிவோமா? கைகளை மேலே உயர்த்துதல் என்று தான் புரிவோம். இங்கே ரபா என்பதுடன் சேர்த்து அந்தஸ்தில் உயர்த்துதல் என்று இல்லை.
மீண்டும் உயர்த்தினான் என்பதற்கு அந்தஸ்த்தை உயர்த்தினான் என்று பொருள் இல்லை என்பது போல் சொல்கிறீர்கள். வபாத்திர்க்கு சொன்னது போலவே இதையும் முன் வைக்கிறீர்கள். உயர்த்தினான் என்பது அந்தஸ்த்தில் உயர்த்தினான் என்று பொருளை யார் செய்தார்கள் ?
அல்லா ஒரு மனிதரை உயர்த்தினான் என்று சொல்லும் போது அவரது கண்ணியத்தை என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று தான் இங்கும் சொல்லபடுகிறது. குரானிலோ அல்லது இலக்கணத்திலோ அல்லாஹ்வால் ஒரு மனிதர் உயர்த்தபடுவதை கண்ணியத்தில் என்ற அர்த்தம் கொண்டே தவிர வேறு ஒரு கருத்தை பார்க்க முடியாது.
உயர்த்தினான் என்பதுடன் சேர்த்து இடம், தகுதி,அந்தஸ்து, பதவி, நிலை என்கிற பொருள் பட ஏதேனும் வார்த்தை அமைப்பு இருந்தால் தான் அதில் உயர்த்தினான் என்று பொருள் செய்ய முடியும்.
இத்ரிஸ் அலை அவர்களை பற்றி பேசும் போது இடம் என்ற ஒரு துணை சொல் உள்ளது என்று சொல்கிறீர்கள். ஒரு உயரிய இடத்திற்கு உயர்த்தினான் என்று சொல்வது எப்படி அந்தஸ்த்து என்று பொருள் படும் ? ஒரு இடத்தில் அவரை உயர்த்தினான் என்று தான் நேரடியாக பொருள் செய்ய வேண்டியிருக்கும். ஒரு உயரிய இடத்தில் ஒருவரை உயர்த்துவது என்ற சொல்லை வைத்து கொண்டு அது கண்ணியம் என்று எப்படி பொருள் கொள்ள முடிகிறது ?
அதே சமயம் உங்களுக்கு நீங்களே முரண் படவும் செய்கிறீர்கள் என்பதை பாருங்கள்.
இரண்டு வெவ்வேறு வார்த்தை பிரயோகங்களுக்கு ஒரே மாதிரியான மொழியாக்கத்தை செய்ய கூடாது
அப்படிஎன்றால் 7 வது சூராவில் 156 வது வசனத்தில் இதே ரபா ன்ற வார்த்தை எந்த துணை சொல்லோடும் இல்லாமல் வெறுமனே வந்துள்ளது. இதை எப்படி புறிந்து கொள்வது ?
அல்லா நாடியிருந்தால் அவனை தனது அத்தாட்சிகள் கொண்டு உயர்த்திருப்பான். இது தான் அந்த வசனம்.
உங்கள் கூற்று படி ஆளை உயர்த்தியிருப்பன் என்றா புறிந்து கொள்வது ?
அல்லாஹ் ஈசா நபியின் அந்தஸ்தை உயர்த்தினான் என்று வைத்தால், அந்தஸ்தில் உயர்த்துவதற்கு அல்லாஹ்வின் வல்லமை பற்றி எதற்காக இங்கே பேச வேண்டும் என்கிற எனது கேள்வி மிச்சமகவே உள்ளது. அந்தஸ்தை உயர்த்த அல்லாஹ்வுக்கு அறிவும் வல்லமையும் அவசியமில்லை.
மேலும் அல்லாஹ் வல்லமை மிக்கவன் , ஞானமிக்கவன் என்று சொல்வதை ஒரு பெரிய காரணமாக எடுத்து கொள்ள முடியாது என்பதை பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை. ஒரு சதி செய்யபடுகிறது அந்த சதியிலிருந்து அல்லா அவரை காப்பாற்றுகிறான். எந்த விதத்தில் அவர் காபாற்றபட்டிருந்தாலும் இது போன்ற அடை மொழிகள் பொருந்த தான் செய்யும்.
ஈஸா நபியை சிலுவையில் அறைந்து கொல்ல யூதர்கள் நினைத்தனர்.
ஆனால் அவர்களால் அப்படி கொல்ல முடியவில்லை.
வெறும் யூகத்தை தான் இதில் அனைவரும் பின்பற்றுகின்றனர்.
அவரை அவர்கள் சிலுவையில் கொன்று கேவலப்படுத்த நினைத்தனர்,
ஆனால் அல்லாஹ்வோ அவர்களின் கேவலத்திலிருந்து அவரை தடுத்து மேலும் அவரை தன்னளவில் உயர்த்தி கொண்டான். அல்லா வல்லமை மிக்கவன் , ஞானமிக்கவன்.
இதில் என்ன வேறுபாடு உள்ளது ? யூதர்கள் முற்படுத்த துணிந்த அந்த கேவலத்திலிருந்தும், சிலுவை மரணத்திலிருந்தும் அல்லாஹ் ஈஸாவை காப்பாற்றியது பற்றி பேசப்படும் போது இது பொதுவாக சொல்லப்பட வேண்டியது தான்.
உடலோடு உயர்த்திருந்தால் மட்டுமே இங்கே இதை சொல்ல முடியும் என்று சொல்வதெல்லாம் வாதமாக முடியுமா ?
கொல்ல வந்த யூதர்களை விபத்தில் இறக்க செய்திருந்தாலும் கூட அல்லா வல்லமை மிக்கவன் , ஞானமிக்கவன் என்று சொல்லலாம்.
ஈஸா நபியை அந்த இடத்திலிருந்து அப்புறபடுத்தி வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றிருந்தாலும் இதை சொல்லலாம்.
இதற்கு மேலும் ஆதாரமாக 3 :55 வது வசனத்தை சொல்லும் போது உங்களது அனைத்து கேள்விகளுக்கும் அதிலேயே விடையும் உள்ளது.
ஈஸா வே நிச்சயமாக உம்மை கைப்பற்றுவேன்.
மேலும் உன்னை என்னளவில் உயர்த்தி கொள்வேன்.
நிராகரிப்போரின் கேவலத்திலிருந்து உன்னை தூய்மை படுத்துவேன்.
மேலும் உன்னை பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்பவர்களுக்கு மேலாக வைப்பேன்.
பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே உள்ளது.
நீங்கள் தர்க்கம் செய்வது பற்றி உங்களிடையே நான் தீர்ப்பளிப்பேன்.
இதற்கு இது வரையிலும் நீங்கள் சரியான ஒரு பதிலை தரவில்லை.
ஈஸாவை உடலோடு தூக்கி பின்னர் தன்னளவில் அவரை உயர்த்தினான் என்று பொருள் கொள்ள முடியாது. உங்கள் கருத்தை சொல்லும் போது இந்த வசனம் இப்படி தான் பொருள் படும்,
ஈஸா வே உன்னை உடலோடு தூக்கி கொள்வேன். பின்னர் என்னளவில் உம்மை உடலோடு உயர்த்தி கொள்வேன்.
இது பொருள் படாது. இது முற்றிலும் தவறென்பதை பளிச்சென்று சொல்லும் வசனம் இது.
எனது கருத்து படி ,
ஈஸா வே உம்மை மரணிக்க செய்வேன்.
கண்ணியத்தில் உன்னை உயர்த்தி , நிராகரிப்போரின் கேவலத்திலிருந்து உம்மை தூய்மை படுத்துவேன். என்ற கருத்து வரும்.
இது தான் அங்கே சொல்லவும் படுகிறது. நிராகரிப்போர் என்ன கேவலத்தை கொடுக்க முன் வந்தார்கள் ? சிலுவை மரணத்தை கொடுத்து இவர் ஒரு சபிக்கபட்டவர் என்று மக்களுக்கு நிரூபணம் செய்யவே முன் வந்தனர்.
மேலும் உன்னை பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்பவர்களுக்கு மேலாக வைப்பேன்.
இதிலும் எந்த ஒரு துணை சொல்லும் இல்லை. மேலாக வைப்பேன் என்றால் நிராகரிப்பவர்களின் மேல் தூக்கி வைப்பேன் என்று பொருள் கொள்ளப்படவில்லை. மாறாக கண்ணியம் என்று தான் பொருள் கொள்கிறோம்.
பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே உள்ளது.நீங்கள் தர்க்கம் செய்வது பற்றி உங்களிடையே நான் தீர்ப்பளிப்பேன்.
ஈஸா நபி மீண்டும் வருவார் என்றால் இந்த சர்ச்சை தீர்ந்து விடும். எனவே இந்த தர்க்கங்கள் கியாமத் நாள் வரையிலும் இருக்கும் என்பதும் இதற்கான தீர்ப்பை அல்லாஹ்வே வழங்க இருக்கிறான் என்பதும் புரிகிறது.
அடுத்ததாக,
சூரா 5 :75 இல்,
ஈஸா நபி இறந்து விட்டார் என்று சொல்வதால் என்ன கிருத்துவர்களுக்கு என்ன பயன் ? எனவே அனைத்து நபி மார்களை போன்று தான் அவரும் என்று சொல்வதாக எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். அனைத்து நபி மார்களை போன்றே அவரும் இறந்திருந்தால் அதையே சொல்லி இருக்கலாமே என்று கேட்கிறீர்கள்.
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை,
ஈஸா நபியும் ஒரு தூதர்தான், அவர் இறைவனின் மகன் இல்லை.
இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர்.
இவரை போலவே தான் தூதர்கள் அனைவரும் வந்தனர், இறந்தனர்.
இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
ஈசா நபியின் மரணம், அவரை கடவுளாக ஏற்பதை விட்டும் அந்த கூட்டத்தை தடுக்காது என்பது சரி தான், நான் மறுக்கவில்லை.
ஈஸா நபியின் மரணம் அவர்களை எந்த விதத்திலும் பாதிப்படைய செய்யாது என்றிருக்கும் போது, அவர் மரணிக்க கூடியவர் தான் என்று மறுப்பு சொல்வதால் என்ன பயனிருக்க முடியும் ?
தவிர இது உயிர்த்தெழுவதை மறுத்து பேசுவதாக மட்டும் இருந்திருதிருந்தால் , அதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம். ஆனால் அனைத்து நபி மார்களை போன்று தான் இவரும் என்ற வார்த்தை உயிர்தேழுவதையும் சேர்த்து அனைத்தையும் உள்ளடக்கும் .
அனைவரும் திருமணம் முடித்தனர். அனைவரும் உணவருந்தினர். அனைவரும் இறந்து போயினர், அனைவரும் அல்லாஹ்வை தான் தொழுதனர் என்று அனைத்தும் அடங்கும்.
இதில் மரியம் அவர்களையும் கூட இறந்து விட்டாதாக சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.அனைத்து நபி மார்களை போன்று தான் என்று பொதுவாகவும் சொல்லி இருவரும் உணவு அருந்துபவர்களாகவே இருந்தனர் என்பதை மட்டும் அதில் கோடிட்டு காட்டபடுகிறது. அதை சிலாகித்தும் சொல்லபடுகிறது.
அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக
என்றும் உணவு அருந்துவதை தான் அவர்கள் இறைவன் இல்லை என்பதற்கு அழுத்தமாக இறைவன் சொல்கிறான்.
ஈஸா நபி உயிர்த்தெழுந்து வந்ததாக கருதுபவர்களின் நூலிலும் கூட அவர் தனது சீடர்களிடம் உணவருந்த ஏதும் உள்ளதா என்று கேட்டு தேனும்,மீனும் அருந்தினார் என்று உள்ளது. அதில் ஒரு ஆவிக்கு பூத உடல் இருக்காது என்பதாகவும் அவர் விளக்கம் கொடுத்து, தான் ஒரு மனிதராகவே திரும்ப வந்திருப்பதை சொல்கிறார். இது வெறும் தகவலுக்காக.
இது போன்றே
21:7. (நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
21:8. அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை; மேலும், நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.
என்றும் உணவு அருந்துவதை தான் அழுத்தமாக இறைவன் சொல்கிறான். இங்கே நிரந்தரமானவர்களாக யாரும் இருக்கவில்லை என்று இறந்த காலம் நோக்கி பேசுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது குறித்து இனி படிபவர்களின் சிந்தனைக்கே நான் விட்டு விடுகிறேன்.
மேலும் ,
ஒரு வேளை ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வைத்து கொண்டாலும் மீண்டும் வருவார் என்று ஹதீஸ் சொல்வது முரணில்லை என்று சொல்கிறீர்கள். இது உங்களது அளவுகோல்.
இதற்கு கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தாலும் அது ஹலால் என்று விதி விலக்கை மேற் கோல் காட்டுகிறீர்கள். இதை தான் நான் தனி விவாதமாக அலச வேண்டியது என்று சொல்கிறேன்.
ரசூல் ஸல் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் ஆதரம்ப்பூர்வமான ஹதிஷை ஏன் மறுக்க வேண்டும் ?
குரானை அல்லா பாதுகாப்பான் என்று சொன்னால் ரசூல் ஸல் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட பின்னும் அதிலிருந்து குரானை பாதுக்காக அல்லாஹ்வால் முடியும். இதுவும் முரணாகாது என்றாகி விடும். அனைத்து ஆற்றலும் நிறைந்தவன் அல்லாஹ்.
இது போலவே இதற்கு அது விதி விலக்கு என்று ஒவ்வொன்றையும் பார்த்தோமானால் எந்த நூலிலும் நீங்கள் முரணிருப்பதாக சொல்ல முடியாது.
ஹதிஷிலும் ஈஸா நபி மரணிக்க வில்லை என்று வர வில்லை. மாறாக மீண்டும் வரும் போது என்று தான் வருகிறது.
நீங்கள் சொல்வது போல் ஈஸா நபி மரணித்து விட்டார் மீண்டும் வருவார் என்று நம்ப வேண்டும் என்றாலும் கூட,
குர்ஆனில் அதன் உடல் பாதுக்காக படமால், மரணமடைந்த எந்த உயிரும் திரும்ப வர முடியாது என்பதை உறுதியாக சொல்கிறது. ஒன்று ஈஸா நபியின் உடல் பாதுகாகபட்ட்டிருந்தால் அவரது உயிர் மீண்டும் அனுப்பபடுகிறது என்று ஏற்று கொண்டு ஹதிஷை கருத்தில் கொள்ளலாம். ஆனால் அவரது உடல் இந்த உலகத்தில் எங்கும் பாதுகாக்க படவில்லை. அப்படி நமக்கு எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை.
உடலோடு வானத்தில் உள்ளார் என்று கருத்து கொண்டால் நபி மார்கள் அனைவரும் இறந்து விட்டனர், இந்த உடல் அந்த உலகத்தில் நிலை கொல்ல முடியாது, முஹம்மது நபி இறுதி தூதர் என்ற போன்ற வசனங்களுக்கு முரணாக உள்ளது. இவைகளை முரணில்லாமல் புரிகிறோம் என்று நாமாக திணித்து ஹதிஷிர்க்கு வளைந்து கொடுத்து தப்பு தப்பாகவும் புதிது புதிதாகவும் அர்த்தம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே எப்படி நிலை கொண்டு சிந்தித்தாலும் இது முரணாகவே தெரிகிறது.
மேலும் எந்த விசயத்தில் சந்தேகம் உள்ளதோ அதை தவிர்த்து கொள்ளும் விதமாக என்னளவில் நான் இந்த ஹதிஷ்களை ஏற்று கொள்வதில்லை.
அடுத்த வாய்ப்புகளில் சனத் குறித்து நான் கேள்வி பட்டதையும் முன் வைக்கிறேன்.
அல்லாஹ் நம் இருவருக்கும், அனைவருக்கும் நேர் வழி காட்ட போதுமானவன்.
வசலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக