திங்கள், 24 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 10



24/09/2012



அஸ்ஸலாமு அலைக்கும்,
இது எனது 10 வது வாய்ப்பு.
இது மறுமை நாளின் அத்தாட்சிகளையுடயது. இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். என்னை பின்பற்றுங்கள். இதுவே நேர்வழி.
இந்த மிக சாதாரண ஒரு நடையை புரியாமல் குழப்பி கொண்டிருக்கிறீர்கள்.
என்னை பின்பற்றுங்கள் என்று சொன்னாலும் நபியை பின்பற்றுங்கள் என்று சொன்னலும் அது ஒரே கருத்துடையது தான்.
எந்த கூடுதல் வாசகமும் இன்றி அல்லாஹ்வே தன் வழியை பின்பற்ற சொல்கிறான் என்று அர்த்தம் கொள்வதில் எந்த தவறும் இல்லை.
என்னை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொல்லும் நடை குரானில் இல்லை என்று சொல்லும் நீங்கள் உங்கள் அனைத்து வாதங்களையும் முன்னிருத்தி குரானில் அப்படி ஏதேனும் நடை உள்ளதா என்று பார்த்திருக்க வேண்டும்.
ஒரு உயிரை தொடர்பு படுத்தி அல்லாஹ் உயர்த்துதல் குறித்தும், கைப்பற்றுதல் குறித்தும் பேசும் நடையை உடலோடு கைப்பற்றுதல் , உடலோடு உயர்த்துதல் என்றோ எங்கேனும் குரானில் அர்த்தம் கொடுக்கும் நடையில் பயன் படுத்தபட்டுள்ளதா ? என்று கேட்டதற்கு என்ன பதிலை சொன்னீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். எந்த ஒரு வாதத்தையும் நடு நிலையோடு முதலில் சிந்தித்து பார்க்கவும்.
உங்கள் பானியில் வாதம் வைக்க வேண்டுமானால் குரானில் கைபற்றுகிறேன் என்றோ உயர்த்துகிறேன் என்றோ அல்லாஹ் ஒரு மனிதரை சொன்னால் அது உடலோடு அல்ல என்ற இந்த ஒரு ஆதாரம் போதுமானது. அதை நீங்களும் வழி மொழிவதால் உங்கள் வாதம் தவறென்பதை நீங்களே ஒத்து கொள்கிறீகள்.
சரி நீங்கள் சொன்னது போல் குரானில் அல்லாஹ் தன் வழியை பின்பற்ற சொல்லும் எந்த நடையும் இல்லையென்பதாவது உன்மையா என்றால் அதுவும் இல்லை.
2:38(பின்புநாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்என்னிடமிருந்துஉங்களுக்கு நிச்சயமாக நல்வழி வரும்போதுயார் என்னுடைய  வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்குஎத்தகைய பயமும் இல்லைஅவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
இங்கே அல்லாஹ் தன் வழியை பின்பற்ற சொல்லுகிறானே அது என்ன ?
இதிலிருந்து இந்த வசனத்தை ஈசா நபி குறித்தது என்பதற்காக நீங்கள் தான் தவறாக நியாயப்படுத்தி கொண்டிறிக்கிறீர்கள் என்பது நிரூபனமாகிறது.
 
அடுத்ததாக,
குரான் கியாமத் நாளின் அடையாளங்களை கொண்டுள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை அதை உன்மை என்று நம்புவதில் தான் சந்தேகம் என்றும் கூறுகிறீர்கள்.
இதுவும் அடிப்படையிலேயே தவறாகும்.
இதில் என்ற வார்த்தை குரானை தான் முதலில் குறிக்கும்.
இந்த புத்தகத்தில் இது உள்ளது என்பதில் சந்தேகம் கொள்ளாதீர். என்று வார்த்தை இருக்கும் பொது தான் நீங்கள் சொல்வது போல் சிந்திக்க வெண்டி வரும்.
இந்த புத்தகத்தில் இது உள்ளது எனவே இதில் சந்தேகம் கொள்ளாதீர்  எனும் போது அந்த புத்தகத்தை தான் அது பேசும்.
இல்முல்
وَإِنَّهُ لَعِلْمٌ لِّلسَّاعَةِ
இல்ம் என்ற வார்த்தை knowledge என்ற சொல்லை குறிக்க கூடியது. ஒரு புத்தகத்தை குறித்து பேசும் போது தான் இந்த சொல் பொருந்தி போகும்.
அத்தாட்சி , அடையாளம் என்பதற்கு ஆயத் என்ற சொல்லே குரானில் அதிகம் பயன் படுத்த பட்டுள்ளது. எனவே நேரடியாக மொழி பெயர்த்தால் அது அறிவு, knowledge என்று தான் பொருள் வரும். இல்ம் என்பது ஒரு புத்தகத்தை பற்றி தான் பேசும். பேச முடியும்.
இது மறுமை நாளை பற்றிய செய்திகளை, அறிவை அல்லது அடையாளங்கள்  கொண்டது. எனவே இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னை பின்பற்றுங்கள். என்று சொல்லும் போது,
மறுமை நாளை குறித்த குரானில் சந்தேகம் கொள்ளாதீர்கள், என் வழியை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொல்வதாகவே இது பொருள் படுமே தவிர நீங்கள் சொல்வது போல் ஈசா நபியை குறித்து அல்ல.
 
அது போலவே
இது நபியை பார்த்து சொல்ல சொல்லும் வசனமாகவே நீங்கள் பொருள் கொண்டாலும் அது ஒன்றும் தவறல்ல. அது மேலும் ஈசா நபியை குறித்ததல்ல இந்த வசனம் என்று தெளிவாக சொல்லும்.
அவர் நல்லவர் இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம், என்னை நம்புங்கள் என்று தான் சாதரனமாக நாம் பேசுகின்ற நடையே வரும்.
அவர் நல்லவர் இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம், என்னை பின்பற்றுங்கள் என்று சொல்வது அர்த்தமற்றது.தனக்குறிய அத்தாட்சியினை கொண்டு தான் ஒருவர் தன்னை பின்பற்ற சொல்ல முடியுமே தவிர பிறருக்கான அத்தாட்சியை கொண்டல்ல என்பதை கூட சிந்திக்க மறுத்து உங்கள் நியாயங்களை இங்கே தினித்து கொண்டிருக்கிறீர்கள்.
ஈசா நபி மறுமை நாளின் அத்தாட்சி என்பதை சொல்லி என்னை பின்பற்றுங்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
அடுத்ததாக மலக்குகளை அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு பகரமாக கொண்டு வந்திருப்பான் என்று சொல்வது ஈசா நபியை கடவுளாக ஆக்கிய கூட்டத்தாரை பார்த்து சொல்வதே அல்ல. ஈசா நபியை மதிக்காத ஒரு கூட்டத்தை நோக்கி பேசுகிறது. குரானில் என்ன சொல்லியிருந்தாலும் அதை மறுக்கும் ஒரு கூட்டத்தை நோக்கி பேசுகிறது எனும் போது, நீங்கள் வைக்கும் இந்த வாதமும் தவறானது தான்.
அல்லாஹ்வை வனங்குவது தான் நேர் வழியென்று வேறு மறுத்து பார்க்கிறீர்கள். என்னை பின்பற்றுங்கள் இதுவே நெர் வழி என்று நபியை சொல்ல சொல்வதாக மொழி பெயர்த்தாலும் அல்லாவே நேரடியாக சொல்வதாக வைத்து கொண்டாலும் இங்கே என்னை பின்பற்றுங்கள் இதுவே நெர் வழி என்று சொல்வது எதனை ?
அல்லாஹ்வை வணங்குவதையா ? அல்லது அவனது வழியை பின்பற்றுவதையா ? எப்படி வைத்து கொண்டாலும் அதை குரான் தான் பெசுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள்.
மேலும் குல் என்று வரும் இடங்களிலும் அது அல்லத சில இடங்களிலும் பொருள் சிதைவு ஏற்படாதிருக்க குல், நபியே நீங்கள் கூறுங்கள் என்று சேர்த்து விளங்குகிறோம் என்பதில் கருத்து வேறுபாடில்லை. இருந்தும் குல் என்ற வார்த்தை இல்லாத பல இடங்களில் நெரடியாகவே பொருள் கொள்ள முடியும் என்றால் அது சேர்க்க தேவையற்றது.
அதற்கும் நீங்கள் அளித்த வசனம் சரியானது அல்ல.
அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்கும் இறைவன் என்று ஈசா நபி சொன்னார் என்றே சேர்த்து படிக்க வேண்டும். அப்படி படிக்கையில் இது அல்லாஹ்வே நெரடியாக சொல்வது போன்ற நடை என்பது உருதியாகும்.
43:63இன்னும்ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக்கொண்டு வந்திருக்கிறேன்நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக்கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்எனக்கும் கீழ்படியுங்கள்” .
43:64நிச்சயமாகஅல்லாஹ்தான் எனக்கும் இறைவன்உங்களுக்கும் இறைவன்ஆகவே அவனையேவணங்குங்கள்இதுவே நேரான வழி (என்றும் கூறினார்)
43:65ஆனால்அவர்களிடையே (ஏற்பட்ட பலபிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்ஆதலின்அநியாயம்செய்தார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.
என்று படர்க்கையாக அழகிய பொருள் தரவே செய்கிறது.
 
எனவே,
இது(குரான்) மறுமை நாளை பற்றிய செய்திகளை, அறிவை அல்லது அடையாளங்கள்  கொண்டது. எனவே இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னை பின்பற்றுங்கள்.
இதில் சைத்தான் உங்களை தடுத்து விடாதிருக்கட்டும். – நிசயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
என்பது தான் சரியென்று நிரூபிக்கிறது.

கப்ல மௌதீஹி
 
இது குறித்து நீங்கள் வைக்கும் வாதத்திலும் ஒன்றும் இல்லை.
இந்த வசனம் படர்க்கையாக பேசுகிறது என்று சொல்கிறீர்கள். சரி தான்.
வெதக்காரர்கள் ஒவ்வொருவரும் தனது மரனத்திற்கு முன்னர் ,
என்று வருவதால் அது படர்க்கை இல்லை என்று சொல்வதும் தவறாகும். படர்க்கையாக தான் இதிலும் உள்ளது.
பேசுபவரும்பேசுபவர் யாரை அழைத்து பேசுகிறாரோ அவரும் தவிர்த்த பிறரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் படர்க்கை என்பதனுள் அடங்கும். இங்கெ அந்த இலக்கனபடி தான் உள்ளது. இலக்கனத்தில் இங்கே எந்த தவறும் இல்லை.
உங்களது மரனத்திற்கு முன்னர் என்று இருந்தால் தான் அது படர்க்கையின்றி முன்னிலையில் வரும்.
மூன்றாமவர் குறித்து பேசும் போது அது எப்படி படர்க்கையில்லாமல் போகும் ?
வெதக்காரர்கள் – மூன்றாம் நபர்
தமது மரனத்திற்கு முன்னர் – மூன்றாம் நபரின் மரனம்.
எனவே உங்கள் வாதம் முற்றிலும் பொருளற்றது.
அது போலவே,
சாட்சி என்பது நேரடி பொருள் எனறாலும் அது சொல்லப்படும் இடத்தை பொருத்து எதிர் சாட்சி என்றும் பொருள் பட தான் செய்யும். இதில் மாற்று கருத்தில்லை என்று நம்புகிறேன்.
நீங்கள் சாதகமான சாட்சியென்று மாற்றியதால், அதற்கு முன்னர் மறுமை நாளின் அடையாலங்களை கண்டு நம்புபவர்கள் நம்பிக்கை செல்லாது எனவ எதிர் சாட்சியாக இருப்பார் என்ற ஹதிஷை குறித்து சொன்னீர்கள். அதற்கு நேர் மாறாக ஒரு அர்த்தத்தை இப்பொது தருகிறீர்கள் அதற்க்கான விளக்கம் என்ன என்று நான் வெகு காலமாக கேட்டு கொண்டிருந்தும் நீங்கள் சொல்ல மறுப்பதேன் ? உங்கள் கடைசி வாய்பிலும் அது இருக்குமா என்று தெரியாது ?
மிக முக்கியமாக,
வெதக்காரர்கள் ஒவ்வொருவரும் தனது மரனத்திற்கு முன்னால் அதனை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்று வைத்தால்,
ஈசா நபியின் சிலுவை மரனத்தை நம்புவார்கள் அவர்கள் தான் வேதக்காரர்கள் என்று பொருளும் வரும் என்று நான் சொன்னதற்கு மறுப்பாக,
அப்படியானால் எப்படி பொருள் வரும்சிலுவையில் மரணித்தார் என்று நம்பக்கூடிய அந்த வேதக்காரர்கள்அனைவரும் தங்களது மரணத்திற்கு முன் ஈசா நபி சிலுவையில் மரணித்தார் என்று நம்புவார்கள்.
என்று சொல்கிறீர்கள்,
இது என்ன வாதமோ என்று தெரியவில்லை.
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறைவன் ஒருவன் தான் என்று நம்பிக்கை கொள்வார்கள் என்று சொன்னால்,
அதற்க்கு நீங்கள்,
இறைவன் ஒருவன் என்று நம்பிக்கை கொள்பவர்கள் இறைவன் ஒருவன் தான் என்று நம்பிக்கை கொள்வார்கள் என்பது சரியா என்று கெட்கிறீகள்.
தயவு செய்து definition சொல்லபடும் பொது அதை இப்படி பொருள் செய்து பார்க்காதீர்கள். அனைத்துமே தவறாகவே தெரியும்.
தண்ணீர் என்பது ஈரமாயிருக்கும்.
ஈரமாய்யிருப்பது என்பது ஈரமாயிருக்கும்.
இப்படி போய் கொண்டே இருக்கும் இந்த சிந்தனை.
இதை போன்றே,
முஸ்லிம்களாக பிறந்து பின்னர் காஃபிர்களானவர்கள் ஒரு இறைவனை நம்பவில்லையே என்று கேட்பதும் தவறு. முஸ்லிம் என்ற வட்டதுக்குள் இருக்க வெண்டுமானால் அவன் ஒரு இறைவனை நம்பாமல் இருக்க மாட்டான் என்று தான் பொருள் வரும்.
அதுபோல தான் வேதக்காரர்கள் ஒவ்வொருவரும் சிலுவை மரனத்தை நம்புவார்கள்.அவர் முஸ்லிமாக மாறியிருந்தாலும் அவர் சிலுவை மரனத்தை நம்பியவராக தான் இருந்தார். எனவே இது சரியான ஒரு பொருளில் தான் உள்ளது.
இதை குறித்தும் முன்னரே நான் விளக்கவும் செய்திருக்கிறேன்.
உங்கள் பானியில் ஒரு வசனத்திற்கு முன்னுள்ள ஒன்றை தான் பொருள் கொடுக்க வேண்டும் என்று சொன்னாலும், அவரின் மரனம் என்று தான் உள்ளது.
எனவே ஒரு சம்பவம் நிகழ்வதர்க்குள் என்று சொல்லி அதனை நம்பினார்கள், நம்புகிறார்கள், நம்புவார்கள் என்று சொன்னால் அது அந்த சம்பவத்தை தான் குறிக்க வேண்டும்.
உங்கள் கருத்துபடி,
வேதக்காரர்கள் ஒவ்வொருவரும் ஈசா நபியின் மரனத்திற்கு முன்னால் அதனை நம்பிக்கை கொள்ளாமள் இருக்க மாட்டார்கள் என்று சொன்னால் அவர் இயர்க்கையாக மரனிக்கும் முன்னரே அவரின் மரனத்தை வேறு விதமாக நம்பி விடுவார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டி வரும்.
இதிலும் உங்கள் வாதப்படி,
ஈசா நபியின் வருகையை குறித்து இது பேசவில்லை என்பது இதற்கு முன்னர் நடந்த விவாதத்திலும் இன்னும் பல காரனங்களுடன் விளக்கவும் செய்துள்ளேன்.
அடுத்ததாக,
ஈசா நபியின் மரனத்தை பற்றி சொல்லாமல் ஏன் உணவருந்துவதை குறித்து சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்டதற்கு நான் எனது நிலையில் விளக்கமும் அளித்தேன்.
அவரின் மரனம் குறித்து சொல்வதால் எந்த பயனும் இல்லை. இருந்தும் அவரின் மரனம் குறித்தும் அடங்கிய வாசகமாக அனைத்து நபி மார்கள் போன்று தான் ஈசா நபியும் என்று சொல்லிவிட்டு, அவரது தாயார் நல்லவர் என்றும் இருவருமே உணவருந்தி கொண்டு தான் இருந்தனர் என்பதையும் சேர்த்து சொல்கிறான்.
எனவே உணவருந்துவது தான் ஒருவர் மனிதன் என்ற நிலையிலிருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிகிறது. என்பதாக சொல்லியும் , அந்த காரணத்தை அல்லாஹ் ஏதோ முக்கிய சிந்தனை உடைய காரணமாகவும் சொல்லி காட்டுகிறான் என்பதிலிருந்து அது ஈசா நபியை கடவுலாக நம்புபவர்களின் நம்பிக்கையில் அது சிந்திக்க வேண்டிய ஒரு விசயமாக தெரிகிறது என்றும் விளக்கம் அளித்திருந்தேன்.
அதன் பின்னரும் அதை தொடர்ந்து என்னிடம் ஏன் உனவருந்துவதை குறித்து சொல்ல வேண்டும் என்று கெட்டு கொன்டே இருந்தீர்கள். அதற்கு தான் நான் அதை அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்திருந்தேன்.
இதை வைத்து கொண்டு என்னிடம் பதில் இல்லை என்று சொல்கிறீர்கள். சரி இருக்கட்டும். இதற்கு உங்கள் நிலையில் பதில் என்ன என்று கேட்டு கொண்டிருக்கிறேன், இந்த நிமிடம் வரை அதற்கு பதில் இல்லை.

இது பொருந்தாத காரணத்தால் தான் அவரது மரணத்தை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை என்பது உண்மைஎன்றால் உணவு உண்பதும் பொருந்தாது என்பதால் அதையும் தான் அல்லாஹ் சொல்லியிருக்க மாட்டான்
அல்லாஹ் சொல்லியிருக்க மாட்டான் என்பதெல்லாம் இருக்கட்டும், உணவருந்துவதை குறித்து அல்லாஹ் இங்கே சொல்லி காட்டுகிறானே ?. அது அவனது ஒரு முக்கிய ஒரு காரணம். எதற்காக உனவருந்துவதை சொல்லி காட்ட வேண்டும் ? இதற்கு உங்கள் பதில் என்ன ?
அவர் இறக்கவில்லை உயிரோடு தான் உள்ளார் எனவே உணவருந்துவதை சொல்லி காட்டுவோம் என்பதற்கா ? அப்படி நீங்கள் சொன்னாலும் அது தவறான வாதமாக தான் இருக்கும். இந்த வசனத்தில் மரியம் அவர்களும் சொல்லப்படுகிறார் என்பதால் அது காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் மரியம் அவர்கள் இறந்து விட்டார்.
வேறென்ன காரணம்இதை நீங்களே சொன்னது போல நாம் இருவரும் தான் சிந்திக்க வேண்டும்.
ஈசா நபி மரணிக்கவில்லை , ஆகவே ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லைஅதேசமயம்ஈஸா நபிக்கு முன் எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று சொல்வதிலிருந்து அவர்களை போலஈசா நபியும் இறக்க கூடியவர் தான் என்பதை அல்லாஹ் சொல்கிறான்இப்படி தான் புரிய வேண்டும்.
இப்படி தான் புரிய வேண்டும் என்பதை உங்களை அறியாமல் நீங்களே ஒப்புக்கொண்டும் விட்டீர்கள்

ஒரேடியாக முடிவிற்கு தவ்வி விட்டீர்கள். ஈசா நபி இறந்து விட்டார் என்றால் அதை ஏன் இங்கு அல்லா சொல்லவில்லை என்பதற்கு பதில்,
ஈசா நபி இறந்து விட்டதை அவர்களும் நம்புகின்றனர். அதை பிரதானப்படுத்தி சொல்வதில் பயனில்லை. அவர் உயிர்தெழவில்லை என்பதை சொல்லி இருக்கலாம், மரியம் அவர்கள் உயிர்தெழவில்லை என்பதும் அவர்கள் நம்பிக்கை, எனவே அதையும் பிரதானப்படுத்தி சொல்வதில் பயனில்லை.
இருந்தும் அவர் எல்லா நபி மார்களை போன்றவர் தான் என்று சொல்லி காட்டுவதன் மூலம் அவர் இறப்பையும் , உயிர்தெழவில்லை என்பதையும் அது தவிர மனைவி மக்கள் கொண்டிருந்தார் என்பதையும் உள்ளடக்கி சொல்கிறான். அது போக மரியம் அவர்களும் ஈசா நபியும் உனவருந்தி கொண்டு தானே இருந்தனர் என்றும் சொல்கிறான்.
இப்படி உணவருந்தி கொண்டிருந்ததை பிரதானப்படுத்தி சொல்வதால் நமக்கு அது ஒரு முக்கிய வேறுபாடாக புரிகிறது. இதையே நபி மார்கள் என்ற சூராவில் எந்த நபிக்கும் உணவருந்தாமல் இருக்க முடிந்த ஒரு உடலை கொடுக்கவில்லை என்றும் உருதி படுத்துகிறான்.
இப்படி இருக்க நீங்கள் அதற்கு பதிலளிக்காமல் நான் ஒப்பு கொண்டதாக பரை சாற்றுகிறீர்கள்.
மொத்தமாக உங்கள் வாதங்கள் எதிலும் ஈசா நபி மீண்டும் வருவார் என்பதற்க்கான ஒரு தெளிவில்லை என்பதும் மாறாக உங்கள் நம்பிக்கையை நீங்கள் எப்படி எல்லாம் நியாயப்படுத்தி உள்ளீர்கள் என்பதும் படிபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
ஹதிஷை கொண்டு மறுக்க வில்லை என்று சொல்கிறீர்கள், அது முரன் என்பதால் மறுக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். மீண்டும் கேட்டால் அதை தான் சொல்ல முடியும். எப்படி முரன் என்று கேட்டீர்கள் என்றால் முதலிலிருந்து இந்த விவாதம் ஆர்ம்பமாகி விடும்.
கடல் வாழ் உயிரினங்கள் விதி விளக்கென்ற ஹதிஸை பார்ப்பது போல் இதையும் பார்க்க தேவை இல்லை. சட்டத்தில் உள்ள விதி விலக்கு வேறு நம்பிக்கையில் எடுத்து கொள்வது வேறு. 
அது போல எடுத்து கொள்வீர்கள் என்றால் ஹதிஷில் ரசூல் ஸல் அவர்களுக்கு சூனியம் வைக்கபட்டதையும் நம்பி , எப்படி பட்ட நிலையிலும்  அல்லாஹ் குரானை பாதுகாக்க முடியும் என்று நம்பலாம் தானே ? முரணில்லாமல் இப்படி தான் ஹதிஷ்களை சிந்திக்க வேண்டும் என்றிருந்தால் எந்த ஒரு ஹதிஷும் முரண் இல்லை மாறாக அனைத்தும் விதி விலக்குகள்.
 அதே போல,
மாலிக் இமாம் அவர்கள் இதை நம்பவில்லையா ? அல்லது இதை செவியுரவில்லையா ? என்று ஒரு கேள்வியை முன் வைத்திருந்தேன். 
மறுமை நாளிற்கு சமீபமாக ஈசா நபி வருவார் என்றால் அந்த முக்கிய அதிசியமான நிகழ்வு குறித்து அவர் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் அவர் மறுமை நாளின் அடையாளங்கள் குறித்து சொல்லும் போதும் அவர் இதை தெரிவிக்கவில்லை.
ரசூல் சல் அவர்களுக்கு பின்னர் 100 வருட சமீபமாக வாழ்ந்த மூத்த ஹதித் வல்லுனர் கூட இதை பதிவு செய்யவில்லை என்பதையும் சேர்த்து சிந்தித்து பார்க்கையில்,
நானும் அவர் நிலையை போலவே( அவரை பின்பற்றவில்லை )  இது குரானிர்க்கு முரனானது என்றும் கிருத்துவ கொள்கையில் இருந்து இது வந்திருக்க வேண்டும் என்றும் நிராகரிக்கிறேன்.
யூதர்கள் கிருத்துவர்களிடம் இருந்து வந்த வழி கேடுகளை பிரித்தறியும் திறனை அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியோடு தந்தருள துவா செய்தவனாக முடிக்கிறென்.
·         மரியமின் குமாரர் ஈசா அல்லாஹ்வின் அடியார் அன்றி வேறில்லை.
·         யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்து கேவலப்படுத்த எண்ணியிருந்தனர்.
·         அல்லாஹ் அவருக்கு வாக்குருதி அளிக்கிறான், ஈசா வே உம்மை கைபற்றுவேன். மேலும் என்னளவில் உம்மை உயர்த்தி நிராகரித்து கொண்டிருப்போர் கெவலத்திலிருந்து உம்மை தூய்மை படுத்துவேன்.
·         யூதர்கள் அவரை கொல்ல முடியவில்லை. கேவலப்படுத்த முடியவில்லை. அவரை தன்னளவில் அல்லாஹ் உயர்த்தி கொண்டான். நிராகரித்து கொண்டிருப்போர் கெவலத்திலிருந்து அவரை தூய்மை படுத்தி விட்டான்.
·         வாக்குருதியை நிறைவேற்றுகிறான். அவன் வல்லமை மிக்கவன், ஞானமிக்கவன்.
·         மறுமை நால் வரையிலும் ஈசா நபியை பற்றிய தர்க்கம் இருக்கும். அதற்கு அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். ஈசா நபிக்கு தான் கடவுலாக ஆக்கப்பட்டொம் என்பது கூட மறுமையில் தெரியாமல் தனது சமுகதாருக்கு அவர் எதிர் சாட்சி சொல்வார்.
·         வெதக்காரர்கள் அனைவரும் தமது மரனத்திற்கு முன்னர் சிலுவை மரனத்தை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். ஈசா நபி அவர்களுக்கு எதிர் சாட்சியாக இருப்பார்.
·         ஈசா நபி தொட்டிலிலும் பேசினார், வயோதிகத்திலும் பேசினார். திருமணம் முடித்தார்.
·         அனைத்து நபி மார்களை நபி சல் அவர்கள் கண்டது போன்றெ யஹ்யா அலை அவர்களையும், ஈசா நபி அவர்களையும் வானத்தில் கண்டார்.
·         முஹம்மது நபிக்கு பின்னால் எந்த நபியும் வர மாட்டாரகள்.
 
உங்கள் நேரத்திற்கு நன்றி.
 
வசலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக