16/09/2012
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் சொல்லும் அனைத்து ஆதாரங்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கு ஒரு காரணம் தான். இந்த வசனங்களை போலவே அவைகளையும் புரிவதாக சொல்கிறீர்கள் ஆனால் அப்படி புரியாமல் எனது கருத்தை முன் வைத்து கொண்டிரிக்கிறீர்கள். எனது விளக்கம் தேவை இன்றி உங்களது பதிலுக்கான விளக்கத்தை சிந்தித்தாலே ஈஸா நபி உடலோடு உயர்த்தப்படவில்லை என்பது தான் சரி என்பதை அதுவே உணர்த்தும்.
நான் சொல்ல வருவது மிக எளிமையானது. குர்ஆனில் மட்டும் இன்றி மொழி வழக்கிலும் "உயர்த்துதல்" என்று வரும் இடத்தில் அந்த வசனம் முழுமையாக பொருள் படும் போது அது எதை சொல்கிறதோ அதை கொண்டே பொருள் தர வேண்டும்.
உயர்த்தினான் என்று பொதுவாக சொன்னால் எதை குறித்து சொல்லப்படுகிறதோ அதையே உயர்த்துவது தான்.
மேலும், வானங்களை அல்லாஹ் தூண்களின்றி உயர்த்தினான் என்று வரக்கூடிய இறை வசனமும் வானத்தை மேலே உயர்த்தியதை தான் சொல்கிறதே தவிர, அல்லாஹ் வானத்தின் தகுதியை உயர்த்தினான் என்று நாம் சொல்வதில்லை.ஏன் சொல்வதில்லை என்றால் அங்கே வெறுமனே உயர்த்தினான் என்று மட்டும் தான் உள்ளது, தகுதி, அந்தஸ்து போன்ற அடை மொழி எதுவும் அங்கே இல்லை.!!
கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து புறிந்து கொள்ளவில்லை என்றால் உங்களது வாதப்படி,
வசனம் 2 :63 ,
இன்னும் உங்களிடம் வாக்குறுதி வாங்கி , "தூர்" மலையை உங்கள் மேல் உயர்த்தி , நான் உங்களுக்கு கொடுத்ததை உறுதியுடன் பற்றி கொள்ளுங்கள்.
இங்கே தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி என்றால் மலையை அவர்களுக்கு மேலாக தூக்கினான் என்று பொருள் பட வேண்டும். இப்படி தான் பொருள் கொள்கிறீர்களா ? எனவே துணை சொல்லோ அல்லது அது இல்லாமல் வருவதோ முக்கியமல்ல, அது என்ன பொருள் பட பேசுகிறது என்பதை கொண்டு தான் பார்க்க பட வேண்டும்.
குர் ஆனிலும் ஹதீஸிலும் கூட, பல இடங்களில் உயர்த்துதல் பற்றிய கருத்து வருகிறது.
ஒரு பொருளையோ ஒரு நபரையோ பற்றி பேசி, அவரது அல்லது அதன் அந்தஸ்தை உயர்த்துவதாக அல்லாஹ் சொல்ல நினைத்தால் அந்தஸ்து, போன்ற பொருள் பட துணை சொற்களை இணைத்தே தான் சொல்கிறான்.
இதற்கு இத்ரீஸ் நபியை பற்றி அல்லாஹ் சொன்னது உதாரணம்.
இதிர்ஸ் நபிக்கு அல்லா எந்த துணை சொல்லை பயன்படுத்துகிறான் ? ஒரு உயரிய இடம் என்பதை தானே ?
இதற்கு நீங்கள் அந்தஸ்த்து என்று எப்படி முடிவெடுத்தீர்கள் ?
ஒரு உயரிய இடம் என்பது ஒரு உயர்ந்த அந்தஸ்த்து என்றால், தன்னளவில் உயர்த்தி கொண்டான் என்று சொல்லும் போது அது அவரது கண்ணியத்தை அல்லா உயர்த்தியிருக்கிறான் என்று ஏன் பொருள் கொள்ள முடியாது ?
7:176 வது வசனத்தை சொன்னபோது,
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்;
அத்தாட்சிகளை கொண்டு என்று வருகிறது எனவே அது தான் துணை சொல் என்றும் சொன்னிர்கள்.
அத்தாட்சிகளை கொண்டு அவனை உயர்த்தியிருப்போம் என்று சொன்னால் எதன் மூலம் அவன் உயர்த்தபடுவான் என்று வேண்டுமானால் சொல்லலாம். எதனை உயர்த்துவான் என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள் ?
தனது அத்தாட்சி மூலம் அவனை உடலோடு உயர்த்தினான் என்று பொருள் வராமல் எப்படி
தனது அத்தாட்சி மூலம் அவனை அந்தஸ்த்தில் உயர்த்தினான் என்று எப்படி பொருள் வந்தது ?
அவனது அத்தாட்சி மூலம் அல்லா அவனையே உடலோடு உயர்த்திருப்பான். அவனும் ஈஸா நபியை போன்று மரணிக்காமல் இருந்திருப்பான் என்று பொருள் கொள்ள ஏன் முடியவில்லை ?
சரி இருக்கட்டும்,
உங்கள் வாதப்படி அல்லாஹ் அவரை உயர்த்தி கொண்டான் என்று இருக்க வேண்டும், ஏதேனும் துணை சொற்கள் இருந்தால் தான் அதை வேறு விதமாக பார்க்க முடியும் என்று நீங்கள் சொன்னீர்கள்.
அந்த பொருளின் அந்தஸ்தை உயர்த்துதல் என்று பொருள் கொள்வதாக இருந்தால் அதற்கு துணை சொற்கள் வர வேண்டும். அந்தஸ்தை உயர்த்தினான், தகுதியை உயர்த்தினான், இடத்தை உயர்ர்தினான் என்று ஏதேனும் துணை ஆதாரங்கள் வந்தால் தான் அதனோடு பொருத்த முடியும். வெறுமனே உயர்த்தினான் என்று வந்தால் அதற்கு
அந்தஸ்து உயர்வு என்று சொல்வது தான் தவறு
தன்னளவில் என்று அல்லாஹ் சொல்வது தான் துணை சொல் என்று அதற்கு மறுப்பு கூறியதும், தன்னளவில் என்றால் தன்னிடத்தில் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லி அதற்கு விளக்கம் தருகிறீர்கள் .
தன்னிடம், தன்னை பொறுத்த மட்டில் , தன்னளவில் என்று எதை வேண்டுமானால் கொடுங்கள் , அதன் பொருள் அவரை கண்ணியபடுத்தினான் என்பது தான் என்பதை தான் 3:55 தெளிவாகவே சொல்கிறது என்பதை சொல்கிறேன்.
.
ஈஸா வே உம்மை கைப்பற்றுவேன், பின்னர் உன்னை என்னளவில் உம்மை உயர்த்தி நிராகரித்து கொண்டிருப்போரின் கேவலத்திலிருந்து உன்னை தூய்மை படுத்துவேன்.
ஒவ்வொரு முறையும் இந்த வசனத்தை குறித்து நீங்கள் உங்களுக்கு சாதகமாக சொல்லும் போதும் ஒன்றை விட்டு விட்டு தான் சொல்கிறீர்களே தவிர முழுமையாக அந்த வசனத்திற்கு பொருள் கொள்ள நீங்கள் முற்ப்படவில்லை.
வேறொரு வசனத்தில், அவரை அல்லாஹ் கைப்பற்றுபவனாகவும் , தன்னளவில் அவரை உயர்த்துபவனாகவும் இருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லும் இடத்திலும், தன்னை பொறுத்தவரை என்று பொருள் செய்தால் வார்த்தை அமைப்பே பொருளற்றதாகிறது. ஒவ்வொரு இடத்திலும், தன்னை பொறுத்தவரை அவர் சிறந்தவர் என்ற சொல்லிக்கொண்டே வர மாட்டான்
ஈஸா நபியை உயர்த்தி என்ன செய்கிறான் ? அதை இந்த வசனம் தான் தெளிவாகவே சொல்கிறதே.
என்னளவில் உயர்த்தி நிராகரித்து கொண்டிருப்போர் கேவலத்தில் இருந்து உன்னை தூய்மை படுத்துவேன்.
உங்கள் பொருள் படி,
என்னளவில் உயர்த்தி நிராகரித்து கொண்டிருந்தோரிடமிருந்து உன்னை காப்பாற்றுவேன்.
இது தானே அங்கே வந்திருக்க வேண்டிய வாசகம்.
ஈஸா நபியை உடலோடு உயர்த்தி கொள்வதால் அவரை காப்பாற்ற வேண்டுமானால் முடியலாம், என்ன கேவலத்தில் இருந்து கண்ணியபடுத்தினான் ?
என்ன கேவலத்தை அவருக்கு யூதர்கள் தர நினைத்தனர் ? இவை அனைத்தையும் விளக்கமாக சொல்லி தான் இந்த வசனத்தை நான் ஆரம்பம் செய்திருந்தேன்.
ஈஸா நபியை அவர்கள் வெகு சுலபமாக கொன்றிருக்க முடியும், ஆனால் அவரை சிலுவையில் அறைந்து அவர் ஒரு சபிக்க பட்டவர் என்று மக்களுக்கு பதிய வைத்து , அவரை மக்கள் முன்னர் ஒரு பொய்யர் பொய் தூதர் என்று கேவலப்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்த உண்மை சம்பவத்தை பதிய வைத்து கொண்டு அந்த கருத்து படி பொருள் செய்து பாருங்கள்,
3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் வாக்குறுதி அளிக்கிறான்,
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை.
ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; - (இதை நான் ஏற்று கொள்ளவில்லை. இருந்தும் இது எனது சர்ச்சை இல்லை.)
மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
இது யூதர்களை மட்டும் சொல்வதில்லை ஈஸா நபியின் இந்த விசயத்தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள் அனைவரையும் குறிக்கும்,
4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான்
3:55 என்னளவில் உயர்த்தி நிராகரித்து கொண்டிருப்போர் கேவலத்தில் இருந்து உன்னை தூய்மை படுத்துவேன்.
ஈஸா நபியை ஏற்று கொல்லாத யூதர்கள் முற்படுத்தி வைத்திருந்த சிலுவை மரணித்தில் இருந்து அல்லா அவர்களை காப்பற்றி ஈஸா நபி ஒரு பொய்யர் என்ற அவர்களின் கேவலத்திலிருந்து அவரை காப்பாற்றினான். கேவலத்திலிருந்து அவரை வெறுமனே காப்பாற்ற மட்டும் இல்லாமல் அவரின் கண்ணியத்தையும் தன்னளவில் உயர்த்தி கொண்டான்.
- இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
இந்த வல்லமைமிக்கவன் , ஞானமுடையவன் என்று சொல்வதற்கு பல்வேறு வசனங்களை கொடுத்திருந்தேன் அவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையை எப்பொழுதெல்லாம் சொல்ல முடியும் என்று காட்டுவதற்காகவே.
அதிலும் ஒரு குறிப்பிட்ட வசனத்தை காட்டி எந்த கருத்திற்கும் பொருந்த கூடியது என்று சொல்லியும் இருந்தேன். அதற்கு பதில் தருகிற நீங்கள்,
இங்கே ஸலிஹ் நபியை அல்லாஹ் காப்பாற்றுவதற்கு அந்த எதிரி கூட்டத்தை அழித்ததாக சொல்லி காட்டுகிறான். இதற்கு அல்லாஹ்வின் வல்லமை தேவை தான், அல்லாஹ்வின் ஞானம் தேவை தான்.
நீங்கள் வைக்கும் எந்த உதாரணமும், அல்லாஹ்வின் வல்லமையும் ஞானமும் கச்சிதமாக பொருந்தக்கூடிய வசனங்கள்.
இங்கும் மறுமை நாளின் இழிவிலிருந்து அவரை காப்பற்றினான் என்று முடிக்கப்பட்டு பின்னர் தான் அல்லாஹ்வின் வல்லமை , ஞானம் குறித்து பேசபடுகிறது.
அதை மட்டும் விட்டு விட்டீர்கள்.எனவே அது உங்களுக்கு சாதகமாக தான் தோன்றும்.
11:66. நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
எனவே கேவலத்தை கொடுக்க நினைத்து சதி திட்டம் தீட்டிய யூதர்களின் சதியில் இருந்து அல்லாஹ் அவரை காப்பற்றி அந்த இழிவிலிருந்து அவரை தடுத்ததன் மூலம் அல்லா வல்லமை மிக்கவன் ஞானமிக்கவன் என்று சொல்வது தான் அதன் கருத்தாக இருக்கையில் இதில் எந்த முரணும் இல்லை.
சுருக்கமாக நீங்கள்,
raised towards him என்பதை taken towards him
என்றும், நான்
exalted towards him .
என்றும் சொல்கிறேன். நான் சொன்னது போல் எந்த இடத்திலும் அல்லாஹ் ஒருவரை உடலோடு உயர்த்தினான் என்று சொல்வதாக இந்த ரபா என்ற வார்த்தையை கொண்டு நீங்கள் பார்க்க முடியாது என்பது தான் உண்மை.
இன்னும் உங்களை பொறுத்தவரையில்,
கைபற்றுகிறேன், ரபா இந்த இரேன்டிற்கு ஒரு வேறுபாடும் உங்களது அர்த்தத்தில் கிடையாது.
அதுவும் உடலோடு தூக்குவது , இதுவும் உடலோடு தூக்குவது என்று தான் பொருள் கொள்கிறீர்கள்.
எனவே எந்த காரணத்தை கொண்டு பார்த்தாலும் உடலோடு ஈஸா நபி உயர்த்தப்பட்டார் என்று சொல்வது தவறென்று தான் நிரூபணமாகிறது.
அடுத்ததாக,
ஈஸா நபியும் மற்ற நபி மார்கள் போன்று தான் என்று சொன்னால் அதில் அனைத்தும் அடங்கும் என்றிருக்கும் போது உணவருந்துவதை குறித்து ஏன் சொல்ல வேண்டும் என்று இருவரும் தான் சிந்திக்க வேண்டியதாகிறது.
உணவருந்துவதை தான் ஒரு முக்கிய அடையாளமாக சொல்லி காட்டும் போது அது தான் மனிதன் கடவுள் என்ற தன்மையிலிருந்து வேறுபடுகிறான் என்பதற்கு மிக முக்கிய சான்று என்பதை சொல்கிறது.
உணவருந்தாத உடல் மனிதர்களிடம் இல்லை என்று சொல்வதன் மூலம், அவர்கள் உணவருந்தாமல் இருந்து காட்ட முடிந்ததா என்பதை சிந்திக்க சொல்கிறான்.
மேலும் இதற்கு நான் ஒரு செய்தியையும் சொல்லியிருந்தேன்,
ஈஸா நபி உயிர்தெழுந்து வந்ததாக நம்புபவர்கள் அவரை ஒரு பரிசுத்த ஆவியென நினைக்க தொடங்கினர். ஆனால் அவர்களது நம்பிக்கையின் படியே கூட ஈஸா நபி அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வந்து,
தனது சீடர்களிடம் உண்ண ஏதேனும் உணவு உள்ளதா என்பதை கேட்டு பின்னர் மீனும் தேனும் அருந்தினார். மேலும் தான் ஆவியானவறல்ல என்பதை சொல்வதற்கு தன் உடலை வந்து தொட்டு பார்க்குமாறும் கூறினார்.
இந்த சம்பவத்தை ஈஸா நபியை கடவுளாக நினைப்பவர்களின் நம்பிக்கையாக இருக்கும் போது உணவருந்தி கொண்டு தானே இருந்தார் என்று சொல்வதன் மூலம் உயிர்த்தெழவும் இல்லை ஆவியாகவும் இல்லை என்பதையும் சேர்த்தே அது சொல்லி விடுகிறது.
மேலும் மரியம் அவர்களும் இதில் சொல்லப்படுகிறார்கள் , நீங்கள் சொல்வது போல் ஈஸா நபி உயிர்தெழுந்தது மட்டுமே கூட அவரை கடவுள் என்று நம்ப வைக்கவில்லை ஏனெனில் மரியம் அவர்கள் கடவுள் என்று சொல்வதால் அவரது உயிர்தெழுந்ததாக அவர்கள் யாரும் நம்பவில்லை.
எனவே உணவருந்தாத உடல் அவர்களுக்கு இல்லை என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அதை தான் இறைவனும் முக்கிய அடையாளமாக சொல்கிறான்.
இது எனது கருத்திற்கான விளக்கமாக இருக்கும் போது உங்கள் கருத்திற்கான விளக்கத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும்.
உடலுடன் வானத்தில் இருக்கிறார் என்பது தான் உண்மையானால் , இந்த வசனம் எப்படி இருந்திருக்க வேண்டும்,
நாம் அவருக்கு உணவருந்தாத உடலை அளிக்கவில்லை எனவே அவர் உடலுக்கு உணவு தேவையாகவே இன்றும் உள்ளது. பின்னர் எப்படி அவர் கடவுளாக முடியும். என்று இதை போன்று ஏதாவது கருத்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் இருவரும் உணவருந்தி கொண்டு தான் இருந்தனர் என்று ஈஸா நபியின் தாயாரையும் சேர்த்து சொல்கிறான். எனவே இது அவர்கள் இந்த மக்களோடு இருக்கும் போது நிகழ்ந்தவைகளை தான் பேசுகிறது. அதை ஒரு முக்கிய ஆதாரமாக காட்டும் போது, மனிதர் உணவருந்தாமல் ஒரு காலமும் இருக்க முடியாது என்பதே மனிதன் கடவுள் இல்லை என்றபதற்கு ஒரு அளவு கோலாக பயன் படுத்தலாம் என்பதும் தெரிய வருகிறது.
.
எனவே உங்களது அந்த வாதமும் தவறென்பதை நிரூபிக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக,
43 :61 வது வசனம் குறித்து சொல்கிறீர்கள். அந்த வசனம் இது மறுமை நாளின் அத்தாட்சிகளை உடையது என்று பொருள் படும்.
அவர் மறுமை நாளின் அத்தாட்சியாவார் என்றும் மொழி பெயர்க்கலாம் என்றாலும், சில அடிப்படை காரணங்களே இது குரானை பற்றிய வசனம் தான் என்பதை படிப்பவர்களுக்கு மிக தெளிவாக சொல்லி விடும்.
இந்த சூரா ஆர்ம்பம்பிக்கும் போதே அது குரானை பற்றி தான் ஆரம்பிக்கும். பின்னர் ஒவ்வொரு நபியின் காலத்தை பற்றி பேசுய் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நபியின் சமுதாயமும் அவர்களை எப்படி எல்லாம் நிராகரித்தார்கள்
என்பது குறித்து பேசி கொண்டு வருகிறது.
43:57. இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.
43:58. மேலும்: “எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.
43:59. அவர் அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
என்று சொல்லிவிட்டு காபிர்களை எச்சரிக்கிறான் ,
43:60. நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.
43:61. நிச்சயமாக இது மறுமை நாளின் அத்தாட்சிகளையுடையது; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட
வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவிராக!)
43:62. அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விட்டும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன்
உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
இந்த குரான் உண்மையானது என்றும் எனவே நபியை பினப்ற்றுமாரும், இந்த நேர்வழியை விட்டு சைத்தான் வழி தடுத்து விடாதிருக்கட்டும் என்றும் எச்சரிக்கை செய்கிறான்.
பின்னர் மீண்டும் ஈஸா நபியை குறித்து பேச இந்த வசனம் ஆரமமாகிறது,
43:63. இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
இது தான் இங்கு சொல்லபடுகிறது.
மொழியின் நடை படியும் இது தான் பொருந்த கூடியதாக இருக்கிறது.
ஈஸா நபி மறுமை நாளின் அத்தாட்சியாவார். இதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். என்று சொல்லி விட்டு எனவே என்னை பினபற்றுங்கள் என்று யாரும் சொல்வார்களா ?
இது படிப்பவர்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். இதை குறித்து உங்களது பதிலுக்கு பின் தேவை பட்டால் பேசுகிறேன். அதுபோலவே ஈஸா நபி வருகையை அறிவித்த ஹதிஷில் அல் ஜுஹிர் அறிவித்தவையையும் வரும் பதிவுகளில் முன் வைக்கிறேன்.
வசலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக