செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 3



04/09/2012


அஸ்ஸலாமு அலைக்கும்,

இங்கே கைப்பற்றுதல் என்பது ஒரு உயிரோடு தொடர்பு கொண்டு வரும் போது அதற்க்கு மரணம் என்பது தான் முதல் பொருள். கூடுதல் விளக்கம் தான் மற்றவை. 

இது அடிப்படியிலேயே தவறு என்று சொல்லி விட்டு அதற்கு விளக்கமாக அதை ஒத்து கொண்டு ஒரு கருத்தை சொல்லி உள்ளீர்கள்.

வேறு வேறு வசனங்களில் உயிர் குறித்து சொல்லப்படும் போது அங்கே மரணத்தை தவிர வேறு பொருள் இல்லை என்பது இரு வேறு கருத்துக்கு இடமின்றி புரிவதால் அங்கே கைப்பற்றுதல் என்கிற வபாத் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை தான் சொல்கிறேன். ஒரு உயிரை அல்லா கைப்பற்றுகிறான் என்பதற்கு முதல் பொருளாக மரணம் என்பதை தான் கொடுக்க முடியும் மற்றவை அதற்கான கூடுதல் விளக்கம் என்று. நீங்கள் கூடுதலாக ஒரு புது விளக்கத்தை தருகிறீர்கள். உடலோடு கைப்பற்றுதல் என்று. அதன் உண்மை நிலையை கண்டறிய தான் மற்ற வசனங்களை இங்கே அலசி கொண்டிருக்கிறோம்.

எதிர் பார்த்த படியே சில வசனங்களை மீண்டும் விளக்கி உள்ளீர்கள். தூக்கத்தை குறித்து முன்னரே விளக்கம் அளிக்கப்படிருந்தாலும் மீண்டும் இங்கே தெளிவு படுத்தி விடுவோம்.

உங்கள் வாதப்படி வபாத் என்பது வேறு வகையான மரணம் என்று பொருள் கொண்டால் ஹதிஷும் பொருந்தி போகிறது என்பதாகும். அதாவது உடலோடு இந்த உலகை விட்டு கைபற்றபட்டார் என்பதாகும். 

மரணம் என்பதன் பொருள் என்ன ?
 மரணம் என்பது பெரும் தூக்கம் என்றும் தூக்கம் என்பது சிறு மரணம் என்று தான் குரானின் படி  புரிய முடியும். 
மரணம், தூக்கம் இவை இரெண்டும் ஒரு சம்பவம். தூக்கத்தை குரானும் ஹதிசும் எதற்க்காக மரணத்தோடு ஒப்பிட்டு அதை சிறு மரணம் என்று சொல்கிறது ? தூக்கத்திற்கும் மரணத்திற்கும் என்ன ஒற்றுமை ?
 தூக்கம் என்ற சம்பவத்தின் போதும், மரணம் என்ற சம்பவத்தின் போதும் ஏதோ ஒன்று இரேண்டிர்க்கும் பொதுவாக உள்ளது. இப்படி எந்த ஒன்றும் பொதுவாக இல்லை என்ற போது இரெண்டையும் தொடர்பு படுத்த முடியாது என்பது சிந்திக்கும் போது விளங்காமல் இல்லை.

வபாத் என்பதன் அகராதி பொருள் மரணம் அல்ல, கைப்பற்றுதல் தான் என்பதற்கு குர் ஆனிலேயே ஏராளமான சான்றுகள் உள்ளன.

இதை யார் மறுத்தது. வபாத் என்பதற்கு முழுமையாக எடுத்தல் என்று தான் பொருள். பொருளை முழுமையாக எடுத்தல், லாபத்தை முழுமையாக எடுத்தல் என்று சொல்லும் போது அது எப்படி பொருள் படுகிறதோ அது போல உயிரோடு ஒப்பிடப்பட்டு அல்லாவால் எடுத்து கொள்ளப்படுகிறது என்று சொன்னால் அதற்கு  மரணம் தான் பொருள். சிறு மரணமோ நிரந்தர மரணமோ அது மரணம் தான். அங்கே உயிர் தான் கைப்பற்ற படுகிறது. இது தான் அதன் பொருள் தவிர மற்றவை அல்ல. 

நீங்கள் சொல்லும் வசனம்  மரணம் என்றால் என்ன என்பதாக விளக்கவும் செய்கிறது கூடுதலாக மரணத்தை போலவே  தூக்கத்திலும் உயிர் கைபற்றபடுகிறது என்பதை  கூடுதல் தகவலாக தருகிறது. 

உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.

இங்கு வரக்கூடிய வபாத் என்பதற்கு மரணம் என்கிற பொருளை தர முடியுமா? அப்படி பொருள் செய்தால் உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் மரணிக்க செய்கிறான் 
என்று சொல்ல வேண்டி வரும். இதில் எந்த அர்த்தமும் இல்லை, இது முதல் விஷயம்.

இதை இப்படி அர்த்தம் கொடுப்பது தான் பாமரத்தனம்.
உயிர்கள் எப்போது கைப்பற்ற படுகிறது என்பதை இது  விளக்கி விடுகிறது. ஒன்று மரணத்தின் போது , அது அல்லாத போது தூக்கத்தின் போது என்பது தான் இங்கு சொல்லபடுகிற கருத்து.

வபாத் உயிருடன் தொடர்பு படுத்தி வந்தால் மரணம் மட்டும் இல்லை என்ற உங்கள் கொள்கைக்கு இந்த வசனமே பதில். இரண்டு சம்பவத்தில் தான் உயிர்கள் கைபற்றபடுகிறது. ஒன்று மரணம் அல்லது தூக்கம். இதை தவிர ஒரு உயிரை கைபற்றபடுகிறது  என்று அல்லா சொல்லும் போது இந்த இரெண்டை தவிர வேறு அர்த்தம் கொள்ள முடியாது. 
ஒரு உயிர் இந்த உலகத்திலிருந்து  அல்லாவால் கைப்பற்ற பட்டு  விட்டால் அது நிரந்தர மரணமோ அல்லது சிறு மரணமோ என்று தான் பொருள் கொள்ள முடியும். எனவே தான் சிறு மரணம் என்று தூக்கத்திற்கு ஒப்பிட்டு சொல்லபடுகிறது. உயிர் கைபற்றபடுவது தான் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. இதயம் துடிப்பது , கண்கள் அசைவது போன்றவை தூக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.

மெஹ்ராஜ் பயணம் ஒரு சிறு மரணத்தின் அதாவது தூக்கத்தின் போது நிகழ்ந்தது. உயிர் தான் அழைத்து செல்லபடுகிறது, உடல் அல்ல. 
குகை வாசிகள் பல நூறு ஆண்டுகாலம் மரணித்து இருந்தார்கள், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்படுகிறார்கள். அதாவது அவர்களுக்கு அப்போது நிரந்தர மரணம் கொடுக்கப்படவில்லை என்று தான் எடுத்து கொள்ள முடிகிறது. 

ஒன்று தூக்கத்தில் உயிர் கைப்பற்றப்படும், ஆனால் உடல் இங்கே தான் பாதுகாப்போடு இருக்கும்.
மற்றொன்று மரணத்தின் போது கைப்பற்றப்படும், அதில் உடல் மண்ணுக்கு சென்று விடுகிறது.

உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.
இந்த இரண்டு சம்பவத்தால் மட்டுமே ஒரு உயிர் கைபற்றபடுகிறது என்பது இங்கே தெளிவாகவே சொல்லபடுகிறது.
ஈஸா நபி இந்த இரேண்டில் ஏதோ ஒன்றில் தான் கைப்பற்ற பட்டிருக்க வேண்டும். அது தூக்கமா அல்லது மரணமா ?

இன்னும் முழுமையாக அந்த வசனத்தை படித்து பாருங்கள் தெளிவாகவே புரியும்.
அல்லா உயிர்களை மரணிக்கும் போதும் , மரணிக்காதவற்றை  அதன் நித்திரையிலும் கைப்பற்றி, பின்னர் எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை நிறுத்தி கொண்டு மற்றவைகளை ஒரு குறிப்பிட்ட தவணை வரையிலும் அனுப்பி விடுகிறான். - சிந்திக்கிற மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சிகள்  உள்ளன.

அல்லாவின் விதி படி ஒரு உயிர் ஒன்று அதன்  தூக்கத்தில் அல்லது அதன் நிரந்தர மரணத்தில் கைபற்றடுகிறது.
இப்போது ஈஸா நபி கைபற்றபட்டது தூகத்திலா ? அல்லது மரணத்திலா ? தூக்கம் என்றால் உடல் இருக்க வேண்டும். மரணம் என்றால் உயிர் பிரிந்திருக்க வேண்டும், உடல் புதைக்க பட்டிருக்க வேண்டும் . மீண்டும் வந்தால் கூட அது  resurrection தான். 
ஈஸா நபி குழப்பங்களுக்கு அனைத்தும் அல்லா  மறுமையில் தீர்பளிப்பான் என்றே சொல்கிறான்.
3:55“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

ஈஸாவே உன் செல்வத்தை கைப்பற்றுவேன் என்று வந்திருந்து , இங்கே கைப்பற்றுதல் என்று வருகிறது ஆகவே இதற்கு மரணம் என்று பொருள் தர சொல்லவில்லை.
ஈஸா வே உம்மை கைப்பற்றுவேன். என்று வரும் போது அது மரணம் தான் என்றே அடித்து சொல்கிறோம்.

எனவே கைப்பற்றுதல் என்பதற்கு மரணம் என்பது அகாராதி பொருள் இல்லை என்பதை மறுப்பதை விட , அல்லாஹ்வால் ஓர் உயிர் கைபற்றபடுகிறது என்றால் அதற்கு அகராதியின் படி மரணம் தான் பொருள் என்பதை தெளிவு படுத்தவே சொல்லபடுகிறது.

இன்னும் அழுத்தமாக சிந்தித்தோமானால் , மரணம் என்பது இந்த உலகத்திற்கும் , மறுமைக்கும் உள்ள இடை பட்ட ஒரு காலம். ஒருவருடைய  உடலும் உயிரும் இந்த உலகத்திற்கு எந்த நிலையிலும் தொடர்பின்றி இருக்கும். 

ஆகவே அவரை அல்லாஹ் கைப்பற்றினான் என்பது உடலுடனேயே கைப்பற்றி விட்டான் ,இதுவும் ஒரு வகையில் மரணம் என்றே கூட வைப்போம், தப்பில்லை. ஆனால், நானும் நீங்களும் ஒரு நாள் மரணிப்போமே, அப்படிப்பட்ட மரணமல்ல !!

இது  தான் மறுக்க படுகிறது.  மரணம் என்பது உயிர் பிரிவது என்பது மட்டும் தான் என்று புரிய வேண்டும். இதை தவிர வேறு மரணம் இல்லை. 

ஈஸா நபி மரணிக்கவில்லை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் ? 
குர்ஆனில் எங்கேனும் ஈஸா நபி மரணிக்கவில்லை என்று நேரடியாக வருகிறதா ? மாற்றமாக எல்லா நபி மார்களும் காலம் சென்று விட்டதாக வருகிறது. நபிமார்கள் யாரும் நிரந்தரமாக இருக்கவில்லை என்று இறந்த காலத்தில்  சொல்கிறதே தவிர யாரும் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் என்று வரும் காலத்தில் சொல்லப்படவில்லை.

ஹதிஷிலாவது அவர் மரணிக்கவில்லை என்று நேரடியாக சொல்லப்பட்டுள்ளதா ?
ஹதிஷில் அவர் மரணிக்க வில்லை என்று எங்குமே சொல்லப்படவில்லை மாறாக அவர் மீண்டும் அனுப்பபடுவார்  என்று மட்டுமே சொல்லபடுகிறது. ஈஸா நபி  மரணிக்கவில்லை என்று சொல்லி பின்னர் அவரது வருகை குறித்து ஹதீஸ் சொல்லி இருக்குமானால் உங்களை போன்று அந்த நம்பிக்கையை வைத்து ஏதேனும் மொழி பெயர்த்து பார்க்கலாம். ஆனால் அவர் வருகையை மட்டுமே தான் சொல்லபடுகிறது.

இவற்றை வைத்து கொண்டு நீங்களாகவே தான் அவர் மரணிக்கவில்லை என்று அர்த்தம் தருகிறீர்கள்.உடலோடு உயர்த்தப்பட்டார் என்று பொருள் கொள்கிறீர்கள். ஹதிசிர்க்கு முரணின்றி சிந்திக்கிறோம் என்று சொல்லி கொண்டு குர்ஆனில் நபிமார்கள் மரணத்தை குறித்து பேசும் வசனத்தையும், உயிர்கள் கைபற்றபடுவதை  குறித்து குரான் சொல்லும் விதத்தையும் முரணாக்கி, இது விதி விலக்கு என்று சொல்கிறீர்கள்.

ஒரு வாதத்திற்கு (ஒரு வாதத்திற்கு மட்டும் தான்  ) நான் ஈஸா நபி நம்மை போல மரணித்து விட்டார் என்றும் சொல்லி அவர் மீண்டும் வருவதையும் ஏற்று கொள்கிறேன் என்று சொன்னால் அதில் ஏதேனும் முரண் உள்ளதா ? முரண் என்றால் எப்படி முரண் என்று சொல்லுங்கள் உங்கள் நம்பிக்கைக்கும் அதுவே பதிலாக அமைய கூடும். 

இதற்கு தெளிவாக பதில் சொல்லாமல், அப்படி வைத்தாலும் பரவாயில்லை, ஆனால் உடலுடன் உயர்த்தப்பட்டார் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்று மேம்போக்காக பதில் சொல்கிறீர்கள்.

மேம்போக்காக பதில் சொல்வதாக சொல்கிறீர்கள். ஈஸா நபி மரணித்து விட்டார் என்று நம்பிக்கை வருமானால்  வருகையை  குறித்து பேசும் ஹதீஸ் வேறு மாதிரி அலசப்படும் என்பதற்காகவே சொல்கிறேனே தவிர  ஈஸா நபி வருகையை குறித்து பேசும் ஹதிஷை குரானுக்கு முரண் என்பதால் ஏற்று கொள்ளவில்லை என்பது தான்  என் கொள்கை .
 
வசலாம் .

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் ....
    அல்ஹம்து லில்லாஹ் .... மார்க்க விவாத களங்கள் இணையத்தில் உலவுவது புதுமையாகவும் புதுபுது கண்ணோட்டங்களை கருத்தாக்கங்களை பார்க்க படிக்க அறிந்துகொள்ள ஏதுவாகவும் அமைவது காண சந்தோஷமாக இருக்கிறது.
    அன்பர் நாசித் உங்களுடைய முயற்சிகளுக்கு அல்லாஹ் நல்லுதவி செய்வானாக ..
    குரானோடு மோதும் ஹதீதுகளைப் பொறுத்தவரை நாம் பின்பற்ற வேண்டிய ஒரு ஒழுங்கு முறை (பொதுவான நிலைப்பாடு )பற்றி நீங்கள் இருவரும் உங்கள் விவதங்களிநூடே சொல்லிச் சென்றால் எங்களைப் போன்ற பார்வையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
    ஒரு கருத்துப்படும் ஒரு சொல் விதிவிலக்காக சில இடங்களில் மாற்றி அர்த்தம் கொள்ளப்படுவது பற்றி அறிந்துகொண்டே விவாதிக்கும் நௌஷாத் அலி அவர்கள் ஒன்றைப்பற்றி சிந்திக்க வேண்டுகிறேன் அது : அல்லாஹ் - அவனது வல்லமை .. ஒரு உயிரை உடலோடு அல்லது உடலன்றி கைபற்றும் விஷயம் நமக்கு அல்லது நம்முடைய அறிவுக்கு எட்டாத தன்மையில் இருப்பதை வைத்துக் கொண்டு ... அல்லாஹ்வின் சிபFAத்தை சிந்தையில் கொள்ளாமல் வாதித்துக் கொண்டிருப்பதுதான் எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது.
    நபி ஈஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பிறப்பை ஒப்புக்கொள்ளவைத்த அல்லாஹ்வின் வல்லமை உங்களுக்கு அவரை அவனளவில் உடலோடு உயர்த்திக் கொள்வதற்கு காரண காரியங்களை தேடவைத்துவிட்ட பலஹீனத்தை என்னென்பது ?
    விவாதியுங்கள் ... உங்கள் விவாதம் .. கருத்தொருமிக்க உதவ வேண்டி அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன் ...

    பதிலளிநீக்கு