சனி, 1 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 1





31/08/2012


அஸ்ஸலாமு அலைக்கும்,

ஈஸா நபி உயிருடன் உள்ளாரா என்ற தலைப்பில் எனக்கும் சகோ நாசித் க்கும் இடையே நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக மேலும் 10 வாய்புகள் கொண்ட இந்த விவாதம் அமைகிறது. 
 
பல முறை தெரியபடுத்தி இருந்தாலும்,மீண்டும் ஒவ்வொரு முறையும் இந்த விவாதம் ஆரம்பிக்கும் பொழுது நான் காதியானி அல்ல என்பதை உரக்க சொல்லியே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. 

ஹதிஷை குறித்த எனது நிலை, அது குரானோடு முரண்படாமல் இருக்க வேண்டும் என்பது தான் என்றாலும் ஈஸா நபி வருகையை குறித்து குரான் பேச வில்லை என்று கொள்கையை கொண்டுள்ளதால் , இன்னும் சொல்ல போனால் அவரது மரணம் குறித்து பேசப்பட்டுள்ளது என்றும் கொள்கை கொண்டுள்ளதால், 
ஈஸா நபி குறித்த ஹதிஷ்களை அது குரானோடு முரண் என்ற நிலை கொண்டு ஏற்கவில்லை. 
ஆனால் ஹதிஷின் விளக்கங்கள் குறித்து எனது பதிவில் கேள்விகள் வைக்கவும் செய்கிறேன்.

தலைப்புக்குள் முதல் கட்டமாக,

4:158ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

இந்த வசனத்தில் "உயர்த்தி கொண்டான் என்பது உடலோடு உயர்த்தி கொண்டான் என்றும் அர்த்தம்  கொள்ள படுகிறது. மொழியின் படி அது தவறில்லை என்றாலும், இதில் சொல்லப்படும் உயர்த்துதல் என்பது அவரது கண்ணியத்தை  தான் இருக்க முடியும் என்று குர்ஆனில் இருந்து விளங்க முடியும்.

இது குறித்து மேலும் 3 வது சூராவில் 55 வது வசனத்தில் பேசப்படுகிறது.

5:117“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன்  இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);

இந்த வசனங்களில் வரும் கைபற்றபடுதல் என்பது உடலோடு கைப்பற்ற படுவதை, உயர்த்தி கொள்வதை  குறிக்கிறது என்று கூறினீர்கள் என்றால் ,

3:55“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

இங்கே இரண்டு விதமாக வார்த்தைகள் வந்துள்ள வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது. மரணத்திற்கு பிறகு ஒருவரின் நிலையை உயர்த்துவது  என்று பொருள் கொள்வது தான் பொருந்தி போகிறது. ஈஸா நபியை சில்வையில் அறைந்து அவரை ஒரு பொய்யர் என்றும் சபிக்கப்பட்டவர் என்றும் நிலைநாட்ட நினைத்த யூதர்களிடம் இருந்து அவரை காப்பாற்றி 
கண்ணியம் அளிப்பது குறித்து பேசப்படுகிறது.
நிராகரித்து கொண்டிருப்போரிடமிருந்து உம்மை தூய்மை படுத்துவேன். என்ற வாசகம் அது நமக்கு அதை இன்னும் உறுதி படுத்துகிறது.

கைப்பற்றுதல் - ஒன்றை முழுமையாக அடைவது 
இறைவன் ஒன்றை முழுமையாக அடைந்த பின்னர் அவரது உடலை தன்னளவில் உய்ர்த்தி கொள்வேன் என்று சொல்வது பொருத்தமற்றது. கைப்பற்றுதல் என்பதே முழுமையாக ஒன்றையோ அல்லது ஒருவரையோ தன்னிடம் சரணடைய செய்தல், சொந்தமாக்கி கொள்ளுதல்  என்று தான் பொருள் தரும்.

வேதக்காரர்கள் என்பவர்கள் யார் என்பதில் பல வேறு கருத்துக்கள் நம் சமுதாயத்தில் உள்ளது. இதில் உங்களின் கொள்கை என்னவெனில், யாருக்கு வேதம் கொடுக்கப்பட்டதோ அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தான் வேதக்காரர்கள் என்று குரான் சொல்கிறது என்பதாகும்.
அதாவது இஸ்ரவேலர்கள் மட்டுமே வேதக்காரர்கள். எனவே உங்களது கொள்கை படி  4 :159 வது வசனம் சொல்லும் கருத்தானது,
வேதக்காரர்கள்( இஸ்ரவேலர்கள் ) ஒவ்வொருவரும் அவரது( ஈஸா ) மரணத்திற்கு முன்னர் அவரை (ஈஸாவை ) நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. மறுமையில் அவர்களுக்கு அவர் சாட்சியாய் இருப்பார்.
ஈஸா நபி வரும் காலத்தில் அவரை நபி என்று நம்பிக்கை கொல்லாத ஒரு இஸ்ரவேலரும் இருப்பதில்லை என்பது இதன் கருத்து. அப்படி நம்பிக்கை கொள்ளும் இஸ்ரவேலருக்கு ஈஸா நபி சாட்சியாக இருப்பார் என்பது உங்கள் கருத்து.

முன்னரே சொன்னது போல் இறுதி அடையாளங்களில் முக்கிய அடையாளங்களை பார்த்து பின்னர் நம்பிக்கை கொள்ளும் கூட்டத்திற்கு அந்த நம்பிக்கை ஏற்று கொள்ளபடாது என்று ஹதித் உள்ளதை சுட்டி காட்டிய நீங்கள் அதற்கு மாற்றமாக இப்போது அவர்களுக்கு நல்லதொரு சாட்சியாக ஈஸா வே இருப்பார் என்று சொல்வது ஒன்று அந்த ஹதிஷை ஆதரமற்றதாக ஆக்குகிறது அல்லது உங்களது மொழி பெயர்ப்பின் தவறை அது சொல்கிறது என்பது நிரூபணம். உங்களது பதிலிற்கு பின்னர் தான் அதை குறித்து பேச முடியும் என்பதால் முதல் வாய்ப்பை சுருக்கமாகவே முடிக்கிறேன்.

வேதக்காரர்கள்( இஸ்ரவேலர்கள் ) ஒவ்வொருவரும் அவரது( ஈஸா ) மரணத்திற்கு முன்னர் அவரை (ஈஸாவை ) நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. மறுமையில் அவர்களுக்கு அவர் சாட்சியாய் இருப்பார்.
4 :159 வது வசனத்தில் ,ஈஸா நபியின் மரணத்திற்கு முன்னர் என்று மொழி பெயர்த்து அவரது வருகையின் போது என்று அதற்கு பொருள் கொண்டால்,
அவரை பார்த்து நம்பிக்கை கொள்ளும் இஸ்ராயிலின் சந்ததிகளுக்கு எப்படி அந்த சாட்சி சாதகமான சாட்சியாக இருக்க முடியும் ?

எனவே ,
வேதக்காரர்கள் ஒவ்வொருவரும் தமது மரணத்திற்கு முன்னர் அதனை( அவரது சிலுவை மரணத்தை )  நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. மறுமையில் அவர்களுக்கு அவர் எதிர் சாட்சியாய் இருப்பார். 
என்பது தான் பொருந்த கூடியதாக இருக்கிறது.

வசலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக