திங்கள், 2 டிசம்பர், 2013

இட ஒதுக்கீடு கேட்க என்ன ஆதாரம்?


காஃபிர்களிடம் இட ஒதுக்கீடு கேட்டு போராடக்கூடாது என்று சில மடமை வாதம் முன் வைக்கப்படுகிறது.

காஃபிர்களிடம் உரிமை கேட்கலாம் என்பது மாத்திரமல்ல, காஃபிர்களின் ஆட்சியில் பங்கு கூட கேட்கலாம் என்பதற்கு குர்ஆனிலேயே பல சான்றுகள் உள்ளன.

பனு இஸ்ரவேல சமூகத்து மக்களை கொடுமைப்படுத்தி வந்த ஃபிரவ்னுக்கு எதிராக மூசா நபி குரல் கொடுத்துள்ளார்கள்.

ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடையஇறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும்அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர்அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்" (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). 20:47

இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டால் அதில் கோரிக்கை வைப்பதற்கு மட்டும் மார்க்கம் அனுமதிக்கவில்லை, மாறாக, நமது சக்தியை மீறி நம்மை ஆட்சி செய்பவர்கள் காஃபிர்கள் தான் என்றாலும், அந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டலாம், நமக்கு எதிரான அநீதிக்கு எதிராய் உரிமை கேட்கலாம் என்பதற்கு மூசா நபியின் இந்த வரலாறே போதுமான சான்றாகும்.

இன்னும், காஃபிர்களின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிப்பதோடு, அவர்கள் வகுத்து வைத்திருக்கும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படவும் இஸ்லாம் நமக்கு அனுமதியளிக்கிறது.

இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்' என்று அவர் கூறினார் 12:55

யூசுஃப் நபி அவர்கள் காஃபிர்களின் ஆட்சியில் பங்கு கேட்டுள்ளார்கள், அத்துடன், அந்த ஆட்சியில் திருட்டுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனையை பின்பற்றியும் இருக்கிறார்கள்.

நீங்கள் பொய்யர்களாக இருந்தால் இதற்குரிய தண்டனை என்ன?' என்று அவர்கள் கேட்டனர்

யாருடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவரே (அவரைப் பிடித்துக் கொள்வதே) அதற்குரிய தண்டனை. நாங்கள் அநீதி இழைத்தோரை இவ்வாறே தண்டிப்போம்' என்று இவர்கள் கூறினர்.
அவரது சகோதரரின் சுமைக்கு முன் இவர்களின் சுமைகளை (யூசுஃப் சோதிக்க) ஆரம்பித்தார். பின்னர் அவரது சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே யூஸுஃபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம். அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப் படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். நாம் நாடி யோருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்.
12:74 - 76)

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் , யூசுப் நபியின் சமூகத்தில் உள்ள அந்த மன்னர் இஸ்லாமிய ஆட்சியை நடத்தவில்லை என்பதையும், இஸ்லாமிய ஆட்சியை நடத்தாத போதும், அந்த மன்னரின் ஆட்சியில் பொறுப்பு வகிக்க யூசுப் நபி விரும்பியதையும், திருட்டுக்கு இஸ்லாமிய சட்டம் வேறாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் படி சொல்லாமல் உங்கள் நாட்டில் என்ன தண்டனை? என்று அவர்கள் கேட்பதையும் வைத்து, இஸ்லாமிய ஆட்சி அல்லாத ஆட்சிகள் உருவானால் அதற்கும் நாம் கட்டுப்படலாம் என்று புரிகிறது.

ஆக, இட இதுக்கீடு கேட்டு போராடுவதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதியுள்ளது.

ஆனால் இது போன்று கோரிக்கைகள் வைப்பது கூடாது என்று கூறித்திரிகிற சில அரைவேக்காடுகளுக்கு நம்மை எதிர்ப்பது தான் நோக்கமே அல்லாமல் சுய சிந்தனையோ தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட கொள்கை கோட்பாடுகளோ எந்த காலத்திலும் இருந்ததில்லை.

உரிமைக்காக போராடுவது கூடாது என்று நாளை ஒரு வேளை நாம் முடிவெடுத்து அதை பகிரங்கமாய் அறிவித்தோமேயானால், போராடலாம் என்பதற்கு சான்றாக இப்போது என்ன வாதங்களையெல்லாம் நாம் வைக்கிறோமோ அவற்றை ஒன்று விடாமல் இந்த கூமுட்டை கூட்டங்கள் அப்போது நமக்கெதிராக சொல்லும் !!

மேலும்,

இழந்த உரிமையை மீட்பதற்காக போராடக்கூடாது ஆனால் ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்ணெண்ணெய் வாங்கலாம்,

என்றால்,

இழந்த உரிமையை மீட்பதற்காக போராடக்கூடாது ஆனால் நிலம் வாங்கி காஃபிர்களின் பத்திரத்தில் பதிவு செய்து கொள்ளலாம்,

என்றால்,

இழந்த உரிமையை மீட்பதற்காக போராடக்கூடாது ஆனால் நமது வீட்டில் நாம் வசிப்பதற்காக காஃபிர் அரசாங்கத்திற்கு வரி கட்டலாம், நாம் வாங்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் சேவை வரி, விற்பனை வரி எல்லாம் கட்டலாம்.


என்றால், இதை விட மதியீனம் வேறு உண்டா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக