புதன், 11 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : காங்கிரஸின் முதிர்ச்சியின்மை


ஐம்பது வருட பாரம்பரியமும் நிர்வாக அனுபவமும் கொண்ட காங்கிரஸ், தமது அனுபவத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத, மிகவும் பிற்போக்குத்தனமான, முதிர்ச்சியற்ற வகையில் தான் அரசியல் செய்து வருகிறது. 

பாஜக வெற்றி பெற்று விட்டது என்கிற மனக்குறை பலருக்கும் இருந்தாலும் கூட, காங்கிரஸ் கட்சி இந்த தோல்விக்கு தகுதியானது தான் என்பதே அனைவரும் புரிய வேண்டிய‌ உண்மை !

வாய் திறந்தால் முத்துக்கள் சிதறும் வண்ணம் பேசும் பாரத பிரதமர் என்னவென்றால், நரேந்திர மோடியை எங்கள் கட்சி கவனத்துடன் தான் பார்க்கிறது, அவரை நாங்கள் எளிதாக கருதவில்லை என்கிறார்,

அக்கட்சி சார்பாய் பாஜகவிற்கு உருப்படியாய் பதிலடி கொடுத்து வந்த திக்விஜய் சிங் ஒரு படி மேலே (கீழே) சென்று, மோடி நல்ல முதிர்ச்சியுடன் செயல்படுகிறார், வாஜ்பாய்க்கு நிகரான தலைவராக ஆகி விட்டார் என புகழ் மாலை சூட்டுகிறார்..

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்ட்தல் முடிவை பாதிக்காது என்று தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்னரே பிரதமர் கூறுகிறார்.

பாஜகவினரை விட காங்கிரஸ் கட்சியினரே இப்போது பாஜகவிற்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் !!

முதிர்ச்சியற்ற வகையில் அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினரின் வாழ்த்துக்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக