ஆய்வு என்றால் என்னவென்றே தெரியாத, மதரசா கல்வி தான் கப்ர் குழிவரை என்கிற ரீதியில் செயல்படும் உலமாக்கள் மத்தியில்,
ஆய்வு,
மறு ஆய்வு என சிந்தனையை செலுத்தி, இந்த சமூகமானது என்றைக்கும் நேரான
வழியிலேயே செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு
இயக்கம் உங்களுக்கு ஏளனத்திற்குரியதா?
எத்தனை எத்தனை ஆய்வுகள் , எத்தனை எத்தனை சிந்தனை செறிவுகள் , சுப்ஹானல்லாஹ் !
அறிஞர் பீஜேவின் சமீபத்திய மறு ஆய்வு 4:159 வசனம்.
கியாமத்
நாளுக்கு சமீபமாய் இவ்வுலகிற்கு வரும் ஈசா நபி அவர்கள், 40 ஆண்டு காலம்
பூமியில் ஆட்சி செய்வார்கள். அவ்வாறு அவர்கள் இப்பூமியில் வருகின்ற போது
அது நாள் வரை அவரை கடவுள் என்று நம்பி வந்த கூட்டம், அல்லாஹ்வை கடவுளாகவும்
ஈசா நபியை அல்லாஹ்வின் தூதராகவும் நம்பத் துவங்கும்.
இந்த செய்தியை விளக்கும் அந்த வசனத்திற்கு தொடர்ந்து
பொருள் வைத்த நாம், இவ்வாறு நம்பி முஸ்லிம்களாக மாறி விட்ட அந்த மக்களுக்கு
எதிராக நாளை மறுமையில் ஈசா நபி சாட்சி சொல்வார்கள் என்றே இது நாள் வரை
பொருள் வைத்தோம்.
நான் அறிந்தவரை தமிழ், ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் பெரும்பான்மையான தர்ஜுமாக்களில் இந்த பொருள் தான் தரப்பட்டிருக்கிறது.
சகோ. பிஜே இதை மறு ஆய்வு செய்திருக்கிறார் !(பார்க்க : பிஜெ தர்ஜுமா 12 ஆம் பதிப்பு)
அந்த வசனம் சொல்லும் கருத்துப்படி எதிர் சாட்சி என்பது
வராது, சாதகமான சாட்சி என்பது தான் பொருந்தும், அரபி மூலமும் இந்த
அர்த்தத்திற்கு இடமளிக்கிறது, இலக்கணமும் இடமளிக்கிறது என்பதை காரணக்
காரியங்களுடன் விளக்கியிருக்கிறார் அவர்.
ஆய்வு செய்து ஒன்றை பின்பற்றினால் அது சரியாய்
இருக்கும் பட்சத்தில் ஆய்வு செய்த நன்மையும், அதன் மூலம் சரியான முடிவை
அடைந்ததற்கான நன்மையும் கிடைக்கும்.
தவறாகிப்போனால் சரியானதை அடைவதற்காக ஆய்வு செய்தோம் என்ற வகையில் அந்த நன்மை கிடைக்கும்.
ஆனால் ஆய்வே செய்யாமல் முன்னோர்கள் சொன்னார்கள், பெரியார்கள்
இப்படித்தான் நம்பினார்கள் என்று சொல்லி அவர்களை தக்லீத் செய்யும்
கூட்டத்தாருக்கு,
ஆய்வின் மூலமே சமூகத்தில் புரட்சி செய்து வரும் ஒரு அறிஞரை ஏளனம் செய்வதற்குரிய எள்ளளவு தகுதியும் கிடையாது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக