திங்கள், 2 டிசம்பர், 2013

அல்லாஹ் தந்த சான்றிதழ்


படைப்பினங்களிலேயே சிறந்தது மனி இனம்.
மனி சமுதாயங்களிலேயே சிறந்தது நபி (ஸல்) அவர்களது உம்மத்தாகிய கியாமத் நாள் வரையுள்ள இந்த சமுதாயம்.

மற்ற மற்ற நபிமார்களின் காலங்களிலெல்லாம் தாவா பணி என்பது அந்தந்த நபிமார்களுக்கு தான் கடமையாக இருந்தது. 
அதன் காரணமாகத் தான் ஒரு நபி இறந்து விட்டால் அந்த பணியை செய்வதற்காக மற்றொரு நபியை அல்லாஹ் அனுப்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது உம்மத்தாகிய நாம், மற்ற சமுதாயங்ளை விடவும் சிறந்த சமுதாயமாக இருப்பதாய் அல்லாஹ் சொல்கிறான்.
அதற்கு காரணத்தையும் சொல்கிறான்.

மற்ற சமுதாய மக்கள் மீது சுமத்தப்படாத கடமையொன்று நம்மீது சுமத்தப்பட்டுள்ளது. அது தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டு சென்ற பணியை தொடர்வது என்கிற மகத்தான பணி.
நபி என்கிற அந்தஸ்தூம் அந்த இடமும் தான் கியாமத் நாள் வரை எவராலும் நிரப்பப்படாதே தவிர அவர்கள் 23 வருட காலமும் செய்து வந்த நன்மையை ஏவுதலையும் தீமையை விட்டும் மக்களை தடுத்தலும் இன்றூ நம்மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (3:110)

ஆக, தாவா செய்வது நபியின் உம்மத்தாகிய நம்மீது விதியாக்கப்பட்ட ஒரு விஷயம்.
அதை செய்வது வரை தான் நாம் சிறந்த சமுதாயம். 


அதை செய்யாதவரை அல்லாஹ் நமக்கு அளித்திருக்கும் சான்றிதழுக்கு நாம் பிரதிபலன் காட்டாத குற்றவாளிகள் ஆகி விடுவோம் என்பதை மனதில் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக