சத்தியத்தில் இருக்கும் கூட்டம் என்றைக்கும் இருந்து கொண்டே இருக்கும் என்கிற நபி மொழியின் படி சூனியத்தை உங்களை போல் இதற்கு முன் மறுத்த சமுதாயம் எது, பால் குடி சம்பவத்தை இதற்கு முன் மறுத்த சமுதாயம் எது என்று கேட்டு, தங்களது மதியீனத்தை வெளிக்காட்டி வருகிறது ஒரு மடமைக் கூட்டம்.
சத்தியத்தை சொல்கிற கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்றால் இருக்கும் என்று நம்ப வேண்டும், அவ்வளவு தான், அதை காட்டு என்று கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
இது போன்ற அறிவிலிகள் எந்த கொள்கையுமற்ற மூடர்கள் என்பதை நிரூபிக்க, இதே போன்ற கேள்வியை அவர்களிடம் நீங்கள் திருப்பிக் கேட்டு பாருங்கள்..
உதாரணத்திற்கு, சத்தியத்தை சொல்கிற கூட்டம் எல்லா காலமும் இருக்கும் தானே? ஐந்து நேரம் தொழ வேண்டும் என்பது தானே சத்தியக் கொள்கை? அப்படியானால் இதை ஹிஜ்ரி 500 இல் சொன்ன கூட்டம் எது? என்பதை ஆதாரத்துடன் தாருங்கள் என்று கேளுங்கள்.
ரமலானில் நோன்பு நோற்க வேண்டும் என்கிற சத்தியக்கருத்தை ஹிஜ்ரி 625 இல் சொன்ன கூட்டம் எது? என்று கேளுங்கள்.
ஆதாரத்துடன் தர இயலாமல் விழி பிதுங்குவார்கள்.
இது உங்களுக்கு தெரியாது என்பதால் தொழுவதும் நோன்பு நோற்பதும் சத்தியக்கொள்கை இல்லை என்று சொல்லி விடலாமா? என்று கேட்டுப் பாருங்கள்,
பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவார்கள்,
தங்களது முரண்பாடு அவர்களுக்கே பளிச்சென விளங்கும்.
சத்தியக் கருத்தை குர் ஆன், ஹதீஸ் ஒளியுடன் நாம் விளக்கும் போது, அதிலுள்ள உண்மையை சிந்தித்து ஏற்றுக் கொள்வதை விட்டு விட்டு, இதை இதற்கு முன் எந்த இமாமாவது சொல்லியிருக்கிறாரா? எந்த அறிஞராவது ஆதரித்திருக்கிறார்களா? என்று கேட்பவர்கள் வழிகேடர்கள் !
இதை நான் சொல்லவில்லை, இதோ அல்லாஹ் சொல்கிறான்..
நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்' என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது ஆதாரமாக இருப்பதில்லை. (45:25)
எந்த விஷயத்தைக் கொண்டு தெளிவாக விளக்கம் கூறப்பட்டாலும், முன்னோர்கள் இதை சொல்லியிருக்கிறார்களா? என்று இன்றைக்கு இது போல் கேட்கும் இந்த மூடர் கூட்டத்தை பற்றி குர்ஆன் எவ்வளவு துல்லியமாய் விளக்குகிறது பார்த்தீர்களா ?
குர்ஆன், முக்காலத்தையும் அறிந்த இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றே !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக