சனி, 17 ஆகஸ்ட், 2013

கப்ர் ஸியாரத்தின் நோக்கம் என்ன ?



ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளை சந்தித்தல் என்பது பொருள். 

மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும். அவர்கள் மறுமை வாழ்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது. நூல் : திர்மிதி (974)

ஆக, கப்ர் சியாரத் எதற்காக செய்யலாம் என்பதற்கான காரணம் தெளிவாக்கப்பட்டு விட்டது.

தர்காக்கள் கட்ட கூடாது, உயர்த்தப்பட்ட தர்காக்களை தரை மட்டம் ஆக்க வேண்டும் எனும் போது தர்காவிற்கு சியாரத் செல்லலாமா என்று கேட்பதோ, மரண சிந்தனை வர வேண்டும் என்பதற்காக தர்காவிற்கு செல்வதில் என்ன தவறு? என்று வறட்டு வாதம் புரிவதோ அர்த்தமற்றதாகி விடும் !

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.
(முஸ்லிம்: 1764)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக