சனி, 17 ஆகஸ்ட், 2013

முகநூல் பதிவுகள் : அந்த ஹதீஸ் பலகீனமானது தான்



நாம் ஏற்கனவே நமது நூல்களிலும் விவாதங்களிலும் பதிந்து வந்த அஹ்மதில் இடம்பெறும் கீழ்காணும் ஹதீஸ் தற்போது அறிஞர்களின் ஆய்வு முடிவில் பலகீனமானது என்று தெரிய வந்துள்ளது.

"மூன்று நபர்கள் சொர்கம் புகமாட்டார்கள்.1 மது அருந்துபவன் 2 உறவுகளை துண்டிப்பவன் 3 சூனியத்தை உண்மை என நம்புவன்."
நூல் : அஹ்மத் ( 18748)

ஆகவே இந்த செய்தி நமது ஆக்கங்களிலும் வாதங்களிலும் இடம் பெறாது நீக்கப்படும். 

இந்த செய்தி பலகீனமானது என்றாலும் இதே கருத்தை தரக்கூடிய மற்றொரு செய்தி அதே அஹ்மத் நூலில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : அஹ்மது (26212)

மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகும். ஆகவே சூனியத்தை உண்மை என்று நம்புவது நரகத்திற்கு கொண்டு செல்லும் காரியமாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஒரு வாதத்திற்கு இவ்விரண்டு செய்திகளுமே பலகீனம் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அடிப்படையான பல ஆதாரங்களை கொண்டு நாம் சூனியம் பொய் என்று ஏற்கனவே நிரூபித்து விட்டோம்.
இந்த ஹதீஸ்கள் யாவும் அடிப்படை ஆதாரங்களுடன் சேர்க்க வேண்டிய துணை ஆதாரங்கள் தான் !

இந்த ஹதீஸ்களை மறுப்பதன் மூலம் அப்போதும் சூனியத்தை உண்மை என நியாயப்படுத்தி விட முடியாது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக