சனி, 17 ஆகஸ்ட், 2013

சத்தியம் செய்ய சொல்லி கேட்கலாமா ?


ஒருவர் சொல்வது உண்மையா பொய்யா என்கிற சந்தேகம் நமக்கு வருமானால், அவரிடம் அல்லாஹ்விடம் சத்தியமிட்டு சொல்ல சொல்லி கேட்கலாம். 
இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர் மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும். நீங்கள் பூமியில் பயணம் மேற்கொண்டிருக்கும் போது மரணம் எனும் துன்பம் உங்களுக்கு ஏற்பட்டால் உங்களைச் சேராத இருவராக இருக்கலாம். நீங்கள் (அவர்களைச்) சந்தேகப்பட்டால் தொழுகைக்குப் பின் அவ்விருவரையும் தடுத்து வைத்துக் கொள்ளவும்! ''இதனை (சாட்சியத்தை) விலை பேச மாட்டோம். நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம். அப்போது நாங்கள் குற்றவாளிகளாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது அவ்விருவரும் சத்தியம் செய்ய வேண்டும். 5:106

அவ்விருவரும் (பொய் சாட்சி கூறி) பாவம் செய்தனர் என்பது தெரிய வந்தால், யாருக்குப் பாதகமாக சாட்சியம் கூறினார்களோ அவர்களைச் சேர்ந்த இருவர், அவ்விருவர் இடத்தில் நின்று ''எங்கள் சாட்சியம் இவ்விருவரின் சாட்சியத்தை விட மிகவும் உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அவ்வாறு வரம்பு மீறினால்) அப்போது நாங்கள் அநீதி இழைத்தவர்களாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். 5:107

சரியான முறையில் சாட்சியம் கூறவோ, தமது சத்தியம் (பிறரால்) மறுக்கப்படும் என்று அவர்கள் அஞ்சவோ இதுவே ஏற்ற வழி 5:108

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக