அப்துல் வஹாப் ஷராணி என்பவர் சுன்னத் (?) ஜமாத்தினரால் பெரிதும் பதிக்கபப்டும் ஒரு அவ்லியா (?).
மார்க்க பத்வாக்கள் கொடுக்கும் போது இவரது கருத்துக்களை மேற்கோள் காட்ட மறக்க மாட்டார்கள் என்கிற அளவிற்கு, இவரது கருத்துக்கள், இவரது புகழ் (?), சுனஜன மத்தியில் மிக பிரபலம்.
ஷராணி என்பவர் எழுதியுள்ள நூல்கள் இன்றளவும் இந்த சுனஜன மதரசாக்களில் வைக்கப்பட்டுள்ளன.
வேடிக்கையான செய்தி என்னவெனில், இவர் எழுதிய நூல்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தால் ஒரு முழு நீள ஆபாசப்புதகத்தை படித்தது போல இருக்கும் என்பதால் அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்யாமல் அரபியிலேயே வைத்துள்ளனர்.
இன்றைய அவ்லியா புராணமும், மகான்கள் பெரியார்கள் என்று மார்க்கத்தை கேலி செய்கிற போக்குகளும் மலிந்து கிடப்பதற்கு இது போன்ற அவ்லியாக்களின் (?) பங்கு மகத்தானது !
இவனது நூலை ஒருவன் படித்தான் என்றால் அதன் பிறகு அவனால் சுய நினைவுடன் இருக்க முடியுமா என்பது சந்தேகமே !!
ஒரு சில துளிகள் இங்கே....
இறை நேசர்களில் ஒருவரான ஷைகு இப்ராஹீம் அவர்கள் மிம்பரில் ஏறி நிர்வாணமாக நின்று உரை நிகழ்த்துவார்கள்.
நூல் :தபகாத் பக்கம் 157
இந்த பெரியார், வேறு பெரியவர்கள் இருக்கும் சபையில் சத்தமாக காற்று விடுவார். யாராவது கேட்டால் இவர் தான் விட்டார் என்று இன்னொருவரை காட்டி விடுவார். சம்மந்தப்பட்டவரோ வெட்கப்படுவார் (அதே நூல், அதே பக்கம்)
இந்த பெரியார், வேறு பெரியவர்கள் இருக்கும் சபையில் சத்தமாக காற்று விடுவார். யாராவது கேட்டால் இவர் தான் விட்டார் என்று இன்னொருவரை காட்டி விடுவார். சம்மந்தப்பட்டவரோ வெட்கப்படுவார் (அதே நூல், அதே பக்கம்)
எனது மனைவி கன்னியாக இருந்ததால் நான் அவளுடன் கூடாமல் இருந்தேன். அப்போது (கபுருக்குள் இருந்து எழுந்த வந்த) சய்து அஹமத் பதவி (என்ற மகான்), என்னையும் எனது மனைவியையும் இழுத்து சென்று தமது கபுரின் மேல் ஒரு போர்வையை விரிக்க சொன்னார். நானும் விரித்தேன். எங்களுக்காக இனிப்பு வகைகளை தந்தார். பின்னர் உயிருடன் இருப்பவர்களையும் இறந்து போனவர்களையும் அந்த இடத்திற்கு அழைத்தார்.
பின்னர், இவளது கன்னி தன்மையை நீக்கு என்று எனக்கு கட்டளையிட்டார். அதன் பிறகு எங்களின் முதலிரவு நடந்தது.
தபகாத் பக்கம் 62
இந்த பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது, உடனே அந்த நாய்க்கு மற்ற நாய்கள் எல்லாம் அடி பணிந்தன.
அந்த நாயின் மறைவுக்கு பிறகு எல்லா நாய்களும் கூடி நின்று அழுதன. மனிதர்களும் கூடினார்கள். நாய்களின் உள்ளத்தில் அந்த நாயை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை தந்தான். அவைகளும் அந்த நாயை அடக்கம் செய்து சியாரத்தும் செய்தன. இவரது பார்வை ஒரு நாயின் மீது பட்டு நாய்க்கே இந்த மகிமை என்றால் ஒரு மனிதன் மீது இவரது பார்வை பட்டால் ?
அதே நூல் பக்கம் 61
இந்த பெரியார் வெளியே வந்து யாரை முதலில் பார்க்கிறாரோ அவர்களது முகம் சொக்க தங்கமாக மாறி விடும்.
பக்கம் 60
நான் நபிகளாரை கனவிலும் நினைவிலும் காண்கிறேன். என்று கூறி ஜும்மா தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு அவர் வெளியே வந்ததில்லை
பக்கம் 15
இப்பெரியார் ஜூமா நாட்களிலும் மற்ற நாட்களிலும் குர் ஆனில் இல்லாத அத்தியாயங்களை குர் ஆன் என்று சொல்லி ஓதுவார். அதை கேட்பதற்கு இவர் குர் ஆனை தான் ஒதுகிராரோ என்கிற சந்தேகம் வரும்.
பக்கம் 187
இந்த பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு கொடுத்தால் அவை தங்கமாகவும் வெள்ளியாகவும் மாறும்.
பக்கம் 75
இந்த பெரியார் முன் பகுதி, பின்பகுதியை மட்டும் மறைக்கும் கோவணத்தையே கட்டியிருப்பார்.
பக்கம் 187
குரங்கு தர்கா, நாய் தர்கா, யானை தர்க்கா , என்று தர்கா கட்டலாம் என்பதற்கு மேலே உள்ளவை ஆதாரங்கள். !! வஹாபிகளே இந்த ஆதாரம் போதுமா இல்லை இன்னும் வேண்டுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக