செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கேக்கிறவன் கேனையனா இருந்தா..


அதிமுகவின் ஓராண்டு சாதனை விழாவில், சச்சின் ஒரு பந்தில் தான் சிக்சர் அடிப்பார், அம்மா எல்லா பந்திலும் சிக்சர் அடிப்பார் என்று சட்டசபையில் வீர முழக்கம் முழங்கிய வாயொன்று,

தானே புயலின் பாதிப்புக்கு அம்மா செய்த நிவாரணத்தைக் கண்டு எல்லார் வீட்டிலும் தானே புயலுக்காக‌ வாசலில் காத்துக் கிடந்தார்கள் என ஜால்ராவில் சிகரம் தொட்ட தானே தலைவர்,

கடந்த 2009 தேர்தலின் போது நாங்கள் இரு திராவிட கட்சிகளிடமும் சரி சமமாய் பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம் என வெட்கமில்லாமல் அறிவிப்பு செய்த காமெடி இயக்கமொன்று,

தற்போது சமூக அக்கறை என்கிற செம்பை தூக்கிக் கொண்டு, இட ஒதுக்கீடு அளிக்காததற்காக‌ சட்டசபை வெளிந‌டப்பு செய்திருக்கிறோம் என்கிறது.

ஒரு சீட்டு கூட கிடையாது என அம்மா துரத்தி விட்ட நிலையில், கலைஞர் பக்கம் தஞ்சம் புகுந்த போது, அவர் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பார் என உத்திரவாதம் வாங்கிக் கொண்டு தான் தஞ்சம் புகுந்தார்களா?

இவர்கள் உண்மையில் இந்த அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால் எந்தக் கட்சி இட ஒதுக்கீடை அளிக்கிறதோ அதை தான் நாங்கள் ஆதரிப்போம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

அதை செய்ய வக்கற்று, யார் அதிகம் சீட்டு தருகிறார்களோ அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்வதும், யார் சீட்டு தரவில்லையோ அவர்களை விமர்சனம் செய்வதும்.. என்கிற நாலாந்திர அரசியல்வாதியின் போக்கை வெளிக்காட்டி சமுதாய மானத்தை அடகு வைத்திருக்கிறது இந்த தமுமுக.
சீட்டு அதிகம் கிடைக்கிறது என்றால் பாஜக பக்கம் கூட இவர்கள் செல்வார்கள் என்பதே உண்மை.

சமுதாய மானத்தை அடகு வைப்பதில் முன்னோடியாய் திகழும் இந்த தமுமுக, தற்போது இட ஒதுக்கீடு பிரச்சனை காரணமாய் வெளி நடப்பு செய்கிறோம் என்று சொல்வது வேடிக்கையின் உச்சம் !

கேக்கிறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக