திங்கள், 10 பிப்ரவரி, 2014

முரண்பாடே வாழ்வாய்..


எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் விடுவதிலும், எதை செய்யக்கூடாதோ அதை செய்வதில் மிகுதியான ஆர்வம் காட்டுவதிலும் பரேலவிகள் என்று சொல்லக்கூடிய இணை வைப்பாளர்களை மிஞ்ச முடியாது.

எதை இஸ்லாம் தடை செய்திருக்கிறதோ அதை செய்வர். எதை செய்ய சொல்லி நபிகள் பெருமானார் வழிகாட்டி சென்றிருக்கிறார்களோ அதை விட்டும் தூரமாகி விடுவர்.

இன்று இவர்கள் மார்க்கம் என்கிற பெயரில் செய்து வரக்கூடிய கத்தம், ஃபாத்திஹா, மவ்லூத், தரிக்காக்கள், மிலாது விழாக்கள், தர்கா வழிபாடுகள் என எதை எடுத்துக் கொண்டாலும் அவை மார்க்கம் தடுத்தவையாகத் தான் இருக்கின்றன.

இன்னொரு பக்கம், எவ்வாறு தொழுமாறு இஸ்லாம் சொல்கிறதோ அவ்வாறு தொழ மாட்டார்கள், எவ்வாறு நோன்பை பேணுமாறு இஸ்லாம் கட்டளையிட்டிருக்கிறதோ அந்த முறையில் நோன்பை பேண மாட்டார்கள். இன்னும், இஸ்லாம் காட்டித் தந்த ஜகாத் ஆனாலும், ஹஜ்ஜானாலும், வேறு வேறு நல்லறங்கள் எதுவானாலும் அவற்றை செய்ய வேண்டிய முறைப்படி செய்ய மாட்டார்கள்.

மார்க்கம் தடுத்திருக்கின்ற கத்தம், மவ்லூதுகளுக்கு நமக்கும் அழைப்பு விடுப்பர்.
அதுவே, எந்த முஸ்லிமும் நுழையலாம் என‌ மார்க்கம் அனுமதித்திருக்கிற அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் இவர்கள் நமக்கு தடையென்று போர்ட் இடுவர்.

நரகில் கொண்டு சேர்க்கும் பித் அத்கள் என இஸ்லாம் இலக்கணமிட்டிருக்கும் மீலாதுகள், கூட்டு துஆக்கள், பராஅத்துகள் போன்றவை இவர்களுக்கு ஹலால்.

அதுவே, நபி (ஸல்) அவர்கள் குழாயடியில் ஒளு செய்தது கிடையாது,ஆகவே குழாயில் ஒளு செய்வது பிதஅத் என்று சொல்வீர்களா? என்று நம்மை நோக்கி அறிவார்ந்த (?) கேள்வி எழுப்புவர்.

மார்க்க ஞானம் என்பது துளியுமின்றி, மனம் போன போக்கிலெல்லாம் தங்கள் ஆன்மீக வாழ்வை அமைத்துக் கொள்வதின் மூலம் தங்கள் அழிவை தாங்களே தேடிக் கொள்கின்றனர் இவர்கள்.

முரண்பாடே வாழ்வாய் இருக்கிறது இவர்களுக்கு..

இவர்கள் தங்களை நரகத்திற்கு தான் தயார்படுத்துகிறார்கள் என்பதை புரியும் நாள் என்றைக்கோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக