செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ஜனவரி 28 வரை எல்லாரும் முஸ்லிமா?


அல்லாஹ்வால் மறுமையில் நாம் முஸ்லிமாக அங்கீகரிக்கப்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்த ஞானமற்றவர்கள் தான் மறுமையில் ஒருவர் அல்லாஹ்விடத்தில் முஸ்லிமாக கருதப்படுவதற்கும் உலகில் சக மனிதர்களால் முஸ்லிமாக கருதப்படுவதற்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாட்டினை கூட புரியாமல் இருப்பவர்கள்.

மற்ற இடங்களில் முஷ்ரிக், காஃபிர் என்பீர்கள், 
உங்களுக்கு தேவையென்றால் மட்டும் அவர்களை முஸ்லிம் என்று கூறுவீர்களா?

என்று இவர்கள் கேட்பதன் மூலம் ஏதோ உலக மகா அறிவுப்பூர்வமான கேள்வியொன்றை எழுப்பி விட்டதை போன்று பெருமையடைகின்றனர்.

ஆனால், இது போன்ற கேள்விகளை எழுப்புவதன் மூலம் தம்மை போல் அடிமட்ட முட்டாள் வேறு எவருமே இல்லை எனவும், இஸ்லாத்தின் ஆனா ஆவன்னா கூட தெரியாத ஜாஹிலியாக்கள் தான் நாங்கள் எனவும் வெட்கமின்றி அறிவிப்பு செய்கின்றனர் என்பது அனைவரும் எளிதில் கண்டு கொள்ளும் பேருண்மை !

'நம்பிக்கை கொண்டோம்' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்' (49:14)

வேறு பல சான்றுகள் இருந்தாலும் இந்த ஒரு வசனமே இவர்களுக்கு பதிலளிக்க போதுமானது.

உள்ளத்தில் ஈமானை கொண்டிராத கிராமவாசிகள் வெளிப்படையாக தங்களை முஸ்லிம்களாகத் தான் காட்டி கொண்டனர்.
அத்தகையோரை பார்த்து அல்லாஹ் சொல்லும் போது, தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறான்.

உள்ளத்தில் ஈமான் இருக்கிறதா என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த‌ ரகசியம்.
உள்ளத்தில் ஈமான் இருந்தாலும் இல்லையென்றாலும் உலகப்பார்வையில் அவர்கள் முஸ்லிம்கள் தான், தங்களை முஸ்லிம்கள் என்று அவர்கள் காட்டிக் கொள்ளலாம், பிறர் அவர்களை முஸ்லிம்கள் என்று அழைக்கவும் செய்யலாம்.

ஆக, எவரிடம் ஈமான் இல்லையோ அவர்கள் அல்லாஹ்வின் கணக்கில் ஈமானற்றவர்களாக தான் இருப்பர், மறுமையில் முஸ்லிம்கள் என்று அவர்கள் கருதப்பட மாட்டார்கள்.
ஆனால், உலகில் அவர்கள் முஸ்லிம்களே !

உலகில் அவர்களை அத்தகைய கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும்.

சரி, இவ்வாறு கேள்வியெழுப்புகிறவர்கள் தங்களுக்கென்று இது குறித்த தெளிவான ஒரு நிலைபாட்டினை கொண்டிருக்க வேண்டுமல்லவா?

இவர்கள் கருத்துப்படி தர்காவிற்கு செல்பவனும் மிர்சா குலாமை நபியாக்கியவனும் மறுமையில் சொர்க்கம் செல்லும் முஸ்லிம்கள் தானா?

ஆம் என்று இவர்கள் சொல்லத் தயாரா?

இல்லையெனில், அவர்கள் இவ்வுலகிலும் முஸ்லிம்கள் இல்லை என்று இவர்கள் சொல்வார்களா?

இணை வைப்பவர்கள் அல்லாஹ்விடத்திலும் முஸ்லிம் இல்லை, இவ்வுலகிலும் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று சொல்லி விட்டு இது போன்ற கேள்விகளை நம்மை நோக்கி வைத்திருந்தால், ஏதேனும் ஒரு அடிப்படையில் நின்று பேசும் விவரமுள்ளவர்கள் பட்டியலில் இவர்களை நாம் சேர்த்திருப்போம்.

ஆனால், எதற்கும் பதில் சொல்ல வக்கற்ற, தமக்கென எந்த நிலையையும் கொண்டிராத கையாலாகாதவர்கள் தான் நம்மை நோக்கி இது போன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள் என்பது தற்போது தெளிவாகி வருகிறது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக