புதன், 22 ஜூலை, 2015

ஹதீஸ் கலையின் ஐந்து விதிகள்"இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே" 
சகோ. பிஜெவின் இந்த வருட தொடர் உரையிலிருந்து எடுக்கப்பட்டது
-------------------------------------------------------------------------------------------------------------


ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா அலல்து பலகீனமானதா என்பதை அறிவதற்கு ஐந்துஅளவுகோல்களை இந்த இமாம்கள் முன்வைக்கின்றனர்.
இந்த ஐந்து அளவுகோலும் சரியாக இருக்கும் பட்சத்தில் தான் ஒரு ஹதீஸை சஹீஹ்அந்தஸ்திற்கு கொண்டு வருகின்றனர்.

1. அறிவிப்பாளர் நேர்மையாளராக இருத்தல் வேண்டும் :

இது முதல் அளவுகோலாகும்.
ஒரு செய்தியை ஒருவர் சொல்லும் போது அவர் சொல்வதை நாமே சென்று உறுதி செய்துவிடலாம் என்றால் சொல்பவரின் நம்பகத்தன்மையோ அவரின் நேர்மையையோ நாம் அலசத்தேவையில்லை.

உதாரணமாகஒரு இடத்தில் புதையல் ஒன்று இருப்பதாக ஒருவர் சொல்கிறார்.
சொல்பவர் நேர்மையாளரா பொய்யரா என்றெல்லாம் இவ்விடம் நாம் ஆய்வு செய்யத்தேவையில்லைகாரணம்அவர் சொன்னது போல் அந்த இடத்தில் புதையல் இருந்தால் அவர்நேர்மையானவர்புதையல் இல்லையென்றால் அவர் பொய்யர்ஆகஅவர் சொன்னதை நாமேநேரடியாக சரி பார்க்க வழி இருக்கும் போதுஅதுவே நமக்கு போதுமானது.

ஹதீஸ்களை அறிவிப்பதைப் பொறுத்தவரைஇப்படி நபி (சல்அவர்கள் சொன்னார்கள் என்றுஒரு அறிவிப்பாளர் ஒன்றை சொல்லும் போதுஉண்மையில் இப்படி நபி (சல்அவர்கள்சொன்னார்களாஎன்பதை நபி (சல்அவர்கள் வாழும் காலம் என்றால் நாம் அவர்களிடமேநேரடியாக சென்று கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
நபி (சல்அவர்கள் காலம் முடிந்த பிறகு இந்த வாய்ப்பு இருக்கிறதா?
அறிவிப்பாளரின் வார்த்தையை தான் நம்ப வேண்டியுள்ளது.

அப்போதுசொன்னவர் நல்லவராசொன்னவர் உண்மை பேசுபவராஎன்கிற ஆய்வைஅடிப்படையாக கொண்டு தான் ஒன்றை உறுதி செய்ய இயலும்.

ஆகஅறிவிப்பவர் நேர்மையாளராக இருக்க வேண்டும் என்கிற அளவுகோல் இங்கேஅவசியமாகிறது.
நேர்மையாளர் என்றவுடன் 100% சதவிகிதம் தவறே செய்யாதவர் என்று அர்த்தமில்லை.
மனிதன் என்கிற முறையில் எல்லா தவறுகளும் இருப்பவராக தான் இருப்பார்.
எனினும்தன்னளவில் தவறுகள் செய்பவன் கூட பிறரை வஞ்சிக்கக் கூடாது என்கிறகொள்கையில் இருப்பான்பிறரிடம் மோசடி செய்யக் கூடாது என்கிற ஒழுக்கத்தோடுஇருப்பான்,முக்கியமாக நபியின் பெயரால் பொய்யுரைக்கக் கூடாது என்கிற அச்சத்துடன்இருப்பான்.
அத்தகையோர் தான் ஒரு ஹதீஸை அறிவிப்பதற்கு தகுதியானவர்கள்.

இந்த அளவுகோலை கூட இமாம் ஷுஃபா போன்றவர்கள் சுயமாக முடிவு செய்து விடவில்லை.
மாறாகஒரு செய்தியை நாம் அறிந்தால் கேட்டவுடன் அதை நம்பாமல் ஆய்வு செய்யவேண்டும்சொன்னவரின் நம்பகத்தன்மையை எடை போட வேண்டும் என்பதாக குர் ஆன்கூறுகின்ற பல்வேறு அளவுகோல்களை சான்றாக முன்வைத்து தான் இந்த விதியினைவகுக்கிறார்கள்.

 நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (49:6)

இந்த வசனத்தில், ஒருவர் கொண்டு வரக்கூடிய செய்தியினை அப்படியே ஏற்றுக்கொண்டு விடாமல் இயன்றவரை விசாரித்துக் கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அது போல்,

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை (17:36)

எந்த விஷயத்தில் போதுமான அறிவு நமக்கு இல்லையோ அதை பின்பற்றக் கூடாது எனும் போது, அறிவிப்பாளர் எதை சொன்னாலும் அதை கண்மூடித்தனமாய் பின்பற்றுவது தகாது என்று எளிதில் புரிந்து கொள்ளலாம்.


இதைக் கேள்விப்பட்ட போது 'இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா? (24:16)

ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்ட அவதூறு செய்தி குறித்து அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லும் போது, அதைப் பற்றிய ஞானமில்லாமல் பரப்பிய குற்றத்திற்காக அல்லாஹ் கடுமையாக கோபம் கொள்கிறான்.
உங்களுக்கு ஞானமில்லாத விஷயங்களை பரப்புவது அவதூறு என்று அல்லாஹ் இதில் சொல்வதிலிருந்தும், ஹதீஸ் எனக்கூறி அறிவிக்கப்படும் அனைத்தையும் தக்க ஞானமின்றி ஏற்கக் கூடாது என்று புரியலாம்.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! (65:2)

விவாகரத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொதுவாக அல்லாஹ் சொல்லாமல், நேர்மையான சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதிலிருந்து, மனிதர்களின் நேர்மையை உரசிப் பார்ப்பதும், அதை கண்டறிவதும் அவசியம் என்று புரிகிறது
இதே கருத்தை கீழ்காணும் வசனமும் விளக்குகிறது.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ரா முடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.  (5:95)

இதிலும் நீதமான இருவரிடம் தீர்ப்பு கேட்குமாறு அல்லாஹ் சொல்வதிலிருந்து மனிதர்களின் நிதமாக நடப்பவர் யார், நீதி தவறி நடப்பவர் யார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிகின்றது.நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்' என்று அவர் கூறினார். (27:27)

இவ்வசனத்தில், சுலைமான் நபியிடம் ஹூத் ஹூத் பறவை அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் ராணியின் செயல்கள் குறித்த செய்தி ஒன்றை கூறும் போது, அதை கூட உடனடியாக சுலைமான் நபி ஏற்கவில்லை.
மாறாக, நீ சொல்வது உண்மையா பொய்யா என்பதை நான் முதலில் ஆராய்வேன் என்றே கூறினார்கள். 

ஆகநபி (சல்அவர்கள் சொன்னதாக அறிவிப்பவர் நேர்மையாளர் என்று அறியப்பட்டால் தான்அதை சஹீஹ் அந்தஸ்த்துக்கு கொண்டு வருவார்கள்.

பொய்யர் என்று தெரிந்தாலோ அல்லது அவர் பொய்யரா நேர்மையாளரா என்கிற தகவலேகிடைக்காமல் இருந்தாலோ அவர் கூறுகின்ற ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்கிறபட்டியலில் சேர்க்க மாட்டார்கள்.


2. செய்தியை சரியான முறையில் உள்வாங்கி புரியக் கூடியவராக இருக்க வேண்டும்.

இதுவும் ஹதீஸ் விதிகளில் உள்ளது இரண்டாவது அளவுகோல்.

அறிவிப்பவர் நல்லவராகவும் நேர்மையாளராகவும் இருந்தாலும் கூடசொல்லப்படும்செய்தியை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு அவை போதுமான தகுதிகளாக ஆகாது.
நேர்மையாளர் கூட ஒன்றை தவறாக புரிந்து விடுவார்கேட்பதில் சில வார்த்தைகளைகவனக்குறைவால் தவற விடுவார்அதனாலும் கூட கருத்துக்கள் மாறிப்போய் விடலாம்.

ஆகசொல்லப்படும் செய்தி என்னவோ அதை அதே பொருளில் புரிந்து கொள்வது என்பதுஹதீஸ் அறிவிப்பாளரின் முக்கிய தகுதியாக இமாம்கள் நிர்ணயம் செய்கின்றனர்.

நாம் கூட இன்று சஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்கிறோம்.
ஆனால் அதை வெளியே பிரச்சாரம் செய்பவர்கள் எப்படி சொல்கிறார்கள்இவர்கள்சஹாபாக்களை திட்டுகிறார்கள் என்கிறார்கள்.
இது தான் அறிவிப்பாளரின் பலகீனம்.

எனவேபுரிதலில் கவனத்துடன் இருந்துசொல்லப்பட்ட செய்தியை முழுமையாகஉள்வாங்கக்கூடியவரா என்பதை அலசுவதை இரண்டாவது விதியாக வகுக்கின்றனர் இந்த இமாம்கள்.


3. அறிவிப்பாளர்களில் ஒருவருக்கொருவர் சங்கிலித் தொடர்பு இருக்க வேண்டும்.

இப்ராஹிம் என்கிற ஒருவர் வாயிலாக நான் இதை கேட்டேன் என்று இஸ்மாயில் என்பவர்சொன்னால்இந்த இஸ்மாயில் இப்ராஹிம் காலத்தில் வாழ்ந்தவர் தானாஎன்பதை சரி பார்க்கவேண்டும்.
அவர் காலத்தில் வாழாதவர் அவரிடம் கேட்டிருக்க முடியாது.
அதே போன்றுசம காலத்தில் வாழ்ந்தவராக இருந்தால் மட்டும் போதாதுஇருவரும் சந்தித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு இப்ராஹிம் டில்லியிலும் இஸ்மாயில் சென்னையிலும் வாழ்ந்தவர்களாகஇருந்தால் இவர்கள் எப்போதேனும் சந்தித்திருக்கிறார்களாஇவர் டில்லிக்கு சென்றாராஅல்லது அவர் சென்னைக்கு வந்திருக்கிறாராஎன்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.
அதே போல்இப்ராஹிமிடம் கேட்டதாக இஸ்மாயில் சொல்கிறார் என்றால் கேட்டு புரிவதற்குரிய வயதில் தான் இஸ்மாயில் இருந்தாராஎன்பதையும் சரி பார்க்க வேண்டும்.
இப்ராஹிம் சென்னைக்கு வந்த சமயத்தில் இஸ்மாயிலின் வயது 6 ஆக இருக்கும்,அப்படியானால் இவர் இப்ராஹிமிடம் செய்திகளை கேட்டிருப்பாராகேட்டு அறிவிக்கின்றமுதிர்ச்சியை அவர் அப்போது பெற்றிருக்கவில்லை என்கிற முடிவுக்கு வருவார்கள்.

ஆகஒரு அறிவிப்பாளர் நேர்மையானவர் என்று முடிவு செய்த பிறகுஅவர் தெளிவாக புரியக்கூடியவர் தானா என்பதை உறுதி செய்த பிறகுஅவர் பிறந்த வருடம்அவர் வாழ்ந்த காலம்,வாழ்ந்த பகுதிஎத்தனை வருடங்கள் வாழ்ந்தார்எந்த வயதில் இந்த செய்தியை அவர் கேட்டார்,என்றெல்லாம் பல அடுக்கு ஆய்வுகளை இமாம்கள் மேற்கொள்கின்றனர்.

இதில் எந்த ஒன்றிலாவது குறைவு ஏற்பட்டாலோ சங்கிலித் தொடரில் முறிவு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டாலோஒன்றுஏதேனும் ஒரு நபர் இடையில் விடுபட்டிருக்க வேண்டும்அல்லது இவர் பொய் சொல்லியிருக்க வேண்டும்இரண்டில் எதுவாக இருந்தாலும் இந்தஹதீஸ் சஹீஹாக இருக்க முடியாது என்கிற அடிப்படையில் அதை தள்ளி விடுவார்கள்.


4. அறிவிக்கப்பட்ட செய்திஅதை விட பலமான இன்னொரு செய்திக்கு முரணாக இருத்தல்கூடாது(ஷுதூத்)

இதுவும் முக்கியமான அளவுகோலாகும்.

ஒரு செய்தியை ஒருவர் அறிவிக்கிறார்.
அதற்கு முரணான ஒரு கருத்தை மூவர் அறிவிக்கிறார்கள் என்றால் மூவர் அறிவிப்பது தான்நம்பகத்தன்மையில் அதிகம் வலுவானவைகாரணம்மூன்று பேரிடம் குறை ஏற்படுவதைவிட ஒருவரிடம் குறை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு அதிகம்.
ஆகஅந்த ஒருவர் நம்பகமானவராக இருந்தாலும்நேர்மையானவர் என்று அறியப்பட்டாலும்,தெளிவான சிந்தனை கொண்டவர் என்று உறுதி செய்யப்பட்டாலும்அதை விட வலுவாகஅறிவிக்கப்படும் மூன்று பேரின் செய்திக்கு இவரது கூற்று முரணாக இருப்பதால் இவரதுகூற்றை பலகீனம் என்று தள்ளி விடுவார்கள்.


இஸ்மாயில் என்கிற ஆசிரியர் வழியாக 5 மாணவர்கள் ஒரு செய்தியை அறீவிக்கிறார்கள் என்று வைப்போம்.
உதாரணத்திற்கும், இரவுத் தொழுகை 8 ரக்காஅத் தான் தொழ வேண்டும் என்று நபி (சல்) அவர்கள் சொன்னார்கள் என்பதாக இஸ்மாயில் என்பவர் அறிவிக்கிறார்.
அவரிடம் கேட்ட 5 மாணவர்களில் 4 மாணவர்கள், நபியவர்கள் 8 ரக்காஅத் தொழ சொன்னார்கள் என்று அறிவிக்கிறார்கள்.
ஒரேயொரு மாணவர் மட்டும் நபியவர்கள் 8 ரக்காஅத் தொழ சொல்லவில்லை என்று அறிவிக்கிறார் என்று வைப்போம்.

அறிஞர்களின் ஆய்வில் இஸ்மாயில் என்பவரும் நம்பகமானவர் தான், அது போன்று அவரது 5 மாணவர்களும் நம்பகமானவர்கள், நேர்மையானவர்கள் தான் எனும் போது,
நபி (சல்) அவர்கள் 8 ரக்காஅத் தொழ சொன்னார்கள் என்கிற செய்தியை தான் சஹீஹ் அந்தஸ்துக்கு கொண்டு வருவார்கள்.
8 ரக்காஅத் தொழ சொல்லவில்லை என்று ஒரேயொருவர் அறிவிக்கின்ற செய்தி, அவரை விட அதிகமான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் செய்திக்கு மாற்றமாக இருப்பதால் அதை புறந்தள்ளி விடுவார்கள்.

இது தான் ஷுதூத் (ஷாத் வகை ஹதீஸ்) எனப்படும்.

இப்படியாக ஏராளமான ஹதீஸ்களை நாமும் சரி, நம்மை எதிர்க்கக் கூடிய மாற்றுக் கொள்கையுடையவர்களும் சரி, ஒதுக்கி வைத்துத் தான் இருக்கிறார்கள்.

ஷாத் வகை என்று சொல்லி ஒரு ஹதீஸ் புறந்தள்ளப்பட்டால், அதனுடைய பொருள், அந்த அறிவிப்பாள்ர் பலகீனமானவர் என்பதல்ல.
அவர் பலமானவர் தான். ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் கவனக்குறைவாக இருந்திருக்கிறார், ஏனெனில், இவரை விட அதிக எண்ணிக்கையில் மற்ற அறிவிப்பாளர்கள் இவர் சொல்வதற்கு மாற்றமாக அறிவிக்கிறார்கள் என்பதால் அது தான் சரியாக இருக்கும்.
எனவே, இந்த அறிவிப்பாளரின் கருத்தை நாம் ஏற்க மறுக்கிறோம்.
இந்த ஒரு விஷயத்தில் தான் மறுக்கிறோமே தவிர, இதே அறிவிப்பாளர் அறிவிக்கும் வேறு வேறு ஹதீஸ்களை நாம் மறுப்பது கிடையாது.

ஆக, ஒருவர் அறிவிக்கும் செய்தி, 5 பேர் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருக்கின்ற காரணத்தால், அந்த ஒருவர், எவ்வளவு தான் நம்பகமானவராக இருந்தாலும் அதை புறந்தள்ளுகிறோமே, 
அப்படியானால், அந்த 5 பேர் அறிவிக்கும் செய்தியில் இருக்கும் நம்பகத்தன்மையை விட குர் ஆனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை அதிகமில்லையா?

ஒரு ஹதீஸுக்கு மாற்றமாக ஒட்டு மொத்த சமுதாயமும் அறிவித்திருக்கும் குர் ஆனில் ஒரு வசனம் இருந்தால் அதை காரணம் காட்டி இந்த ஒரு ஹதீஸை மறுப்பது மிகப்பெரிய் ஷாத் வகை இல்லையா?

நாம் குர் ஆனுக்கு ஒரு ஹதீஸ் மோதுகிறது என்று சொல்லும் போது மட்டும், அந்த ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா? அவர் பலகீனமானவரா அவர் நரகத்திற்கு செல்வாரா? என்றெல்லாம் வாய் கிழிய கேட்பவர்கள்,
இதே கேள்வியை, இவர்களும் நாமும் அனைவருமே சேர்ந்து மறுக்கக்கூடிய ஷாத் வகை ஹதீஸ்களுக்கு கேட்டார்களா?


நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்களை அறிவிப்பவர்கள் 5 பேரோ 10 பேரோ இருக்கட்டும்.
ஆனால் நபிக்கு சூனியம் செய்யப்படவேயில்லை, சூனியம் செய்யப்பட்டதாக சொல்பவர்கள் அ நியாயக் காரர்கள் என்பதாக அல்லாஹ் தமது திருமறையில் சொல்கிறானே, அந்த குர் ஆன் வசனத்தை அறிவிப்பவர்கள் ஒட்டு மொத்த சமுதயாமாச்சே, இப்போது எது அதிகம் வலுவானது?

சிந்தனையை இவர்கள் இப்படி செலுத்துவதை விட்டு விட்டு, அறிவிப்பாளர் நல்லவரில்லையா, அதை எப்படி ஏற்பது என்பதாக நுனிப்புல் மேய்கிறார்கள்.
குர் ஆனுக்குரிய மகத்துவமும், அதற்கான கண்ணியமும் இவர்களது உள்ளத்தில் சரியான முறையில் பதிந்திருந்தால் இது போன்ற வாதங்களை இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள்.

வெறுமனே, ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கிறது என்கிற ஒரு காரணத்திற்காக மட்டும் சூனியம் போன்ற செய்திகளை ஏற்கத் தான் வேண்டும் என்று சொன்னால், அது போல தானே மேலே நாம் குறிப்பிட்ட ஷாத் வகை ஹதீஸ்களும் இருக்கின்றன?
அவைகளும் ஹதீஸ் நூற்களில் பதியப்பட்டு தானே இருக்கின்றன?
அவற்றையும் நம்பகமான அறிவிப்பாளர் தானே அறிவிக்கிறார்?

இந்த அடிப்படையை நாம் சிந்தினையில் செலுத்த வேண்டும்.

ஆக, ஹதீஸ்களை நாம் மறுக்கவில்லை, மறுக்கவும் கூடாது, ஹதீஸை மறுத்தால் நாம் காஃபிர்களாகி விடுவோம் என்கிற இஸ்லாத்தின் அடிப்படையில் நாம் மிகவும் கவனத்துடன் தான் இருக்கிறோம்.
பிரச்சனை எங்கே எழுகிறது என்று சொன்னால், சில ஹதீஸ்கள், அவற்றையெல்லாம் விட மிக மிக பலமான ஆதாரமான குர் ஆனோடு நேரடியாக மோதுகின்ற போது, குர் ஆனா ஹதீஸா? என்கிற கேள்விக்கு நாம் தேர்வு செய்ய வேண்டியது குர் ஆனைத் தான்.

குர் ஆனில் அல்லாஹ் சொல்லும் போது,

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராள மான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (4:82)

குர் ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதற்கான ஆதாரமே இதில் எந்த முரண்பாடும் இருக்காது என்பது தான்.
குர் ஆனுக்கு முரணாக அல்லாஹ்வின் வஹீ செய்தி இருக்கவே இருக்காது.
இது தான் இஸ்லாத்தின் அடிப்படை.
முரண்படுவது போல் சில ஹதீஸ்கள் இருக்குமானால், அதை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள், ஏனெனில், நபியின் பணி என்பது குர் ஆனை விளக்குவது தானே தவிர, குர் ஆனுக்கு முரண்பாடு கற்பிப்பதல்ல.
ஏதேனும் ஹதீஸ்கள் குர் ஆனுக்கு முரண்பட்டால், அதை அறிவிப்பவர் தான் எதாவது குறை விட்டிருப்பார், எங்காவது கவனக்குறைவுடன் செயல்பட்டிருப்பார்.

இது தான் நாம் புரிய வேண்டிய அளவுகோல். அல்லாமல், அந்த அறிவிப்பாளர் பொய்யரா? அந்த அறிவிப்பாளர் பாவியா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல மாட்டோம்.

நமது அடிப்படை குர் ஆன் தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற காரணத்தால் தான் அதற்கு முரணான ஹதீஸ்களை மறுக்கிறோம்.
இவர்களோ, குர் ஆனுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட, அந்த ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்றனர்.

இவர்களுக்கு தான் குர் ஆனின் போதனைகள் அவர்களது தொண்டைக் குழியை விட்டும் கடக்கவில்லை என்று நபி (சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

வில்லை விட்டும் அம்பு எந்த அளவிற்கு வேகமாக வெளியேறுமோ அதே போன்று இஸ்லாத்தை விட்டும் இவர்கள் வேகமாக வெளியேறுகிறார்கள் என்று நபி (சல்) அவர்கள் கூறுகிறார்கள்.
குர் ஆன் இவர்களது தொண்டைக் குழியை கடந்து, அதன் கருத்துக்களையும் மகத்துவத்தையும் உள்ளத்தால் உணர்ந்தார்களெனில், அவர்கள் இந்த ஹதீஸை ஏற்கவே மாட்டார்கள்.

இதை கூட, இவர்கள் நம்மைப் பார்த்து சொல்கின்றனர், நாம் தான் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறோம் என்று.
ஆனால், இந்த ஹதீஸே குர் ஆனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறது.
குர் ஆனுக்கு யார் முக்கியத்துவம் கொடுப்பது ? நாமா அவர்களா?

நபியின் பெயரால் புனையப்பட்ட ஒரு ஹதீஸ், ஆபாசமாக இருந்தாலும், அருவருக்கத்தக்க விதத்தில் இருந்தாலும், குர் ஆனையும் நபி (சல்) அவர்களின் கண்ணியத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் இருந்தாலும், அதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம், அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று சொல்லப்பட்டு விட்டதல்லவா, ஹதீஸ் நூற்களில் பதிவாகி விட்டதல்லவா? எனவே அதை ஏற்கத் தான் செய்வோம் என்று சொல்பவர்கள் குர் ஆனை மதிப்பவர்களா?
அல்லது, குர் ஆனுக்கு முரணாக நம்பகமான அறிவிப்பாளர் என்று அறியப்பட்டவர் ஒன்றை சொன்னாலும், அதை ஏற்க மாட்டோம் என்று சொல்லக்கூடியவர்கள் குர் ஆனை மதிக்கின்றவர்களா?

என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் தான் குர் ஆன் மறுப்பாளர்கள் !

அதே போன்று, அல்லாஹ் இன்னொரு வசனத்தில் சொல்லும் போது,

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.(16:44)

குர் ஆனை விளக்குவதற்கு தான் நபி (சல்) அவர்கள் வந்தார்கள் எனும் போது அவர்கள் ஒரு போதும் அதற்கு முரண்படும் வகையில் பேச மாட்டார்கள்.

நபிக்கு சூனியம் செய்ய முடியாது என்று குர் ஆன் சொல்கிறது.

அப்படியானால், எனக்கு சூனியம் செய்தார்கள் என்று நபி பேச மாட்டார்கள். அப்படிப் பேசுவது குர் ஆனை முரணாக்குவதாக ஆகுமே தவிர, குர் ஆனை விளக்கியதாக இருக்காது.

அதே போன்று,

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக் கோனிடமிருந்து அருளப்பட்டது. (41:42)

எந்த தவறும் இந்த குர் ஆனில் வராது என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லும் போது, குர் ஆனுக்கு முரணாக சில செய்திகளை எடுத்துக் காட்டி அவையும் மார்க்கம் தான், அவையும் அல்லாஹ் அருளியவை தான் என்று சொன்னால், குர் ஆனின் மகத்துவம் அங்கே குலைக்கப்படுகிறது என்றே பொருளாகிறது.

எனவே, குர் ஆனுக்கு முதல் மரியாதையை நாம் செலுத்த வேண்டும்.
அதன் பிறகே ஹதீஸ்.
ஹதீஸ் என்று சொல்லப்பட்ட அனைத்தையும் ஏற்காமல், எவை ஏற்கத்தகுந்தவை, எவை, இஸ்லாமிய போதனைக்கு, குர் ஆனின் போதனைக்கு முரணில்லாமல் இருப்பவை என்கிற அடிப்படைகளை முதலில் அலசிப் பார்த்து அதன் பிறகு தான் ஹதீஸ்களை ஏற்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், அறிவிப்பாளரைக் காரணம் காட்டியெல்லாம் நாமும் சரி, மற்றவர்களும் சரி, பல்வேறு ஹதீஸ்களை மறுக்கத்தான் செய்கிறோம்.
அறிவிப்பாளரைக் காரணம் காட்டி ஒரு ஹதீஸை மறுப்பது நியாயம் என்றால், குர் ஆனைக் காரணம் காட்டி மறுப்பது அதை விட பல மடங்கு அதிக நியாயமில்லையா?

இந்த அளவுகோலின் படி நாம் ஒரு ஹதீஸை மறுத்தால் நம்மை காஃபிர் என்கிறார்களே, இதே அளவுகோலை முன்னிறுத்தி எத்தனையோ அறிஞர்கள் பல ஹதீஸ்களை மறுத்துத் தான் இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் இவர்கள் காஃபிர் ஃபத்வா கொடுக்கவில்லை !

5. நுணுக்கமான குறைபாடுகள்  (இல்லத்) இருக்கக் கூடாது.

இதுவும் ஹதீஸ் கலை விதிகளில் ஒரு முக்கியமான விதியாக இமாம்கள்கருதியிருக்கிறார்கள்.


வெளிப்படையாக தெரியக்கூடிய குறைகள் இருப்பது போல் நுணுக்கமான குறைகளும்இருக்கக் கூடாது என்கிற அளவிற்கு ஹதீஸ்களை வகைப்படுத்துவதில் அந்த அளவிற்கு கண்ணும் கருத்துமாய் இமாம்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

நுணுக்கமான குறைகளையும் கண்டறிந்து அதன் பிறகு தான் ஒரு ஹதீஸ் அறிவிப்பாளரை நம்பகமானவர் என்றும் ஒரு ஹதீஸை சஹீஹ் எனவும் பதிய வேண்டும் என்று அறிஞர்கள் முடிவு செய்கின்றனர்.
ஆனால், நுணுக்கமான குறைகளைப் பொறுத்தவரை, நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளை அறிஞர்பெருமக்கள் கொண்டிருக்கின்றனர்.
எனினும், சில சான்றுகளை இங்கே காண்போம்.

அப்துர் ரஹ்மான் பின் யசீத் என்கிற அறிவிப்பாளர் வழியாக பலர் அறிவித்தாலும், அவையெல்லாம் ஆதாரப்பூர்வமாக இருக்கின்றன, ஆனால் ஹம்மாத் பின் உசாமா என்பவர், அப்துர் ரஹ்மான் வழியாக கேட்டு அறிவிப்பது மட்டும் பலகீனம் என்கிற பட்டியலில் வருகிறது.

ஆழமாக ஆராயும் போது தான் காரணம் புரிகிறது.
சில நுணுக்கமான குறையை அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதாவது, அப்துர் ரஹ்மான் பின் யசீத் என்கிற பெயரில் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள்.

ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத்
அது போல், தமீமின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத்.

இவ்விருவரில் ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் தான் பலமானவர்,
தமீமின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் பலகீனமானவர்.

அப்படியிருக்க, மற்ற அனைவருமே ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் மூலமாகவே செய்திகளை அறிவிப்பு செய்திருக்க, ஹம்மாத் பின் உசாமாவோ, ஜாபிரின் பேரன் என்று தவறாக எண்ணி, தமீமின் பேரனிடம் செய்திகளை அறிந்திருக்கிறார்.

இதை அறிஞர்கள், பல கட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறிகிறார்கள். இந்த ஜாபிரின் பேரன் அந்த ஊருக்கு வரும் போது எவரெல்லாம் உடனிருந்தார்கள், அப்போது இந்த உசாமா என்பவர் உடன் இருந்தாரா? என்பதையெல்லாம் வைத்து, ஹம்மாத் பின் உசாமா அறிவிப்பது ஜாபிரின் பேரன் சொன்ன அறிவிப்பை அல்ல, மாறாக தமீமின் பேரன் சொன்னவற்றை தான் என்கிற முடிவுக்கு வருகிறார்கள்.

இது தான் நுணுக்கமான குறை என்பது.

மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

இப்ராஹிம் என்கிற ஒரு அறிவிப்பாளர் வழியாக (உதாரணத்திற்கு), இஸ்மாயில் என்பவர் ஒன்றை அறிவிக்கிறார் என்றால், ஹதீஸ் கலையின் மூன்றாவது விதிப்படி, இருவருக்கிடையில் சங்கிலித் தொடர் இருக்கிறதா என்பதை அறிஞர் ஆராய்வார்கள்.
இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்களா, இருவரும் ஒரே ஊரில் வாழ்ந்தவர்களா என்பதையெல்லாம் வைத்தே ஒரு அறிவிப்பை ஏற்பார்கள்.
ஆனால், அறிஞர்கள், இத்தகைய செய்திகளில் கூட இன்னும் ஆழமாக சென்று நுணுக்கமான ஏதும் குறைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

இப்ராஹிமும் இஸ்மாயிலும் ஒரே ஊரில் வசித்தவர்களாக இருந்தாலும், இவர் அவர் வசிக்கும் பகுதிக்கோ, அவர் இவர் வசிக்கும் பகுதிக்கோ என்றைக்காவது சென்றிருக்கிறார்களா? என்பது வரை ஆராய்ந்து பார்க்கிறார்கள்.

ஒரே ஊரில் இருந்து கொண்டு கூட ஒருவருக்கொருவர் சந்திக்காமல் இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கும் போது அத்தகைய நிலை ஏதும் கண்டறியப்பட்டால் அவற்றை நுணுக்கமான குறை என்கிற பட்டியலுக்கு கொண்டு வருகிறார்கள்.

அதே போல்,

இதே இப்ராஹிமும் இஸ்மாயிலும் ஒருவருக்கொருவர் சந்தித்தவர்களாக இருந்தாலும் கூட, அதிலும் கூடுதல் ஆய்வை செய்கிறார்கள்.
இப்ராஹிம் என்பவர் தமது 65 ஆவது வயது வரை சுய அறிவுள்ளவராக இருந்தார் எனவும், 65 வயதுக்கு பிறகு மூளை குழம்பிப் போய் விட்டது எனவும் தகவல் இருந்தால், இஸ்மாயில் என்பவர் இந்த தகவலை இப்ராஹிமிடமிருந்து பெற்றது இப்ராஹிமின் 65 ஆவது வயதிற்கு முன்னரா அல்லது அதற்கு பின்னரா என்று ஆய்வு செய்கிறார்கள்.

65 வயதுக்கு பிறகு தான் அவரிடம் இந்த தகவல் கேட்கப்பட்டது என்று தெரிய வந்தால் அப்போதும் இதை நுணுக்கமான குறை என்கிற பட்டியலில் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஆக, மேலோட்டமாக காணும் போது சஹீஹான அறிவிப்பாளர்களைப் போன்றும் சஹீஹான ஹதீஸைப் போன்றும் தோன்றினாலும், ஆழமாக அலசிப் பார்க்கும் போது பல நுணுக்கமான குறைகள் (இல்லத்) வெளியாகும்.
இல்லத் என்கிற பட்டியல் கொண்ட நூலைக் கூட அறிஞர் பெருமக்கள் இதற்கென தயாரித்து வைத்திருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக