இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!
(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)
நாள் : 17
மத்ஹப் நூற்களை எழுதியவன் ஓர் மன நோயாளி (தொடர்ச்சி) :
இதுவரை ஹனஃபி மத்ஹப் நூல்களில் உள்ள வண்டவாளங்களை பார்த்தோம்.
ஹனஃபி மத்ஹப் நம் சமூகத்தில் பெரும்பான்மையாக இருப்பது போல், சிறு பகுதியாக ஷாஃபி மத்ஹபை பின்பற்றுபவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். கேரளா போன்ற மாநிலங்களில் பெருவாரியான அளவிற்கும் இந்த மத்ஹப் வியாபித்திருக்கிறது.
அந்த வகையில், ஷாஃபி மத்ஹப் நூல்களையும் அலசுவது அவசியமாகிறது.
ஷாஃபி மத்ஹப் சட்டங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
பல் துலக்குதல் குறித்த சட்டம் :
ஷாஃபி மத்ஹபின் யஃனத்துத் தாலிபீன் எனும் நூலில் பாகம் 1, பக்கம் 46 இல் கீழ்காணும் சட்டத்தை எழுதி வைத்திருக்கிறார்கள்.
அதாவது, காலை எழுந்து முதன்முதலில் பல் துலக்கும் போது வாயில் உருவாகும் நுரையை வெளியே துப்பி விடக் கூடாதாம், மாறாக அதை அப்படியே விழுங்கி விடுவது கட்டாயமாம்.
இது எந்த அறிவுக்காவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா? காலையில் நமது வாயில் இருக்கும் எச்சில் என்பது மிகவும் அசுத்தம் நிறைந்தது என்று தான் மருத்துவ உலகம் சொல்கிறது, ஒவ்வொரு பாமரருக்கும் இது தெரியும்.
அந்த எச்சிலை விழுங்குமாறு ஒரு நூல் சொல்கிறது என்று சொன்னால் நிச்சயமாக அது சுய அறிவுடைய ஒருவரால் எழுதப்பட்ட சட்டமாக இருக்கவே இருக்காது !
இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. பல் குச்சி தொடர்பாக என்னென்ன மடமை சட்டங்களை ஹனஃபி மத்ஹபில் எழுதி வைத்திருக்கிறார்களோ அவற்றை ஷாஃபி மத்ஹபிலும் அச்சு அசலாக எழுதி வைத்திருக்கின்றனர்.
பல் குச்சி ஒரு ஜானுக்கு மேல் நீளமாக இருக்க கூடாது, அப்படி இருந்தால் அதில் ஷைத்தான் சவாரி செய்வான் என்றெல்லாம் உளரித் தள்ளியிருக்கிறார்கள்.
அதோடு, பல் இருக்கிறவன் தான் பல் விளக்க வேண்டும் என்கிற சாதாரண அடிப்படை கூட தெரியாத இவர்கள், எல்லாரும் பல் விளக்க வேண்டும், பல்லே இல்லையென்றாலும் பல் விளக்க வேண்டும் என்றும் கிறுக்குத்தனம் காட்டியிருப்பதை பார்க்கிறோம்.
தலைக்கு மசஹ் செய்யும் முறை :
ஒளு செய்யும் போது தலைக்கு மசஹ் செய்வது கட்டாயம் என்று நாம் அறிந்திருக்கிறோம், அதை எப்படி செய்வது என்று நபி (சல்) அவர்கள் விளக்கியும் இருக்கிறார்கள்.
ஆனால், ஷாஃபி மத்ஹப் ஒரு முறைல் மசஹ் செய்ய சொல்கிறது, அது என்ன முறை என்று பார்ப்போம்.
ஷாஃபி மத்ஹபின் ஃபத்ஹுல் முஃஈன் எனும் நூலில் பாகம் 1, பக்கம் 52 இல் மசஹ் செய்யும் சட்டத்தை எழுதியிருக்கிறார்கள்.
மசஹ் செய்வது என்பது தலையிலுள்ள ஒரேயொரு ஒரு முடியை எடுத்து அந்த ஒரு முடியில் ஒரு பகுதியை தடவிக் கொள்வதற்கு பெயர் தான் மசஹ் செய்வதாம்.
அப்படி ஒரு முடியை, அதுவும் ஒரு முடியில் ஒரு சிறு பகுதியை ஒருவன் கையால் தடவிக் கொண்டு விட்டால் அவனது ஒளு செல்லும்.
என்று, தொழுகையையும் நபி (சல்) அவர்களது வழிகாட்டுதலையும் அப்பட்டமாக கொச்சைப்படுத்துவதை பார்க்கிறோம்.
தலையை மசஹ் செய்யுமாறு நபி மொழி சொல்ல, இவர்களோ தலை என்றால் ஒரு முடி என்று பொருள் செய்கின்றனர் என்றால் எந்த அளவிற்கு மார்க்க ஞானமும் மொழி ஞானமும் இவர்களுக்கு இருக்கும் என்பதை புரியலாம்.
தண்ணீரை திருடலாம் :
ஒளு செய்ய ஒருவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் தயம்மும் செய்யுமாறு இஸ்லாம் சொல்கிறது.
ஆனால், ஷஃபி மத்ஹபோ தண்ணீரை இன்னொருவரிடமிருந்து திருடிக் கொண்டு வந்து ஒளு செய்தாலும் பரவாயில்லை, பிஸ்மில்லாஹ் சொல்லி ஒளு செய்தால் போதுமானது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
திருட்டை ஊக்குவிக்கும் இந்த சட்டம் அதே ஃபத்ஹுல் முஃஈன் எனும் நூலில் பாகம் 1, பக்கம் 55 இல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தொழுகையில் பேசலாம் :
தொழுகையின் போது உலக காரியங்களில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று ஷஃபி மத்ஹப் சொல்கிறது.
ஒரேயொரு நிபந்தனை, அவ்வாறு பேசுவது அரபு மொழியில் இருத்தல் அவசியம்.
இப்படியொரு முட்டாள்தனமான சட்டத்தை ஃபத்ஹுல் முஃஈன் பாகம் 1, பக்கம் 220 இல் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இப்படி இஸ்லாம் சொல்லுமா?
உலகக் காரியம் தொடர்பான பேச்சுக்களை தொழுகையின் போது பேசலாம் என்று சட்டமியற்றுவதே முதலில் தவறு.
இவர்கள் என்னவென்றால் அதோடு நிறுத்தாமல், அந்த உலகப் பேச்சுக்கள் அரபு மொழியில் இருந்தால் பிரச்சனையில்லை என்று சொல்லி அரபு மொழிக்கு ஏனைய மொழிக்கு இல்லாத சிறப்பு இருப்பது போலவும், அரபு மொழி பேசுபவர்கள் மற்ற மொழி பேஎசக்கூடியவர்களை விடவும் உயர்ந்தவர்கள் என்கிற தோற்றத்தையும் உருவாக்குகின்றனர்.
சாதி வேறுபாடு :
பிறப்பால் அனைவரும் சமம் என்கிற இஸ்லாத்தின் தாரக மந்திரத்திற்கு முரணான ஷாஃபி மத்ஹபின் கூற்றைப் பாருங்கள்.
குரைஷி குலத்தார் ஏனைய முஸ்லிம்களை விடவும் சிறப்புக்குரியவர்கள்,
அதே போன்று பாரம்பரியமிக்க முஸ்லிம்கள், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களை விடவும் சிறந்தவர்கள்
என்று, இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான சட்டத்தை ஃபத்ஹுல் முஃஈன் எனும் நூலில் பாகம் 3, பக்கம் 332 இல் எழுதி வைத்துள்ளனர்.
புதிதாக இஸ்லாத்தை ஒருவர் தழுவுகிறார் என்றால் அவர் பல வகைகளில் தியாகம் செய்தே இஸ்லாத்தை ஏற்கிறார்.
குடும்பத்தை விட்டுப் பிரிகிறார், உற்றார், உறவினர்களை விட்டுப் பிரிகிறார், சமயத்தில் ஊர் விலக்கிற்கு கூட ஆளாகிறார்.
கிட்டத்தட்ட ஓர் அனாதையாக தான் அவர் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்.
அவரை அந்த அளவிற்கு கொண்டு செல்வது, அல்லாஹ்வின் மீது அவர் கொண்ட அச்சமும் நம்பிக்கையும் தான் எனும் போது, இத்தகைய எந்தவொரு தியாகத்தையும் பெரிய அளவிற்கு செய்யாத பாரம்பரியமிக்க முஸ்லிம்கள் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் அவர்களை விட சிறப்புக்குரியவர்களில்லை.
அப்படியிருக்கையில், பாரம்பரிமிக்க முஸ்லிம்கள் தான் புதிதாக வந்தவர்களை விடவும் சிறந்தவர்கள் என்று சொல்கிறது மத்ஹப் கிதாப்கள்.
அப்படியானால், இவர்கள் வாதப்படி சஹாபாக்களை விடவும் நாம் தான் சிறந்தவர்கள் என்கிற பொருள் தான் வரும். காரணம், சஹாபாக்கள் அனைவருமே துவக்கத்தில் இறை மறுப்பாளர்களாக இருந்து பிறகு இஸ்லாத்தை புதிதாக தழுவியவர்கள் தான்.
நாமோ பல தலைமுறையாக இஸ்லாத்தில் இருக்கிறோம்.
அப்படியானால் ஷாஃபி மத்ஹபின் படி இன்றைய முஸ்லிம்கள் சஹாபாக்களை விடவும் சிறந்தவர்கள் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
அதை விட, அல்லாஹ் தன் திருமறையில் சொல்லும் போது, மனிதர்களே, உங்களை ஓர் தாய், ஓர் தந்தையிடமிருந்து படைத்தேன் என்பதாக சொல்கிறானே, இந்த ஒரு வசனத்தை இவர்கள் சிந்தித்திருந்தால் இது போன்ற மடமையை சட்டமாக்கியிருப்பார்களா?
பிறப்பால் நாம் அனைவருமே சமம் என்பது தான் இஸ்லாம் நமக்கு போதிக்கும் அடிப்படை.
இஸ்லத்தை நோக்கி மாற்று மதத்தவர்கள் சாரை சாரையாக வருகை தருகிறார்களென்றால், அதற்கு முக்கிய காரணம் இஸ்லாத்தில் பிறப்பாலோ, இனத்தாலோ எந்த வேற்றுமையும் எவரிடமும் கிடையாது என்பதனால் தான்.
இந்த அடிப்படையை இந்த மத்ஹப் ஆதரவாளர்கள் ஒரு கணம் சிந்தித்திருந்தாலும், பிறப்பால் இவர்கள் காட்டும் இந்த அபத்தமான மத்ஹப் சட்டத்திற்காக அந்த நூலினை புறந்தள்ளியிருப்பார்கள்.
மலக்கு ஜனாசா :
ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது உடல் நஜீசாகாது.
அது போல், ஜின்னின் உடலும் மலக்குமார்களின் உடலும் கூட நஜீசில்லை என்பதாக யஃனதுத்தாலிபீன் என்கிற நூலில் பாகம் 1, பக்கம் 90 இல் எழுதியிருக்கிறார்கள்.
மலக்குகளின் உடலையோ ஜின்களின் உடலையோ இவர்கள் எங்கே சென்று பார்த்தார்கள்?
மலக்குகளோ ஜின்களோ மறைவானவை. மறைவானவற்றைப் பற்றிய ஞானம்அல்லாஹ்விடத்தில் தான் இருக்கிறது எனும் போது, இதை இவர்கள் எப்படி அறிந்தார்கள்?
ஆக, பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்து விடுவதில் இவர்களுக்கு எந்த தயக்கமும்இல்லை என்பது இதன் மூலம் தெரிகின்றது.
ஜும்மாவுக்கு எத்தனை பேர் ?:
நாற்பது பேர் இருந்தால் தான் ஜும்மா கடமையாகும் என்று ஷாஃபி மத்ஹபில் எழுதிவைத்திருக்கிறார்கள்.
இப்படி இஸ்லாம் சொல்கிறதா? குர் ஆனோ ஹதீஸோ இவ்வாறு கட்டளையேதும்இட்டிருக்கிறதா? என்றால் இல்லை.
இவர்களாக சுயமாக ஒன்றை சொல்லி விட்டு அதற்கு மார்க்க சாயம் பூசுகின்றனர்.
அதை விட வேடிக்கை, 40 பேர் கொண்ட ஒரு ஜும்மா நடந்து கொண்டிருக்கும் போது,ஒருவருக்கு மட்டும் ஒளு முறிந்து விட்டால், மீதமுள்ள 39 பேருடைய ஜும்மாவும் செல்லமல்போய் விடும், என்று யஃனத்துத் தாலிபீன் நூலில் 2 ஆம் பாகம், 55 ஆம் பக்கத்தில் எழுதிவைத்திருக்கிறார்கள்.
ஆக, ஒரு பொய்க்கு மேல் இன்னொரு பொய், ஒரு உளரலுக்கு மேல் இன்னொரு உளரல்.
இது தான் மத்ஹப் சட்டங்கள் என்பது இதிலும் தெளிவாகிறது.
தொழுகையில் இருந்து கொண்டே வியாபாரம் செய்யலாம் :
ஒருவர் வியாபாரம் செய்கிறார், அந்த வியாபாரம் எப்போதெல்லாம் செல்லுபடியாகும்?என்பதற்கு சட்டம் சொல்கிறார்கள்.
அதாவது, அவர் தொழுது கொண்டிருக்கும் போதே வியாபாரமும் செய்யலாமாம்.
ஒரே நிபந்தனை, அவர் வாய் திறந்து பேச மட்டும் கூடாது, மற்றபடி, சைகை மூலம் (இஷாரா)வியாபாரம் செய்து, அதை தொழுது கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே செய்வது கூடதொழுகையை பாழாக்காது என்று இதே யஃனத்துத் தாலிபீன் பாகம் 4, பக்கம் 16 இல்எழுதியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் மீது கடுகளவு அச்சம் கொண்ட ஒருவனாக இருந்தால் இப்படி எழுதுவானா?
வேண்டுமென்றே சைகை செய்தாலும் குற்றமில்லையாம்.
அதாவது, நாம் தொழுது கொண்டிருக்கும் போதே ஒருவன் வந்து தக்காளி கிலோ எத்தனைஎன்று கேட்டால், கிலோ 50 ரூபாய் என்றூ வாய் திறந்து தான் நாம் சொல்லக் கூடாது, 50 ஐகையால் சைகை மூலம் காட்டிக் கொண்டே தொழுது கொண்டிருக்கலாமாம்.
எந்த அளவிற்கு இஸ்லாத்தை இழிவுபடுத்தக் கூடியவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்என்பதை கவனியுங்கள்.
கஞ்சா கூட அடிக்கலாம் :
இது ஒரு உச்சகட்ட ஃபத்வா !
அதாவது, கஞ்சா அடிப்பது கூட தவறில்லை என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
நாம் சுயமாக இட்டுக்கட்டி சொல்லவில்லை, மாறாக இவர்கள் போற்றும் இதே யஃனத்துத்தாலிபீன் எனும் கிதாபில் 4 ஆம் பாகம், 156 ஆம் பக்கத்தில் இதை விளக்கமாகவே எழுதிவைத்திருக்கிறார்கள்.
அதாவது, கொஞ்சமாக கஞ்சா அடித்துக் கொள்வது தவறில்லை, அது கூடும்.
ஆனால், இதை பொது மக்களிடம் சொல்லி விடக் கூடாதாம்.
ஏன் கூடாது? என்று தொடர்ந்து வாசித்தால், அவர்கள் அதிகமாக அடித்து விட்டு, அதைகொஞ்சம் என எண்ணி விடுவார்களாம், அதனால் பொது மக்களுக்கு இந்த சட்டத்தை சொல்லக்கூடாது, ஆலிம்கள் மட்டும் அடித்துக் கொள்ளலாம்.
எந்த கஞ்சாவை உலகமே தடை செய்திருக்கிறதோ அதை கொஞ்சமாக அடிக்கலாம் என்றுவெளிப்படையாகவே எழுதியிருக்கிறார்கள்.
போதை தரக்கூடிய எதுவாக இருந்தாலும் அது ஹராம் என்பதே நபி (சல்) அவர்கள் நமக்குபோதித்தது.
அதிகமாக சாப்பிடும் போது போதை ஏற்படுமானால் அந்த பொருளை குறைவாக சாப்பிடுவதும்குற்றம் என்று இஸ்லாம் சொல்லியிருக்க, இவர்களோ ஆலிம்கள் குறைவாக அடித்துக்கொள்ளலாம் என்று இஸ்லாத்தையே திரிக்கின்றனர்.
ஆக, இவையெல்லாம், ஆட்சியில் அமர்ந்தவர்கள், தங்கள் சுய ஆதாயங்களுக்காக எழுதியசட்டம் தான் என்று எளிதில் விளங்குகிறது.
இஸ்லாமிய சட்டத்தை மட்டும் பேணுவதாக இருந்தால் ஆட்சியில் இருந்து கொண்டுவிபச்சாரம் செய்ய முடியாது, திருட முடியாது, மோசடி செய்ய இயலாது, கஞ்சா அடிக்கஇயலாது..
இதையெல்லாம் செய்ய வேண்டுமானால், இவர்களாகவே ஒரு சட்ட புத்தகத்தை உருவாக்கிவிட்டு, அதற்கு மார்க்க முத்திரையை குத்தி விட்டால், பிறகு என்ன வேண்டுமானாலும்செய்யலாம்.
இது தான் இந்த குப்பை நூற்களை எழுதியவரின் நோக்கமாக இருந்தது என்பது இதன் மூலம்புரிகின்றது.
அதே போல், நாம் இதுவரை கண்ட மத்ஹப் சட்டங்களையெல்லாம் கூட இவர்கள் கஞ்சாஅடித்து கொண்டே தான் எழுதியிருக்கிறார்கள் என்றும் புரிகிறது.
அதன் காரணமாக தான் அவை அந்த தரத்தில் இருக்கின்றன !
குர் ஆனுக்கு எழுந்து நிற்க வேண்டுமாம் :
எனக்காக எழுந்து நிற்பதை நான் தடை செய்கிறேன் என்று நபி (சல்) அவர்கள்சொல்லியிருக்கிறார்கள்.
யாருக்காகவும் யாரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதற்கு இஸ்லாம்அனுமதிக்கவில்லை.
ஆனால் ஷாஃபி மத்ஹப் கூறும் விநோதத்தைப் பாருங்கள்.
குர் ஆனுக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டுமாம்.
அதுவும், ஆலிம்கள் வந்தால் எழுந்து நிற்பது எப்படி நல்ல காரியமோ அது போல் குர் ஆனைஒருவர் கொண்டு வந்தாலோ அதை தூக்கி காட்டினாலோ எழுந்து நிற்பதும் நல்ல காரியமாம்
இதை ஃபத்ஃஉல் முஈன் பாகம் 1, பக்கம் 69 இல் எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஆலிம்கள் வந்தாலும், ஏன் நபிகள் நாயகம் (சல்) அவர்களே வந்தாலும் எழுந்து நிற்கக் கூடாதுஎன்று தான் இஸ்லாம் சொல்கிறது.
இவர்களோ, ஆலிம்கள் வந்தால் எழுந்து நிற்பதை சுன்னத் என்று ஆக்கி, அதை ஆதாரமாககொண்டு குர் ஆனுக்கும் எழுந்து நிற்க வேண்டும் என்று உளரித்தள்ளியிருக்கிறார்கள்.
மனிதக் குர்பானி :
ஒரு மனிதனும் ஒரு ஆடும் உடலுறவு கொண்டு மனிதனையே பெற்றெடுக்கிறது.
அவர் மார்க்கம் கற்று ஆலிமாக வளர்கிறார். அப்படியானால் அவரை இமாமாக நாம் கருதிக்கொள்ளலாம்.
பின்னர் ஈத் பெருனாள் குர்பானியாக அவரையே பலி கொடுத்தும் விடலாம்.
அவரை இமாமாக ஏன் கருதலாம் என்றால் அவர் ஒரு மனிதர்.
அவரையே ஏன் குர்பானி கொடுக்கலாம் என்றால் அவர் ஆட்டுக்கு பிறந்தவர்
இப்படியொரு உலக மகா உளரலை ஃபிக்ஹ் நூல் என்று சொல்லி எழுதி வைத்திருக்கிறார்கள்.
இது யஃனதுத் தாலிபீன் நூலில் பாகம் 1, பக்கம் 94 இல் பதிவாகியிருக்கிறது.
அது போல, ஒரு மனிதன் பெண் பன்றியுடன் உடலுறவு கொண்டு மனிதனை பெற்றெடுத்தால்அந்த மனிதன் நஜீஸாவான் (அசுத்தமாவான்). என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வக்கிர சிந்தனையெல்லாம் சராசரி மனித சிந்தனைக்கு எட்டுமா?இவர்களெல்லாம் மார்க்கத்தை நேசிக்கக் கூடியவர்களாகவோ இஸ்லாத்தை கட்டிக் காக்கும்எண்ணத்தில் சட்டம் வகுத்திருப்பதாகவோ மெய்யாகவே நமக்கு தோன்றுகிறதா? என்பதை நம்ஒவ்வொருவரும் நெஞ்சில் கை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
தட்டு, தாயத்து :
குர் ஆன் வசனங்களை ஒரு காகிதத்தில் எழுதி அதை கரைத்து குடிப்பது என்பது கூடும்,அதனால் நன்மை இருக்கிறது என்று யஃனதுத் தாலிபீன் பாகம் 1, பக்கம் 69 இல்எழுதியிருக்கிறார்கள்.
தாயத்து இட்டுக் கொள்வது பகிரங்க ஷிர்க் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள்சொல்லியிருக்க, இவர்களோ அதை செய்யலாம், அது சிறப்புக்குரியது என்கின்றனர்.
ஷாஃபி மத்ஹபை அதிகம் பின்பற்றுகின்ற மக்கள் வாழும் கேரள மாநிலத்தில் இது போன்றதட்டு தாயத்து வியாபாரம் அதிகமாக இருப்பதற்கு இந்த சட்டமே காரணம்.
வியாபரத்தில் மோசடி :
ஒரு தையல் கடைக்கோ அல்லது சலவை கடைக்கோ சென்று நம் துணிகளை கொடுத்து விட்டுஎதுவும் பேசாமல் வந்து விட வேண்டும்.
கடைக்காரன் அதை தைக்கவோ சலவை செய்யவோ செய்த பிறகு நாம் அதை இலவசமாகவேதிரும்பப் பெற்றுக் கொள்ளலாம், எந்த கூலியையும் அவனுக்கு நாம் கொடுக்க தேவையில்லை.
காரணம், துணியை கொடுக்கும் போதே நாம் எவ்வளவு செலவாகும் என்று பேசிக்கொள்ளவில்லை.
இப்படி, பொருளை அபகரிப்பதற்கும், மோசடி செய்வதற்கும் சொல்லிக் கொடுக்கின்றது ஷாஃபிமத்ஹப்.
இந்த சட்டம் ஃபத்ஹுல் முஃஈன் பாகம் 3, பக்கம் 119 இல் பதிவாகியிருக்கிறது.
கருவில் குழந்தை எத்தனை வருடங்கள் இருக்கும் ?
யஃனதுத் தாலிபீனில்4 ஆம் பாகம் 49 ஆம் பக்கத்தில் இவர்கள் எழுதி வைத்திருக்கும்மற்றுமொரு கிறுக்குத்தனத்தைப் பாருங்கள்.
ஒரு கரு பெண்ணின் கருவறையில் வளர்வதற்கான அதிகபட்ச கால அளவு 4 ஆண்டுகளாம்.
இத்துடன் நிற்கவில்லை.
தலாக் விட்டால் அதன் விளைவு பற்றி இதை வைத்தே ஃபத்வா ஒன்றையும் கொடுக்கிறார்கள்.
அதாவது, ஒருவன் ஒரு பெண்ணை தலாக் விட்டால், அந்த பெண் இரண்டு வருடம் கழித்துகுழந்தையை பெற்றெடுத்தால் கூட அந்த குழந்தைக்கு தந்தை இவன் தானாம்.
காரணம், ஒரு கரு 4 ஆண்டுகள் வரை இருக்கும்.
என்னே ஒரு சிந்தனை பாருங்கள்.
4 ஆண்டுகள் ஒரு கருவினை ஒரு பெண்ணால் சுமக்க முடியுமா? மருத்துவ ரீதியாக அதுசாத்தியமா??
நிச்சயம் இல்லை.
கருவில் ஒரு குழந்தை இருக்கிறது என்றால் அது நாள் ஆக ஆக, வளர்ந்து கொண்டே வரும், 4ஆண்டுகள் இருந்தால் அதன் வளர்ச்சி என்பது இந்த பெண்ணின் உயிரையே பறித்து விடும்.
ஒரு வருடம் கழிந்தாலே கருவை அந்த பெண்ணினால் சுமக்க முடியாது என்பது தான்மருத்துவத்தின் தீர்ப்பு.
அப்படியிருக்க, 4 ஆண்டுகள் ஒரு பெண் சுமப்பாளாம், அப்படி சுமந்தாலும் அது 4 ஆண்டுகளுக்குமுன்பு தலாக் சொன்ன அவளது முந்தைய கணவனின் குழந்தை தானாம்.
எவ்வளவு அபத்தமான சிந்தனை பாருங்கள்.
இதையெல்லாம் சொல்லித் தருவது தான் மத்ஹப் நூல். இதை தான் மதரசாக்களில் ஏழுவருடங்கள் கற்று ஆலிம் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
இந்த சட்ட நூலை ஏற்கவில்லையென்றால் நமக்கு காஃபிர் பட்டம் கொடுப்பார்களாம்,பள்ளிவாசலுக்குள் நுழைய தடை விதிப்பார்களாம்.
அல்லாஹ்வையும் ரசூலையும் இழிவுபடுத்துவது நாமா அல்லது இந்த மத்ஹப் காப்பார்களா?
என்று சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.
தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக