தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்கும் வழக்கத்தை தான் சலஃபுகள் என்று தங்களைப் பெருமையாகக் காட்டிக் கொள்கிற முன்னோர்களை வணங்குகின்ற கூட்டம் எப்போதும் செய்து வருகிறது.
நாம் ஒரு கொள்கையை அல்லது சித்தாந்தத்தை முன்வைத்தால், அதை மறுப்பபவர்கள், அதன் அடிப்படையிலிருந்தே மறுக்க வேண்டும்.
இறைவன் இருக்கிறானா? என்கிற விவாதத்தில், இறைவன் இருந்தால் ஏன் கொலை கொள்ளை நடக்கிறது? என்றொரு கேள்வியை நாத்திகர்கள் தரப்பிலிருந்து எழுப்புவர்.
இதற்கு நாம் பதில் சொல்லும் போது, தலைப்பு இறைவன் இருக்கிறானா இல்லையா? என்பது. நாங்கள் இறைவன் இருக்கிறான் என்பதற்கு இத்தனை சான்றுகளை அடுக்கடுக்காக காட்டுகிறோம்.
இல்லை என்று சொல்பவர்களின் வேலை, நாங்கள் காட்டுகின்ற சான்றுகளை மறுப்பது, அவர்கள் தரப்பு சான்றை முன் வைப்பது.
இரண்டையும் செய்யாமல் இறைவன் இருந்தால் கொலை கொள்ளை ஏன் நடக்கிறது? என்பது அர்த்தமுள்ள கேள்வியா?
கொலை கொள்ளை நடக்கிறது என்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடுமா? அப்படியிருந்தால் கூட, கொலை கொள்ளையை தூண்டக் கூடிய கெட்ட கடவுள் இருக்கிறார் என்று தான் ஆகுமே தவிர கடவுளே இல்லை என்று எப்படி ஆகும்??
என்று நாம் எதிர் கேள்வி கேட்போம்.
இவர்கள் தான் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பவர்கள்.
சாலிம் பால்குடி விஷயத்தில், பால் கொடு என்று நபி (சல்) அவர்கள் சொல்வது மார்ப்பில் வாய் வைத்து குடிப்பதை தான் குறிக்கும், பால் கொடு என்று பொதுவாக சொல்லப்படுபவற்றின் பொருள் அது தான், குர் ஆனிலும் இந்த பொருளில் தான் சொல்லப்பட்டுள்ளது என்று நாம் வாதம் வைக்கின்ற போது,
ஏன், நேரடியாக தான் எல்லாவற்றையும் புரிய வேண்டுமா ?, குர் ஆனில் நேரடியாக சொல்லப்படும் வசனங்கள் இருப்பது போல் மறைமுகமாக சொல்லப்படும் விஷயங்களும் இருக்கத் தானே செய்கின்றன என்று பதில் சொல்கின்றனர்.
இந்த வாதம் வேறு வேறு குர் ஆன் வசனங்களுக்கு வேண்டுமானால் சரியாகும், ஆனால் இவர்கள் எந்த பால்குடி ஹதீஸை நியாயப்படுத்துகிறார்களோ, அதற்கு இந்த வாதம் உதவுமா?
தாய் பிள்ளை என்கிற உறவை உருவாக்குவதற்கு தான் நபி (சல்) அவர்கள் சட்டம் சொல்கிறார்கள் எனும் போது, எதை செய்தால் தாய் பிள்ளை உறவு உருவாகுமோ அதை செய்ய சொன்னார்கள் என்பது தான் இவ்விடத்தில் சரியாக இருக்கும்.
பால் கொடு என்றால் கறந்து கொடு என்று பொருள் கொள்ள வேண்டும் என்றால், கறந்து கொடுத்தால் தாய் பிள்ளை உறவு வருமா?
குழந்தை என்றால் கூட வருமா?
2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை என்றாலாவது வருமா?
நிச்சயம் வராது.
தாய் பிள்ளை உறவு ஏற்படுவதற்கு இரண்டு நிபந்தனைகளை அல்லாஹ்வின் தூதர் சொல்கிறார்கள்.
மார்பில் வாய் வைத்து உறிஞ்சி குடிக்க வேண்டும்,
அதுவும் 2 வயதுக்கு கீழ் அந்த குழந்தை இருக்க வேண்டும்.
இந்த இரு நிபந்தனை தான் தாய் பிள்ளை உறவை ஏற்படுத்தும் எனும் போது, இந்த ஹதீஸில், வாய் வைத்து குடிக்க சொன்னதாக பொருள் கொள்வது தான் அந்த ஹதீஸின் கருத்துக்கு உகந்தது.
அதற்கு தான் சஹ்லா அவர்கள் சட்டமே கேட்கிறார்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள், அதற்கு தான் நபியவர்கள் சட்டமும் சொல்கிறார்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
அபப்டியானால் இது அப்பட்டமான ஆபாசம், வக்கிரம், விபச்சாரம் !
இது தானே அடிப்படை?
இதற்கு பதில் சொல்ல இயலாதவர்கள், அந்த வார்த்தைக்கு இப்படியும் அர்த்தம் கொடுக்கலாம், குர் ஆனில் வேறு வேறு இடங்களில் நேரடியாக பொருள் கொள்ள இயலாத இடங்களும் இருக்கின்றனவே.. என்றெல்லாம் பேசுவது தான் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என்பது.
அடுத்து,
குர் ஆனுக்கு முரண்படும் ஹதீஸ் தொடர்பான விதிகளை வகுத்த அறிஞர்கள் என்கிற பட்டியலைப் பற்றி சகோ. பிஜெ பேசும் போது இப்னு கய்யும் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
அதை மட்டும் தேர்வு செய்து, எந்த அறிவுமற்ற, என்ன பேசுகிறோம் என்கிற சுய நினைவு கூட இல்லாமல் ஒரு வாதத்தை எழுப்பியிருக்கிறார்கள்.
அதாவது, இதிலும் தும்பை விட்டு விட்டு வாலை பிடித்திருக்கிறார்கள்.
அதிலாவது அறிவுக்கு உகந்த வாதத்தையா எழுப்பியிருக்கிறார்கள்? என்று பார்க்கப் போனால், வேடிக்கை, நமது கொள்கைக்கு பாயின்ட் எடுத்து தந்திருக்கிறார்கள் !
அதை இறுதியில் விளக்குகிறோம், ஆனால்..
சரி, இப்னு கய்யும் இந்த கொள்கையை சொல்லவேயில்லை என்று ஒரு பேச்சுக்கு வைப்போம். அதனால் இந்த கொள்கை தவறு என்று ஆகி விடுமா?
ஏதோ இப்னு கய்யுமை இந்த கொள்கையிலிருந்து விடுபடுத்தி விட்டால் ஒட்டு மொத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையும் தவறாகி விடும் என்பதைப் போன்று அறியாமைக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றனர். அந்த வாலைப் பிடித்திருக்கின்றனர்.
ஆனால், தும்பு எது?
குர் ஆனுக்கு முரண் என்றால் அத்தகைய ஹதீஸை புறந்தள்ள வேண்டும் என்பதே அடிப்படை.
இந்த அடிப்படை பல கோணங்களில், பல்வேறு குர் ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு விரிவான முறையில் சகோ. பிஜெவால் அலசப்பட்டது.
அறிவிப்பாளரை அலசி, இவர் நம்பகமானவர், இவர் பலகீனமானவர் என்றெல்லாம் நமக்கு கூறியது அல்லாஹ் அல்ல.
நம்மைப் போன்ற மனிதர்கள் தான்.
வழக்கு ஒன்று கொண்டு வரப்படும் போது தமக்கிருக்கும் புரிதலின் அடிப்படையில் கெட்டவரைக் கூட நல்லவர் என்று தவறாக சொல்லி விடுவேன் என்று நபி (சல்) அவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
நபிக்கே இவ்வாறு ஒரு மனிதரை அலசுவதில் குறைவு ஏற்படுமென்றால், சாதாரண மனிதர்களுக்கு அதை விட பல மடங்கு குறைவு ஏற்படும்.
இதுவெல்லாம் அடிப்படையாக விளக்கப்பட்டது.
ஆதாரத்திலேயே பெரிய ஆதாரம் வலிமையான இன்னொரு செய்திக்கு அது மாற்றமாக இருக்கக் கூடாது என்பது தான்.
இதை அனைத்து அறிஞர்களும் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு தான் ஷாத் வகை என்கிற உசூலை ஹதீஸ் கலையில் புகுத்தினர்.
அதன்படி, ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் பலவும் அனைவராலும் ஏகமனதாய் நிராகரிக்கப்படவும் செய்தன.
என்பவை பற்றியெல்லாம் விளக்கப்பட்டது.
இது போக, ஒரு செய்தியை, நம்பகமான ஒருவரே அறிவித்திருந்தாலும் கூட, அது குர் ஆனுக்கு முரணாக இருக்கிறதா என்கிற பார்வையை தான் சஹாபாக்களும் முதலில் கொண்டிருந்தார்கள், அதன்படி நம்பகமானவர்களிலேயே சிறந்தவர்களான சஹாபாக்கள் அறிவித்த சில செய்திகளை கூட வேறு சஹாபாக்கள் மறுத்திருக்கிறார்கள்.
பல அறிஞர்களும் இந்த விதியை முன்மொழிந்திருக்கிறார்கள், இந்த விதியை அடிப்படையாக கொண்டு பல ஹதீஸ்களை மறுத்தும் இருக்கிறார்கள்.
என்பன போன்ற பல்வேறு காரியங்களை அடுக்கடுக்கான சான்றுகளின் மூலம் தொடர்ச்சியாக சகோ.பிஜெ விளக்கியிருக்கும் போது,
அடிப்படைகளுக்கு பதில் சொல்லாதவர்கள், இமாம் இப்னு கய்யும் இந்த உசூலை சொல்வதாக பிஜெ சொல்கிறார், அது தவறு, இதோ ஆதாரம் என்று அவர்களின் கூற்றுக்கு எந்த சம்மந்தமுமில்லாத சிலவற்றை காட்டுகின்றனர்.
இதை காட்டி விட்டால், மேற்கூறப்பட்ட ஒட்டு மொத்த அடிப்படையுமே தகர்ந்து விடுமா?
சரி, அதிலாவது இவர்கள் அறிவை பயன்படுத்தி சிந்தித்து தான் இந்த பதிலை எழுதியிருக்கிறார்களா?
பிஜெ சிலவற்றை இருட்டடிப்பு செய்துவிட்டாராம்.
என்ன இருட்டடிப்பு என்று பார்த்தால்,இமாம் இப்னு கய்யுமிடம், அறிவிப்பாளரை அலசாமல் அல்லது அதைப் பற்றி கவனம் செலுத்தாமல் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை அறிந்து கொள்வது எப்படி? என்று கேட்கப்படுகிறதாம்.
இதை பிஜெ மறைத்து விட்டாராம்.
இதைதானப்பா பிஜே சொன்னார்.
எதை பிஜெ தமது வாதமாக முன் வைத்தாரோ அதற்கு கூடுதல் பாயின்ட் எடுத்து தருகிறார்கள் இந்த அதிமேதாவிகள்.
இந்த ஞான சூனியங்கள் சஹீஹ் ஹதீஸுக்கும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதற்கும் கொடுத்திருக்கும் வியாக்கானமே தவறாக இருக்கின்றது.
இட்டுப்பட்டப்பட்டது என்றால் அறிவிப்பாளர் வரிசையில் குறையுள்ளது என்று எண்ணுகிறார்கள்.
சஹீஹானது என்றால் அறிவிப்பாளர் வரிசை பலமெல்லாம் சஹீஹானது என்று எண்னுகிறார்கள்.
இது அடிப்படையிலேயே தவறு.
சஹீஹான ஹதிஸ் என்றால், அறிவிப்பாளரும் சரியாக இருக்க வேண்டும், வேறு வலிமையான செய்திகளுடன் மோதாமல் இருக்க வேண்டும், அதன் கருத்தும் நடைமுறைக்கு முரணில்லாத வகையில் இருக்க வேண்டும்.
இது தான் சஹீஹ் எனப்படுவது.
அது போல், இட்டுக்கட்டப்பட்டது என்றால் அதுவும் மேற்கூறிய அனைத்து நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று மாறுபட்டிருந்தாலும் அது இட்டுக்கட்டப்பட்டது.
இதை நாம் சுயமாக சொல்லவில்லை.
நமக்கு மறுப்பு சொல்வதாக எண்ணிக் கொண்டு இப்னு கய்யுமின் கூற்றை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்களே, அதிலேயே இந்த கருத்து அடங்கித் தான் இருக்கிறது.
இப்னு கய்யுமிடம் கேட்கப்பட்ட கேள்வியே என்ன?
அறிவிப்பாளரை கண்டு கொள்ளாமல் இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிவது எப்படி?
இதன் பொருள் என்ன?
பொதுவாக, நபி சொன்னதாக ஒரு செய்தி அறிவிக்கப்படுகிறது என்று வைப்போம்.
இது எப்போது இட்டுக்கட்டப்பட்டதாக ஆகும்?
அறிவிப்பாளர் பலகீனம் என்றால் இட்டுக்கட்டப்பட்டதாக ஆகும்.
இதை அறிந்து கொண்டு தான் கேள்வி கேட்பவர் எப்படி கேட்கிறார் என்றால், அறிவிப்பாளரை பார்க்காமல், ஒரு செய்தி இட்டுக்கட்டப்பட்டதா அல்லது சரியானதா என்று எப்படி பார்ப்பது??
என்று இப்னு கய்யுமிடம் கேட்கிறார்.
கேள்வி புரிகிறதா?
இதை சகோ. பிஜெ மறைத்து விட்டாராம். வேடிக்கையின் உச்சம் இது !
இது சகோ, பிஜெவுக்கு சாதகமான பாயின்டா பாதகமான பாயின்டா என்பதை கூட சிந்திக்கும் தகுதி இவர்களுக்கு இல்லை.
எதையாவது எழுத வேண்டும், மறுப்பு என்கிற பெயரில் பக்கத்தை நிரப்பி, பதில் இருக்கா பதில் இருக்கா? என்று கேட்டு விட்டால் அறிவுப்பூர்வமாக கேட்டு விட்டதாக எண்ணம் இவர்களுக்கு.
அறிவிப்பாளரை பார்க்காமல், ஒரு செய்தி இட்டுக்கட்டப்பட்டதா அல்லது சரியானதா என்று எப்படி பார்ப்பது??
என்று இப்னு கய்யுமிடம் கேட்கிறாரே, அந்த கேள்விக்கு தான் இப்னு கய்யும் விடை சொல்கிறார்..
ஆமாம், அறிவிப்பாளரை கவனிக்காமலும் ஒரு செய்தி சரியானதா அல்லது இட்டுக்கட்டப்பட்டதா என்பதை முடிவு செய்ய முடியும்.
என்று கூறீ விட்டு சில விதிகளையும் முன்வைக்கிறார்.
நம் அறிவுக்கு பொய்யாக தெரியும் செய்தி..
குர் ஆனுக்கு முரணான செய்தி..
என்று பட்டியலிடுகிறார்.
சில உதாரணங்களையும் முன் வைக்கிறார்.
தவ்ஹீத் ஜமாஅத் என்ன வாதத்தை இன்றைக்கு முன்வைக்கிறதோ அதை அச்சு பிசகாமல் இப்னு கய்யும் அன்றைக்கே விளக்கியிருக்கிறார் என்பது, இவர்கள் பதில் அளிக்கிறோம் பேர்வழி என்று மூக்கை நுழைத்து, நமக்கு பாயின்ட் எடுத்து தந்திருப்பதன் மூலமும் நிரூபித்திருக்கிறார்கள்.
அறிவிப்பாளரைப் பற்றி கவலைப்படாமல், அதை பொருட்படுத்தாமல், அதில் எந்த கவனத்தையும் செலுத்தாமல் தான் பால் குடி ஹதீஸ் இட்டுப்பட்டப்பட்டது என்கிறோம்.
அறிவிப்பாளரைப் பற்றி கவலைப்படாமல், அதை பொருட்படுத்தாமல், அதில் எந்த கவனத்தையும் செலுத்தாமல் தான்
சூனியம் தொடர்பான ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்கிறோம்.
இப்னு கய்யும் அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு அறிவிப்பாளரை பார்க்காமலே கண்டுபிடிப்பதற்கான முறைகளாக எதை சொன்னாரோ அதன் படி தான் நாமும் இவைகளை இட்டுக்கட்டப்பட்டவை என்கிறோம் !
அறிவுக்கு பொருந்தவில்லை என்றால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி, அறிவிப்பாளர் எப்படிப்பட்டவர்கள் என்று கவனம் செலுத்தத் தேவையில்லை.
குர் ஆனுக்கு முரணாக இருந்தால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி, அறிவிப்பாளர் எப்படிப்பட்டவர்கள் என்று கவனம் செலுத்தத் தேவையில்லை
வாதம் வைப்பதற்கு முன், இது சரியான வாதம் தானா? என்பதை சிந்திக்கவும்.
அதை விட, நாம் மறுப்பு என்கிற பெயரில் உண்மையில் மறுப்பை தான் எழுதுகிறோமா அல்லது எதிர் தரப்புக்கு சாதகமான பாயின்டை எடுத்துத் தருகிறோமா? என்பதையும் கவனித்து மறுப்புகள் எழுதவும்..
அனைத்தையும் விடமுக்கியமாக, தும்பை விட்டு விட்டு வெறும் வாலை மட்டும் பிடித்து தொங்காமல், அடிப்படை சித்தந்தத்திற்கு மறுப்பு சொல்லிப் பழகவும்.
என்று சலஃபு கூட்டத்தை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக