இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!
(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)
நாள் : 23
உலமாக்களை பின்பற்ற வேண்டுமா? (தொடர்ச்சி)
ஆலிம் என்பவர் தமக்கிருக்கும் மார்க்க அறிவைத் தான் மிகவும் மகத்தானதாகவும் பொக்கிஷம்போலவும் கருத வேண்டும்.
ஏனெனில், பலருக்கும் கிடைக்காத பாக்கியத்தை தான் அவருக்கு அல்லாஹ்வழங்கியிருக்கிறான்.
ஆனால் இன்றைய ஆலிம்களின் நிலை என்னவாக இருக்கிறது?
அற்பமான பணத்திற்காக எதையும் செய்யும் அளவிற்கு கீழான நிலையிலேயே அவர்கள்இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களால் மார்க்கம் பேணுதலாக கருதப்படுமா?
இப்படிப்பட்டவர்களால் சரியான முறையில், எந்த நெளிவு சுளிவும் இன்றி மார்க்கத்தைபோதிக்க முடியுமா?
கடந்த காலங்களில் நம் தமிழகத்தின் நிலைமையை சற்று பின்னோக்கிப் பாருங்கள்.
வெளி நாட்டிலிருந்து ஏதெனும் செல்வந்தர் ஊருக்கு வந்து விட்டால், மார்க்க அறிஞர்கள் எனஅறியப்படுபவர்கள் தான் அவரது விட்டில் வரிசை கட்டி நிற்பார்கள்.
அவர் தரக்கூடிய பணத்தை பெறுவதற்காக தங்கள் சுய மரியாதையை கூட இழக்கும்அளவிற்கு அன்றைய உலமாக்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இதை விடஅவமானம் மார்க்க அறிஞர் என்று சொல்லப்படக் கூடியவருக்கு இருக்க முடியுமா?
யாசகம் கேட்ப்பவர்களை பிச்சைக்காரர்கள் என்று அழைத்தால் இவர்களெல்லாம் கெளரவபிச்சைகக்காரர்கள் !
இப்படிப்பட்டவர்களிடம் மார்க்க அறிவை நாம் எதிர்பார்க்க முடியுமா?
செல்வந்தர்களிடம் கையேந்தும் நிலைக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்கள், அதேசெல்வந்தர் செய்யும் பகட்டான காரியத்தையோ ஆடம்பர திருமணங்களையோவரதட்சணையையோ எதிர்த்து குரல் கொடுப்பார்களா?
நிச்சயம் மாட்டார்கள்.
தவறு என்றும் மார்க்கத்திற்கு விரோதம் எனவும் தெரிந்தும் கூட அவற்றை கண்டித்து குரல்கொடுக்க இயலாத கையாலாகா நிலையில் தான் உலமாக்கள் இருந்தனர்.
திருமணம் என்கிற பெயரில் இவர்கள் செய்யும் கூத்து, கும்மாளம், ஆடல் பாடல், கச்சேரிகள்,குதிரை சவாரி, யானை சவாரி, என அனைத்திற்கும் இந்த உலமாக்களும் சேர்ந்தேபங்கெடுப்பவர்களாக இருந்தார்களே தவிர இவையெல்லாம் இஸ்லாத்திற்கு விரோதமானதுஎன்று கண்டிக்கவில்லை.
கண்டிக்கும் நிலையில் அவர்கள் இல்லை !
தெரு பயான் என்று ஏற்பாடு செய்வார்கள். அதிலாவது குர் ஆன், ஹதீஸைபேசியிருக்கிறார்களா? மக்களிடம் இஸ்லாத்தை எத்தி வைத்திருக்கிறார்களா என்றால்இல்லவே இல்லை.
தெரு பயானில் கட்டுக்கதைகளையும், நகைச்சுவைகளையும் கேலிப் பேச்சுக்களையும் பேசிமக்களின் ரசனையை தூண்டுவதை தான் குறிக்கோளாக கொண்டிருந்தார்களே தவிர, அந்தவாய்ப்பைக் கூட அவர்கள் மார்க்கம் போதிப்பதற்கு பயன்படுத்தியதில்லை.
அதே போன்று, மார்க்க நூற்கள் என இவர்கள் அச்சடித்து வினியோகம் செய்த எதுவுமே குர்ஆன், ஹதீஸ் தொடர்பானதாக இருந்ததில்லை.
ஷாஹுல் ஹமீது & சன்ஸ் என்கிற அச்சகம் சென்னை திருவல்லிக்கேணியில் பல காலமாய்இஸ்லாமிய நூற்களை அச்சடிக்கும் பணியை செய்து வந்தது.
ஆனால் அவர்கள் தயாரித்த நூற்களெல்லாம் எவையென்று பார்த்தால் மார்க்க விரோதகட்டுக்கதைகள், பொய்கள், புரட்டுகள், ஷியாகக்ளின் நூற்களை காப்பியடித்து எழுதப்பட்டநூற்கள்.. இவை தான் அந்த பதிப்பகத்தில் அச்சிடப்பட்டன.
உதாரணத்திற்கு, திரு நபியின் திருமுடி களைதல் என்கிற ஓர் நூல் அந்த காலத்தில் மிகவும்பிரபலம்.
இது என்ன நூல் என்று பார்க்கப்போனால், வண்டி வண்டியாக புளுகுகளை எழுதி வைத்திருக்கும் ஓர் நூல்.
நபி (சல்) அவரக்ள் பிறக்கும் போதே மலக்குகள் எல்லாம் புடை சூழ்ந்து விட்டார்களாம்,முதலில் முடி களைந்தது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தானாம்..
என்றெல்லாம் பல பொய்களையும் கதைகளையும் கொண்டு புனையப்பட்ட நூல் அந்தகாலத்தில் மார்க்க நூலாக கருதப்பட்டது.
நபி (சல்) அவர்கள் தமது 40 ஆவது வயது வரை தாம் ஒரு இறைத் தூதராக ஆகப் போகிறோம்என்பதை அறியவில்லை என்று இஸ்லாம் கூறுகிற உண்மை அன்றைக்கு மக்களுக்குதெரியவில்லை, இந்த உலமாக்களும் அதை போதிக்கவில்லை, எனவே இத்தகையகட்டுக்கதைகள் நல்ல விலை போயின !
இன்னும், தலபாத்திஹா, மலபைத், ஜைத்துன்கிஸ் போன்ற எண்ணற்ற நூற்கள் அக்காலத்தில்உலமாக்கள் என்று சொல்லப்படுபவர்களால் உருவாக்கப்பட்டன, இவை எதுவுமே மார்க்கத்தைபோதிக்கவில்லை.
அனைத்திலும் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் போலி அற்புதங்களும், அவ்லியாவின் சிறப்புஎன்பதாக இவர்களாக எழுதிக் கொண்ட கதைகளும் தான் இருந்தன.
இப்படி,மார்க்கத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையை செம்மையாக செய்து வந்தவர்கள்தான் உலமாக்கள் என்றும் மவ்லவிமார்கள் என்றும் போற்றப்பட்டனர்.
அவர்களும் அத்தகைய புகழ் மாலைக்கு மயங்கக் கூடியவர்களாக தான் இருந்தார்கள்என்பதால் மார்க்கத்தை சரியான முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்அவர்களிடம் அடியோடு மறைந்து போனது.
இன்னும் சொல்லப்போனால், மார்க்க அறிவு தான் இவர்களுக்கு இல்லை, குறைந்தபட்சம், அன்று சமுதாய மக்கள் செய்து வந்த ஆடல், பாடல், கச்சேரிகள் இவைகளுக்குஇஸ்லாத்தில் இடமில்லை என்கிற அடிப்படை அறிவு கூடவா இவர்களுக்குஇல்லாமல் போனது?
அந்த அறிவு இருந்தது, ஆனால் அதை நாம் கண்டித்தால் நமக்கு வர வேண்டியவருமானம் தடை படும் என்பதால் வாய் மூடி மெளனிகளாக இருந்தனர் உலமாபெருமக்கள்.
இப்படிப்பட்டவர்கள் மார்க்கம் பேசினால் நேர்மையாக பேசுவார்களா? உள்ளதைஉள்ளபடி மக்களுக்கு விளக்குவார்கள் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறதா?
தங்களுக்கு சாதகமானதை சொல்லி, பாதகமானதை மறைத்துக் கொள்ளும் போலிப்பிரச்சாகரர்களாகவே இவர்கள் செயல்படுவார்கள்.
இவர்களுக்கு அல்லாஹ் அளித்த மார்க்க அறிவை வியாபாரமாக்கினர்.
ஒரு ஊரில் மவுத்து செய்தியை அறிவிக்கின்ற சங்கு ஊதப்பட்டால் இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்ல வேண்டிய மவ்லவிமார்கள்,அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்ன காட்சியை நாம் கண்ணால் கண்டிருக்கிறோம்.
அதையே தமது மாணவர்களுக்கும் கற்றுத் தந்த கேவலம் நடந்திருக்கிறதாஇல்லையா?
காரணம் என்ன? சங்கு சத்தம் கேட்டால் அன்றைக்கு மவ்லவிமார்களுக்கு நல்லவேட்டை. அந்த ஃபாத்திஹா இந்த ஃபாத்திஹா என்று ஒரு மாதத்திற்கு இவர்களைவைத்தே பிழைப்பு நடத்தலாம்.
என்கிற எண்ணத்தின் வெளிப்பாடு, மரணச் செய்திக்கு கூட அல்ஹம்துலில்லாஹ்என்று சொன்ன மிக மோசமான நிலையை அடைந்தனர்!
ஆக, தங்களிடம் கற்கும் மாணவர்களிடமானாலும் சரி, பொது மக்களிடம் ஆனாலும் சரி,மார்க்கத்தை போதிக்கும் ஆலிம், அவர்களுக்கு மார்க்க கல்வியினை கற்பிக்கவேண்டுமேயல்லாமல், நான் என்ன சொல்கிறேனோ அதை கேள், என்று கட்டளையிடுபவராகஇருக்கக் கூடாது.
இல்மை போதிக்கும் ஆசிரியரை அவர் இருக்க வேண்டும், பிறரையும் அவர் ஆலிமாகஉருவாக்க வேண்டும், இது தான் ஓர் ஆலிமின் அழகிய பண்பாக இருத்தல் வேண்டும்.
ஆனால், இன்றைய உலமாக்களோ அத்தகைய நிலையில் இருக்கிறார்களா? வரட்டுகெளரவத்தையும், பணமும் புகழும் மட்டுமே பிரதானம் என்கிற சிந்தனையிலும் இருக்கும்இவர்களால் இந்த சமுதாயம் இம்மியளவும் பயன் பெறவில்லை.
உலமாக்கள் வரும் போது உணவு பறிமாறப்படுவதை நாம் கண்டிருப்போம். அனைவருக்கும்ஒரு குவளையில் கறி வைக்கப்பட்டால் உலமாவிற்கு மட்டும் இரண்டு குவளைபறிமாறப்படும்.
தன்னை சோற்றுப்பண்டாரமாக, சாப்பாட்டுப் பிரியராக அனைவர் மத்தியிலும் காட்டுவதைகேலியாக கருத வேண்டிய உலமாவோ, அதையே பெருமையாக கருதி உண்பார்,
இன்னும் சொல்லப்போனால், இரண்டு குவளை வைக்கப்படவில்லையென்பதற்காகசண்டையிடக் கூடிய உலமாப் பெருமக்கள் கூட நம் சமூகத்தில் உண்டு.
அப்படியானால், இந்த அளவிற்கு சுய மரியாதையை இழந்து, ஆலிம் என்கிற சிறப்பினைக் கூடகாலில் போட்டு மிதித்து, வெறுமனே ஜுப்பாவையும் தலைப்பாகையையும் வைத்துவெளித்தோற்றத்தில் போலித்தனம் காட்டும் இத்தகையோரால் இந்த சமுதாயம் அடைந்தநன்மை என்ன?
எதுவுமே இல்லை.
இவர்களுக்கு இன்று மரியாதையாவது இருக்கின்றதா?
மார்க்க அறிவை நிரம்பப் பெற்றிருந்தால் தான் மதிப்பு.
அல்லாமல்,பணத்திற்கும் அற்ப புகழுக்கும் அடிமையாகிப் போகிறவர்களை நாளடைவில் இந்தசமூகம் அடையாளம் காணத்துவங்கி விட்டது.
இதையெல்லாம் நாம் இங்கு சுட்டிக் காட்டுவதன் நோக்கம் கூட உலமாக்களை இழிவுப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் இல்லை.
உலமாக்களின் அவசியத்தையும் அவர்களுக்கு இருக்கும் சிறப்பையும் அல்லாஹ்சிலாகித்திருக்கும் போது, உலமாக்கள் நம் சமூகத்திற்கு அவசியம்.
ஆனால், அவர்கள் மார்க்கத்தை அறிந்த உலமாக்களாக இருக்க வேண்டும், அவர்அறிந்தவற்றை பிறருக்கு கற்றுத் தரக்கூடிய உலமாக்களாக இருக்க வேண்டும்.
ஆனால் இவர்களோ மக்களை மூளை சலவை செய்து, இஸ்லாம் போதிக்கும் காரியம்எதனையும் ஏவாமல், மார்க்கத்தை கேலிக் கூத்தாக்கி வரும் போது, அவர்களை தடுக்கும்கடமை நமக்கு இருக்கின்றது.
அதன் காரணமாக தான் இவற்றை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
நாளை மறுமையில் நரகத்தில் மக்கள் புலம்புவதைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது
நரகத்தில் அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது "உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே நரகத்திலிருந்து சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?'' என்று பலவீனர்கள் பெருமையடித்தோரை நோக்கிக் கேட்பார்கள்.
"நாம் அனைவருமே இதில் தானே இருக்கிறோம். அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பு அளித்து விட்டானே'' என்று பெருமையடித்தோர் கூறுவார்கள்.
40:47, 48
நரகத்தில் இந்த உலமாக்களைப் பார்த்து அவர்களை பின்பற்றியோர் கேட்பதாகவும் அதற்கு அந்த உலமாக்கள் சொல்வதாகவும் அல்லாஹ் இவ்வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.
அதே போன்று,
அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். "உங்களையே நாங்கள் பின்பற்றினோம். எனவே அல்லாஹ்வின் வேதனையிலிருந்து சிறிதளவேனும் எங்களைக் காப்பாற்றுவீர்களா?'' என்று கர்வம் கொண்டிருந்தோரிடம் பலவீனர்கள் கேட்பார்கள். அதற்கவர்கள் "அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டியிருந்தால் உங்களுக்கு வழிகாட்டியிருப்போம். நாம் இங்கு துடிப்பதும், சகிப்பதும் நம்மைப் பொறுத்த வரை சமமானதே. நமக்கு எந்தப் போக்கிடமும் இல்லை'' என்று கூறுவார்கள். (14:21)
அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டவில்லை, எனவே எங்களாலும் உங்களுக்கு வழிகாட்ட இயலவில்லை என்பதே இது போன்ற போலி உலமாக்களின் மறுமை புலம்பலாக இருக்கும் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
இன்னும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.
பின்பற்றப்பட்டோர், வேதனையைக் காணும்போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும். 2: 166, 167
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.
"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். (33: 66,67)
ஆக, இது போன்ற போலி உலமாக்களை நம்பி ஆஹிரத்தை தொலைத்தவர்களும் கூட, நாங்கள் குர் ஆனுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே, ரசூலுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே, எங்களை இந்த பெரியார்கள் வழிகெடுத்து விட்டார்களே என்று புலம்புவார்கள் என்பதாக, அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான் என்றால், இந்த எச்சரிக்கையை நம் அனைவரும் உள்ளத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவர்கள் எந்த அளவிற்கு மார்க்கத்தை அறியாமலும், இஸ்லாத்தையேஇழிவுப்படுத்தியும் வருகிறார்கள் என்பதற்கு ஷாஃபி பள்ளிகளில் நடக்கும்ஜும்மாக்களையே சான்றாக கருதலாம்.
ஜும்மாவில் பயான் செய்ய வருகின்ற இமாம், தமக்கென ஒரு பிரத்தியேகதோற்றத்தை வைத்திருப்பார்.
ஜுப்பா, அதற்கு மேல் ஒரு கோட், அதற்கு மேல் ஒரு ஜிகினா சட்டை, தலைப்பாகை எனதனி வேஷம் அவருக்கு இருக்கும்.
மிம்பர் படியில் ஏறும் போது கூட, சாதாரணமாக எல்லோரும் ஏறுவது போன்று ஏறமாட்டார். மாறாக, தம்மை எல்லாரும் கவனிக்கும் பொருட்டு ஒவ்வொரு படியாகநின்று நின்று ஏறுவார்.
பிறகு, கைத்தடியை கொடுப்பதற்கென்று மோதினார் வருவார்.
அவரோ கைத்தடியை இமாமிடம் வழங்கும் போதே அரபியில் ஓர் வாசகத்தை சொல்லிவிட்டு தான் கைத்தடியை கொடுப்பார்.
அதாவது, ஜும்மா என்பது ஏழைகளின் ஹஜ் என்று புஹாரி, முஸ்லிம் நூற்களில்இருக்கிறது என்று சொல்லி கொடுப்பார்.
இன்றைக்கும் இந்த கூத்தினை ஷாஃபி பள்ளிகளில் நாம் காணலாம்.
இந்த இமாம் எனப்படுபவர் உண்மையில் மார்க்க அறிஞர் என்றால், இப்படியொருவாசகம் புஹாரி, முஸ்லிம் நூற்களில் இருக்கிறதா என்று சரி பார்த்தாரா?
இவரது முன்னிலையிலேயே ஒருவர் புஹாரி, முஸ்லிம் நூற்களில் இல்லாத ஒன்றைஇருப்பதாக பச்சைப் பொய்யை சொல்கிறாரே, அதை கண்டிக்கும் தகுதியை இந்தஇமாம் கொண்டிருந்தாரா? இல்லை !
அந்த ஞானம் கூட இவருக்கு இருக்கவில்லை, அல்லது, இதை கண்டித்தால் கூடசமுதாயத்தில் குழப்பம் வந்து விடும் என்று அஞ்சுகிற அளவிற்கு அற்பத்திலும்அற்பமான தீமையை கூட தடுக்க இயலாத கையாலாகா நிலையில் தான் இன்றையபெரும்பான்மையான ஆலிம்கள் இருக்கிறார்கள் என்றால் இவர்களா அல்லாஹ்சிலாகித்துக் கூறுகின்ற உலமாக்கள்?
இவர்களா அல்லாஹ் சிறப்புக்குரியவர்கள் என்று பாராட்டும் மார்க்க அறிஞர்கள்?
ஒடுக்கத்து புதன் பற்றி குர் ஆனிலேயே அல்லாஹ் சொல்கிறான் என்று அல்லாஹ்மீதே பச்சைப் பொய்யை கூறுகிறார்களா இல்லையா?
மவ்லூத் எனக் கூறிக் கொண்டு இவர்கள் பாடும் வரிகளில் ஒன்று இந்த ஒடுக்கத்துப்புதன் பற்றியது.
" நிகழ்த்தும் ஒடுக்கத்து புதன் வாரத்தை நெடியோன் நஹ்ஸ் என்றால் குர் ஆனிலே"என்று படிக்கிறார்கள்.
ஒடுக்கத்து புதனை பீடை என்று நெடியோனாகிய அல்லாஹ் குர் ஆனிலேயேகூறியிருகிறான் என்று சொல்கிறார்களே, இந்த உலமாக்கள் உண்மையில்இறையச்சம் கொண்டவர்களாக இருந்திருந்தால் இப்படியொரு வாசகம் குர்ஆனிலேயே இல்லை என்கிற உண்மையை விளங்கியிருக்க மாட்டார்களா?
அதை மக்களுக்குப் பிரச்சாரம் செய்து அதிலிருந்து இவர்கள் ஒதுங்கியிருக்கமாட்டார்களா?
சத்தியத்தைப் போட்டு உடையுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே,
சாதாரண தீமையை கூட தடுக்க இயலாதவர்கள் எப்படி மக்கள் மத்தியில் சத்தியத்தைபோட்டு உடைப்பார்கள்?
இவர்களிடம் எபப்டி நேர்மையை நம்மால் எதிர்பார்க்க முடியும்?
என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இது போன்ற உலமாக்களின் பின்னால் செல்வது நரகத்திற்கு தான் நம்மை ஈட்டுச்செல்லும் என்பதை இந்த சமூகம் விளங்கி, குர் ஆன் ஹதீஸ் என்கிற இருஅடிப்படைகளை மட்டுமே மார்க்கமாக கொள்ளல் வேண்டும்.
பெரும்பான்மை மார்க்க ஆதாரமாகுமா?
சமுதாயத்தில் சிலர் இருக்கிறார்கள். மார்க்க மசாயில்களில் குழப்பம் ஏற்படுகின்ற போதுபெரும்பான்மை மக்கள் என்ன கருத்தை சொல்கிறார்கள் என்று பார்த்து அதன் பக்கம் சாய்ந்துகொள்வது என்கிற நிலையை எடுக்கின்றனர்.
பல ஊர்களில், தர்காவுக்கு சந்தனக்கூடு, கச்சேரி எடுப்பதாக இருந்தால் மக்களை கூட்டிவைத்துக் கொண்டு அவர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கும் அவலத்தை இன்றைக்கும்காணலாம்.
பெரும்பான்மை எப்படி அதாரமாக இருக்க முடியும்? சினிமா பார்க்கலாமா? என்று ஓட்டெடுப்புநடத்தினால் பெரும்பான்மையினர் பார்க்கலாம் என்று தான் கூறுவார்கள், காரணம்,பெரும்பான்மையினர் அதை பார்க்கக் கூடியவர்களாக தான் இருக்கிறார்கள்.
தங்களுக்கு எது சாதகமோ அதற்கு தான் மக்கள் ஆதரவளிப்பார்கள் எனும் போதுபெரும்பான்மையினரின் முடிவை எப்படி மார்க்க தீர்ப்பாக்க முடியும்?
உலகக் காரியத்தில் செய்தால் பிரச்சனையில்லை.
யாரை கட்சிக்கு தலைவராக்குவது, என்றைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவது, இன்று என்னஉணவை பறிமாறுவது? என்பதிலெல்லாம் ஓட்டெடுப்பு நடத்தினால் தவறில்லை.
அதையே மார்க்கத்தோடு தொடர்புபடுத்தலாமா?
மார்க்கத்திற்கு சொந்தக்காரன் அல்லாஹ் எனும் போது பெரும்பான்மை மக்கள் சொல்வதுஎப்படி மார்க்கமாகும்?
அல்லாஹ் இது பற்றி குர்ஆனில் சொல்வதைப் பாருங்கள்.
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை. (6:116)
அதிகமானோரை பின்பற்றுவது வழிகேடு என்று அல்லாஹ் இவ்வசனத்தில் தெளிவுப்படுத்துகிறான்.
இதே போன்று, குர் ஆன் நெடுகிலும், பெரும்பான்மை பற்றி அல்லாஹ் சொல்லும்இடங்களிலெல்லாம் பெரும்பான்மை மக்கள் அறியாதவர்கள், பெரும்பான்மை மக்கள்சிந்தனையற்றவர்கள், பெரும்பான்மை மக்கள் வழிகேடர்கள் என்று தான் சொல்லிக்காட்டுகின்றான்.
முன்னோர்களைப் பின்பற்றலாமா?
உலமாக்களைப் பின்பற்றுவதை மார்க்க கடமையாக கருதுவதைப் போன்று முன்னோர்களைப்பின்பற்றுவதையும் மார்க்க கடமையாகவே கருதக் கூடிய மக்கள் இருக்கின்றனர்.
நபி (சல்) அவர்கள் காலந்தொட்டு இன்று வரை இப்படியான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவிவருகின்றது.
தொன்று தொட்டு ஒரு வழக்கம் இருந்து வந்தால் அதை மாற்றுவது இவர்களுக்கு சிரமம்.
அதுவே புதிதாக ஒரு வழக்கத்தை அறிமுகம் செய்தால் அதை எளிதாக எதிர்த்து விடுகின்றனர்.
இது பற்றியும் அல்லாஹ் பல்வேறு இடங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.
"நாங்கள் கிறித்தவர்கள்'' என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். எனவே கியாமத் நாள்1 வரை அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தினோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்குப் பின்னர் அறிவிப்பான். (5:14)
காஃபாவில் அன்றைய மக்கத்து காஃபிர்கள் நிர்வாணமாக தவாஃப் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதை நபி (சல்) அவர்கள் கண்டித்த பிறகும் கூட, அவர்கள் முன்னோர்களின் வழியை மாற்ற முடியாது என்று மறுத்து விட்டதை குர் ஆனில் இருந்து நாம் அறிகிறோம்.
அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும்போது "எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக! (7:28)
"எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும், இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீரா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்புவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறினர். (10:78)
"அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (31:21)
மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட்டு விட்டு முன்னோர்கள் வழி செல்வோம் என்று கூறியோர் எவ்வாறு வழிகெட்டுப் போனார்கள் என்பதை அல்லாஹ் விளக்குகிறான்.
ஹதீஸ்களை புரிந்து கொள்வது எப்படி?
வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதை விளக்கமாக அறிந்திருக்கும் நாம், அந்த வஹீயின் ஒருபகுதியான ஹதீஸ்களைப் பொறுத்தவரை, சிலவற்றை வஹீ என்று ஏற்கிறோம், சிலவற்றைவஹீ இல்லையென கூறி நிராகரிக்கிறோம்.
நாமும் இதை செய்கிறோம், எல்லா கொள்கையுடையவர்களும், எல்லா இயக்கத்தவரும் இதைசெய்கின்றனர்.
ஏதேனும் காரணங்களை மையப்படுத்தி சில ஹதீஸ்களை வஹீ இல்லை எனக் கூறிபுறந்தள்ளிக் கொண்டிருக்கிறோம்.
இவை ஆதாரப்பூர்வமானவை, இவை பலகீனமானவை என்றெல்லாம் ஹதீஸ்கள்விஷயத்தில் பிரித்தறியும் நாம் குர் ஆனில் அவ்வாறு பிரிப்பது கிடையாது.
குர் ஆனைப் பொறுத்தவரை, சஹீஹான வசனங்கள், லயீஃபான வசனங்கள் என்றுவேறுபடுத்தவே முடியாது.
குர் ஆன் வசனங்கள் அனைத்துமே சஹீஹ் தான்.
இந்த வேறுபாட்டினை முதலில் அறிந்து கொள்வதே இந்த தலைப்பை சரியாக புரிந்து கொள்ளஉதவுகின்ற அடிப்படையாக அமையும்.
நபி (சல்) அவர்கள் இன்று நம்முடன் வாழ்ந்திருந்தாலோ அல்லது நபி (சல்) அவர்கள் வாழ்ந்தகாலத்தில் நாம் இருந்திருந்தாலோ மேற்கண்ட குழப்பங்கள் ஹதீஸ்கள் விஷயத்தில்எழுந்திருக்காது.
காரணம், நபி (சல்) அவர்கள் என்ன சொன்னார்களோ அதை நேரடியாக நாம் காதுகளில்கேட்டிருப்போம்.
நேரடியாக நாம் ஒன்றை நபி (சல்) அவர்களிடம் கேட்டு விட்டால், குர் ஆனைப் போல் அதையும்கருதி பின்பற்றியாக வேண்டும், ஏனெனில் அது வஹீ.
ஆனால், நபி (சல்) அவர்களின் காலத்திற்கு பிறகு, நபி (சல்) அவர்கள் சொன்னதாக நாம் ஒருவிஷயத்தைப் பற்றி அறிகிறோம் என்றால் நபியிடம் கேட்டதாக ஒருவர் சொல்ல, அவரிடம்கேட்டதாக அடுத்த தலைமுறையில் ஒருவர் சொல்ல, இவரிடம் கேட்டதாக இவருக்குப் பிறகுவந்த தலைமுறையில் ஒருவர் சொல்ல, இறுதியில் ஒருவர் அதை எழுதி வைத்துக்கொள்கிறார்.
அப்படியானால், உண்மையில் இந்த செய்தி நபி (சல்) அவர்கள் சொன்னது தானா? அல்லதுஅவர்களது பெயரைப் பயன்படுத்தி இடைச்செருகல் ஏதும் நடந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்யும் கடமை நமக்கு வந்து விடுகின்றது.
இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்காக கங்கணம் கட்டி செயல்பட்ட எதிரிகள் எல்லாகாலத்திலும் இருந்தனர் எனும் போது, இஸ்லாதிற்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் நபி (சல்)அவர்கள் சொல்லாததையெல்லாம் அவர்கள் சொன்னதாக பொய்களை கூறும் நிலைஇருந்தது.
அவ்வாறு சொல்லியும் இருக்கிறார்கள்.
அந்த விபரத்தை நாம் பின்னர் காண இருக்கிறோம்.
ஆக, பொய்களும் சரியானவைகளும் கலந்து வருகின்ற போது, எவை நபி சொன்னது, எவை நபிசொன்னது இல்லை என்று வேறுபடுத்தி அறிய வேண்டிய கட்டாயத்தின் பால் நாம்தள்ளப்படுகிறோம்.
நபி சொன்னதை மறுப்பதற்கில்லை, மாறாக நபி சொன்னார்களா இல்லையா என்பதைஅறிவதற்கு தான் இதை செய்கிறோம்.
காரணம், ஹதீஸ்கள் அனைத்தும் ஒருவர் அல்லது இருவர் வழியாக தான்அறிவிக்கப்படுகின்றன.
குர் ஆனைப் பொறுத்தவரை, இத்தகைய குழப்பம் இல்லை. காரணம், அதை அறிவித்தது ஒட்டுமொத்த தலைமுறை.
நபி (சல்)அவர்கள் காலத்தில் அவர்கள் எதை குர் ஆன் என்று சொன்னார்களோ அதை ஒட்டுமொத்த சஹாபாக்களும் அங்கீகரித்து அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றார்கள்.
சஹாபாக்களுக்குப் பிறகு வந்த தபியீன்கள் அனைவருமே ஒட்டு மொத்தமாக அதை குர் ஆன்என அங்கீகரித்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றனர்.
இப்படியாக தலைமுறை தலைமுறையாக குர் ஆன் என்பது நம் கைகளில் கிடைத்திருக்கிறதுஎனும் போது, இதில் கடுகளவு சந்தேகமும் இல்லை.
நபி (சல்) அவர்களிடம் நாமே நேரடியாக கேட்டால் எந்த அளவிற்கு நம்பகமான செய்தியாகஇருக்குமோ அந்த அளவிற்கு குர் ஆனில் எந்த சந்தேகமும் இல்லை.
அதே சமயம், ஹதீஸ்களைப் பொறுத்தவரை, நபி (சல்) அவர்கள் ஒன்றை சொல்லும் போதோஅல்லது செய்து காட்டும் போதோ அவ்விடத்தில் 4, 5 சஹாபாக்கள் மட்டும் இருந்தால் அவர்கள்மட்டுமே அந்த ஹதீஸை அறிவார்கள்.
அறிந்த அந்த சஹாபாக்களாவது உடனடியாக எல்லாரிடமும் சென்று, "இன்றைக்கு நபி (சல்)அவர்கள் மூலம் இந்த ஹதீஸை நான் கேட்டேன்" என்று சொல்லிக் கொண்டிருப்பாரா?என்றால் அப்படியும் இல்லை.
அவர் கேட்பார், அதோடு அவர் வியாபாரம், மற்ற பணிகள் என சென்று விடுவார்.
பிற்காலத்தில் அவர் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனைகளை சந்திக்கின்றபோது, இதற்கு நபி (சல்) அவர்கள் இப்படியொரு தீர்வை சொல்லியிருக்கிறார்கள், நான்கேட்டிருக்கிறேன்", என்று அந்த சமயத்தில் சொல்வார்.
அந்த நேரத்தில் தான் இப்படியொரு ஹதீஸ் இருப்பதே பலருக்கும் தெரியவரும்.
ஆக, நபி (சல்) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை, அதைஅறிவித்த அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால்தலைமுறை கடந்து அறிவிக்கப்பட்டு நூற்களில் பதிவு செய்யப்படும் போது இது உண்மையில்நபி (சல்) அவர்கள் சொன்னது தானா அல்லது பொய்யர்கள் எவராவது இடையில் நுழைந்துவிட்டார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக