திங்கள், 6 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 15)



இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 15


இமாம்களுக்கு தொடர்பில்லாத மத்ஹப்  (தொடர்ச்சி) :

இவர்கள் மத்ஹப் நூற்கள் என்று எழுதி வைத்திருப்பவைகளுக்கும் மத்ஹப் படி தான் நடக்கின்றோம் என்பதாக கூறும் இன்றைய ஆலிம்களுக்கும் இடையே எந்த சம்மந்தமும் இல்லை என்பதற்கு ஹனஃபி மத்ஹப் நுற்களை நாம் உதாரணமாக கண்டது போல் ஷாஃபி மத்ஹப் நூற்களையும் சான்றாக காணலாம்.

ஷாஃபி இமாம் சொன்னதாக இவர்கள் எழுதி வைத்திருப்பதாவது :

யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அவரது உறவினர்களோ அண்டை வீட்டுக்காரர்களோ தான் அந்த வீட்டிலிருப்பவர்களுக்கு உணவு சமைத்து உண்ணக் கொடுக்க வேண்டும். இது தான் நபிவழியும் கூட.
ஜாஃபர் (ரலி) அவர்கள் இறந்த போது, அவரது குடும்பத்தாருக்கு உணவு வழங்குமாறு நபி (சல்) அவர்கள் மற்ற சஹாபாக்களுக்கு கட்டளையிட்டது இதற்கு போதுமான ஆதாரமாகும்.

இவ்வாறு ஷாஃபி இமாம் கூறியதாக எழுதி வைத்திருக்கும் இன்றைய ஆலிம்கள், இது பற்றி என்ன நிலைபாட்டை கொண்டிருக்கிறார்கள்?

இறந்த வீட்டில் மூன்றாம் ஃபாத்திஹாவும் ஏழாம் ஃபாத்திஹாவும் ஓதி காசு பார்க்க்ன்றனர்.
அங்கே சென்று வயிறு முட்ட சாப்பிடுகின்றனர்.

இவர்களா மத்ஹபை பேணி நடப்பவர்கள்? இவர்களுக்கும் மத்ஹபு சட்டங்களுக்கும் எந்த சம்மந்தமாவது இருக்கின்றதா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



மத்ஹப் நூற்களை எழுதியவன் ஓர் மன நோயாளி :

மத்ஹப் இமாம்களுக்கும் இவர்கள் எழுதி வைத்திருக்கும் நூற்களுக்கும் தொடர்பில்லை என்பதையும், இவர்களது நூற்களுக்கும் இன்று இந்த மத்ஹபை தூக்கிப் பிடிப்பவர்களின் நடவடிக்கைகளுக்கும் கூட எந்த சம்மந்தமும் இல்லை என்பதையும் விளக்கமாக அறீந்தோம்.

இது போக, மத்ஹப் நூற்களில் மார்க்க சட்டங்களாக இவர்கள் எழுதி வைத்திருப்பவையாவது குர் ஆனுக்கு ஒத்ததா? ஹதீஸுக்கு உகந்ததா?

ஒவ்வொன்றையும் படித்தால் கீழ்பாக்கம் மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டிய ஒருவன் தான் இந்த நூற்களை எல்லாம் எழுதினான் என்று நம்மால் சந்தேகத்திற்கிடமின்றி கூற முடியும்.

இவர்களது நூலில் மலிந்து கிடக்கும் ஆபாசங்களையும் வக்கிரச் சட்டங்களையும், வயது வந்தவர்கள் மட்டுமே படிக்கத்தக்கதான பல்வேறு செய்திகளையும் இங்கே நாம் குறிப்பிடவில்லை. அதற்கான சபையும் இதுவல்ல.
இவர்கள் நூற்களில் காணப்படும் மடமைகள், உளரல்கள், கிறுக்குத்தனங்கள் போன்றவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.



பைத்தியமாக்கும் பல் குச்சி :


பல் துலக்கும் குச்சியைக் கொண்டு அகல வாட்டத்தில் பல் துலக்க வேண்டும். நீள வாட்டத்திலும், படுக்கை வாட்டத்திலும் பல் துலக்கக் கூடாது. ஏனெனில் இது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடும்.

அதைக் முழுக் கையால் பற்றிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் அது மூல நோயை உருவாக்கி விடும்.

அதை வாயில் வைத்து சப்பக் கூடாது. ஏனெனில் அது பார்வையைக் குருடாக்கி விடும்.

அதைக் கழுவி விட வேண்டும். கழுவவில்லை என்றால் அதை வைத்து ஷைத்தான் பல் துலக்குவான்.

அதை ஒரு ஜான் அளவில் தான் வைத்திருக்க வேண்டும். அதை விட நீளமாக வைத்திருந்தால் ஷைத்தான் அதில் சவாரி செய்வான்.

அதைக் கீழே கிடத்தி விடாது நட்டியே வைக்க வேண்டும். இல்லையேல் பைத்தியம் பிடித்து விடும்.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 114, 115

இந்த அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கு என்ன ஆதாரம்?

வாயில் வந்ததையெல்லாம் எழுதி வைத்து விட்டு, மார்க்கச் சட்டங்கள் என்று கூறும் இந்த மத்ஹபு நூல்களை ஆதரிப்பவர்கள் உண்மையில் சுய நினைவோடு தான் ஆதரிக்கிறார்களா? என்று எண்ணத் தோன்றுகிறது.
இதை எழுதியவன் சராசரி மனிதனா அல்லது மறை கழன்றவனா?

இன்னொரு சட்டத்தைப் பாருங்கள்..

தொழுகையை முடிக்கும் போது செய்ய வேண்டியவை என ஹனஃபி சட்டம் சொல்லும் அற்புத (?) சட்டங்களைப் பார்ப்போம்


தொழுகையில் விளையாட்டு :

தொழுகை முடிந்ததும் (ஸலாம் கொடுக்காமல்) தொழுகையில் செய்யக் கூடாத செயலைச் செய்தோ, அல்லது பேசக் கூடாத பேச்சைப் பேசியோ, அல்லது தனக்கு விருப்பமான செயலை ஏதாவது ஒரு விதத்தில் செய்தோ தொழுகையை விட்டு வெளியேறலாம்.
உதாரணமாக, அந்தத் தொழுகை முடிந்த மாத்திரத்தில் ஒரு ஃபர்ளான தொழுகையையோ, அல்லது ஒரு நஃபிலான தொழுகையையோ தொழத் துவங்குவது, அல்லது அஹ்ஹஹ்ஹா என்று வெடிச் சிரிப்பு சிரிப்பது, அல்லது வேண்டுமென்றே காற்று விடுவது, அல்லது பேசுவது, அல்லது அப்படியே எழுந்து சென்று விடுவது, அல்லது யாருக்காவது ஸலாம் சொல்வது இது போன்ற செயல்களைச் செய்து தொழுகையை விட்டு வெளியேறிக் கொள்ளலாம்.

நூல்: துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 448

தொழுகையை எந்த அளவுக்குக் கேலிக் கூத்தாக ஆக்கி விட்டார்கள் என்று பாருங்கள்.

தொழுகையின் முடிவு ஸலாம் கொடுத்தல் தான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும் போது, ஹாஹாஹா என்று சிரித்தும், காற்று பிரித்தும் தொழுகையை முடிக்கலாம் ஹனபி மத்ஹபு கூறுகின்றது. தொழுகையையே விளையாட்டாக இந்த மத்ஹபுகள் ஆக்கி விட்டன.
காற்று பிரிவது கூட அறியாமல் பிரிவதை சொல்லவில்லை. "வேண்டுமென்றே" காற்று பிரித்தும் கூட தொழுகையை முடிக்கலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்களெல்லாம் அறிஞர்களா?
இந்த நூற்களெல்லாம் மார்க்க நூலா??

இதை மார்க்க சட்டமாக பின்பற்றுவது பெருமையா அவமானமா?


இவர்கள் தொழுகையைக் கேலிக் கூத்தாகக் கருதுகின்றார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ள மற்றொரு மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.

நாய் அல்லது பூனையை, இச் கொட்டி அன்புடன் அழைத்தாலோ, அல்லது ஒரு கழுதையை ஓட்டினாலோ தொழுகை வீணாகி விடாது. காரணம், அது எழுத்து வடிவிலான வார்த்தை அல்ல. அத்தஹிய்யாத் இருப்பு அளவிற்கு அவர் உட்கார்வதற்கு முன்னால் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் இரண்டும் சமம் தான். இக்காரியத்தை மறந்தோ, அல்லது உறங்கிக் கொண்டோ, அல்லது அறிந்தோ, அல்லது தவறியோ, அல்லது நிர்ப்பந்தமாகவோ செய்தாலும் தொழுகை வீணாகி விடாது.

நூல்: துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 614

தொழுகையில் நாய், பூனையை அழைக்கலாம் என்று மத்ஹபு கூறுகின்றது.

தொழுகையில் பேசுவதற்கு அனுமதியில்லை என்று ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் மத்ஹபுச் சட்டமோ தொழுகையில் நாயை அழைப்பதும், கழுதையை விரட்டுவதும் கூடும் என்று கூறுகின்றது.


கிராமத்தில் ஜும்ஆ இல்லை :

இதே மத்ஹபில் சொல்லப்படும் மற்றொரு சட்டம்.

ஜும்ஆ நிறைவேறுவதற்கு ஏழு நிபந்தனைகள் வேண்டும்.

அதில் ஒன்று ஜும்ஆ நடக்கும் ஊர் பட்டணமாக இருக்க வேண்டும். தொழுகை கடமையாக்கப்பட்ட அவ்வூர்வாசிகளை, அந்த ஊரிலுள்ள பெரிய பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதே அதற்கான அளவுகோலாகும்.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 2, பக்கம் 137

கிராமத்தில் ஜும்ஆ கிடையாது என்பதற்கும், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் இருக்க வேண்டும் என்பதற்கும் என்ன ஆதாரம்? அல்லாஹ்வோ, அவனது தூதரோ இவ்வாறு கூறியுள்ளார்களா?

அதோடு, நீதிபதியோ அரசாங்கத்தின் பிரதி நிதி ஒருவரோ இருக்கும் நகரில் மட்டும் தான் ஜும்மா நடத்தப்படும் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.

அப்படிப் பார்க்கப்போனால், இன்று இவர்கள் நடத்தும் அனேக ஜும்மாக்கள் செல்லாது. காரண,, எந்த ஊரிலும் அமீரோ, அரசாங்க தலைவரோ இல்லை !



இமாமின் மனைவி அழகாக இருக்க வேண்டும் :

அடுத்து, மற்றுமொரு உச்சகட்ட உளரலை பாருங்கள்.

பள்ளிவாசலில் தொழுகைக்கான் இமாமை எப்படி தேர்வு செய்வது என்று மத்ஹப் நூல் நமக்கு சொல்லித் தரும் இலட்சணத்தைப் பாருங்கள்.

முகம் அழகானவராக இருக்க வேண்டும். பிறகு அதிகமான குடும்ப பாரம்பரியம் மிக்கவராக இருக்க வேண்டும். அடுத்து சிறந்த குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். பிறகு சிறந்த குரல் வளம் மிக்கவராக இருக்க வேண்டும். பிறகு அழகிய மனைவி உள்ளவராக இருக்க வேண்டும். பிறகு அதிக பொருளாதாரம் உள்ளவராக இருக்க வேண்டும். அடுத்து அந்தஸ்து உள்ளவராக இருக்க வேண்டும். அடுத்து ஆடை தூய்மையானவராக இருக்க வேண்டும். பிறகு தலை பெரிதானவராக இருக்க வேண்டும். உறுப்பு சிறிதானவராக இருக்க வேண்டும்.

நூல்: துர்ருல் முக்தார்,  பாகம் 1, பக்கம் 558

தொழுகையில் இமாமத் செய்வதற்கும்  அழகிய மனைவி உடையவராக இருக்க வேண்டும் என்பதற்கும் என்ன தொடர்பு?  இவ்வாறு துர்ருல் முக்தார் ஆசிரியர் கூறுவதற்கு உரிய ஆதாரம் என்ன?

இது எப்படி இமாமின் தகுதியில் வருகிறது?

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஹனபி மத்ஹபு பள்ளிவாசலில் ஒருவரை இமாமாக நியமிக்கும் போது இமாமின் மனைவியின் அழகு பற்றி கருத்துக் கேட்பதில்லையே!  இமாமின் மனைவி அழகாக இருப்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அந்த முக்கியமான கட்டளையை எல்லா ஜமாஅத்துகளும் மீறுகிறார்களே! இதை மத்ஹபு ஆலிம்கள் கடுமையாகக் கண்டிக்க வேண்டாமா? அத்தகையோர் பள்ளிவாசலை நிர்வகிக்கத் தகுதியற்றவர்கள் என்று பத்வா கொடுக்க வேண்டாமா?

பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் அறியாமையின் காரணமாக இந்தச் சட்டத்தைப் பேணுவதில்லை. இமாமாகச் சேரப் போகும் மவ்லவியாவது இதை வற்புறுத்த வேண்டாமா?

என் மனைவியின் அழகு பற்றி அறியாமல் என்னை நீங்கள் இமாமாகச் சேர்க்கக் கூடாது! எனது மனைவி அழகியாக இருந்தால் மட்டுமே என்னைப் பணியில் சேருங்கள் என்று வலியுறுத்திக் கூற வேண்டமா?

அடுத்ததாக இமாமத் செய்வதற்கும் தலை பெரிதாக இருப்பதற்கும் என்ன தொடர்பு?


தலைப்பிறை விஷயத்தில் இன்னொரு உளரல் :

தலைப்பிறையை எவராவது கண்டால் அதை யாரிடமும் சைகை மூலம் காட்டக் கூடாது, அவ்வாறு செய்வது ஜாஹிலியா (அறியாமை கால) செயல் என்றும் இதே ஹனஃபி நூலான துர்ருல் முக்தாரில் உளரி வைத்திருக்கிறார்கள்.

இப்படி உளருவது ஜாஹிலியாத்தனமா அல்லது பிறையை பிறருக்கு சுட்டிக் காட்டுவது ஜாஹிலியாத்தனமா? என்று நாம் இந்த மூடர்களிடம் கேட்க விரும்புகிறோம்.


கணவன் காணாமல் போய் விட்டால் :

அடுத்து, மற்றுமொரு கிறுக்குத்தனத்தைக் காண்போம்.

ஒரு பெண்ணின் கணவர் திடீரென காணாமல் போய் விட்டால் அவளுக்குரிய சட்டம் என்ன என்பதாக ஹமஃபி மத்ஹபின் துர்ருல் முக்தார் பாகம் 4, பக்கம் 296 ஆல் எழுதி வைத்திருக்கிறார்கள்,

அதாவது, அந்த பெண், கணவன் காணாமல் போனதிலிருந்து 120 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும், அதன் பிறகு மறு மணம் செய்யலாம்.

ஆஹா, என்னே ஒரு சட்டம், இப்படியொரு சட்டம் இஸ்லாத்தில் இருக்கிறது என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்களே, இதை ஊரறிய இவர்கள் விளம்பரம் செய்யட்டும் பார்க்கலாம், ஊரே காறி உமிழும்.

20 வயதில் ஒரு பெண்ணின் கணவர் காணாமல் போய் விட்டால் அவள் உடனடியாக மறு மணம் செய்யக் கூடாதாம். அன்றிலிருந்து 120 ஆண்டுகள், அதாவது அவளது 140 ஆவது வயது வரை அவள் காத்திருந்து விட்டு அதன் பிறகு இந்த கணவர் இறந்து விட்டார் என்பதாக முடிவு செய்து விட்டு இன்னொரு திருமணம் செய்ய வேண்டுமாம்.

இப்படியெல்லாம் சட்டம் எழுதும் ஒருவன் அரை கிறுக்கனாக இருப்பானா அல்லது மார்க்க அறிஞனான இருப்பானா?

இதில் இன்னொரு வேடிக்கை, இதே துர்ருல் முக்தாரில், இந்த பிரச்சனை தொடர்பாக இன்னொரு அறிஞர் (??) சொல்லும் போது, 120 ஆண்டுகள் என்பது மிகவும் அதிகமாக தெரிகிறது, என்று சொல்லி விட்டு, ஒரு 90 ஆண்டுகள் என்றால் பரவாயில்லை என்று சட்டம் சொல்கிறார்.

இவர்கள் எல்லாம் இஸ்லாத்தை மதிப்பவர்களா அல்லது காலால் போட்டு மிதிப்பவர்களா>

இத்தகைய குப்பைகள் தான் மத்ஹப் நூற்களில் இருக்கிறது என்பது ஒரு புறமிருக்க, இதை தான் இவர்கள் மதரசாக்களில் ஏழு ஆண்டுகல் கற்று ஆலிம்கள் என்று வெளியே வருகிறார்கள். அப்படியானால் அப்படியப்பட்ட ஆலிம்களின் தரம், அவர்களின் சிந்திக்கும் திறன் எல்லாம் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம்.



குர்ஆனை இழிவு படுத்தும் மத்ஹபுகள் :

குர் ஆனின் தாய் என நபி (சல்) அவர்களால் புகழப்பட்ட சூரா சூரத்துல் ஃபாத்திஹா.
இந்த சூரா இல்லாமல் தொழுகையே இல்லை என்கிற அளவிற்கு அல்லாஹ்வால் பல வகைகளில் சிலாகிக்கபப்ட்ட சூரா இது.

இதை இழிவுப்படுத்தும் மத்ஹப் சட்டத்தைப் பாருங்கள்.

சின்னி மூக்கு உடைந்து விட்டால் தன்னுடைய நெற்றியிலும், மூக்கிலும் இரத்தத்தைக் கொண்டு ஃபாத்திஹா அத்தியாயத்தை எழுதிக் குணமாகும் எனில் அவ்வாறு குணமாவதற்காக எழுதுவது கூடும். மூத்திரத்தில் எழுதினால் குணம் கிடைக்கும் என்றால் ஃபாத்திஹா அத்தியாயத்தை மூத்திரத்தில் எழுதுவதும் தப்பில்லை.

நூல்: துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 210

திருக்குர்ஆனின் தாய் என்று போற்றப்படும் அல்ஹம்து அத்தியாயத்தை எந்த அளவு மதிக்கிறார்கள் பாருங்கள்!

அல்லாஹ்வின் வேதத்தை மூத்திரத்தில் போடச் சொல்லும் இந்தக் குப்பைகளைத் தூக்கிப் பிடிப்பது அவசியம் தானா? மத்ஹபு ஆதரவாளர்களே சிந்தியுங்கள்.


அரபு மொழிக்கு என்ன சிறப்பு?:

இஸ்லாத்தின் அடிப்படை பிரச்சாரமாக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்கத்து குரேஷிகளிடத்தில் பிரச்சாரம் செய்ததே அனைவரும் சமம் என்கிற சகோதரத்துவம் தான்.
இன்னும் சொல்லப்போனால், எத்தனையோ மார்க்க மசாயில்களை திரித்தும் மறித்தும் மாற்றம் செய்து விட்ட இன்றைய இஸ்லாமியர்களிடத்தில் கூட இந்த சகோதரத்துவம் என்பது இன்றைக்கும் மிளிர்வதை நாம் காணலாம்.

இனத்தால், மொழியால், குலத்தால், நிறத்தால், தேசத்தால் எந்த சிறப்பும் யாருக்கும் கிடையாது, ஒருவரது சிறப்பே அவர் செய்கிற அமல்களைக் கொண்டு தான், என்பது  இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு.

நபிகல் நாயகம் (சல்) கூட, அரபு மொழி பேசக்கூடியவருக்கு, அரபு அல்லாத மொழி பேஎசக்கூடியவர்களை விட எந்த கூடுதல் சிறப்பும் இல்லை என தெள்ளத்தெளிவாக கூறியியிருக்கிறார்கள்.

ஆனால், இது பற்றி மத்ஹப் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?

துர்ருல் முக்தார் பாகம் 3, பக்கம் 92 இல், எழுதி வைத்திருக்கிறார்கள்,
அரபு மொழி பேசக்கூடியவன் அரபு மொழி அல்லாததை பேசக்கூடிய (அஜமி) ஒருவரை திருமணம் செய்வது தகாது, பிறப்பால் அரபி தான் மற்றவர்களை விட சிறந்தவர்.

எந்த அளவிற்கு இஸ்லாத்தின் அடிப்படையையே குழி தோண்டி புதைக்கின்ற சட்டமிது என்று சிந்தித்துப் பாருங்கள்.



திருட்டை ஊக்குவிக்கும் மத்ஹப் :

அடுத்து, திருடுவதற்கு எந்த அளவிற்கு இந்த கேடுகெட்ட குப்பைகளான மத்ஹப் சட்டங்கள் ஊக்குவிக்கின்றன என்பதைப் பற்ற்றி பார்ப்போம்.

அதாவது, நாம் திருட செல்லும் போது உடன் ஒரு சிறுவனையோ அல்லது மன நலம் பாதிக்கபப்ட்ட ஒருவனையோ அழைத்து வைத்துக் கொண்டால் நம் இருவரையும் எவரும் தண்டிக்க முடியாதாம்.
சொல்கிறது துர்ருல் முக்தார் பாகம் 4, பக்கம் 100.

இதே பாகத்தில், மற்றொரு ஊக்கத்தையும் தருகின்றனர்.

அதாவது, இரண்டு பேர் ஒரு வீட்டிற்குள் திருட செல்கிறனர். வீட்டில் பெரிய ஓட்டை ஒன்றை இட்டு ஒருவன் மட்டும் உள்ளே செல்ல, இன்னொருவன் வெளியே நின்று கொள்கிறான்.

உள்ளே சென்றவன், வீட்டிலிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றாக எடுத்து அந்த ஓட்டை வழியாக வெளியே எடுத்துப் போட, வெளியே நிற்பவன் அந்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுகிறான்.
உள்ளே சென்றவன், வெறுங்கையுடன் வெளியே வருகிறான்.

இப்போது, இந்த இருவரையும் தண்டிக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதோடு நிற்காமல்,
ஏன் தண்டிக்கக் கூடாது என்பதற்கான காரணத்தையும் தொடர்ந்து விளக்குகின்றனர்.
ஏனெனில், உள்ளே சென்றவன், வெறுங்கையுடன் உள்ளே சென்றான், வெளியே வரும் போதும் வெறுங்கையுடனே வெளியே வருகிறான்.
எனவே இவன் திருடன் இல்லை.
வெளியே நிற்பவனோ வீட்டிற்குள் இருந்து எந்த பொருட்களையும் திருடவில்லை, மாறாக, வெளியே கிடந்ததை தான் எடுத்துச் சென்றான்.
ஆக, இவனும் திருடன் இல்லை !

ஆஹா, என்னதோர் அற்புத சட்டம். 

மத்ஹபும் இஸ்லாம் தான் என்று பிரச்சாரம் செய்கிறார்களே, இப்படியான சட்டத்தை ஒருவனிடம் படிக்கக் கொடுத்தால் அவன் இஸ்லாத்தை நேசிப்பானா அல்லது தூரமான விலகி ஓடுவானா?

ஒன்றும் வேண்டாம், இந்த சட்டத்தை மட்டும் ஒரு உளவியல் நிபுணர் ஒருவரிடம் காட்டி, இப்படி ஒருவர் எழுதியிருக்கிறார், அவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டுப் பார்ப்போமே,

மூளை வரண்டு போன பைத்தியக்காரன் தான் இதை எழுதியிருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்வார்.



பல் துலக்குதலில் மற்றுமொரு வேடிக்கை :

பல் துலக்குதல் தொடர்பாக நாம் ஏற்கனவே ஒரு கிறுக்குத்தனமான மத்ஹப் சட்டமொன்றை பார்த்தோம்.

அதே துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 115 இல் இவர்கள் இதைப் பற்றி மேலும் சொல்லும் போது,

இரண்டு ஆட்காட்டி விரலையும் ஒரு சேர பல் துலக்க பயன்படுத்த வேண்டும் என்று எஉதி வைத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து, முதலில் இடது ஆட்காட்டி விரல், பிறகு வலது ஆட்காட்டி விரல், இப்படியாக மாற்றி மாற்றி துலக்குவது தான் சரியான, மற்றும் சிறப்புக்குரிய முறை என்று எழுதியிருக்கிறார்கள்.

இது சிறப்புக்குரியதா அல்லது மூளை மழுங்கியவனின் பிதற்றலா?


இஜ்மா தான் இவர்களுக்கு ஆதாரம் :

ஜனாசா தொழுகையின் போது இறுதியாக கொடுக்கின்ற சலாமை நபி (சல்) காலத்தில் மெதுவாக தான் சொல்லி வந்தார்கள், இப்போது அனைவருமே சப்தமிட்டு சொல்கின்றனர்.
எனினும், மக்களெல்லாம் இவ்வாறே சொல்கின்ற காரணத்தால் சப்தமிட்டு சொல்வது தான் சரி.

அதாவது, குர் ஆன் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை, ஹதீஸைப் பற்றி இவர்களுக்கு எந்த பொருட்டும் இல்லை, மக்களெல்லாம் என்ன செய்கிறார்களோ அது தான் மார்க்கம் என்பதாக அப்பட்டமான வழிகேட்டினை மார்க்கம் எனக் கூறி போதிக்கின்றார்கள்.

மேற்கூறிய சட்டம் துர்ருல் முக்தார் பாகம் 2, பக்கம் 213 இல் எழுதப்பட்டிருக்கிறது.


விபச்சாரியை மனைவி என்று சொன்னால் தண்டனை இல்லை :

(விபச்சாரம் செய்யும் போது பிடிபட்டவன் விபச்சாரியை) இது எனது மனைவி அல்லது என்னுடைய அடிமைப் பெண் என்று சொன்னால் அவனுக்குத் தண்டனை இல்லை. இதற்கு சாட்சி சொன்னவர்கள் மீதும் தண்டனை இல்லை.

பஹ்ர் என்ற நூலில் இடம் பெற்ற செய்தி:  தன்னுடன் (பிடிபட்ட) அந்தப் பெண் அடுத்தவரின் மனைவியாக இருந்தாலும் சரி! அவன் அவளைத் தன் மனைவி என்று வாதிட்டால் தண்டனை கிடையாது.

நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 4, பக்கம் 29

விபச்சாரம் செய்யும் போது மாட்டிக் கொண்டு விட்டால் பிரச்சனையே இல்லை. அவளைத் தன் மனைவி என்று சொல்லி விட்டால் போதும். ஹனபி மத்ஹபின் படி அவர்களைத் தண்டிக்கக் கூடாது.

இன்றைக்கு லாட்ஜ்களில் விபச்சாரம் செய்து போலீஸில் மாட்டிக் கொள்ளும் போது, ரெடிமேட் தாலியைக் காட்டி, இவள் என் மனைவி என்று கூறுகின்றார்களே! ஹனபி மத்ஹபின் இந்தத் தந்திரத்தைத் தான் அவர்கள் கையாள்கின்றார்களோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.

இன்னும் சொல்லப்போனால், "அவள் இன்னொருவரின் மனைவியாக இருந்தாலும் சரியே", என்று வேறு எழுதி வைத்து இவர்களது தகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றனர்.

ஆக, இன்னொருவரின் மனைவி தான் என்று வெளிப்படையாக தெரிந்த பிறகும் கூட, அவன் தன் மனைவி தான் என்று சொல்லி விட்டா காரணத்தினால் அவனை தண்டிக்கக் கூடாது என்று சொன்னால், இது விபச்சாரத்தை ஒழிக்கக் கூடிய சட்டமா அல்லது எந்த பெண்ணுடன் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சேர்ந்து இருந்து கொள்ளுங்கள், யாராவ்து கேட்டால் என் மனைவி, என் கணவர் என்று சொல்லி விடுங்கள் என்பதாக விபச்சாரத்தை தூண்டுகிற விபச்சார விடுதியா இந்த மத்ஹப்? என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக