இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!
(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)
நாள் : 20
சுப்கியின் லீலை அந்த நூலில் இல்லையா?
இந்த சுப்கி என்பவன் எந்த அளவிற்கு கேடு கெட்ட காரியத்தை செய்திருக்கிறான் என்பதைஆதாரத்துடன் நாம் காட்டும் போது, நீங்கள் காட்டும் பக்கத்தில் அந்த அரபி வாசகம்இல்லையே, ஷஃரானியை நாங்கள் மதிப்பதில்லையே.. என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிநாம் விடுத்த சவாலிலிருந்து பின்வாங்குவதை தான் நம்மால் காண முடிகிறது.
ஷஃரானியை நாங்கள் மதிப்பதில்லை என்று வெறுமனே தப்பிப்பதற்காக இவர்கள்சொல்கிறார்களே அல்லாமல் இவர்களது நூற்களிலும் பயான்களிலும் அவரை புகழாமல்இவர்கள் இருந்ததே இல்லை.
எந்த ஒன்றினை சான்றாக காட்ட எண்ணினாலும், இமாம் ஷஃரானியின் கூற்று என்பதாகமேற்கோள் காட்டித் தான் பேசுவர். அந்த அளவிற்கு இவரையும் ஓர் அவ்லியாகவே கருதிவந்தனர் இந்த போலி சுன்னத் ஜமாஅத்தினர்.
இப்போது ஷஃரானியை நாங்கள் முக்கியத்துவப்படுத்துவதில்லையே என்று, இந்த சவாலுக்குபயந்து இவர்கள் சொல்வார்களானால், இவர்களே பல சந்தர்ப்பங்களில் ஷ்ஃரானியின் புகழ்பாடிய ஆதாரங்களை தனியே வெளியிடுவோம்.
சவாலுக்கு மேல் சவாலை சந்தித்து அவமானப்படுவதை விட, அந்த சுப்கியை ஒரு கிறுக்கன்,காம வெறி பிடித்தவன், அவன் அந்த பெண்ணிடம் பேசியது தவறு தான் என்று ஒப்புக் கொண்டுவிட்டால் பிரச்சனை முடிந்தது.
அத்துடன், இந்த சுப்கி தொடர்பான அரபு மூலம் இடம்பெறும் பக்கம் என்பது ஒவ்வொருபிரதிகளுக்கும் மாறுபடும்.
பெரிய எழுத்துக்கள் (ஃபான்ட்) கொண்ட நூல் என்றால் அந்த நூலுக்கு அதிக பக்கங்கள்இருக்கும், சிறிய எழுத்துக்களைக் கொண்ட நூல் என்றால் பக்கங்களின் எண்ணிக்கைகுறைவாக இருக்கும்.
நாம் சொன்ன அந்த சுப்கியை பற்றிய செய்தி சுப்கி எனும் தலைப்பின் கீழ் இருக்கத்தான்செய்கிறது, ஒவ்வொரு அவ்லியாவின் (?) பெயரை குறிப்பிட்டு தனித் தனியே தன் ஷஃரானிஅவர்கள் தொடர்பான கதைகளை எழுதியிருக்கிறார் எனும் போது, சுப்கி தொடர்பாக நாம்சொன்னவைகளை அந்த தலைப்பின் கீழே தேடிக் கொள்ளலாம்.
இவர்கள் வைத்திருக்கும் பிரதியை நம் தலைமைக்கு அனுப்பித் தந்தால் நாமே அந்ததலைப்பையும் பகக்த்தையும் எடுத்துத் தருகிறோம் எனவும் சொல்லிக் கொள்கிறோம்.
ஆக, இந்த சப்பைக்கட்டுகளை சொல்லியெல்லாம் நாம் விடுத்த சவாலிலிருந்து இவர்களால்தப்பிக்க முடியாது.
நாம் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு இவர்கள் மிம்பரில் இந்த சுப்கி அவ்லியாவின்லீலைகளை தமிழில் மொழிப்பெயர்க்குமாறு மீண்டும் அறைகூவல் விடுகிறோம்.
இஜ்மா மார்க்க ஆதாரமாகுமா?
இஸ்லாத்தில் ஆதாரம் வஹீ மட்டும் தான் என்று நாம் சொல்லும் போது, குர் ஆன், ஹதீஸ்தவிர்த்து, இன்னும் இரண்டு ஆதாரங்கள் உள்ளன, அவை இஜ்மா மற்றும் கியாஸ் என்பதாககூறுவார்கள்.
இஜ்மா, கியாஸ் என்றால் என்ன, இவை மார்க்க ஆதாரமாகுமா? என்பதை நாம் விளக்கமாகஅறிந்து கொள்ள வேண்டும்.
இஜ்மா என்பதனுடைய பொருள் ஏகமனதாய் எடுக்கப்பட்ட முடிவு.
அதாவது, குர் ஆனிலோ ஹதீஸிலோ இல்லாத ஒரு சட்டத்தை நபி (சல்) அவர்களதுகாலத்திற்கு பிறகு, முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்று கூடி ஏகமனதாய் சட்டமொன்றைஇயற்றினால் அதுவும் மார்க்க ஆதாரம் தான்.
இது தான் இஜ்மா.
இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமிருக்குமா? இதன் மூலம் இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள்? குர் ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்படாத சட்டம் கூட உண்டு என்று சொல்லவருகிறார்கள்.
ஆனால், அல்லாஹ் குர் ஆனில் என்ன சொல்கிறான் என்று பாருங்கள்.
எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
(5:3)
மார்க்கத்தை அல்லாஹ் முழுமையாக்கி விட்டதாக திருக் குர் ஆன் கூறும் போது, குர் ஆனில்ஏதாவது விடுபட்டிருந்தால் நாங்களாக ஒன்று கூடி சட்டமெடுப்போம் என்ற் இவர்கள் கூறுவதுகுர் ஆனை இழிவுப்படுத்தும் கூற்றா இல்லையா?
முழுமையாகி விட்டது என்று இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் அல்லாஹ்வே கூறி விட்டபிறகு அதில் புதிதாக எதையும் சேர்ப்பதற்கு இடமிருக்குமா?
அபப்டியானால், அல்லாஹ் முழுமையாக்கி விட்டான் என்று சொன்னது தவறு என்று இவர்கள்சொல்ல வருகிறார்களா?
முழுமையாகாமல் முழுமையாகி விட்டது என்று அல்லாஹ் அறியாமையில் சொல்கிறானா?
அல்லது எந்த சட்டத்தையாவது அல்லாஹ் மறந்து விட்டானா?
என்றால் அலலஹ் எதையும் மறக்கக் கூடியவனும் இல்லை என்று திருக் குர் ஆன் கூறுகிறது.
உமது இறைவன் மறப்பவனாக இல்லை (19:64)
இது போக, ஏற்கனவே முழுமைப்படுத்தப்பட்டு விட்ட இந்த மார்க்கத்தில் இஜ்மாவின் மூலம்இவர்கள் ஒரு சட்டமெடுப்பதாக இருந்தால் அதன் பொருள் என்ன?
அல்லாஹ் எதை ஹலால் ஆக்கியிருக்கிறானோ அதை இஜ்மாவின் மூலம் இவர்கள்ஹராமாக்குவார்கள்.
அல்லது, அல்லாஹ் எதை ஹராம் ஆக்கியிருக்கிறானோ அதை இஜ்மாவின் மூலம் இவர்கள்ஹலாலாக்குவார்கள்.
கடமையான ஒரு காரியத்தை கடமையில்லை என்று ஆக்குவார்கள்,
சுன்னத்தை சுன்னத் இல்லை என்று ஆக்குவார்கள்.
இதை தான் இஜ்மாவின் மூலமாக இவர்களால் செய்ய இயலுமே அல்லாமல்,முழுமையடைந்து விட்ட மார்க்கத்தில் புதிதாக இவர்களால் என்ன சேர்க்க முடியும்?
இறுதி பேருரையில் நபி (சல்) அவர்கள் சஹாபாக்களை நோக்கி அறிவித்தது என்ன?புஹாரியில் வரக்கூடிய செய்தி.
இன்றுடன் இந்த மார்க்கம் நிறைவுபெற்று விட்டது, வெள்ளை வெளீர் என்கிற மார்க்கத்தில்உங்களை நான் விட்டுச் செல்கிறேன், என்று சொல்லி விட்டு,
எதையெல்லாம் அல்லாஹ் எனக்கு அறிவித்தானோ அவை அனைத்தையும் ஒன்று விடாமல்நான் உங்களுக்கு தெரிவித்து விட்டேனா? என்று மூன்று முறை கேட்கிறார்கள்.
ஆம், அல்லாஹ்வின் தூதரே, அனைத்தையும் நீங்கள் சொல்லித் தந்துவிட்டீர்கள் என்றுகுழுமியிருந்த சஹாபாக்கள் சொல்ல, யா அல்லாஹ், இதற்கு நீயே சாட்சி என்று நபி (சல்)அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த அளவிற்கு தெளிவாகவும், முழுமையாகவும் தரப்பட்ட இந்த மார்க்கத்தில் மக்களாகஒன்று கூடி சட்டமியற்றிக் கொள்ளலாம் என்கிற சிறு அதிகாரமாவது இருக்குமா? என்பதைநாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு என்ன உணவு சமைப்பது, இன்றைக்கு எந்த இடத்திற்கு செல்வது என்பன போன்றஉலகக் காரியங்களாக இருந்தால் அதில் இஜ்மா செய்து கொள்ளலாம்.
ஒரு சபை கூடுகிறது, இன்று மதியம் உங்களுக்கு என்ன உணவு சமைக்கலாம் என்று அந்தசபையினரிடம் கருத்து கேட்டு, அனைவரும் ஏக மனதாய் தேர்வு செய்யும் உணவைசமைக்கலாம். இதுவெல்லாம் மார்க்கம் சார்ந்த காரியமல்ல.
ஆனால், மார்க்கத்தில் ஒன்றை செய்வதற்கோ அல்லது செய்யாமல் தவிர்ந்து கொள்வதற்கோநாம் எப்படி கருத்து கூற முடியும்?
மார்க்கத்திற்கு யார் சொந்தக்காரனோ அவன் தானே அதில் சட்டமியற்றுவான்?
மிஃராஜ் அன்றைக்கு நோன்பு வைக்கலாம் என்று இவர்களாக கூடி இஜ்மா செய்தால் அது எப்படிமார்க்கமாகும்?
மிஃராஜ் பயணம் மேற்கொண்டது நபி (சல்) அவர்கள்.
நோன்பு வைக்க வேண்டுமென்றால் அவர்கள் சொல்ல வேண்டும்.
அந்த பயணத்திற்கு நபியை அழைத்துக் கொண்டு சென்றது அல்லாஹ். அவன் சொல்லவேண்டும்.
அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லாத ஒரு காரியம் எப்படி மார்க்கமாகும்?
இந்த அடிப்படையை சிந்தித்தாலும் இஜ்மா என்பது ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாதுஎன்பதை அறியலாம்.
அடுத்ததாக, இஜ்மா மார்க்க ஆதாரம் என்று கூறக்கூடியவர்கள் யாருடைய இஜ்மா மார்க்கஆதாரம்? என்கிற அடிப்படையில் தெளிவாக இருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை.
ஏகமனதாய் முடிவு செய்வது தான் இஜ்மா என்று ஒரு பக்கம் சொல்லிக் கொள்கிறார்கள்.
சரி, யாருடைய ஏகமனதான முடிவு? யார் யாரெல்லாம் ஒன்று கூடி முடிவு செய்வது இஜ்மாஎனப்படும்? என்கிற இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்களா? என்று பார்க்கப் போனால்இதில் தான் ஏகத்துக்கும் குழப்பம் !
அதாவது இஜ்மா எது என்பதிலேயே இவர்களிடம் இஜ்மா இல்லை என்பது தான் உச்சகட்டவேடிக்கை.
இப்னு ஹச்ம் எனும் அறிஞர் தமது அஹ்காம் எனும் நூலில், இஜ்மாவின் வகைகளைபட்டியலிடுகிறார்.
அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
1. இஜ்மா என்றால் சஹாபாக்கள் ஒன்று கூடி எடுப்பதை தான் குறிக்கும்.
2. இஜ்மா என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் அனைவரும் கூடி எடுப்பதாகும்.
இந்த பிரிவில் இரு வகைகள் இருக்கின்றன.
முதல் வகையின் படி, ஒரு நூற்றாண்டில் ஒரு சாரார் இஜ்மாவின் மூலம் ஒருசட்டத்தை வகுத்து விட்ட பிறகு அடுத்து வரக்கூடிய நூற்றாண்டில் அந்த இஜ்மாவுக்குமாற்றமான இஜ்மாவை உருவாக்கலாமா? என்றால் கூடாது.
ஒரு நூற்றாண்டில் ஒன்றை இஜ்மாவாக சொல்லி விட்டால், அது தான் நிரந்தரமானது,அதன் பிறகு அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அதில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரக்கூடாது என்பது முதல் உட்பிரிவு.
இரண்டாவது வகையின் படி, அவ்வாறு மாற்றுவது கூடும்,
ஆனால், ஒரே நிபந்தனை, எந்த நூற்றாண்டில் முதன்முதலாக அந்த சட்டம் இஜ்மாமூலம் முடிவு செய்யப்பட்டதோ அந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் மிச்சமில்லாமல்அனைவருமே இறந்து போயிருக்க வேண்டும்.
அதன் பிறகு தான் அந்த சட்டத்தை மாற்ற முடியும். ஒருவர் உயிருடன் இருந்தாலும்,முந்தைய இஜ்மாவை மாற்றக் கூடாது.
இது இரண்டாவது வகை.
3. சஹாபாக்களில் எவரெல்லாம் மதினாவாசிகளோ அவர்கள் மட்டும் தான் இஜ்மாசெய்யலாம்.
4. ஒரு குழு இஜ்மா செய்கிறது. என்றாலும், ஒத்த கருத்துக்கு அனைவரும் வராமல்ஐந்து வெவ்வேறு கருத்துக்களை அனைவரும் சொன்னால், அந்த ஐந்தும் இஜ்மா.
ஐந்தை தாண்டி ஆறாவதாக யாராவது சொன்னால் அது இஜ்மாவுக்கு மீறிய செயல்,அது செல்லாது. இதுவும் இஜ்மாவில் ஒரு வகை.
5. ஒரு கருத்தை ஒருவர் சொல்ல, அதற்கு சமூகத்தில் எந்த எதிர்ப்புமேகிளம்பவில்லையென்றால் அது இஜ்மா
6. அனைவருமே சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை,
பெரும்பான்மை தான் இஜ்மா. (அதாவது 100 பேர் கொண்ட ஒரு குழுவில் 51 பேர் ஒருகருத்தையும் 49 பேர் அதற்கு மாற்றமான கருத்தையும் கொண்டிருந்தால் 51கொண்டிருந்த கருத்து தான் மார்க்கம்.
7. ஈராக் அருகில் இருக்கும் கூஃபா எனும் பகுதியை சேர்ந்தவர்கள் (கூஃபாவாசிகள்)செய்யும் இஜ்மா மட்டும் தான் கூடும். (கூஃபாவில் தான் அபு ஹனீஃபா இமாமும்பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, அதனால் தான் இவர்கள் கூஃபாவை தேர்வுசெய்திருக்கிறார்கள் !)
8. சில ஷாஃபியாக்களின் கூற்று யாதெனில், இஜ்மா என்று வெறுமனே சொன்னால்போதாது, இஜ்மா என்பதற்கு ஆதாரம் வேண்டும், அதாவது, மக்கள் ஒன்று கூடியது,கலந்தாலோசனை செய்தது,விவாதித்தது, அய்வு செய்தது என அனைத்திற்கும்சான்றுகள் இருந்தால் தான் அந்த இஜ்மாவை மார்க்கமாக ஏற்க முடியும்.
9. மக்காவாசிகளும் மதினாவாசிகளும் சேர்ந்து செய்கின்ற இஜ்மா தான் மார்க்கம்.
10. இஜ்மா என்றால் ஒரு நபர் கூட ஊரில் விடுபட்டிருக்கக் கூடாது, ஒட்டு மொத்தமுஸ்லிம் சமுதாய மக்களும் சேர்ந்து ஒரு மசயிலில் ஒத்த கருத்தை சொல்லியிருக்கவேண்டும், அப்படி நடந்தால் அது தான் இஜ்மா !
இப்படியாக பத்து வெவ்வேறான, முரண்பாடான நிலைபாடு தான் இஜ்மா தொடர்பாகஇவர்களிடம் உள்ளது.
ஒன்றை ஏற்றால் இன்னொன்றை மறுக்க வேண்டும் என்கிற அளவிற்கு ஒவ்வொன்றும்வெவ்வேறான கருத்தையே சொல்கின்றன.
ஆக, எது சரியான இஜ்மா என்பதிலேயே இவர்களிடத்தில் இஜ்மா (ஏகமனதான முடிவு)இல்லை என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை !!
அடுத்து, இஜ்மா என்பது மார்க்க ஆதாரமாகாது என்பதற்கும், அது அறிவுக்குக் கூட பொருத்தமில்லாத ஒன்று என்பதற்கும், நாம் சான்றுகளை காட்டுவதை விட, இவர்கள் ஒப்புக் கொண்ட இமாம்களான அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களின் கூற்றையும், ரிலாம் என்கிற இமாமின் கூற்றையும் இங்கு குறிப்பிடுகிறோம்.
அஹ்மத் இப்னு ஹம்பல் கூறுகிறார்கள், இஜ்மா மார்க்க ஆதாரம் என்று யாராவது சொல்வார்களானால் அவர் பொய் சொல்கிறார்.
இஜ்மா என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
இஜ்மா என்று சொன்னால், ஒவ்வொரு நபரிடமும் தனித் தனியே சென்று கருத்து கேட்டு ஒருவர் விடாமல் நிலைபாட்டினை கேட்ட வேண்டும், ஒருவர் விடாமல் ஒட்டு மொத்த சமூகத்தாரிடமும் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.
அல்லாமல், சிறு குழுவாக ஒன்று சேர்ந்து ஆலோசனை செய்து விட்டு இஜ்மாவின் படி இதை மார்க்கமாக்குகிறோம் என்பது அறிவுக்கு பொருத்ஹமில்லாதது என்று நம்மையெல்லாம் விட மிகக் கடுமையாக அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள் இஜ்மாவை எதிர்க்கிறார்கள்.
இமாம் ரிலாம் அவர்கள் கூறும் போது, இஜ்மாவாக எத்தனை கருத்துக்கள் இருக்கின்றன என்பது பிரச்சனையில்லை, எந்த கருத்துக்கு குர் ஆன் ஹதீஸில் ஆதாரம் இருக்கிறதோ அது தான் இஜ்மா என்று, எந்த கொள்கையை இன்று நாம் பிரச்சாரம் செய்கிறோமோ அதையே பிரதிபலிக்கிறார்கள்.
ஒட்டு மொத்த சமூகமே ஒன்றிணைந்து ஒரு கருத்தை சொல்லி, அதற்கு மாற்றமாக ஒரேயொரு நபர் ஒன்றை சொல்ல, அந்த ஒன்றுக்கு குர் ஆன் ஹதீஸில் ஆதாரம் இருக்குமானால், இந்த ஒருவர் மட்டும் சொன்ன கருத்து தான் மார்க்கம்.
ஆக, அடிப்படை என்பது குர் ஆனும் ஹதீஸும் மட்டும் தானே தவிர, அனைவரும் கூடினோம், கலந்தாலோசித்தோம் என்பதெல்லாம் அர்த்தமேயில்லாதது என்கிற கருத்தில் ரிலாம் அவர்கள் விளக்கமளிப்பதை காணலாம்.
நபி (சல்) அவர்கள் மரணித்த தருவாயில் கூட இதே போன்றதொரு பிரச்சனை எழுந்தது.
அவர்கள் மரணிக்கவில்லை, மரணிக்கமாட்டார்கள் என்கிற கருத்திலேயே பல சஹாபாக்கள் இருந்தார்கள்.
இஜ்மா தான் மார்க்க ஆதாரம் என்று இருக்குமானால், அதிகமான சஹாபாக்கள் கொண்டிருந்த கருத்தான நபி (சல்) அவர்கள் மரணிக்கவில்லை என்கிற கருத்து தான் நிலைபெற்றிருக்க வேண்டும்.
ஆனால், அதற்கு மாற்றமாக குர் ஆனின் வசனத்தை எடுத்துக் காட்டி அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் விளக்கிய போது, அனைவருமே அதற்கு கட்டுப்பட்டார்கள்.
ஆக, குர் ஆனும் ஹதீஸும் மட்டும் தான் அடிப்படை என்பதற்கு இதுவே சான்றாக அமைகிறது.
இஜ்மா மார்க்க ஆதாரமாகாது என்பதாக சகோதரர். பிஜே சொல்லி விட்டார் என்பதை காரணம் காட்டி அவருக்கு காஃபிர் ஃபத்வா கொடுப்பவர்கள் இதே ஃபத்வாவை இமாம் அஹமத் இப்னு ஹம்பலுக்கும் இமாம் ரிலாம் அவர்களுக்கும் கொடுப்பார்களா?
அடுத்ததாக, இஜ்மாவும் மார்க்க ஆதாரம் தான் என்று சொல்லக் கூடியவர்கள், நபி (சல்) அவர்கள் காலந்தொட்டு இன்று வரை இஜ்மா மூலம் எடுத்த மார்க்க சட்டமாக ஒன்றே ஒன்றையாவது உதாரணத்திற்கு தர முடியுமா?
1400 ஆண்டுகளாக இஜ்மாவும் மார்க்க ஆதாரம் தான் என்று சொல்பவர்கள், ஒரேயொரு மசாயிலிலாவது இஜ்மா மூலம் தீர்வு கண்டிருப்பார்களா? என்றால் இல்லவே இல்லை.
உதாரணத்திற்கு கூட ஒன்றை காட்ட இயலாதவர்கள் தான் இஜ்மாவும் மார்க்க ஆதாரம் தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
இனியும் இவர்களால் இஜ்மா மூலம் எந்த ஒன்றுக்கும் தீர்வு காண இயலாது, கியாமத் நாளானாலும் அது சாத்தியமில்லை.
ஒன்றே ஒன்றை மட்டும் இவர்கள் சொல்வார்கள், அதாவது குர் ஆன் தொகுக்கப்பட்டது இஜ்மா தானே என்று.
இது அர்த்தமில்லாத வாதம்.
குர் ஆனை நபி (சல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் அருளினான் என்றால், எதை குர் ஆன் என்று நபி (சல்) அவர்கள் சொன்னார்களோ அதை தான் பின்னர் வந்த சஹாபாக்கள் தொகுத்தார்கள். இது உலகக் காரியம் தானே தவிர, மார்க்க சட்டம் எதுவும் இதில் இல்லை.
நபி (சல்) அவர்கள் கூறியதிலிருந்து எதையேனும் அத்தியாயங்களை குறைத்து தொகுத்தார்களா?
புதிதாக எந்த வசனத்தையாவது பிற்காலத்தில் குர் ஆனை தொகுத்தவர்கள் சேர்த்து விட்டார்களா? இல்லை.
எதை நபி (சல்) அவர்கள் காலத்தில் எலும்புகளிலும் தோல்களிலும் ஆங்காங்கே எழுதி வைத்திருந்தார்களோ அவற்றை தொகுக்குகின்ற வேலையை தான் சஹாபாக்கள் செய்தார்கள்.
இதற்கும் மார்க்கத்திற்கும் எந்த சம்மந்தமுமில்லை.
இன்னும் சொல்லப்போனால், அவர்கள் காலத்தில் தொகுக்கபப்ட்ட முறையிலா இன்று நாம் தொகுக்கிறோம்?
அவர்கள் காலத்தில் தோல்களிலும் எலும்புகளிலும் தொகுத்தார்கள், இன்றோ காகிதத்தில் அச்சிடுகிறோமே, சாஃப்ட்வேர்களாக பதிவிறக்கம் செய்கிறோமே, இவர்கள் வாதப்படி இன்றைய முறையும் கூட இன்று இஜ்மா தானா?
அப்படியென்றால் இந்த இஜ்மா சஹாபாக்கள் தொகுத்ததாக இவர்கள் கூறும் இஜ்மாவுக்கு மாற்றம் தானே? அப்படியானால் இஜ்மாவும் மார்க்கம் ஆதாரம் என்கிற அடிப்படையில் சஹபாஅக்களின் அந்த இஜ்மாவுக்கு இவர்கள் இன்று ஏன் மாற்றம் விளைவிக்கிறார்கள்?
இதிலிருந்தே, இது அர்த்தமில்லாத வாதம் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
அதே போல், பள்ளிவாசல்களை கான்கிரீட் மூலம் கட்டுகிறோமே, இதுவும் இஜ்மா தானே என்று சொல்வார்கள்.
இதுவும் அர்த்தமில்லாத உளரலாகவே பார்க்கப்படுகிறது.
பள்ளிவாசலை இப்படி தான் கட்ட வேண்டும், இன்னின்ன பொருட்களைக் கொண்டு கட்ட வேண்டும், இன்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் ஏதும் வரையறை வகுத்திருக்கிறதா? இல்லையே.
கான்கிரீட்டில் கட்டுவதோ, பந்தல் இடுவதோ, பெரிதாக கட்டுவதோ, சிறிதாக கட்டுவதோ அவரவர் வசதிக்கேற்ப செய்யப்படுவது தானே தவிர, இதற்கும் மார்க்கத்திற்கும் எந்த சம்மந்தமுமில்லை.
அப்படியிருக்கும் போது இதை இஜ்மாவுக்கு சான்று எனக் கூறி எடுத்து காட்டுவது, இவர்கள் எந்த அளவிற்கு தங்கள் கொள்கையில் பலகீனமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
உலக வசதிக்காக நாம் செய்வதையெல்லாம் இவர்கள் இஜ்மாவுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள் என்றால் இதை நாமும் கூட மறுக்கவில்லையே.
ஒரு ஊரில் ஏரி ஒன்று உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. உடனடியாக ஏரியை சரி செய்ய வேண்டும் அப்போது தான் உயிர் சேதத்தை தவிர்க்க முடியும் என்று ஊரிலுள்ள அனைவரும் ஏகமனதாய் முடிவு செய்கிறார்கள்.
அதெப்படி நீ இஜ்மா செய்யலாம், இஜ்மா மார்க்கத்தில் இல்லை என்று தானே சொன்னாய்? என்று அவர்களைப் பார்த்து கேட்கலாமா? அபப்டி கேட்டால் கேட்பவருக்கு தான் குறை மதி என்று பொருளாகும்.
இஜ்மா கூடாது என்றால் மார்க்கத்தில் கூடாது. மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்று சொல்வதற்கோ, ஹராம் என்று கூறுவதற்கோ, ஒன்றை செய்யலாம், செய்யக் கூடாது என்றெல்லாம் சட்டமியற்றுவதற்கோ இஜ்மாவை ஆதாரமாக காட்டக் கூடாது.
அதுவே, உலகக் காரியங்களைப் பொறுத்தவரை, எது நமக்கு வசதியோ அதை செய்து விட்டுப் போகலாம்.
இவர்கள் சான்றாக காட்டிய பள்ளிவாசல் கட்டுதல், குர் ஆனை தொகுத்தல் போன்றவையெல்லாம் உலகக் காரியங்கள் தானே தவிர இதற்கும் மார்க்கத்திற்கும் எந்த சம்ம்ந்தமும் இல்லை.
அடுத்ததாக, இஜ்மாவும் மார்க்க ஆதாரம் தான் என்பதற்கு ஆதாரங்கள் எனக்கூறி சில இறை வசனங்களையும் ஹதீஸ்களையும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.
அவைகளை ஒவ்வொன்றாக நாம் காணலாம்.
நேர் வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (4:115)
இந்த வசனத்தை எடுத்துக் காட்டி, இதில் அல்லாஹ் முஃமீன்களின் வழியை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறான், இதிலிருந்து மூஃமீன்கள் சட்டமியற்றலாம், அதை நாம் பின்பற்ற வேண்டும் என்று தெரிகிறது என்றொரு வாதம் வைப்பர்.
இது அடிப்படையிலேயே தவறான புரிதலாகும்.
முஃமின்கள் என்றால் யார்?
வெளிப்படையாக, இன்னாரெல்லாம் முஃமின்கள், இன்னாரெல்லாம் மூஃமின்கள் இல்லை என்று கண்டறியதற்கு ஏதும் ஆற்றலை அல்லாஹ் நமக்கு அளித்திருக்கிறானா?
நாம் வாழும் உலகில், சில உலகியல் தேவைக்காக ஒருவரை மூஃமின் என்று நம்புவோம்.
மூஃமின் என்று நம்பி கடன் கொடுப்போம், மூஃமீன் என்று நம்பி பெண் கொடுப்போம்.
ஆனால் நிஜத்தில் அவர் முஃமீனாகவும் இருக்கலாம், அல்லது முனாஃபிக்காகவும் இருக்கலாம். அதை அறிந்து கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இல்லை.
இவ்வுலகில் முஃமின் என்பது வேறு, அல்லாஹ்விடத்தில் மூஃமின்கள் என்பது வேறு.
ஆக, முஃமீன்களின் வழியை தேர்வு செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானென்றால் யார் யாரெல்லாம் முஃமீன்கள் என்று தேடிப்பார்த்து பின்பற்றுவதை அல்லாஹ் இதில் சொல்லவில்லை.
முஃமீன்களின் வழி என்று சொன்னால், மூஃமின்கள் செல்ல வேண்டிய பாதை, எந்த வழியில் சென்றால் அல்லாஹ் சொல்கிற முஃமின் எனும் இலக்கணத்தை நாம் பூர்த்தி செய்ததாக ஆகுமோ அந்த வழி.
இதை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள கீழ்காணும் இரு வசனங்களைப் பாருங்கள்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (33:36)
ஆக, மூஃமீன்கள் செல்ல வேண்டிய வழி என்பது யாது? என்பதை இந்த வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் முஃமின்கள் அதில் சுய விருப்பம் கொள்ளாமல் அப்படியே கட்டுப்பட்டு விடுவார்கள்.
இது தான் முஃமீன்களின் வழி.
இன்னொரு வசனத்தைப் பாருங்கள்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (24:51)
அல்லாஹ்வின் வசனங்கள் ஒரு முஃமீனுக்கு போதிக்கப்படும் போது செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பதே அவர்களது நிலையாக இருக்கும்.
இது தான் முஃமின்களின் வழி.
ஆக, மூஃமின்களின் வழியை தேர்வு செய்யுங்கள் என்பதை வைத்து, முஃமீன்களெல்லாம் இஜ்மா செய்வார்கள் என்றும், அதையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வது மடமையாகும்.
இதே போன்று சூரத்துல் ஃபாத்திஹாவில் வரக்கூடிய " நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அந்த வழியை எங்களுக்கும் காட்டுவாயாக" என்கிற வசனத்தையும் இஜ்மாவுக்கு சான்று எனச் சொல்லி முன்வைப்பதை பார்க்கிறோம்.
இதுவும் ஏற்கனவே நாம் விளக்கியதைப் போல், மூஃமின்களின் பண்பினைப் பற்றி அலலஹ் சொல்வதை ஏறுக்கு மாறாக இவர்கள் புரிந்ததால் ஏற்பட்ட விளைவு தான்.
மற்றொரு வசனத்தை காட்டுவார்கள்.
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். (9:100)
இந்த வசனத்தை எடுத்துக் காட்டி, முன்னோர்களை நல்ல விஷயத்தில் பிந்தொடர்வது மார்க்கம், எனவே இஜ்மா செய்யலாம் என்று கூறுவார்கள்.
இதுவும் குர் ஆன் வசனங்களில் இவர்களுக்கு இருக்கும் நுனிப்புல் ஆய்வையே காட்டுகிறது.
இந்த வசனம் ஹிஜ்ரத் செய்தவர்களையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோர்களையும் அந்த விஷயத்தில் பின்பற்றுவதைப் பற்றிப் பேசுகிறது.
பொதுவாக இப்ராஹிமை பின்பற்று என்று சொன்னால் இப்ராஹிமை எல்லா நிலையிலும் பின்பற்ற வேண்டும் என்று பொருளாகும்.
உண்மையாளனான இப்ராஹிமை பின்பற்று என்று சொன்னால், இப்ராஹிமிடம் இருக்கும் அந்த உண்மையாளன் என்கிற பண்பினை நீயும் வாழ்வில் செயல்படுத்து என்று தான் பொருளே தவிர, இப்ராஹிமின் அன்றாட வாழ்க்கையில் அனைத்து காரியஙக்ளையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்று என்று அர்த்தம் வராது.
நோன்பாளியை பின்பற்று என்று சொன்னால், அவர் எப்படி நோன்பு வைப்பதில் அக்கறையுடன் செயல்படுகிறாரோ அதே போல் நீயும் அக்கறையுடன் செயல்படு என்று பொருள்.
பொதுவாக ஒன்றை சொல்வதற்கும், ஒரு குணாதிசயத்தை சுட்டிக் காட்டி சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது.
இவர்கள் சுட்டிக் காட்டும் இந்த 9:100 வசனத்தில், பொதுவாக எல்லா சஹாபக்களையும் பின்பற்று என்று கூட அல்லாஹ் சொல்லவில்லை.
ஹிஜ்ரத் செய்த முஹாஜிரின்களையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அன்சாரிகளையும் பின்பற்று என்று சொன்னால், ஹிஜ்ரத் எனும் பெரும் தியாகம் செய்த அந்த குணாதிசயத்தையும், தம் சொத்து சுகங்கள் அனைத்திலும் சரி பாதி கொடுத்த அந்த தியாகத்தையும் நீயும் உன் வாழ்வில் செயல்படுத்து என்று தான் பொருளே தவிர, இதை வைத்துக் கொண்டு மார்க்கத்தில் புதிதாக அனைவரும் கூடி முடிவெடுக்கலாம் என்றோ அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றோ பொருள் கொள்ள எந்த அடிப்படையும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், இந்த இஜ்மா ஆதரவாளர்கள் இந்த வசனத்தை ஆதாரமாக காட்டவே கூடாது. காரணம், இஜ்மா என்பது நபி (சல்) அவர்களது காலத்திற்கு பின்னர் தான் என்பது தான் அவர்களது கொள்கை.
ஆனால் இந்த வசனம் நபி (சல்) அவர்களுக்கு அருளப்படும் வசனம். அப்படியிருக்கும் போது, இதை தங்கள் கொள்கைக்கு ஆதாரமாக காட்டுவதே முதலில் முரண்பாடாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சரி, இப்படி தான் இந்த வசனத்தை புரிய வேண்டும் என்று இவர்கள் சொல்வார்களென்றால், கீழ்காணும் வசனத்தையும் இதே போன்று இவர்கள் புரிவார்களா?
யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர் களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம் (52:21)
நம்பிக்கை கொண்டவர்களை அவர்களது பிள்ளைகளும் பிந்தொடர வேண்டும் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்கிறானே, அப்படியானால் எல்லா பிள்ளைகளும் கண்ணை மூடிக் கொண்டு தங்கள் பெற்றோரை பின்பற்ற வேண்டும் என்று தான் இதற்கு பொருளா?
பெற்றோர் எல்லாம் கூடி கூடி இஜ்மா செய்து மார்க்க சட்டம் வகுக்கலாம், அதை பிள்ளைகளெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பொருளா?
நம்பிக்கை கொண்ட பெற்றோரை பின்பற்றுவது என்றால், பெற்றோர் குர் ஆன் ஹதீஸுக்கு உட்பட்டு நேரான வழியில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பார்களே, அதே போன்று பிள்ளைகளும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இது தான் அர்த்தமே அல்லாமல், இதை வைத்து இஜ்மாவை இவர்களால் ஒரு போதும் நிலைநாட்ட முடியாது.
இன்னொரு நபிமொழியை இவர்கள் காட்டுவார்கள்.
என் உம்மத்தில் அனைவரும் வழிகேட்டில் ஒன்று சேர மாட்டார்கள் என்பதாக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறிய ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி, அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவெடுப்பது சரி தான், காரணம், அனைவரும் வழிகேட்டில் செல்ல மாட்டார்கள் என்று தான் நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றொரு வாதம் வைப்பர்.
இதுவும் தவறான புரிதல் தான்.
அனைவரும் வழிகேட்டில் செல்ல மாட்டீர்கள் என்றால், வழிகேட்டில் செல்லாமல் எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு சிலராவது இருப்பீர்கள் என்று தான் பொருள்.
ஒரு சபையினரைப் பார்த்து, இங்குள்ள அனைவரும் பொய் சொல்லக் கூடியவர்கள் இல்லை என்று ஒருவர் சொன்னால் அதன் பொருள் என்ன?
எல்லாருமே பொய் சொல்லக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள், ஒரு சிலராவது உண்மையாளர்களாக தான் இருப்பீர்கள் என்பது தான் அதன் அர்த்தம்.
என்ன தான் சமுதாயம் வழிகேட்டின் பக்கம் வீழ்ந்தாலும், அதற்கு துணை போகாமல், அந்த வழிகேட்டினை எதிர்த்து நிற்கக் கூடிய கூடமும் என் உம்மத்தில் இருக்கத் தான் செய்யும், அல்லாமல், எல்லாருமே ஒட்டுமொத்தமாக வழிகேட்டில் வீழ்ந்து விட மாட்டீர்கள் என்பது தான் அந்த நபி மொழியின் கருத்து.
எனவே, இந்த வாதமும் இவர்களது கொள்கையை நியாயப்படுத்த உதவாது.
தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக