வெள்ளி, 6 டிசம்பர், 2013

சஜதா செய்தல் : விவாதம் Part 2
Ifham Mohamed

குர்ஆனிலிருந்து தான் ஹதீஸை விளங்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கேட்கப்பட்டது அதற்கு குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்ற ஆதாரம் தரப்பட்டு விளக்கப்படுத்பப்ட்டது அது பற்றி பதில் கிடையாது.

சலாம் விடயத்தில் என்னுடன் வாதிக்கும் முன்பே உங்கள் நிலைப்பாடு விவாத இறுதியில் வந்தது தான் என்று கூறினீர்கள். நான் வாதம் வைக்க முன்பு உங்கள் இயக்கமோ நீங்களோ இவ்விடயத்தை கூறியதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்றேன் பதில் இல்லை. 

ஹதீஸிலே இடைச்செருகல் செய்ததை பல முறை சுட்டிக்காட்டியும் ஒரே ஒருமுறை எனக்கு பதில் அளிக்க முடியாத இறுதி சந்தர்ப்பத்தில் மலுப்பல் பதில் அளிக்கப்பட்டது. அதன் பிறகு வாய்திறக்கவில்லை.
யுத்தத்தில் தடை செய்தால் அந்த தடை யுத்தத்தில் தான் என்று ஒரு புதுவாதம் முன்வைத்திருக்க கழுதை இறைச்சியும் யுத்தத்தில் தடைசெய்யப்பட்டது என்று கூறினேன் வேறு பல ரிவாயத்துக்களும் இருக்கின்றது என்றீர்கள். பொதுவாக எத்தனை வந்தாலும் யுத்தத்தில் குறிப்பாக்கியதால் உங்கள் வாதப்படி யுத்தத்தில் தானே தடையாகும்??
மேலும் – 

4:23, 24 மணமுடிக்க தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் தாய் முதல் கொண்டு அல்லாஹ் கூறிவிட்டு இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.- என்பதை நேரடியாகக் கூறுகிறான். 

இதற்கு நேரடி மாற்றமாக புஹாரி 5109 இல் உள்ள அறிவிப்பை காட்டினால் – நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக - ஒரு சேர மணமுடிக்கலாம் என்று குர் ஆன் சொல்லியிருந்தால் தான் இது முரண் என்போம். என்று கூறுகிறீர்கள். ஆனால் 4:23 ஒன்று சேர்த்து இரண்டு சகோதரிகளை மணமுடிக்க தடை செய்வதயையும் குறிப்பிட்டே அல்லாஹ் இதற்கப்பால் எல்லாம் அனுமதி என்கிறான். உங்கள் கொள்கைப்படி ஹதீஸ் எவ்வாறு மேலதிக ஆதாரமாகும். முரண்படாதீர்கள்.

அடுத்து 12:100 – 

கட்டுப்படுவதை தான் குறிக்கின்றது என்று கூறுகின்றீர்கள். ஆனால் 41:37 வது வசனமே அவ்வாறு பொருள் கொள்வதற்கு மிகவும் தகுதியானது. இரண்டு கருத்தும் கொடுக்கலாம் எனில்,

சூரியனுக்கும் சந்திரனுக்கும் அடிபணிய வேண்டாம் அவற்றை படைத்த அல்லாஹ்விற்கே அடிபணியுங்கள். என்பதுவே சாலப் பொருத்தமானது 
ஏன் இவ்வாறு மிகத் தகுதியான முறையில் அர்த்தம் கொடுக்க முடியுமாக இருந்தும் மனிதன் மனிதனுக்கு சஜ்தா செய்யக் கூடாது என்ற உங்கள் கொள்கைக்காக இவ்வசனங்களுக்கு உங்களுக்கு ஏற்றாற் போல் விளக்கம் கொடுக்கின்றீர்கள். 

மேலும் சூரியன் சந்திரன் வணங்குவது தொடர்பாக ஒரு விடயத்தை கூறியதற்கு அப்படிச் சொல்லவில்லை என்று கூறினீர்கள். ஏனைய குர்ஆன் வசனங்களை விட்டுவிட்டு எமக்கு தேவையானதை மாத்திரம் எடுத்தால் இந்நிலை தவிர்க்க முடியாததாகும்.

சரி எவ்வாறு எடுத்தாலும் – அடிபணிவது தொடர்பாக வரக் கூடியது சாலச் சிறந்தது என்பதற்கு பின்வரும் வசனமும் ஆதாரமாக இருக்கின்றது.

27:24. இல் “அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு (ஸுஜூது செய்வதை) அடிபணிவதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. 

என குர்ஆன் கூறுகிறது. வணக்கத்திற்காக செய்வது ஒருபுறமிருக்க, அடிபணிவது என்று 12:100 க்கு விளக்கம் கொடுப்பதை விட மேற்கூறப்பட்ட வசனங்களுக்கு விளக்கம் கொடுப்பதுவே மிகவும் தகுதியுடையதாகும் என்பதை இவற்றை வாசிக்கும் நடுநிலையாளர்கள் கண்டு கொள்வார்கள். 
மேலும்,

12:100 இல் அல்லாஹ் ஹர்ரூலஹூ – விழுந்தார்கள் என்று கூறுகிறான். கட்டுப்பட்டார்கள் என்றால் எதற்கு கட்டுப்பட்டார்கள் என்று இருக்க வேண்டும். அப்படி எதுவும் கிடையாது. கட்டுப்பட்டு விழுந்தார்கள் என்றும் எவ்வாறும் பொருள் கொள்ள முடியாது. அதிலும் சிம்மாசனத்தில் அமர வைத்து, கட்டுப்பட்டு விழுந்தார்கள் என்றால் எங்கே பொருந்துகிறது.

ஆகவே இவ்விடம் – ஸூஜூதில் விழுந்தார்கள் என்பதுவே சாலப் பொருத்தமானது. அல்லாஹ் இவ்வாறு ஸூஜூது செய்வதை தடுக்கவில்லை. 41:37 அடிபணிவதற்கே மிகவும் பொருத்தமானது. ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். உங்கள் கொள்கையின் பிரகாரம் உங்களுக்கு விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் – அங்கே யூசுப்(அலை) அவர்கள் தாய் தந்தையரை சிம்மாசனத்தில் அமர்த்தி தான் கட்டுப்பட்டார்கள் என்றால் – அதற்கு முன்பும் பின்பும் அவரது பொற்றோருக்கு கட்டுபடாமலா இருந்தார்கள்? ஒன்றை விட்டுவிட்டு இன்னுமொன்றுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

//12:4 இல் சூரியன் சஜதா செய்தது என்றல் சூரியன் சிரம் பணிந்தது என்று பொருள் செய்ய மாட்டோம், கட்டுப்பட்டது என்று தான் பொருள் செய்வோம். // எனக் கூறியுள்ளீர்கள். ஆனால் நாம் அவ்வாறு பொருள் கொள்ள மாட்டோம்.

புஹாரி – 3199 சூரியன் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் சஜ்தா செய்யப் போகின்றது சஜ்தா செய்து கிழக்கிலிருந்து உதிக்க அனுமதி கேட்கும் எனவும் ஒரு நாள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த வழியே திரும்பி விடு என்றும் கூறுகிறது. 
அது மனிதனை போன்று கை,கால் , நெற்றி பட சஜ்தா செய்கின்றதா? என்றால் இல்லை ஆனால் சஜ்தா செய்கின்றது அது எவ்வாறு என்பது எமக்கு தெரியாது. அல்லாஹ் வானம் பூமி அவற்றில் உள்ளவைகள் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதாக கூறிவிட்டு, - அவற்றை எம்மால் உணர்ந்து கொள்ள முடியாது என்று கூறுகிறான். எமக்கு எவ்வாறு என்று தெரியாது என்பதற்காக அது சஜ்தா இல்லை என்பது பிழையான வாதமாகும்.

அதனையும் மீறி கட்டுப்பட்டார்கள் என்றால் எதற்கு கட்டுப்பட்டார்கள் என்று இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் காட்டுங்கள். 

அதே போன்று மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு சிரம்பணிதலும் ஆதம் (அலை) அவர்கள் கட்டுப்பட்டார்கள் என்றால் என்ன வாதம் இது. இவை உங்கள் அறியாமையாக விளங்கிவில்லையா..?? 
அவ்வளவு துாரம் பதில் அளித்து விட்டு – ஹதீஸ் பற்றி கேட்டதற்கு வாயே திறக்கவில்லையே! பார்த்தீர்களா? தற்போது கூறுங்கள் ஹதீஸ் – ஸஜ்தா செய்வதை குறிக்கின்றதா? அடிபணிவதை குறிக்கின்றதா? ஆதாரத்துடன் நிரூபிக்கவும்.Nashid Ahmed

41:37 வசனத்தில் சுஜூத் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் செய்ய வேண்டும் என்று வருகிறது, இந்த வசனத்தில் சுஜூத் என்பது சிரம் பணியுதல்.ஆகவே 12:100 வசனத்தில் வரும் சுஜூதுக்கு சிரம் பணிதல் என்கிற அர்த்தம் வராது என்பதை எனது முதல் சான்றாக வைத்திருந்தேன்.இதற்கு பதிலாக‌, 41:37 வசனத்திற்கு அடி பணிதல் என்று பொருள் வைக்கிறீர்கள்.

சஜதா என்பதற்கு இரண்டு பொருள் என்பதை விட இரண்டு வகையான பொருள் என்பதே சரி.ஒரு வகை,தொழுகையில் நாம் செய்யும் முறையிலான வணக்கம்.இன்னொரு வகை,மதித்தல்,பணிவு காட்டுதல்,கட்டுப்படுதல், கீழ்படிதல்.41:37 வசனத்தில் எந்த வகையிலான அர்த்தத்தை கொடுக்க வேண்டுமோ அந்த அர்த்தத்தை 12:100 வசனத்திற்கு கொடுக்க கூடாது. இது தான் எனது அடிப்படை வாதம். 
சூரியனுக்கு சுஜூத் செய்யாதீர்கள், அல்லாஹ்வை வணங்குகிறீர்கள் என்றால் அவனுக்கே சுஜூத் செய்யுங்கள் என்கிற இடத்தில் கீழ்படிதலோ மரியாதை செலுத்துவதோ பணிவு காட்டுதலோ வராது. சிரம் பணிதல் என்கிற அர்த்தம் தான் வரும். ஸஃபா நாட்டு மக்கள் சூரியனை வணங்கக்கூடியவர்கள் என்பதற்கும், அவர்கள் தலையை நிலத்தில் வைத்து வணங்குவார்கள் என்பதற்கும் ஏராள‌மான சான்றுகள் உள்ளன, 27:24 வசனமும் கூட அன்னாட்டு மக்களை பற்றி தான் பேசுகிறது.
ஆக, என்ன அர்த்தம் 41:37 வசனத்திற்கு வருமோ, அந்த சுஜூத் அல்லாஹ்வுக்கு மட்டும் தான். அந்த சுஜூதை யூசுஃப் நபியின் சகோதரரக்ள் செய்ய மாட்டார்கள். 

41:37 க்கு நீங்கள் மரியாதை செலுத்துதல் என்று அர்த்தம் வைத்தால் 12:100 இல் அவர்கள் நபிக்கு மரியாதை செலுத்தினார்கள் என்று அர்த்தம் வைக்க கூடாது.
41:37 வசனத்திற்கு நீங்கள் சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைத்தால் 12:100 இல் அவர்கள் நபிக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைக்க கூடாது. இது தான் அல்லாஹ்வின் கட்டளை.

எனது பொருள், 41:37 இல் சிரம் பணிதல் என்பது. ஆகவே 12:100 க்கு சிரம் பணிதல் இல்லை என்கிறேன்.

நீங்களோ 41:37 இல் கட்டுப்படுதல் என்கிறீர்கள். அப்படியானால் 12:100 இல் கட்டுப்படுதல் என்கிற பொருளை நீங்கள் கொடுக்க கூடாது, சிரம் பணிதலை தான் கொடுக்க வேண்டும். அது அதை விடவும் பாரதூரமான தவறு. உங்கள் வாதப்படியே, அல்லாஹ் அல்லாதோருக்கு அடி பணிவதே தவறு என்றால் சஜதா செய்வது அதை விடவும் பெரிய தவறு. ஆகவே எந்த வகையிலும் முரண்படுவது நீங்கள் தான். 

அடுத்து, 12:4 இல் சூரியன் தமக்கு சஜதா செய்ததாய் யூசுஃப் நபி கனவு கண்டது சிரம் பணிதல் என்கிறீர்கள். எந்த அறிவார்ந்த சபையிலும் ஏற்றுக்கொள்ளதகாத, வினோதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து உங்கள் நிலையை சப்பை கட்டு கட்டி நியாயப்படுத்த தான் முயல்கிறீர்களே தவிர உண்மையை புரியும் எண்ணம் உங்களுக்கு இருப்பதாய் தெரியவில்லை.
சூரியனுக்கு மனிதன் சிரம் பணியலாம், மனிதனுக்கு சூரியனால் சிரம் பணிய முடியாது.
அதை விட, இந்த இடத்தில் யூசுஃப் நபி சிரம் பணிதலை பற்றி பேசவே தேவையில்லை. அவர்களது சகோதரர்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் ஏற்பதாகவும், யுசுஃப் நபிக்கு கட்டுப்படுவதாகவும் அவர்கள் கனவு காண்கிறார்கள். அது தான் அந்த வசனம் சொல்வது.அந்த கனவுக்கு விளக்கம் தான் 12:100. 
மேலும், அதில் அந்த சகோதரர்கள் யூசுஃப் நபிக்கு கட்டுப்பட்டார்களே தவிர யூசுஃப் நபி, பெற்றோருக்கு கட்டுப்பட்டதாய் அந்த வசனம் சொல்லவில்லை. உங்களிடம் அந்த புரிதலும் இல்லை. கதையையே மாற்றுகிறீர்கள்.

கட்டுப்பட்டார்கள் என்றால் எதற்கு கட்டுப்பட்டார்கள்? என்று கேட்கிறீர்கள்.
யூசுஃப் நபிக்கு கட்டுப்பட்டார்கள், அவர்களது ஏகத்துவ தாஃவாவிற்கு கட்டுப்பட்டார்கள்.
அப்படியானால் கட்டுப்பட்டு விழுந்தார்கள் என்று ஏன் வருகிறது? 
ஹர்ரூ”(விழுந்தார்கள்) என்பது மிக அதிகம் கட்டுப்படுதல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும். இதனை பின்வரும் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள் 25:73 இந்த‌ வசனத்தில் ”விழமாட்டார்கள்” என்ற வார்த்தை ”சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ளுதல்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
அது போன்று ”பணிந்து வீழ்ந்தார்கள்” என்பதற்கு ”அதிகம் கட்டுப்படுதல்” என்பதுதான் சரியான பொருள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மேலும், இவ்வசனத்தில் பெற்றோருக்கு பணிவது பற்றியோ, ஸஜ்தா செய்வது பற்றியோ பேசப்படவில்லை. மாறாக அனைவரும் அதிகாரத்தில் இருந்த யூசுபிற்கு கட்டுப்பட்டார்கள் என்பதே சரியான விளக்கம்.
பெற்றோர் இருவரையும் சிம்மாசனத்தில் வைத்து இருவருக்கும் அவர்கள் பணிந்திருந்தால் ”அந்த இருவருக்கும் பணிந்தனர்” என்றுதான் அல்லாஹ் கூறியிருக்க வேண்டும்.மாறாக ”அவருக்கு” என்ற ஒருமையாகவே அல்லாஹ் கூறியுள்ளான்.எனவே இது அனைவரும் யூசுபிற்கு பணிந்தனர் என்பதையே குறிக்கிறது. 
ஆக, சிம்மாசனத்தில் பெற்றோர் வைக்கப்பட்டனர். பின்னர் பெற்றோரும் சகோதரர்களும் யூசுஃப் நபிக்கு கட்டுப்பட்டனர். இதை தான் சூரியன், சந்திரன், நட்சத்திரம் என கனவில் கண்டிருக்கிறார்கள் யூசுஃப் நபி.

12:100 வசனம் சிரம் பணிதலை சொல்லவில்லை என்பதற்கு மற்றொரு சான்று, இப்ராஹிம் நபியின் வழிமுறை.சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று இப்ராஹிம் நபி கூறியுள்ளார்கள். பார்க்க 2:125

இப்ராஹிம் நபியை யூசுஃப் நபி பின்பற்றுவதாய் 12:38 வசனம் சொல்கிறது.

அந்த வகையில், சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்கிற இப்ராஹிம் நபியின் வழிக்கு மாற்றமாய் தமக்கு சிரம் பணியும்படி யூசுஃப் நபி ஏவியிருக்க மாட்டார்கள்.ஆகவே இதன் காரணமாகவும் 12:100 வசனத்திற்கு சிரம் பணிதல் என்கிற அர்த்தம் வராது.

இதற்கு பிறகும் சிரம் பணிதல் தான் என்று சொல்வீர்கள் என்றால்,அல்லாஹ் தவிர மற்றவைகளுக்கு மரியாதை தான் செய்யக் கூடாது, சிரம் பணியலாம் என்கிற கேலியான பொருள் வரும்,
சூரியனும் சந்திரனும் தங்களது தலையை சாய்த்து (?) வணங்கின என்கிற அர்த்தமற்ற பொருள் வரும்,
இப்ராஹிம் நபி அல்லாஹ் அல்லாதவருக்கும் சிரம் பணிய அனுமதித்தார்கள் என்கிற பொருள் வரும்.

ஆக, நீங்கள் எந்த வாதம் புரட்டினாலும் நிற்காது . சிரம் பணிதல் என்று வரும் இடத்திற்கு கட்டுப்படுதல் என்கிறீர்கள், கட்டுப்படுதல் என்கிற இடத்தில் சிரம் பணிதல் என்கிறீர்கள். ஏறுக்கு மாறாய் புரிகிறீர்கள் மார்க்கத்தை !Ifham Mohamed

இந்த தலைப்பின் இதுவே எனது இறுதியான கருத்துப்பதிவாகும். இறுதியாக முன்வைத்த எனது கருத்துப்பதிவிற்கு பாதிக்கு மேல் பதில் வரவில்லை என்பதை வாசிப்பவர்கள் இலகுவாக அறியலாம். எனினும் இனி பதில் அளித்தாலும் அதற்கு பதில் அளிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கப்பெற மாட்டாது. இவ்வாறான விவாதங்களில் இம்முறையில் தந்திரங்களை கையாள்வது மோசடியாகும்.

மனிதன் மனிதனுக்கு சஜ்தா செய்யக் கூடாது என்பது தான் எனது நிலைப்பாடும். ஆனால் இவர்கள் குர்ஆன் ஹதீஸை பிழையான கோணத்தில் அணுகுவதனை சுட்டிக்காட்டுவதே இத்தலைப்பின் நோக்கமாகும். இருவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு தலைப்பில் விவாதிப்பதால் ஒரு சில வேலை சிலருக்கு குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இதன் நோக்கம் குர்ஆன் ஹதீஸ் தமக்கு ஏற்றாற் போல் எவ்வாறெல்லாம் வளைக்கின்றார்கள் என்பதுவேயாகும்.

இந்த அடிப்படையில் – 
சலாம் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம், 
ஹதீஸில் இடைச் செருகல் –
4:23,24 இற்கு தனது கொள்கைக்கு மாற்றமான மலுப்பல்களுக்கு பதில் வரவில்லை 
மேலும் –

எடுத்துக் கொண்ட தலைப்பிலே “ஹதீஸில் கூறப்பட்டுள்ள சஜ்தாவின் நிலைப்பாடு பற்றி பல முறை வினவப்பட்டும் இறுதிவரை பதில் அளிக்கவில்லை என்பதில் இருந்து இவர்கள் அல்லாஹ்வின் வஹியை தமக்கு ஏற்றாற் போல் பொருள் கொடுத்து வளைக்கின்றார்கள் என்பது உறுதியாகிறது. 
இவையாவற்றிற்கும் இனி பதில் வந்தாலும் எனக்கு பதில் அளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற மாட்டாது என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.

41:37 வசனம் வணங்குவதை பற்றி பேசுகின்றது என்றதும் இல்லை இல்லை அவ்வாறெல்லாம் கிடையாது என்று அடம் பிடித்தவர், தற்போது ஸஃபா நாட்டு மக்கள் சூரியனை வணங்கினார்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றார். எனது இறுதிப்பதிவிலே அதற்கும் சேர்த்து தான் பதிலாக 27:24 வசனத்தை முன்வைத்திருந்தேன் அதனை தற்போது ஏற்றுக்கொள்கின்றார். 

ஆகவே தான் ஏனைய குர்ஆன் வசனங்களை கருத்திற் கொள்ளாமல் ஒரு வசனத்தை மாத்திரம் கொண்டு தமது நிலைக்கு வளைத்ததினால் ஏற்பட்ட விளைவு எனக் கூறியிருந்தேன்.
41:37 இல் சூரியனையும் சந்திரனையும் வணங்கிக் கொண்டு அவற்றிற்கு சஜ்தா செய்தவர்களிடமே இருந்தவர்களிடமே, அவற்றிற்கு சஜ்தா செய்யாமல் அல்லாஹ் வணங்குவதாக இருந்தால் அல்லாஹ்விற்கு சஜ்தா செய்யுங்கள் என்று கூறுகிறான் என்பது இவரது வாக்குமூலமே சான்றாகிறது. 

அடுத்து, சிரம் பணிதல் என்று எடுக்க முடியாது என்பதற்கு அவரது நிலைப்பாட்டிற்கு மாற்றமாக அவரே ஸஃபா நாட்டு மக்கள் தலையை நிலத்தில் வைத்து வணங்குவார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருப்பதாக கூறுகிறார். ஆனால் ஒரு ஆதாரத்தையேனும் முன்வைக்கிவில்லை. இது எனது இறுதிப்பதிவு என்று அறிந்தும் இதில் முன்வைக்காததும் ஒரு தந்திரமாகும். முன்வைத்திருந்தால் பதில் அளித்திருக்கலாம். ஆனால்..???

சூரியனின் சஜ்தா பற்றி – புஹாரி 3199 நேரடியாக கொடுக்கிறேன். இதனை எந்த அறிவார்ந்த சபையிலும் ஏற்றுக்கொள்ளாத வினோதமான கருத்து என்கிறீர்கள். உலகிலே அறிவாளர்கள் நீங்கள் மாத்திரம் தான் கூறிக் கொள்ளுங்கள். நான் எனது விளக்கங்களை கூறி ஹதீஸை திரிக்கவில்லை. உள்ளதை உள்ளபடி முன்வைத்துள்ளேன்.
a few seconds ago · Like

Ifham Mohamed யூசுப் (அலை) அவர்களுக்கு தான் அவர்களது தந்தையும் தாயும் சகோதரர்களும் சஜ்தா செய்தார்கள். நான் யஃகூப் (அலை) என்று கூறியது என்னில் ஏற்பட்ட தவறாகும்.

//41:37 வசனத்திற்கு நீங்கள் சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைத்தால் 12:100 இல் அவர்கள் நபிக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைக்க கூடாது. இது தான் அல்லாஹ்வின் கட்டளை.//
என அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகின்றீர்கள். உங்கள் விளக்கங்களுக்கு அல்லாஹ்
வையும் பலிகாடாக்காதீர்கள். அல்லாஹ் எங்கே இவ்வாறு கட்டளையிடுகிறான் என்பதை எடுத்துக்காட்டவும்.

அல்லாஹ் அவனை தவிர வேறு யாருக்கும் சஜ்தா செய்ய வேண்டாம் என்றால் தான் அது தவறானவோ பாவமாகவோ மாறும். மாறாக மனிதனுக்கு சஜ்தா செய்வது கூடாது என்று கொள்கையை உருவாக்கிக் கொண்டு 41-37 அடிபணிவதை குறிக்கின்றது 12-100 மனிதனுக்கு சஜ்தா செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக இருந்தால் மனிதனுக்கு சஜ்தா செய்வது கூடும் என்று வருமே ஒளிய, நீங்கள் எடுத்து கொள்கையை வைத்துக் கொண்டு அடிபணிவதை விட சஜ்தா செய்வது பெரும் தவறு என்பதற்கு ஆதாரம் இல்லாமல் போகும் என்பதை கூட நீங்கள் விளங்க மறுக்கின்றீாகள்.

கட்டுப்படுவதை தான் அல்லாஹ் சஜ்தா என்று நீங்கள் விளக்கம் கூறிக் கொண்டு – யூசுப்(அலை) அவர்களின் ஏகத்துவத்திற்கு கட்டுப்பட்டார்கள் என்று கூறுவது வியக்கத்தக்க வாதம் அங்கே சஜ்தா செய்தவர்களில் யஃகூப் (அலை) உம் ஒருவர். 12:38 இல் அல்லாஹ் யஃகூப் (அலை) வழிமுறையும் யூசுப்(அலை) பின்பற்றுவதாக கூறுகிறான். சுயவிளக்கத்தில் தவறியது. இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்த்தை பின்பற்றியது பற்றி எழுதியிருக்கின்றீர்கள். 

எல்லா நபிமார்களுக்கும் அடிப்படை ஒன்று ஆனால் ஷரிஅத் வித்தியாசப்படும். யூசுப்(அலை) அவர்களின் ஷிரிஅத்தில் மனிதனுக்கு சஜ்தா செய்வதற்கான தடையை காட்டவும். மேலும் - //அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று இப்ராஹிம் நபி கூறியுள்ளார்கள். பார்க்க 2:125//
எவ்வாசகம் கூறுகிறது காட்டுங்கள்.

ஹர்ரூ –வுக்கு விளக்கமாக : 25:73 கொண்டுவருகிறீர்கள். எந்த ஒரு வாசகத்திற்கும் அதன் நேரடிப்பொருள் மறைமுகப் பொருள் என இரண்டுவகையான பொருள் கொள்ளலாம். ஒரு வாசகத்திற்கு நேரடிப் பொருள் கொடுக்க முடியாத இடத்தில் மறைமுக பொருள் தான் கொடுக்க வேண்டும் அதனை ஆதாரமாக கொண்டு வந்து நேரடிப்பொருள் கொடுக்க முடியுமான இடத்தில் மறைமுகப் பொருளாக்க முயற்சி செய்வது உங்கள் அறியாமையாகும்.

சுருக்கம் – 
குர்ஆனிலே சஜ்தா என்ற கூறுவது இஸ்லாமிய பரிபாஷையில் உள்ள சஜ்தாவாகும். யூசுப்(அலை) அவர்களுககு ஆகுமாக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் நமக்கு தடை செய்கின்றார்கள். ஆனால் குர்ஆனை கொண்டு ஹதீஸ்களை அணுகவேண்டும் என்ற அடிப்படையற்ற உங்கள் கொள்கையின் பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் தடை செய்த ஹதீஸ் குர்ஆனுக்கு மாற்றம் என்று ஒதுக்க(?) வேண்டியது ஆனால் “கூடாது” என்ற கொள்கைக்காக குர்ஆனிற்கு சுயவிளக்கம் கொடுக்கின்றீர்கள். “கட்டுப்பட்டான் என்பதற்கு குர்ஆனிலே –இத்திபா என்ற வாசகமும் இன்னும் சிலவும் பயன்படுத்தப்பட்டள்ளது. சுஜூத் என்று பயன்படுத்தவில்லை. உங்கள் கொள்கையை காப்பற்றுவதற்கு பலத்த முயற்சி மேற்கொண்டீர்கள் எனினும் எக்கோணத்தில் சென்றாலும் உங்கள் கொள்கையின் விரிசல் துலாம்பரமாக தெரிகிறது. 

குர்ஆன் ஹதீஸில் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதே ஒரு முஸ்லிமின் பண்பாகும் தமக்கு ஏற்றாற் போல் அதனை வளைப்பது மிகப்பெரும் மோசடியாகும்.

ஆக நீங்கள் பதில் அளிக்காது விட்டது தொடக்கம் நீங்கள் செய்த பல மோசடிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குர்ஆன் வசனங்களில் இல்லாததை கொண்டு வந்து புகுத்தி உங்கள் சுயவிளக்கத்தினை நிலைநாட்ட எடுத்த முயற்சியில் நீங்கள் தேரவில்லை என்பதுவே நடுநிலையாளர்களின் கணிப்பாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
Nashid Ahmed

நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் கூட ஆதரிக்காத, மிகவும் பாமரத்தனமான வாதங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். விவாதம் என்று ஒப்புக்கொண்டால் எதையாவது பேசித்தானே ஆக வேண்டும் என்பதற்காக தான் பேசுகிறீர்கள் என்பதை நடுனிலையாளர்கள் புரியத்தான் செய்வார்கள்.

அல்லா
ஹ்வை தவிர வேறு எவருக்கும் சிரம் பணியக்கூடாது என்று 41:37 வசனம் கூறும் போது, யூசுஃப் நபி தமக்கு சிரம் பணிவதை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆகவே 12:100 வசனத்தில் வரும் சஜதாவுக்கு சிரம் பணிதல் என்கீற அர்த்தம் கொடுக்க கூடாது.இது மிகவும் சாதாரண புரிதல். 

இதற்கு பதில் சொல்கீறேன் பேர்வழி என்று 10 நாட்கள் எந்த சம்மந்தமுமில்லாமல் பேசி, நேரத்தை தான் கடத்துகிறீர்கள். 41:37 வசனம் சிரம் பணிதலை சொல்லவில்லை என்கிறீர்கள். சஜதாவுக்கு கட்டுப்படுதல், கீழ்படிதல் போன்ற பல அர்த்தங்கள் இருந்தாலும் கூட இங்கே அவையெதுவும் பொருந்தாது,சிரம் பணிதலை தான் சொல்லும். இதை அனைவரும் ஏகமனதாய் ஒப்புக்கொள்வர்.
ஏனெனில்,சூரியன் ஏதும் கட்டளை பிறப்பித்தால் தான் அதற்கு கீழ்படிதல், கட்டுப்படுதல் என்கிற நிலை வரும். கட்டளை எதுவும் பிறப்பிகாத வெறும் பொருளாக ஒன்று இருந்தால் அது பற்றி பேசுகையில் அதற்கு கீழ்பணிந்தார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள், அதிலும், அவ்வாறான செயல் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாய் பேசும் இடத்தில் கீழ்படிதலையோ கட்டுப்படுதலையோ மரியாதை செய்வதையோ அல்லாஹ் சொல்ல மாட்டான், மாறாக, எது வணக்கமோ அந்த அர்தத்தை தான் அல்லாஹ் சொல்வான்.ஸஃபா நாட்டு மக்கள் கூட சூரியனுக்கு சிரம் பணிந்து தான் வணங்கினர்.
சிரம் பணிதல் தான் வணக்கம்.

மேலும், என்னை வணங்குபவர்களாக நீங்கள் இருந்தால் எனக்கு சஜதா செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்தே இங்கு சொல்லப்படும் சஜதா என்பது வணக்கத்தோடு தொடர்புடைய சஜதா என்று எளிதில் புரியலாம். வணக்கத்துடன் தொடர்புடைய சஜதா என்பது சிரம் பணிதல்.அதை தான் நம் தொழுகையில் செய்கிறோம். தவிர, அல்லாஹ்வுக்கு தான் கட்டுப்பட வேண்டும் என்று அல்லாஹ் சொல்ல மாட்டான். கட்டுபடுதல் அல்லது கீழ்படிதல் என்கிற அடிப்படையில் சிந்திக்கையில் அதை அல்லாஹ் அல்லாத ஒரு படைப்புக்கு செய்வது தவறொன்றுமில்லை. ஆனால் அல்லாஹ் தவறென்கிறான் என்றால் இங்கு சொல்லப்படும் சஜதா என்பது கட்டுப்படுதல் இல்லை, எதை செய்தால் வணக்கமாக கருதப்படுமோ அந்த சஜதா தான் இங்கு சொல்லபப்டுவது.

அத்தகைய சஜதாவை தான் 41:37 வசனம் பேசுகிறது. ஆகவே அந்த அர்த்தத்திலான சஜதா 12:100 வசனத்தில் நிச்சயம் பயன்படுத்தப்படாது. காரணம், அந்த அர்தத்திலான சஜதாவை அல்லாஹ்வுக்கே தவிர வெறு எவருக்கும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் சொல்கிறான்.

மேலும்,12:100 வசனத்த்தை பொறுத்தவரை, 12:4 வசனத்திற்கான விளக்கம் தான் அது. 12:4 இல் வரும் சஜதா என்பது கட்டுப்படுதல். காரணம், அதில் சூரியன் தமக்கு சஜதா செய்வதாய் யூசுஃப் நபி சொல்வதாக வருகிறது.

சூரியனுக்கு தலையோ கைகளோ இல்லை. ஆகவே சிரம் பணிதலை இது குறிக்கா
து.மேலும், 
தமது தூதுத்துவத்தை ஏற்காமல் இருக்கும் தமது சகோதரர்கள் பின்னாளில் ஏற்று யூசுஃப் நபிக்கு கட்டுப்படுவார்கள் என்கிற முன்னறிவிப்பு தான் அந்த வசனம். ஆகவே சூரியன் எனக்கு சஜதா செய்வதாய் நான் கனவில் கண்டேன் என்று அவர்கள் சொல்வது சூரியன் எனக்கு கட்டுப்படுவதாய் கண்டேன் என்பதாகும்.
12:100 இல்,சகோதரர்கள் தனக்கு சஜதா செய்வதாய் யூசுஃப் நபி சொல்லி விட்டு,இது தான் அன்று நான் கண்ட கனவின் (12:4) விளக்கம் என்கிறார்கள். ஆக, இந்த வசனத்தில் யூசுஃப் நபிக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைக்க முடியாது, கட்டுப்பட்டார்கள் என்பதே இந்த அடிப்படையிலும் சரி.

இது தவிர, அல்லாஹ்வுக்கு மட்டும் தான் சஜதா என்று இப்ராஹிம் நபி சொல்லியிருக்க,(2:125), இப்ராஹும் நபியை யூசுஃப் நபி பின்பற்றினார்கள் என்றும் அல்லாஹ் சொல்லியிருக்க,இதன் காரணமாகவும் 12:100 சிரம் பணிதலை சொல்லவில்லை என்றும் விளக்கியிருந்தேன்.

உங்கள் கொள்கைக்கு நேரடி மறுப்பாய் இருக்கும் இந்த செய்தியை கூட அவசர அவசரமாக மறுக்கத்தான் முயற்சிக்கிறீர்கள் என்பதிலிருந்து, சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை என்று தெரிகிறது.
அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் சஜதா செய்யக்கூடாது என்று 2:125 இல் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் இருக்கிறது. காபாவில் ஏற்கனவே சிலைகளுக்கு சஜதாக்கள் நடந்து வந்த போதும் அதை சுத்தப்படுத்தி அல்லாஹ்வுக்கு சஜதா செய்யும் இடமாக ஆக்கினார்கள் என்று சொல்லப்பட்டால் சஜதா அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று இதிலேயே புரிகிறது. 
அது போக, அதே வசனத்தில் மக்கள் ஒன்று கூடும் இடமாக ஆக்கியதாக சொல்லப்படுகிறது. காபா மட்டும் தான் மக்கள் ஒன்று கூட வேண்டிய ஒரே இடம் என்று இதற்கு அர்த்தம்.பாதுகாப்பு மையம் என்று சொல்லப்படுகிறது.அது தான் ஒரே பாதுகாப்பு மையம் என்று புரிய இடமுள்ளது.

அது போக, அந்த வசனத்திலேயே அல்லாஹ்வுக்கு சஜதா செய்வதை சொல்வதோடு தவாஃப், இஃதிகாஃப், ருகூஃ என பலவற்றை அல்லாஹ் சொல்கிறான். எப்படி தவாஃப் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமோ, எப்படி ருகூஃ செய்வதும் இஃதிகாஃப் இருப்பதும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்ய வேண்டுமோ, அது போல சஜதாவும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான். 
ஒரே மாதிரியான பல செய்திகளில் சஜதாவுக்கு மட்டும் தனி பார்வை என்பது பார்வையின் கோளாறு.

நான் ஏற்கனவே சொன்னது போல, இது தொடர்பாய் எந்த வாதம் புரட்டினாலும் வெறும் சமாளிப்பாய் தான் கருதப்படுமே தவிர,உண்மை என்ன என்பது இந்த விஷயத்தில் பளிச்சென தெரிகிறது. எது கீழ்படிதலையும் மரியாதை செலுத்துவதையும் குறிக்குமோ அதற்கு அந்த அர்த்தத்தை கொடுங்கள். எதற்கு தலை வணங்குதலை சொல்ல வேண்டுமோ அதற்கு அதை பொருத்துங்கள். இந்த மொத்த விவாதமும் உங்களிடம் இருக்கும் குழப்பத்தையே காட்டுகிறது.

நேர்வழிக்கு அல்லாஹ் போதுமானவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக