திங்கள், 2 டிசம்பர், 2013

இஸ்மாயில் சலஃபிக்கு பாராட்டுக்கள் !


இஸ்மாயில் சலஃபி மீது ஈமான் கொண்டிருக்கும் போலி சலஃபிகளுக்கு அவ்வபோது மூக்குடைப்பு, இஸ்மாயில் சலஃபியிடமிருந்தே கிடைக்கும் என்பது வேடிக்கையான ஒன்று !

தவறான கொள்கையுடைய எவரது உரையையும் நாம் பகிர்வது கிடையாது என்ற போதிலும், இஸ்மாயில் சலஃபியின் இந்த எட்டு நிமிட உரையை நான் பகிர்கிறேன், 
காரணம், நாம் என்ன கொள்கையில் இருக்கிறோமோ, அதை தான் இதில் அவர் விளக்கமாக கூறுகிறார்.

அறிந்து தான் பேசுகிறாரா அல்லது கவனமின்மையால் நம் கொள்கை பக்கம் சாய்கிறாரா என்று இதை கேட்டு விட்டு சொல்லுங்கள்.

சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் புக மாட்டான் என்கிற ஹதீஸை குறித்து கேள்வி கேட்கப்படுகிறது.

இதோ அவரது பதிலின் சாராம்சம் :

அந்த ஹதீஸ் சஹீஹா லயிஃபா என்பது குறித்து சர்ச்சை இருக்கின்ற போதும் நான் அதை சஹீஹ் என்று தான் கூறுகிறேன்.

இதே மாதிரியான வாசகத்தைக் கொண்டு வரும் இன்னொரு ஹதீசை பாருங்கள், யார் அல்லாஹ்வால் மழை பொழிந்தது என்று சொல்கிறார்களொ அவர்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்டு நட்சத்திரத்தை மறுத்தவர்கள். யார்
நட்சத்திரத்தால் மழை பொழிந்தது என்று சொல்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை மறுத்து நட்சத்திரத்தை நம்பியவர்கள்.

இங்கு நட்சத்திரத்தை நம்பியவர்கள் என்றால் வானத்தில் நட்சத்திரம் இருக்கிறது என்று நம்பியவர்கள் என்று அர்த்தமா அல்லது நட்சத்திர சாஸ்த்திரம் என்று சொல்கிறார்களே, அவற்றை உண்மை என்று நம்பியவர்கள் என்று அர்த்தமா? நட்சத்திரம் இருப்பது உண்மை, ஆனால் அதன் ஓட்டம் மூலமாகத் தான் உலகில் மாற்றம் நிகழ்கிறது என்று சொல்வது பொய், அப்படி நம்பக் கூடாது, அல்லாஹ்வால் தான் மாற்றம் நிகழ்கிறது. அது தான் இந்த ஹதீஸின் பொருள் !

அதே போல, சூனியத்தை நம்பக்கூடாது என்றால் சூனியம் என்கிற ஒரு வித்தை இருப்பத்தை நம்பக் கூடாது என்று பொருள் இல்லை, அத்தகைய வித்தை இருந்தாலும் அத்தகைய சூனியத்திற்கு எந்த சக்தியும் இல்லை, வித்தை காட்டுகிற சூனியக்காரனுக்கு எந்த ஆற்றலும் கிடையாது, ஆற்றல் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே !

என்று கூறி விட்டு, சூனியத்திற்கு என எந்த ஆற்றலும் கிடையாது என்பதற்கு குர் ஆனிலிருந்தே ஆதாரத்தையும் காட்டுகிறார் 

அதாவது மூசா நபிக்கு எதிராக சூனியம் செய்த வித்தைக்காரர்கள் செய்தவை 
கண்கட்டி வித்தை தான். 
அவர்கள் போட்டது பாம்பு போல் தோற்றம் தான் அளித்தது, 
பாம்பாகவே மாறி விடவில்லை.
ஆக சூனியம் என்பது இல்லாததை இருப்பது போல் காட்டுவது, 
போலி தோற்றத்தை உண்டு பண்ணுவது..!!

(இந்த உரையை கேளுங்கள், இப்படியே பேசுகிறார் இஸ்மாயில் சலஃபி !!)

அட ஞான மேதை சலஃபிகளே, அறிவு ஜீவிகளே, சுடரொளிகளே !!

இதை தானேயப்பா நாங்க சொல்றோம்??? சூனியத்தை உண்மை என நம்பாதீர்கள், அது வெறும் பொய், போலி, கண் கட்டி வித்தை, கண்களுக்கு உண்மை போல் தோற்றமளிக்கும்.

இப்போ உங்க முல்லா இஸ்லாமியில் சலஃபி சொல்றதையாவது கேட்டு உங்க நம்பிக்கையை சரி செய்துக்கோங்க...

ஏகத்துவக் கொள்கையின் பக்கம் நெருங்கி வரும் இஸ்மாயில் சலஃபிக்கு எமது பாராட்டுக்கள் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக