திங்கள், 2 டிசம்பர், 2013

வறுமைக்கோடு


இந்தியாவின் பல கணக்கெடுப்பு முறைகள் பொது மக்களின் பொருளாதார நிலையை மைய்யப்படுத்தி தான் செயல்படுத்தப்ப்ட்டு வருகின்றன.

பொருளாதார நிலைப்படி மக்களை வறுமைகோட்டிற்கு மேலுள்ளவர்கள், வறுமைகோட்டிற்கு கீழுள்ளவர்கள் என வகைப்படுத்தியுள்ளது இந்திய அரசு.

அதன் படி கீழ்காணும் நிலையை அடைந்தவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் ஆவார்கள்.

அடிப்படை கட்டமைப்பு வசதியில்லாத வீடுகளில் (குடிசைகளில்) வாழ்பவர்கள்.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாய் வைத்திருப்பவர்கள்.

சொந்தமாய் இடம் வைத்திருக்காதவர்கள்.

ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை விட அதிகம் பெறாதவர்கள்

படிப்பறிவு இல்லாதவர்கள்.

தினக்கூலி வேலை பார்ப்பவர்கள்

டிவி, மிக்சி போன்ற வீட்டு உபகரணங்கள் கொண்டிருக்காதவர்கள்.

தனிப்பட்ட முறையில், மறைக்கப்பட்ட கழிப்பிட வசதியில்லாதவர்கள் (திறந்த வெளி கழிப்பிடம் பயன்படுத்துபவர்கள்)

பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப இயலாதவர்கள்

சுகாதாரமான குடிநீர் பெறூவதற்கு வழியில்லாதவர்கள்


மேலே உள்ளவை தாம், வறுமை கோட்டிற்கு அரசாங்கம் கொடுத்துள்ள இலக்கணம்.

ரங்கனாத் மிஷ்ரா அறிக்கையின் படி இஸ்லாமிய மக்களின் நிலை என்ன தெரியுமா?

நூற்றுக்கு 31 சதவிகிதம் முஸ்லிம்கள் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர் !!

இந்திய அரசு எந்த அளவிற்கு அடிமட்ட நிலையை வறுமை கோட்டிற்கு கீழுள்ள நிலை என்று கூறுகிறது என்பதையும், அந்த அதளபாதளத்திலும் கூட 31% முஸ்லிம்களின் நிலை இருப்பதையும் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இந்த புள்ளி விவரத்தை கூட இன்னும் சில கூறுகளாய் பிரித்துள்ள ரங்கனாத் மிஷ்ரா, 

35% முஸ்லிம்கள், சுகாதாரமான குடி நீர், கழிப்பிட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும்,

40% முஸ்லிம்கள் அடிப்படை கட்டமைப்பு வசதி கூட இல்லாத வீடுகளில் வசிப்பதாகவும் மேலும் அதிர்ச்சி தருகிறார்.

இட ஒதுக்கீட்டை நம் அடையும் பட்சத்தில் இந்த பரிதாபகரமான நிலை இறையருளால் நிச்சயம் மாறும்.


மாற்றத்திற்கு நாமே விதையிடுவோம், இன்ஷா அல்லாஹ் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக