திங்கள், 2 டிசம்பர், 2013

அகராதி சொல்லும் பயன்பாடும்


குர் ஆனில் இருக்கும் சில அரபு வார்த்தைகள் குர் ஆன் அருளப்படுவதற்கு முன்பே அரபுலகத்தில் புழக்கத்தில் இருக்கும்.

ஆனால், அரபுலகம் அதை பயன்படுத்தும் பொருளுக்கும் குர் ஆன் அது குறித்து குறிப்பிடுவதற்கும் வேறுபாடு இருக்கும்.

உதாரணமாக, சலாத் என்கிற வார்த்தை அரபுலகில் ஏற்கனவே வழமையாக இருந்த சொல் தான். பிரார்த்தனை என்று அவர்கள் பயன்படுத்தி வந்த அந்த சொல்லை குர் ஆன் தொழுகைக்கு பயன்படுத்தியது.

இது போல, சஜதா என்கிற சொல்லுக்கு பணிதல் என்கிற வார்த்தை பிரயோகம் வழக்கத்தில் இருந்தது. அதன் நேரடி பொருளும் நன்றாக பணிதல் என்பது தான்.

குர் ஆன் அருளப்பட்ட பிறகு தான் நெற்றியை நிலத்தில் வைப்பதற்கு சஜதா என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
ஆக, சஜதா என்று வரும் இடங்களிலெல்லாம் நெற்றியை நிலத்தில் வைப்பது என்கிற பொருள் தான் என்று எவராவது எண்ணினால் அது அறியாமையாகும்.

இன்னும், குர் ஆனிலும் கூட சஜதா என்பதை நன்றாக பணிதல் என்கிற அர்த்தத்தில் அல்லாஹ் பயன்படுத்தியுமுள்ளான்.

என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன் (12:4)

அவர்கள் யூஸுஃபிடம் சென்ற போது, தமது தாய், தந்தையரை தம்முடன் அரவணைத்துக் கொண்டார். 'அல்லாஹ் நாடினால் அச்சமற்று எகிப்து நகரில் நுழையுங்கள்!' என்றார்.தமது பெற்றோரைச் சிம்மாசனத் தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். (12:99,100)

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன (13:15)


இது போன்ற இன்னும் ஏராளமான வசனங்களில் முழுமையாக கட்டுப்படுதலை குறிக்க சஜதா என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக