திங்கள், 2 டிசம்பர், 2013

ஆயிஷா (ரலி) மீதான அவதூறு


நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என்பதற்கு சான்றுகளாய் இருக்கும் பல சம்பவங்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறு சம்பவமும் முக்கிய சான்றாகும்.

எந்த அளவிற்கு என்றால், தமது மனைவி பற்றி ஊர் முழுக்க செய்தி பரவிய போது, அது பற்றிய உண்மை நிலை அறியாத பெருமானார், நம்மை போன்ற சாதாரண மனிதராய் கவலைக் கொண்டார்கள், குழப்பமடைந்தார்கள் !

ஆயிஷா அவர்கள் கூறுவதாக புஹாரி 2661 இல் வரும் செய்தியில்,

இதன் காரண‌மாக முன்பு போல் தம்மிடம் நபி அவர்கள் அன்பு காட்டுவதை கூட குறைத்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆயிஷா அவர்களது பணிப்பெண் பரீராவிடம், மனைவி பற்றி விசாரிக்கிறார்கள்.

ஆயிஷா அவர்களிடமே நேரடியாக, நீ குற்றம் செய்திருக்கிறாய் என்றால் அலாஹ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொள் என்கிறார்கள்.

அனைத்தையும் விட, ஆயிஷா (ரலி) அவர்களுடனான மண வாழ்வை முறித்துக் கொள்ளலாமா என்று பேசி முடிவு செய்வதற்காக அலி (ரலி) அவர்களிடம் அபிப்பிராயம் கேட்கிறார்கள் என்கிற அளவிற்கு பெருமானார் அவர்கள் மனிதனுக்குரிய அனைத்து பலகீனங்களையும் கொண்டவர்களாக தான் இருந்தார்கள்.

24:11 ‍ 20 வசனங்களின் மூலம் ஆயிஷா அம்மா குற்றமற்றவர் என்று அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தது வரை, உண்மையை பெருமானார் அறியவே இல்லை !

அல்லாஹ் அறிவித்துக்கொடுத்தவை அவர்களுக்கு தெரியும், அறிவித்துக் கொடுக்காதவை தெரியாது.
மறைவானவற்றில் தெரிந்ததை விட அவர்களுக்கு தெரியாதவையே அதிகம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக