செவ்வாய், 8 அக்டோபர், 2013

பிறை வியாபாரிகள்


பக்கம் பக்கமாக எழுதி நோட்டீஸ் அடித்து விட்டால் நாம் சொல்வது அனைத்தும் சரி என ஆகி விடும் என்று எண்ணிக்கொண்டு திரிகிறது, ஹிஜ்ரா கமிட்டி என்கிற பிறை வியாபார கூட்டம்.

என்னதான் தாம் கேட்ட கேள்விகளுக்கு எதிர் தரப்பினர் தக்க பதில்களை சொன்னாலும், புதிதாக வேறு கேள்விகளை கேட்பதற்கு ஞானமில்லாத காரணத்தால் பதில் சொல்லப்பட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்டு வருவது சிலரது நோய்.
அத்தகைய நோய் தான் இந்த ஹிஜ்ரா கமிட்டியினரையும் தாக்கியுள்ளது என்பதை இவர்கள் பரப்பி வரும் நோட்டீசை படித்தாலே அறிந்து கொள்ளலாம்.
ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு வருவது, அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லப்படவில்லை என்பதால் அல்ல, மாறாக அந்த கேள்விகள் தான் இவர்களுக்கு தெரியும் என்பதால் !!

2 பக்கத்தில் நோட்டீஸ் அடித்திருந்தால் இவர்களது அறியாமை சிறிதளவு வெளிப்பட்டிருக்கும்.

24 பக்கங்களில் நோட்டீஸ் அடித்ததன் மூலம், இவர்களது மடமைத்தனம், மொழியறிவில் இவர்களுக்கு இருக்கும் அறியாமைகள், குர்ஆன் ஹதீஸ் விஷயத்தில் இவர்களிடம் காணப்படும் விவரமின்மை, ஹதீஸ் கலை குறித்த இவர்களது மதியீனம் என அனைத்தும் இவர்களாலேயே வெளி உலகிற்கு காட்டப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸ் பரப்பப்பட்ட ஏர்வாடி ஊர் சகோதரர்கள் சில நாட்கள் காத்திருக்கவும்,
இனியும் இவர்களது வியாபாரத்தை எங்கும் தொடர இயலாத அளவிற்கு நெத்தியடி மறுப்பு தயாராகி வருகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக