வியாழன், 10 அக்டோபர், 2013

இட ஒதிக்கீடு வழங்குவது பாரபட்சமா?



இந்தியர்கள் அனைவரும் சமம் தானே? சமமான வாய்ப்புகளும் வசதிகளும் தானே ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கப்பட வேண்டும்? பிறகு எப்படி சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் தனி ஒதிக்கீடு கேட்கலாம்? என்று சிலர் எண்ணுகின்றனர்.

பலருக்கும் அறியப்பட்ட விடையை இங்கே மீண்டும் நினைவுப்படுகிறேன்..

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி இட ஒதிக்கீடு வழங்குவதே அவர்களையும் மற்றவர்களுடன் சமமாக்குவதற்கு தான். இந்த சாதாரண உண்மையை இவர்கள் புரியவில்லை.

ஐந்தரை அடி உயரத்திற்கு மதில் சுவர் இருக்கிறது. நண்பர்கள் இருவருக்கு மதிலுக்கு மறுபுறம் இருக்கும் மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும்.
யார் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தெளிவுடன் புகைப்படம் எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர் என்று போட்டி வைக்கப்படுகிறது.

மனிதர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு தான் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக தரையில் நின்று கொண்டே மதிலுக்கு மறுபுறம் பாருங்கள் என்று சட்டம் இயற்றினால், ஆறடி உயரமுள்ளவன் மதிலுக்கு மறுபுறம் பார்த்து விடுவான். உடனடியாக புகைப்படம் எடுத்து விடுவான்.
ஆனால் ஐந்தடி உயரமுள்ளவனால் புகைப்படம் எடுக்க முடியுமா? என்றால் முடியாது.

சமம், சமம் என்று இவர்கள் சொல்வது இலக்கை அடிப்படையாய் வைத்து தானே தவிர, அவ்விலக்கை அடைவதற்கான காரிணிகளை மையப்படுத்தியல்ல !

இந்த இரு நண்பர்களும் மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிற சமமான இலக்கு தான் விதிக்கப்பட்டது.

இலக்கு சமமானது தான் என்றாலும் அந்த இலக்கை அடைவதற்கான வழி சமமாக்கப்பட்டதா? என்றால் இல்லை.

இது தான் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

சிலர், அவர்களுக்கு சலுகை வழங்குகிறீர்களே, அப்படியானால் எங்களுக்கும் சலுகை தாருங்கள், சலுகை வழங்குவதில் சமமாக்குங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இதுவும் அறியாமையின் உச்சமே தவிர வேறில்லை.

ஐந்தடி உயரமுள்ளவன் மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு அடி உயரமுள்ள நாற்காலியை சலுகையாக கொடுத்தால் இந்த சலுகையை ஏற்றுக்கொண்டு, நாற்காலி ஏறாத அவனது நண்பனின் உயரத்துடன் சமமாக தான் ஆகிறானே தவிர அவனது நண்பனை விடவும் உயர்ந்து விடவில்லை.

அவனுக்கு நாற்காலி கொடுத்தீர்களே, ஆகவே எனக்கும் தாருங்கள் என்று அவன் நண்பன் கேட்டால் நிலைமை மீண்டும் சீரற்று தான் போகும் !

மதில் உயரத்தை விட மேலாக வளர்ந்த ஒருவனுக்கு நாற்காலி கொடுக்காமல் இருப்பது தான் நியாயம்.
மதில் உயரத்தை விட குறைவாக வளர்ந்த ஒருவனுக்கு நாற்காலி கொடுப்பது தான் நியாயம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக