சனி, 19 அக்டோபர், 2013

அசத்தியவாதிகளை இனங்காணுங்கள்குர் ஆனுக்கு முர‌ண் என்று கூறி பல செய்திகளை பல அறிஞர்கள் மறுத்துள்ளனர். அதை விளக்கும் ஒரு பதிவு.

நன்றி ‍: சகோ. அப்பாஸ் அலி அவர்கள்
------------------------------------------------------------------------------------------------

நபிகளார் கூறியதாக வரும் ஒரு செய்தி குர்ஆனுடன் முரண்பட்டால் அந்த செய்தியை ஏற்கக்கூடாது என்பது நம் நிலைபாடு. இது மிகப்பெரிய ஆய்வுகளுக்குப் பின்னால் அறிய வேண்டிய நுணுக்கமான விசயமல்ல. நபியவர்களை மதிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் அடிப்படையாக நம்ப வேண்டிய விசயம். 

இதை அறிய ஹதீஸ் கலையோ அரபு மொழிப் புலமையோ தேவையில்லை. இஸ்லாத்தின் மீதும் நபியவர்களின் மீதும் ஆழமான அன்பும் ஈமானும் இருந்தாலே போதுமானது. இதை நபி (ஸல்) அவர்களே நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். 

15478قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ عَنْ أَبِي حُمَيْدٍ وَعَنْ أَبِي أُسَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا سَمِعْتُمْ الْحَدِيثَ عَنِّي تَعْرِفُهُ قُلُوبُكُمْ وَتَلِينُ لَهُ أَشْعَارُكُمْ وَأَبْشَارُكُمْ وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ قَرِيبٌ فَأَنَا أَوْلَاكُمْ بِهِ وَإِذَا سَمِعْتُمْ الْحَدِيثَ عَنِّي تُنْكِرُهُ قُلُوبُكُمْ وَتَنْفِرُ أَشْعَارُكُمْ وَأَبْشَارُكُمْ وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ بَعِيدٌ فَأَنَا أَبْعَدُكُمْ مِنْهُ رواه أحمد 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் (சரி என்று) அறிந்துகொள்ளுமானால் இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
நூல்: அஹ்மத் 15478

இவ்விசயத்தில் நம்மை விமர்சிக்கும் சகோதரர்கள் நபிகளாரின் இந்தக் கூற்றை கவனிக்க வேண்டும். இதற்குப் பிறகும் இப்படி ஒரு விதியை கூறுவது வழிகேடு என்று யாராவது கூறினால் அது யாரைக் குறைகூறுவது என்பதை புரிய வேண்டும். 

இமாம்கள் இந்த விசயம் குறித்து பேசியிருப்பதை நாம் எந்த அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறோம் என்பதை முதலில் புரிய வேண்டும். நம்மைப் பொறுத்தவரை குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மட்டுமே மார்க்கமாகும். ஒரு மார்க்க விசயத்தை முடிவு செய்ய இமாம்களின் கூற்றுக்கள் ஒரு போதும் ஆதாரமாகது. இதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. 

ஹதீஸ் குர்ஆனுடன் முரண்பட்டால் அதை ஏற்கக்ககூடாது என இன்று நாம் கூறும் விதியை உலகத்தில் எந்த இமாமும் கூறவில்லை என்றால் கூட இந்தக் கருத்தை நாம் ஆணித்தரமாக கூறுவதில் சற்றும் பின்வாங்கமாட்டோம். அப்போதும் நமது நிலைபாடு நிச்சயம் இதுவாகவே இருக்கும். எனவே இமாம்கள் இதை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அது நமக்கு ஒரு பிரச்சனையே இல்லை. 
குர்ஆனுடன் முரண்படும் செய்தியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நாம் கூறிய போது நம்மை விமர்சித்தவர்கள் இது நாமாக புதிதாக கண்டுபிடித்துக் கூறியது என்று குற்றம்சாட்டினர். இவர்கள் குர்ஆன் ஹதீஸை விட அறிஞர்களின் கூற்றுக்களையே பெரிய சான்றாக கருதுகின்றனர். 

இதற்கு பதிலளிக்கும் விதமாகவே இது இன்றைக்கு நாமாக கூறும் புதிய விதியல்ல. நமக்கு முன்பு பல இமாம்கள் இவ்விதியை கூறியுள்ளனர். சிலர் இதை செயல்படுத்தியும் உள்ளனர் என்பதை விளக்கினோம். 
பின்வரும் அறிஞர்களின் கூற்றுக்களையும் பாருங்கள். மேற்கண்ட நபிமொழி எதைக் கூறுகின்றதோ அதை அப்படியே எவ்வளவு அழகாக சிறந்த இமாம்கள் என்று அறியப்பட்டவர்கள் கூறியுள்ளனர். 
இமாம் இப்னு ஜவ்ஸி 

இமாம் இப்னுல் ஜவ்ஸி மிகப்பெரிய இமாமாவார். மிகவும் சிலாஹித்து புகழப்பட்டவர் அவர் கூறுவதை பாருங்கள்.

تدريب الراوي ج: 1 ص: 277
وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث يباين المعقول أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

ஒரு ஹதீஸை அறிவுக்கு மாற்றமாகவோ அறிவிக்கப்பட்ட (சரியான) செய்திக்கு முரணாகவோ அடிப்படைகளுக்கு எதிராகவோ இருப்பதைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை அறிந்துகொள். 

தத்ரீபுர் ராவி பாகம் : 1 பக்கம் : 277
ரபீஉ பின் கைசம் 

ரபீஉ பின் கைசம் என்பவர் மிகப்பெரிய இமாமாவார். அவர்களின் கூற்றை இமாம் ஹாகிம் அவர்கள் தனது நூலில் எடுத்தெளிதியுள்ளார்கள். 

معرفة علوم الحديث ج: 1 ص: 62
عن الربيع بن خثيم قال إن من الحديث حديثا له ضوء كضوء النهار نعرفه به وأن من الحديث حديثا له ظلمة كظلمة الليل نعرفه بها

ஹதீஸ்களில் சில செய்திகள் பகலின் ஒளியை போன்று (தெளிவாக) இருக்கும். அதன் மூலம் அதை நாம் அறிந்துகொள்வோம். சில ஹதீஸ்கள் இரவின் இருட்டைப் போன்று இருட்டாக இருக்கும். அதன் மூலம் அதை நாம் அறிந்துகொள்வோம். 

நூல் : மஃரிபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62

அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையும் இல்லாமல் மிகச் சரியாக இருந்த எத்தனையோ ஹதீஸ்களை கல்விக்கடல் என்றும் ஆலிம் அல்லாமா என்றும் போற்றப்பட்ட சிறந்த பல அறிஞர்கள் மறுத்துள்ளனர். அந்த ஹதீஸ்கள் புகாரி முஸ்லிம் போன்ற நூற்களிலும் இடம்பெற்றாலும் அதன் கருத்து இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் நபிகளாரின் தகுதிக்கும் ஏற்றதாக இல்லை என்று அவர்கள் கருதிய ஒரே காரணத்தால் மறுத்துள்ளனர். 

இதை மட்டும் விளக்கும் வகையில் தனி புத்தகமே வெளியிடும் அளவுக்கு இமாம்களிடத்தில் நிறைய முன்னுதாரணங்களை எம்மால் புதிதாக சுட்டிக்காட்ட முடியும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பதற்கு ஏற்ப ஒரு உதாரணத்தை இங்கே சுட்டிக்காட்டுகிறேன். 

இங்கே முக்கியமான ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். அறிவிப்பாளர் தொடர் சரியான ஒரு செய்தியை ஒரு இமாம் மறுத்துள்ளார் என்பதை நாம் சுட்டிக்காட்டுவதால் நாமும் அதை மறுக்கின்றோம் என்று புரியக்கூடாது. அந்த இமாம் மறுத்தது சரியா? தவறா என்பது தனி பிரச்சனை. சரியாக இருந்தால் நாமும் மறுப்போம். தவறாக இருந்தால் அவர் மறுத்தாலும் ஏற்போம். 
அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் உள்ள செய்தியை கருத்தை கவனித்து மறுத்துள்ளார்களா? இந்தப் போக்கு இமாம்களிடம் இருந்துள்ளதா? என்பதை மட்டுமே கவனிக்க வேண்டும். 

இமாம் அல்காளி அபூ பக்ர் இப்னுல் அரபி

இவர் இமாம் என்றும் ஹாபிள் என்றும் இவருடைய ஊரான உந்துலிஸில் இவரை விட சிறந்த அறிகஞர் யாரும் வரவில்லை என்கின்ற அளவுக்கு புகழப்பட்டவர் இந்த இமாமாவார். குர்ஆன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்ட இப்னு ஹஜர் போன்ற பல நல்லறிகஞர்கள் இவருடைய விளக்கத்தை தங்களுடைய நூற்களில் பதிவார்கள். 

இவர் உட்பட இவரைப் போன்ற பெரும்பெரும் அறிஞர்கள் புகாரி முஸ்லிம் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களில் பதியப்ப்பட்ட அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத பின்வரும் செய்தியை மறுத்துள்ளனர். 

4670 حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ أَبِي أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ قَمِيصَهُ يُكَفِّنُ فِيهِ أَبَاهُ فَأَعْطَاهُ ثُمَّ سَأَلَهُ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ عُمَرُ فَأَخَذَ بِثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي عَلَيْهِ وَقَدْ نَهَاكَ رَبُّكَ أَنْ تُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ فَقَالَ اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً وَسَأَزِيدُهُ عَلَى السَّبْعِينَ قَالَ إِنَّهُ مُنَافِقٌ قَالَ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللَّهُ وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் உமர் (ர-) அவர்கள் கூறுகிறார்கள் :
(நயவஞ்சகர்கüன் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ர-) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்கüன் சட்டையைக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ர-) அவர்கள் தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்கüடம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ர-) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் ஆடையைப் பிடித்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்கள் இறைவன் உங்களுக்குத் தடைவித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பாவன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையüத்துள்ளான்'' என்று கூறிவிட்டு, "(நபியே!) நீங்கள் அவர்களுக்காப் பாவ மன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்'' என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்'' என்று சொன்னார்கள். 
உமர் (ர-) அவர்கள், "இவர் நயவஞ்சகராயிற்றே!'' என்று சொன்னார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், "அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்கவேண்டாம்'' எனும் (9 : 84) வசனத்தை அருüனான்.

நூல் : புகாரி (4670)

நீர் எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் நயவஞ்சகர்களின் பாவத்தை மன்னிக்கமாட்டான் என்ற வசனம் இறங்கிய பிறகு நயவஞ்சகர்களுக்கு பாவமன்னிப்புத் தேடக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் இதை புரிந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 70 முறை பாவமன்னிப்புக் கூறுவதையே அல்லாஹ் தடுக்கிறான். இதை விட அதிகமாக பாவமன்னிப்புத் தேடுவதை அவன் தடுக்கவில்லை என்று புரிந்தார்கள். இதன் பிறகு அல்லாஹ் நயவஞ்சகர்களுக்கு பாவமன்னிப்புத் தேடக்கூடாது என்று தடுத்துவிட்டதாக இந்த செய்தி கூறுகின்றது. 

இது புகாரியில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத செய்தியாகும். நம்பகத்தன்மையில் முதல் தரத்தில் அமைந்த மிக வலுமையான அறிவிப்பாளர்களிடமிருந்து பல வழிகளில் ஏராளமான ஹதீஸ் நூற்களில் பதியப்பட்ட செய்தியாகும். 
இப்படிப்பட்ட செய்தியை எத்தனை இமாம்கள் எந்த அடிப்படையில் மறுத்தார்கள் என்று பாருங்கள். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறுவதை இங்கே தருகிறேன். 

فتح الباري لابن حجر (8 / 338):
فِيهِ إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ أَوْ أَخْبَرَنِي اللَّهُ كَذَا وَقَعَ بِالشَّكِّ وَالْأَوَّلِ بِمُعْجَمَةٍ مَفْتُوحَةٍ وَتَحْتَانِيَّةٍ ثَقِيلَةٍ مِنَ التَّخْيِيرِ وَالثَّانِي بِمُوَحَّدَةٍ مِنَ الْإِخْبَارِ وَقَدْ أَخْرَجَهُ الْإِسْمَاعِيلِيُّ مِنْ طَرِيقِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي أُوَيْسٍ عَنْ أَبِي ضَمْرَةَ الَّذِي أَخْرَجَهُ الْبُخَارِيُّ مِنْ طَرِيقِهِ بِلَفْظِ إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ بِغَيْرِ شَكٍّ وَكَذَا فِي أَكْثَرِ الرِّوَايَاتِ بِلَفْظِ التَّخْيِيرِ أَيْ بَيْنَ الِاسْتِغْفَارِ وَعَدَمِهِ كَمَا تَقَدَّمَ وَاسْتُشْكِلَ فَهْمُ التَّخْيِيرِ مِنَ الْآيَةِ حَتَّى أَقْدَمَ جَمَاعَةٌ مِنَ الْأَكَابِرِ عَلَى الطَّعْنِ فِي صِحَّةِ هَذَا الْحَدِيثِ مَعَ كَثْرَةِ طُرُقِهِ وَاتِّفَاقِ الشَّيْخَيْنِ وَسَائِرِ الَّذِينَ خَرَّجُوا الصَّحِيحَ عَلَى تَصْحِيحِهِ وَذَلِكَ يُنَادِي عَلَى مُنْكِرِي صِحَّتِهِ بِعَدَمِ مَعْرِفَةِ الْحَدِيثِ وَقِلَّةِ الِاطِّلَاعِ عَلَى طُرُقِهِ قَالَ بن الْمُنِيرِ مَفْهُومُ الْآيَةِ زَلَّتْ فِيهِ الْأَقْدَامُ حَتَّى أَنْكَرَ الْقَاضِي أَبُو بَكْرٍ صِحَّةَ الْحَدِيثِ وَقَالَ لَا يَجُوزُ أَنْ يُقْبَلَ هَذَا وَلَا يَصِحُّ أَنَّ الرَّسُولَ قَالَهُ انْتَهَى وَلَفْظُ الْقَاضِي أَبِي بَكْرٍ الْبَاقِلَّانِيِّ فِي التَّقْرِيبِ هَذَا الْحَدِيثُ مِنْ أَخْبَارِ الْآحَادِ الَّتِي لَا يُعْلَمُ ثُبُوتِهَا وَقَالَ إِمَامُ الْحَرَمَيْنِ فِي مُخْتَصَرِهِ هَذَا الْحَدِيثُ غَيْرُ مُخَرَّجٍ فِي الصَّحِيحِ وَقَالَ فِي الْبُرْهَانِ لَا يُصَحِّحُهُ أَهْلُ الْحَدِيثِ وَقَالَ الْغَزَالِيُّ فِي الْمُسْتَصْفَى الْأَظْهَرُ أَنَّ هَذَا الْخَبَرَ غَيْرُ صَحِيحٍ وَقَالَ الدَّاوُدِيُّ الشَّارِحُ هَذَا الْحَدِيثُ غَيْرُ مَحْفُوظٍ وَالسَّبَبُ فِي إِنْكَارِهِمْ صِحَّتِهِ مَا تَقَرَّرَ عِنْدَهُمْ مِمَّا قَدَّمْنَاهُ وَهُوَ الَّذِي فَهِمَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْ حَمْلِ أَوْ عَلَى التَّسْوِيَةِ لِمَا يَقْتَضِيهِ سِيَاقُ الْقِصَّةِ وَحَمْلَ السَّبْعِينَ عَلَى الْمُبَالَغَةِ قَالَ بن الْمُنِيرِ لَيْسَ عِنْدَ أَهْلِ الْبَيَانِ تَرَدُّدٌ أَنَّ التَّخْصِيصَ بِالْعَدَدِ فِي هَذَا السِّيَاقِ غَيْرُ مُرَادٍ انْتَهَى وَأَيْضًا فَشَرْطُ الْقَوْلِ بِمَفْهُومِ الصِّفَةِ وَكَذَا الْعَدَدُ عِنْدَهُمْ مُمَاثَلَةُ الْمَنْطُوقِ لِلْمَسْكُوتِ وَعَدَمُ فَائِدَةٍ أُخْرَى وَهُنَا لِلْمُبَالَغَةِ فَائِدَةٌ وَاضِحَةٌ فَأَشْكَلَ قَوْلُهُ سَأَزِيدُ عَلَى السَّبْعِينَ مَعَ أَنَّ حُكْمُ مَا زَادَ عَلَيْهَا حُكْمُهَا وَقَدْ أَجَابَ بَعْضُ الْمُتَأَخِّرِينَ عَنْ ذَلِكَ

இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இமாம் புகாரி முஸ்லிம் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை பதிவு செய்த அறிகஞர்கள் இவர்கள் அனைவரும் இது ஆதாரப்பூர்வமானது என்று ஒன்றுபட்டு கூறியுள்ளனர். இவ்வாறிருக்க மாபெரும் அறிஞர்களின் கூட்டம் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மையில் குறைகூற முனைந்துள்ளனர்.
(இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த அறிகஞர்களின் கூற்றை ஏற்கவில்லை என்பது தனிவிசயம். தொடர்ந்து இப்னு ஹஜர் அந்த அறிஞர்கள் யார் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.)
காளி அபூபக்ர் அவர்கள் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதல்ல என்று மறுத்துள்ளார். மேலும் அவர் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இதை நபியவர்கள் கூறியிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். 
இமாம் அபூ பக்ர் அல்பாகிலானி அவர்கள் தக்ரீப் என்ற தன்னுடைய நூலில் இந்த செய்தி சரியான என்று அறியப்படாத ஒரு வழிச் செய்திகளில் ஒன்றாகும் எனக் கூறியுள்ளார். 

இமாமுல் ஹரமைன் (அப்துல் மலிக் பின் அப்தில்லாஹ் அல்ஜ‚வைனீ) அவர்கள் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான நூலில் பதியப்படவில்லை. ஹதீஸ் கலை அறிகர்கள் இதை சரியானது என்று கூறமாட்டார்கள் என்று புர்ஹான் என்ற தன்னுடைய நூலில் கூறியுள்ளார். 
இந்த செய்தி சரியானது இல்லை என கஸ்ஸாலி கூறியுள்ளார். 
மேலும் விரிவுரையாளரான தாவுதீ அவர்களும் இந்த செய்தி சரியான செய்தி இல்லை என்று கூறியுள்ளார். 

இந்த அறிஞர்களிடத்தில் உறுதியான இந்த செய்தியை இவர்கள் சரியில்லை என்று மறுப்பதற்கான காரணமாகிறது முன்பு நாம் கூறியதாகும். அது என்னவென்றால் உமர் (ரலி) அவர்கள் குறித்த வசனத்தில் என்ன புரிந்தார்களோ அதுவேயாகும். 
பத்குல் பாரி (பாகம் : 8 பக்கம் :338)

(அதாவது எழுபது முறை பாவமன்னப்புத் தேடினாலும் மன்னிக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறிய பிறகு 70 தடவைக்கு மேல் பாவமன்னிப்புக் கோருவேன் என்று நபியவர்கள் புரிந்திருக்கமாட்டார்கள் என்பதாகும்)

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இங்கே குறிப்பிட்ட ஐந்து இமாம்களை குறிப்பிட்டுள்ளார். அவர்கள் யாரென்றால் 

இமாம் அபூபக்ர் இப்னுல் அரபி

இமாம் அபூபக்ர் அல்பாகில்லானி

இமாமுல் ஹரமைன் அல்ஜ‚வைனி

இமாம் அபூ ஜஃபர் தாவுதீ 

கஸ்ஸாலி 

இவர்களில் கஸ்ஸாலியைத் தவிர மற்றவர்கள் பலரால் மிகவும் சிலாஹித்து சொல்லப்பட்ட மாமேதைகள் ஆவார்கள். கூறிய சிந்தனையும் வியக்கத்தக்க அறிவும் இவர்களின் காலத்தில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு பாரிய திறமைசாளிகள் ஆவார்கள். இமாம் அபூ ஜஃபர் தாவுதீ அவர்கள் சஹீஹ் புகாரிக்கு விரிவுரை எழுதியவர் ஆவார். 

கஸ்ஸாலி வழிகெட்ட கொள்கையை கூறியுள்ளார் என்பதற்காக அவருடைய கூற்றை இப்னு ஹஜா் ஏன் கொண்டு வந்தார்? என்று இப்னு ஹஜரை விமா்சிக்க முடியுமா?

இப்படிப்பட்ட இமாம்கள் தான் புகாரி முஸ்லிம் என பல ஹதீஸ் நூற்களில் பதியப்பட்ட அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத இந்த ஹதீஸை மறுத்துள்ளனர். இந்த உண்மையை முஹம்மது பின் அப்தில்லாஹ் மசர்ரா கூறியதற்காக அன்சார் தப்லீகி அவரை என்ன பாடு படுத்தினார்? இவரை வைத்து ஒரு பெரிய நாடகத்தையே நடத்தி முடித்துவிட்டார். 

அன்சார் தப்லீகியை பொறுத்தவரை மேலே நாம் சுட்டிக்காட்டிய இமாம்களை கூட வழிகேடர்கள் என்று சொன்னால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

மாமேதை ஹதீஸ் துறை வல்லுனர் இமாம் இஸ்மாயீலீ புகாரியில் உள்ள இப்ராஹீம் நபி சம்பந்தப்பட்ட ஹதீஸை மறுத்துள்ளார் என்று நாம் புத்தகத்தில் எழுதியபோது அதற்கு பதில் கூற புறப்பட்ட இவர் இஸ்மாயீலீ எங்கே மறுத்தார்? இதன் நம்பகத்தன்மையில் ஆய்வு வேண்டும் என்று தானே கூறினார் என்று மழுப்பியதை அவருடைய வீடியோவில் கடைசியாக காணலாம். 

முஹம்மது பின் அப்தில்லாஹ் மசர்ராவை முதலில் தூக்கிப்பிடித்து கூக்குரலிட்ட இவர் இஸ்மாயீலியின் கூற்றை கடைசியாக கூறி போகிற போக்கில் தட்டிச் சென்றுள்ளார். இஸ்மாயிலீ இந்த ஹதீஸை சிக்கலாக கருதி இதன் நம்பகத்தன்மையில் குறைகூறியுள்ளார் என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறிய பிறகே இஸ்மாயிலீயின் கூற்றை பதிவு செய்துள்ளார். 

இதை இவர் வசதியாக இருட்டடிப்புச் செய்து ஹதீஸை மறுத்தவரின் கூற்றுக்கே வேறு விளக்கம் கொடுத்து அவரை மறுக்காதவரைப் போலக் காட்டிய இவரின் திறமை உண்மையில் மிகவும் அளப்பெரியது தான். இப்னு ஹஜர் சொல்வதைப் பாருங்கள். 

. وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث مِنْ أَصْله وَطَعَنَ فِي صِحَّته فَقَالَ بَعْدَ أَنْ أَخْرَجَهُ : هَذَا خَبَر فِي صِحَّته نَظَر مِنْ جِهَة أَنَّ إِبْرَاهِيم عَلِمَ أَنَّ اللَّه لَا يُخْلِف الْمِيعَاد ; فَكَيْف يَجْعَل مَا صَارَ لِأَبِيهِ خِزْيًا مَعَ عِلْمه بِذَلِكَ ؟

இமாம் இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸை சிக்கலானதாக கருதி இதன் நம்பகத்தன்மையில் குறைகூறியுள்ளார். இதை அவர் பதிவு செய்த பிறகு இவ்வாறு கூறுகிறார். 

இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டான் என்பதை அறிந்தவர். இவ்வாறு அவர் அறிந்திருக்கும் போது தன் தந்தைக்கு ஏற்பட்ட நிலையை தனக்கு ஏற்பட்டு இழிவாக அவர் எவ்வாறு கருதியிருப்பார்? என்ற அடிப்படையில் இது ஆட்சியேபனைக்குரிய செய்தியாகும். 
பத்குல் பாரி (பாகம் : 4 பக்கம் :70)

இது போன்ற திருகுதாளங்களை செய்து தனது நிலைபாட்டை நிரூபிக்க வேண்டுமா? என்பதை அன்சார் தப்லீகி சிந்திக்க வேண்டும். அவர் என் புத்தகத்தை விமர்சித்து பேசிய வீடியோவை முழுமையாக பார்ப்பவர்கள் குர்ஆனுக்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்ககக்கூடாது என்று அறிஞர்கள் கூறியிருப்பது உண்மை தான் என்பதை சந்கேமற அறிவார்கள். அவர் பேசியதை கேட்டால் மட்டுமே போதுமானது. நம்முடைய விளக்கம் தேவைப்படாது. 

அவரை தக்லீத் செய்பவர்கள் இனிமேலாவது உண்மையை புரிய வேண்டும் என்ற அறிவுரையுடன் நிறைவுக்கு வருகிறேன். 
உண்மையை அறிய இந்த விளக்கம் போதுமானது என்று கருதுகிறேன். அல்லாஹ் நம் அனைவருக்கும் சரியான வழியை காட்டுவானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக