செவ்வாய், 8 அக்டோபர், 2013

கௌரவ திருடர்களும் சட்டத்துறையும்


கோடிகளில் கொள்ளையடித்து ஒட்டு மொத்த சமுகத்தையும் வஞ்சித்து, நாட்டு பொருளாதாரத்தையே சுரண்டினால் அத்தகையோருக்கு 
தரமான முதல் வகுப்பு சிறை, படுக்க மெத்தை, யூரின் செல்ல டைல்ஸ் பதித்த கழிவறை, மல்லாக்க படுத்து டிவி பார்க்கும் வசதி, டீ அருந்தி விட்டே செய்தித்தாள் வாசிக்கும் வசதி எல்லாம் கிடைக்கும் .

அதுவே, பேருந்து நிலையத்தில் பத்து ரூபாய் பிக் பாக்கட் அடித்தால் அவனுக்கு கிடைப்பதோ நான்காம் தர சிறை தான், மண் தரை படுக்கை தான், பழைய கஞ்சி தான், அலுமினிய தட்டு தான். சிமன்ட் பூசப்பட்ட கழிவறை தான் !

வெளியே உயர்தரமாக வாழ்ந்து, உயர் ரகமாக கொள்ளை அடிக்க தெரிந்தால் தான் தண்டனையிலும் உயர் ரகம் கிடைக்கும்,

இன்னும் ஒரு படி மேலே சென்று, உயர் தரமாக திட்டம் தீட்டி ஒரு இனத்தையே கொலை செய்து அழிக்கும் அளவிற்கு திறமை இருக்குமானால் அவரை நாட்டின் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி கூட ""தண்டிப்போம்"" !

இதெல்லாம் பஸ் ஸ்டேண்டில் பிக் பாக்கட் அடிக்கும் உன்னை போன்ற முட்டாளுக்கு எப்படி புரியும்??
நீ திருடும் பிச்சைக்காசுக்கு டைல்ஸ் பதித்த பாத்ரூம் கேக்குதா??? போயா போ.. இனியாவது ""முன்னேறும்"" வழியை பார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக