திங்கள், 21 அக்டோபர், 2013

மறுக்கப்படும் பெண்ணுரிமை


இவர்கள் பெண்களுக்கு தாலி கட்டுவார்கள், ஆனால் இவர்கள் திருமணமானதற்கு அடையாளமாய் எதையும் அணிய மாட்டார்கள்.

திருமணமான பெண் என்றால் அவள் நெற்றியில் குங்குமம் வைக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்.
திருமணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிய சொல்வார்கள்.
வாரா வாரம் கோவிலுக்கு சென்று அந்த தாலிக்கு சிறப்பு பூஜைகள் கூட செய்வார்கள்.‍

ஆனால்,இவை எதையும் இவர்கள் அணிய மாட்டார்கள்.
இவர்களுக்கு திருமணமானதற்கான எந்த அடையாளமும் அவசியமில்லை !

இறுதியில், கணவன் இறந்து போனால், மேலே எதையெல்லாம் அணியுமாறு இவர்கள் பெண்களிடம் திணித்தார்களோ, அவை அனைத்தையும் கழற்ற சொல்வார்கள்.

ஒரு படி மேலே போய், வாழ்நாள் முழுக்க மறுமணம் செய்யக்கூடாது என்று கட்டளையிடுவார்கள்.
வெள்ளை ஆடை தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்பார்கள், அழகுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று தடை விதிப்பார்கள்.

வரதட்ச‌ணை என்கிற பெயரால் வஞ்சிப்பார்கள், சொத்துரிமை தர மறுப்பார்கள், இவர்கள் வழிபடும் ஆலயங்களில் கூட பெண்களை அனுமதிக்க மாட்டார்கள்,
விவாகரத்து உரிமையை மறுப்பார்கள்,
திருமணமான ஆண்கள், மனைவி அல்லாத வேறு பெண்களுடன் உறவு வைத்திருந்தால் அதை கண்டிக்க சட்டமியற்ற மாட்டார்கள்,
மனைவி அதனால் எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளானாலும் அதை பற்றி கவலைக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால், இஸ்லாம், பெண்களுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்துள்ளது. திருமணமானதை காட்டும் விதமாக ஆண்களுக்கு எவ்வாறு எந்த அடையாளமும் அவசியமில்லையோ அது போல் பெண்களுக்கும் அவசியமில்லை.

இஸ்லாத்தில் வரதட்சணை இல்லை என்பது மட்டுமல்ல, மஹர் என்கிற பெயரில் ஆண்கள் தான் பெண்களுக்கு தர வேண்டும் என்று சட்டமியற்றும் அளவிற்கு பெண்களை இஸ்லாம் கண்ணியப்படுத்துகிறது.

அந்த மஹர் பணத்தை கூட பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று அனுமதிக்கிற அளவிற்கு உரிமை,
கணவன் இறந்தால் மறுமணம் செய்து கொள்ளும் முழு சுதந்திரம், கணவனை பிடிக்கவில்லை என்றால் காரணம் கூட சொல்லாமல், சுயமாகவே அவனை விவாகரத்து செய்து கொள்ளும் அதிகாரம்,

கணவன் தன்னை கை விட்டு சென்றால், ஜீவனாம்சம் என்கிற பெயரில் உரிமை கோருதல்,

தான் சம்பாத்தித்தவைகளை தாமே நிர்வகிக்கும் சொத்துரிமை,
கணவனின் சொத்துக்களை பங்கிடும் போது மனைவிக்கென கட்டாய பங்கு, எந்த நேரத்திலும் பள்ளிவாசல்களுக்குள் அனுமதி என்பது மட்டுமின்றி, இஸ்லாத்தை பிற மக்களுக்கு போதிக்கும் உரிமை, மத பிரச்சாரம் செய்யும் சுதந்திரம்,


என பெண்ணினத்தை இஸ்லாம் கண்ணியப்படுத்தியிருக்கின்ற அளவிற்கு வேறெந்த சித்தாந்தங்களும் கண்ணியப்படுத்தவில்லை எனும் போது, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று கூறுவது நகைப்புக்குரியதும் இவர்களது புறத்திலிருந்து எழக்கூடிய முரண்பாடுமாகும் !

போலி பகுத்தறிவு பேசுபவர்களும், கள்ள ஹிந்துக்களும், இது குறித்து நம்மை விவாதிக்க அழைப்பு விடுக்கின்றனர்.
இஸ்லாம் இறை மார்க்கம் என்பதே இதன் மூலமும் நிரூபணமாகும் என்பதை இவர்களுக்கு சொல்லி வைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக