வெள்ளி, 11 அக்டோபர், 2013

பல்லிளிக்கும் பகுத்தறிவுகல்லுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது பகுத்தறிவுக்கு விரோதமானது எனில், நீ பெரியாரின் சமாதிக்கு மலர் வளையம் வைப்பதும் பகுத்தறிவுக்கு விரோதமானதே !

அவர்கள் மாலை போடுவது அந்த சிலைக்கு எப்படி புரியாதோ அது போன்றே நீ மலர் வளையம் வைப்பதும் பெரியாருக்கு புரியாது.

அவன் மரியாதை செய்த சிலை வெறும் மண்ணால் ஆனது என்றால் நீ மரியாதை செய்யும் பெரியார் மண்ணாகவே போய் விட்டவர் !

எங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சிக்காக இதை செய்கிறோம் என்று நீ சொன்னால், அதே பதிலை அவனும் சொல்வான்.

நாங்கள் பெரியார்வாதிகள் என்று காட்டுவதே இதன் நோக்கம் என்று நீ நினைத்தால் தான் ஒரு ஹிந்து என்று காட்டவே இதை செய்கிறேன் என்று அவனும் சொல்லிக் கொள்வான்.

மனிதனோ, கல்லோ, மண்ணோ, நாயோ, பன்றியோ, அனைத்தும் இறைவனின் படைப்புகள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ள முஸ்லிம்களின் பார்வையில் நீ பெரியாரை வணங்குகிறாய், அவன் சிலையை வணங்குகிறான். இருவருமே பகுத்தறிவற்றவர்கள் தான் என்பது ஒரு பக்கம் இருக்க..
ஒப்பீட்டளவில்,
இல்லாத பெரியாரை வணங்குவதை விடவும் கண் முன் தெரிகின்ற கல்லை வணங்குவது பகுத்தறிவில் ஒரு படி மேலானதே!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக