செவ்வாய், 8 அக்டோபர், 2013

பிறை கணக்கீடும் விண்வெளிப்பயணமும்


பிறை கணக்கின்படி இயங்குகின்றது.
காலத்தை அறிந்து கொள்வதற்காக தான் பிறையை அல்லாஹ் படைத்தான்.

என்பன போன்ற வசனங்கள் அல்லாஹ்வின் வல்லமையை பறைசாட்டும் வசனங்கள். 

இதில், பிறையை நாம் கட்டாயமாக முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்பதற்கு எந்த சான்றும் கிடையாது.

கணக்கின்படி இயங்குகின்றது என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் கட்டாயம் முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்று சொல்பவர்களிடம் கீழ்காணும் கேள்வி..

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! 55:33

மேற்கண்ட வசனம், இவர்கள் கருத்துப்படி விண்வெளி பயணம் கூட சாத்தியம் தான், அல்லாஹ்வின் படைப்பு அத்தனை பிரம்மாண்டமானது என்று சொல்லும் வசனமா?

அல்லது

சக்தி பெற்ற அனைவரும் கட்டாயம் விண்வெளி செல்ல வேண்டும் என்று இந்த வசனம் சொல்கிறதா ?

பிறை அதன் கணக்கின்படி இயங்குகிறது என்றும், அது துல்லியமாய் காலம் காட்டும் என்றும் சொன்னதற்காக கொடி தூக்கி கணிப்பு கணிப்பு என்று முழக்கமிடுகிறவர்கள், விண்வெளி செல்லுங்கள் என்று அல்லாஹ் நேரடியாகவே இட்டுள்ள கட்டளைக்கு என்ன பதில் சொல்வார்கள் ?

நபி காலத்தில் விண்வெளி பயணத்திற்கு யாரும் சக்தி பெறவில்லை.
சக்தி பெறாத அந்த காலத்தில் இது கட்டாயமில்லை,
இன்று அத்தகைய சக்தியை நாம் பெற்று விட்டோம், ஆகவே நமக்கு விண்வெளி பயணம் கட்டாயமானது என்கிற ஃபத்வாவை இவர்களிடமிருந்து விரைவில் எதிர்ப்பார்க்கிறோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக