வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஷாபி ஹனபி இடையே ஒற்றுமை உண்டா?


ஷாபி மத்ஹபிலோ ஹனபி மதஹபிலோ மாலிக்கி மதஹபிலோ ஹம்பலி மதஹபிலோ இருக்கும் ஒருவன் மத்ஹபுகளே கூடாது என்று கூறி வருகின்ற தவ்ஹீத் ஜமாத்தை தான் எதிர்க்கிறானே தவிர 

ஒரு ஷாபிக்காரன் ஹனபிக்காரனை எதிர்த்து யாராவது பார்த்திருக்கிறோமா?

ஹம்பலிக்காரன் ஷாபிகாரனை எதிர்த்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா?

நிச்சயமாக இல்லை ! 

ஆனால் இது பற்றி மத்ஹ்ப் நூல்கள் என்ன சொல்கிறது தெரியுமா?

இதோ..

ஒரு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவன், ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்.
ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 4, பக்கம்: 249 29

ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபில் சேர்ந்து விட்டால் அவருடைய சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது.

ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 565 30

நமது மத்ஹபு தான் சரியானது. மற்றவர்களின் மத்ஹபு தவறானது.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 18

எங்கள் மத்ஹப் தான் சரியானது என்று தான் ஒவ்வொரு மத்ஹபும் சொல்கின்றன,

இன்னும் சொல்லப்போனால் மற்ற மத்ஹபில் இருப்பது தண்டனைக்குரிய குற்றச் செயல் என்று சொல்கிற அளவுக்கு மத்ஹப்களிடையே விரிசல்கள் உண்டு..

ஆனால் எந்த மத்ஹப்காரனாவது மற்ற மத்ஹப்காரனை விமர்சிக்கிறானா?

அனைவருக்கும் பொது எதிரி பிஜே தான் என்பதால் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற சந்தர்ப்பவாத நிலையை தான் இவர்கள் எடுக்க வேண்டியுள்ளது !

அந்தோ பரிதாபம்.. தங்கள் நூலையே தங்களால் பின்பற்ற இயலாத தர்மசங்கடமான நிலை இவர்களுக்கு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக